ஒரு நாள் காலை...!
சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு எங்கள் உணவு விடுதியில் வழக்கமாக காலை உணவுக்காக வரும் அவர், அன்று தனது 8 வயது மகளுடன் டென்னிஸ் உடையில் டென்னிஸ் மட்டை சகிதமாக வந்திருந்தார். வழக்கமான புன்னகையை என்னிடம் உதிர்த்துவிட்டு அருகிலுள்ள மேஜையில் அமர்ந்தார்.நானும் அவர் அருகில் சென்று "என்ன சார் சாப்புடுறீங்க ?" என்றதும் "தம்பி ரெண்டு பேருக்கும் தோசை குடுங்க " என்று சொல்ல நானும் பரிமாறுபவரிடம் சொல்லி விட்டு நகர்ந்து கொண்டேன்.எனக்கு அருகினில் உள்ள மேஜையில் அமர்ந்ததால் அவர் பேசியது எனக்கு நன்றாகவே கேட்டது.அவர் மகளிடம்
"ஏண்டா !உங்க டென்னிஸ் கோச் நல்லா சொல்லி குடுக்குறாரா ?
ம்ம் !நல்லாதாம்பா சொல்லி தர்றாரு
உன்ன ரொம்ப திட்டுறாரா
இல்லப்பா, சரியா சர்வீஸ் பண்ணலேன்னா திட்டுவாரு ஆனா கோச்சிங் முடிஞ்சதும் என்கிட்ட நல்லா பேசுவாரு
ஆமா அவரு ஏன் உம்மேல கைய போட்டு பேசுறாரு ?
அவரு அப்பிடித்தான் கை போட்டு பேசுவாரு ஏன்னு தெரியலப்பா ஆனா அவரு அப்பிடித்தான் பேசுவாரு
சுஜி ! நீ ஏன் உம்மேல கை போட்டு பேசுறதுக்கு அலோ பண்ற ? என்னையும் அம்மாவையும் தவிர உன்னோட பெர்மிஷன் இல்லாம யாருமே உன்ன தொடக்கூடாது இல்லையா ?
அதுக்கு என்னப்பா இப்ப ?
இப்பிடி போய் கொண்டிருந்தது அந்த உரையாடல் அதற்குள் தோசை வந்து விட சில நொடிகள் எடுத்துக்கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தார்.இம்முறை "குட் டச்" "பேட் டச்"பற்றி அந்த சிறுமிக்கு புரியும்படி எளிமையாக சொல்லிக் கொண்டிருந்தார் . பின் முடிவாக
சுஜி ! நா சொன்னத நல்லா கவனத்துல வச்சுக்கோ சரியா ! இனி உன்னோட கோச் உம்மேல கையப் போட்டு பேசுனா கைய தட்டிவிடு இல்லேன்னா "சார் எம்மேல கை போட்டு பேசாதீங்க எனக்கு பிடிக்கலன்னு தைரியமா சொல்லு
அதுக்கு அவரு உன்கிட்ட ஹார்ஷா ரியாக்ட் பண்ணா என்கிட்ட சொல்லு சரியா ?
சரிப்பா ! என்றாள் அந்த சிறுமி
பின் அவர்கள் மாலை செல்லவிருக்கும் சினிமா , வரப்போகும் பரீட்சை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்
இதை கேட்ட எனக்கு அந்த தந்தையை பற்றி ஒரு உயர்வான அபிப்ராயமே ஏற்பட்டது. எவ்வளவு நாகரீகமாக தன் பெண்ணிடம் இந்த விஷயத்தை பற்றி எடுத்து சொல்லி விட்டார். தற்போதைய இந்த சூழ்நிலையில் சிறு வயது பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருமே செய்ய வேண்டியது இது. அந்த சிறுமிக்கு இப்போது அவர் சொன்னது புரிந்ததோ இல்லையோ ஆனால் ஏதோ அறிகுறி தோன்றும்பொழுது அவள் சுதாரிப்படையப் போவது நிச்சயம்.

supper
ReplyDeletesupper
ReplyDelete