கபாலி "GONE" !!!
கபாலி ! கடந்த ஒரு மாதமாக ஒட்டு மொத்த உலகையும் உச்சரிக்க வைத்த ஒரு பெயர். காரணம் ரஜினி ! இந்தப் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்காவிடில் நாட்டுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என்கிற அளவுக்கு சென்சேஷன் ! இதோ திரைக்கு வந்து விட்டது ! படம் எப்படி ? இதற்கு முன்.....
ரஜினி ஒரு ஐகான், அவர் நடிக்க வேண்டியதில்லை , ஆட வேண்டியதில்லை, பாட வேண்டியதில்லை அவரை பார்த்தால் மட்டும் போதும். அதை விட கூடுதலாக எதையாவது செய்தால் அது கூடுதல் கொண்டாட்டமே, அவ்வளவுதான் என்னை போன்ற ரஜினி ரசிகனுக்கு வேண்டும்.இதற்கு உதாரணம் எவ்வளவோ உண்டு ஆனால் கபாலி ?
உண்மையில் மன வருத்தமே மிஞ்சுகிறது ! ஒரு புதுமுக இயக்குனரை ரஜினி நம்பி நடிப்பது என்பதே எவ்வளவு பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப உழைக்க வேண்டியது எவ்வளவு முக்கியம். ரஜினி படம் என்பது ரஜினி ரசிகனுக்கு ஒரு வரம்...அவனுக்கு ஒரு குழந்தை பிறப்பது போல உணர்வளிக்க கூடியது அது..ரஞ்சித் இந்த பட ப்ரோமோஷனில் பல முறை சூசகமாக சொன்னார் இது ரஜினி படமல்ல, இந்தப்படத்தில் ரஜினி இருக்கிறார் அவ்வளவே என்று. ஆனாலும் ரஜினி இல்லாமலும் இந்த படம் தேறாத கேஸ்தான் ! கதை, திரைக்கதை, காட்சியமைப்பு என்று எல்லாமே ஓட்டை ! பல இடங்களில் ரஜினி என்ன செய்வது என்றே தெரியாமல் "தேமே" வென்று நிற்கிறார். வழுக்கட்டாயமாக அவரை அழுக வைக்கின்றனர். அதிரடி காட்சிகளில் முதுமை காட்டுகிறார். மெட்றாஸ் படம் போன்று ஒரு நல்ல கதையோ , காடசியமைப்போ இருந்தால் கூட சிலாகித்திருக்கலாம் ஆனால்.... ரஜினி எப்பொழுதும் ரசிகனையும் தாண்டி பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் தன் படத்தை பார்க்க வரும்படி காட்சியமைக்க சொல்லுவார். அவர் எந்திரனுக்கு ஒத்துக்கொண்டதுக்கு முக்கிய காரணம் அந்தப் படம் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்பதால். இதில் அதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. குறியீடு விஷயங்கள் நிறைய உண்டு இந்தப் படத்தில். அது ரஜினி மூலமாக சொல்லப்பட்டது சரியா, தவறா என்று நம்மால் முடிவு செய்ய முடியாது ! ஆனால் ரஜினி இருந்தால் அது ரஜினி படமாகத்தானே இருக்க வேண்டும் ?
சுரேஷ் கிருஷ்ணா ஒரு முறை சொன்னார் " ரஜினிக்காக கடசியமைப்பது ஒன்றும் சுலபமானதல்ல அவர் ஒரு யானை அவருக்கு தீனி போடுவது மிகப்பெரிய சவால்" என்று. அதை கொஞ்சம் திருத்தி இப்படி சொல்லலாம், ரஜினிக்கு மட்டுமல்ல ரஜினி ரசிகனுக்கு தீனி போடுவதும் சவாலானதே !
இந்தப் படம் யானை போன்ற ரஜினிக்கும் , என்னை போன்ற ரசிகனுக்கும் சோளப்பொறியாக கூட இல்லை ! இந்தப் படத்தில் வரும் மகிழ்ச்சி என்ற வார்த்தை சத்தியமாக எங்களுக்கு இல்லை !
ஒன்று மட்டும் சொல்ல வேண்டும், தயவு செய்து ரஜினியை வைத்து ரஜினி படம் எடுங்கள் ப்ளீஸ் !
Comments
Post a Comment