Posts

Showing posts from March, 2014

ஒரு நாள் காலை...!

சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு எங்கள் உணவு விடுதியில் வழக்கமாக காலை உணவுக்காக வரும் அவர், அன்று தனது 8 வயது மகளுடன் டென்னிஸ் உடையில்  டென்னிஸ் மட்டை சகிதமாக வந்திருந்தார். வழக்கமான புன்னகையை என்னிடம் உதிர்த்துவிட்டு அருகிலுள்ள மேஜையில் அமர்ந்தார்.நானும் அவர் அருகில் சென்று "என்ன சார் சாப்புடுறீங்க ?" என்றதும் "தம்பி ரெண்டு பேருக்கும் தோசை குடுங்க "  என்று சொல்ல நானும் பரிமாறுபவரிடம் சொல்லி விட்டு நகர்ந்து கொண்டேன்.எனக்கு அருகினில் உள்ள மேஜையில் அமர்ந்ததால் அவர் பேசியது எனக்கு நன்றாகவே கேட்டது.அவர் மகளிடம் "ஏண்டா !உங்க டென்னிஸ் கோச் நல்லா சொல்லி குடுக்குறாரா  ? ம்ம் !நல்லாதாம்பா சொல்லி தர்றாரு உன்ன ரொம்ப திட்டுறாரா இல்லப்பா, சரியா சர்வீஸ் பண்ணலேன்னா திட்டுவாரு ஆனா கோச்சிங் முடிஞ்சதும் என்கிட்ட நல்லா பேசுவாரு ஆமா அவரு ஏன் உம்மேல கைய போட்டு பேசுறாரு ? அவரு அப்பிடித்தான் கை போட்டு பேசுவாரு  ஏன்னு தெரியலப்பா ஆனா அவரு அப்பிடித்தான் பேசுவாரு சுஜி ! நீ ஏன் உம்மேல கை போட்டு பேசுறதுக்கு அலோ பண்ற ? என்னையும் அம்மாவையும்  தவிர உன்னோட பெர்மிஷன் இல்லா

பெயர்...!

Image
இன்னும் பெயர் வைக்கப்படாமலேயே  வீட்டிற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது  பூனை என்ற அந்த பூனை !!!