கபாலி "GONE" !!!
கபாலி ! கடந்த ஒரு மாதமாக ஒட்டு மொத்த உலகையும் உச்சரிக்க வைத்த ஒரு பெயர். காரணம் ரஜினி ! இந்தப் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்காவிடில் நாட்டுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என்கிற அளவுக்கு சென்சேஷன் ! இதோ திரைக்கு வந்து விட்டது ! படம் எப்படி ? இதற்கு முன்..... ரஜினி ஒரு ஐகான், அவர் நடிக்க வேண்டியதில்லை , ஆட வேண்டியதில்லை, பாட வேண்டியதில்லை அவரை பார்த்தால் மட்டும் போதும். அதை விட கூடுதலாக எதையாவது செய்தால் அது கூடுதல் கொண்டாட்டமே, அவ்வளவுதான் என்னை போன்ற ரஜினி ரசிகனுக்கு வேண்டும்.இதற்கு உதாரணம் எவ்வளவோ உண்டு ஆனால் கபாலி ? உண்மையில் மன வருத்தமே மிஞ்சுகிறது ! ஒரு புதுமுக இயக்குனரை ரஜினி நம்பி நடிப்பது என்பதே எவ்வளவு பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப உழைக்க வேண்டியது எவ்வளவு முக்கியம். ரஜினி படம் என்பது ரஜினி ரசிகனுக்கு ஒரு வரம்...அவனுக்கு ஒரு குழந்தை பிறப்பது போல உணர்வளிக்க கூடியது அது..ரஞ்சித் இந்த பட ப்ரோமோஷனில் பல முறை சூசகமாக சொன்னார் இது ரஜினி படமல்ல, இந்தப்படத்தில் ரஜினி இருக்கிறார் அவ்வளவே என்று. ஆனாலும் ரஜினி இல்லாமலும் இந்த படம் தேறாத கேஸ்தான் ! கதை, திரைக்கதை, காட