பிக்பாஸ் 4 : நாள் - 86 (29.12.20)
86வது நாள்
“என்னோட ராசி
நல்ல ராசி” பாட்டு அலாரம். முக்கியமா நேத்து இந்த ரஜினி பாட்டு போட்டது தற்செயலா இல்ல
குறியீடான்னு கும்பகர்ணனுக்குதான் வெளிச்சம். “என்ன எதுக்குன்னே தெரியாம எதுக்காவது
என்னத்தையாவது செய்வோம்”ன்ற மாதிரியே ஆடிட்டு இருந்தானுங்க.
லக்ஸுரி பட்ஜெட்
டாஸ்க். “இதுவரைக்கும் குடுத்த டாஸ்க்குலையெல்லாம் ஆர்வமா அறுத்து தள்ளி, ஆடி கிழிச்ச
வரைக்கும் போதும். இந்த தடவ களத்துல நானே இறங்குறேன். இனி டாஸ்க்கு என்னோட கண்டிரோல்.
டாஸ்க் என்னன்னு எல்லாரும் கையேந்தி கண்ணீர் மல்க கேளுங்க”ன்னதும் “அன்னப்போஸ்டு போனதுக்கப்பறம்
இவன் இம்சை அளவில்லாம போயிட்டிருக்கு”ன்னு நெனச்சபடி “சொல்றா டேய்”னு எல்லாரும் கேக்க....
ஃப்ரீஸ் டாஸ்க்.
“வா அருணாச்சலம்
நீ இதத்தான் தூக்கிட்டு வருவன்னு எங்களுக்குத் தெரியும்”ன்ற மாதிரி பூராம் ரெடியானானுங்க.
வார்ம் அப்புக்கு ரியோ, ஷிவானி, கேபின்னு சில பேர ஃப்ரீஸ், லூப், பாஸ்ட் பார்வர்டுன்னு
படுத்தி எடுத்துட்டு இருந்தாப்ல பிக்கி.
குளிக்க போன
பிள்ளைய ஃப்ரீஸ் சொல்லி நிப்பாட்டிவிட்டு ஆராரோ ஆரிரரோ பாட்ட போட்டு விட்டானுங்க. அப்பவே
நம்ம நிஞ்சா டர்டில் ஷிவானி மூக்கு பேச ஆரம்பிச்சது. “ஆகா அம்மா வராங்க....அள்ளி அணைச்சு
அஞ்சாறு உம்மாக்கள குடுத்து....ஆனந்த காண்ணீரில் அபிஷேகம் நடத்தலாம்”னு நெனச்சு கதவ
பாத்துக்கிட்டே நின்னுச்சு.
கதவ தொறந்து
அவங்கம்மா வந்ததும் ஆலாப் பறந்து போயி கட்டிப்பிடிச்சு கதறவும். “அங்குட்டு போயி பேசுவோமா?”ன்னு
கூட்டிட்டு போயி தனியா உக்காந்தாங்க......ஒரு பொஷிஷன்ல உக்காந்துகிட்டு “ஆரம்பிக்கலாங்களா?”ன்னு
ஸ்டார்ட் பண்ணாங்க....
மதரு : ஆமா
நீ எதுக்கு இந்த ஷோவுக்கு வந்த ?
ஷிவானி : நீதான
போக சொன்ன
மதரு : அட....நாந்தான்
போக சொன்னேன்....ஆனா நீ இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க ?
ஷிவானி : அட
என்னங்கடா வாரம் வாரம் உள்ள இருக்குறவனுங்கதான் கேக்குறானுங்கன்னா நீயும் அதையே கேக்குற....நான்
என்ன பண்ணேன் ?
மதரு : உன்னய
கேம் விளையாட சொன்னா .....பில்டருக்கு பி.ஏ வா மாறிட்டியே
ஷிவானி : அதெல்லாம்
கேமுல சேராதா ?
மதரு : மனிதருள்
மாணிக்கம் ஆரி ப்ரோ மேல உனகென்ன Baggage ? அவரே ஒரு நேர்மையின் Package. அவரு கூட சேர்ந்து
உன் உயர்வ பத்தி டிஸ்கஸ் பண்ணுவன்னு பாத்தா....நீ பில்டரு கூட சேர்ந்து அவருக்கெதிரா
உள்ளடி வேலை பாத்துட்டு இருப்ப.....அத நாங்க பாத்துட்டு இருக்கனுமா ? அவரு காதல் கண்ண
மறைக்குதுன்னு சொன்னதும் அப்ப தள்ளி நில்லுங்கன்னு அவருக்கே லந்தக் குடுக்குற...என்ன
ஒரு ஊக்கம் உனக்கு ?
ஷிவானி : ப்ளடி
மம்மி.....நீ ஆரி ஆர்மியா?
மதரு : மேஜரே
நாந்தாண்டி....! இப்பிடி இருந்தா உனக்கு யாரு ஓட்டு போடுவா?
ஷிவானி : மத்தவனுங்கள
விடு....நீ எனக்கு போட்டியா ?
மதரு : அவன்
நான் உன்னய லவ் பண்ணலன்னு சொல்றான்....ஆனா நீ அதுக்கு பதில் சொல்ல மாடேங்குற....இதுல
இருந்து என்ன தெரியுது ?
ஷிவானி : நீ
பில்டருக்கும் ஓட்டு போடலேன்னு தெரியுது...! குளிச்சு கிளம்பி என்னய கழுவி ஊத்துறதுக்குன்னே
வந்தியா ? பிள்ளைய பாக்க போறோமேன்னு கொஞ்சம் பாசமா பேசுறியா நீ ? வந்ததுல இருந்து வாய்
கிழிய திட்டிகிட்டு இருக்க....
மதரு : இரு
ஆரி ப்ரோவ பாத்துட்டு வரேன்....
ஷிவானி : இது
போறப்ப அந்தாளுகிட்ட ஆட்டோகிராப் வாங்கிட்டுதான் போகும் போல //
இங்குட்டு கேபி
சம்பந்தமே இல்லாம ஆஜீத் கிட்ட...
கேபி : ஒழுங்கா
என் கூடதான் சுத்திட்டு இருந்தான் பில்டரு. உன் அட்டிராசிட்டிய கொஞ்சம் ஆஃப் லைன்ல
போடுன்னு சொன்னதுக்கு என் கிட்ட பேச்ச நிப்பாட்டிட்டான்.
ஆஜீத் : அப்பிடி
தெரியல ஏன்னா நானும் அப்பிடி சொல்லியிருக்கேனே....என் கிட்ட நிப்பாட்டலையே ?
கேபி : அவன்
சொல்றது பிடிக்கலேன்னா நீ என்ன பண்றன்னு அப்பறமா ஷிவானிகிட்ட கேட்டேன்.... அதுக்கு
அவ ம்ம்ம் நா இப்பிடி தலையாட்டுவேன்....ஊஹூம்னா இப்பிடி தலையாட்டுவேன்னு சொன்னா. அதனாலதான்
அவள பிடிச்சுபோச்சு போல
ஆஜீத் : அப்பிடி
தெரியல ஏன்னா நானும் அப்பிடி தலையாட்டியிருக்கேனே
கேபி : இவ்வளவுக்கும்
நான் இதுவரை பில்டர நாமினேட் பண்ணதே இல்ல....தெர்மா ?
ஆஜீத்
: அப்பிடி தெரியல ஏன்னா நானும் நாமினேட் பண்ணது
இல்ல
கேபி : (MV
: அடிங்க....) மூளையுள்ளவந்தான் பில்டர் கூட இருக்க முடியும்...
ஆஜீத் : அப்பிடி
இல்லையே .....எனக்கு மூளையில்லையே
கேபி : யப்பாடி
ஒத்துக்கிட்டாண்டா.....//
ஆரி ப்ரோ “ஆகா
இப்பிடி ஒரு சம்பவம் நடக்குது....இப்ப இதப் பத்தி யார்கிட்டையாவது பேசியாகனுமே”ன்னு
ரிவர்ஸுல திரும்பி பாத்தா அங்க ரியோ நின்னுட்டு இருந்தான்.
ஆரி ப்ரோ :
என்ன ரியோ ஷிவானிக்கு நீங்களாவது எடுத்து சொல்லியிருக்கக் கூடாதா ?
ரியோ : யோவ்....வேற
எவனுமே சிக்கலையா உனக்கு ? இங்க பாரு இதெல்லாம் அவங்க பெர்சனல். இதப் போயி நான் கேக்க
முடியாது...சரியா ?
ஆரி ப்ரோ :
சரி அப்ப நீ சொன்னத வேலிடேட் பண்ணு.....
ரியோ : எனக்கு
நெஞ்சு வலிக்குது.....கன்ஃபெஷன் ரூம் வரைக்கும் போயிட்டு வரேன்
ஆரி ப்ரோ :
எஸ்கேப் ஆகிட்டான்.....//
அப்பறம் அவங்கம்மா
பில்டர தவிர எல்லார்கிட்டையும் பேசிட்டு இருக்கும்போதே ஷிவானி நைஸா அவங்கம்மாவ மெயின்
டோருல கொண்டு போயி நிறுத்தி “டேய் பிக்பாஸா கதவத்தொறந்து இந்த கருணை தெய்வத்தை வெளிய
கூட்டிட்டு போங்கடா”ன்னு மனசுக்குள்ள கதற....அவங்கம்மா வெளிய போயிட்டாங்க.
வேண்டா வெறுப்புக்கு
பிள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்ச மாதிரி ஒண்ணுந்தெரியாத பிள்ளைய உள்ள அனுப்பி
வச்சுட்டு “அம்மா பெருமை படுற அளவுக்கு என்ன பண்ணே?”ன்னு கேட்டா என்னத்த சொல்றது ?
இது என்ன இந்தியன் பார்டரா....20 பேர சுட்டு கொன்னுட்டு மெடல் வாங்கிட்டு போயி வீட்ல
குடுக்க. அதுபாட்டுக்கு சிவனேன்னு 4 மணி ஆச்சுன்னா போட்டோ போட்டு விளையாண்டுகிட்டு
இருந்துச்சு. அதக் கெடுத்து....இப்ப உள்ள வந்து இருக்குறதையும் கெடுத்து......தேவையா
இது ?
பில்டரு ஆஜீத்கிட்ட
“பாவம் சின்ன பொண்ணு என்னால திட்டு வாங்குதுன்னு நெனைக்கும்போது கவலை கணையத்த பாதிக்குது”ன்னு
அழுதான். “ஆஜீத் அப்பிடி தெரியலயே....நீ காரணம் மாதிரி இல்லயே....ஏன்னா நானும் உங்கூடதான
இருக்கேன்”ன்னு அவன் ஸ்டைல்லயே பேசிட்டு இருந்தான். திடீர் திடீர்னு பில்டரு கண்ணு
திற்பறப்பு அருவி மாதிரி கொட்டிகிட்டே இருந்துச்சு.
ஆரிக்கு பாஸ்ட்
பார்வர்ட் சொல்லி ஃபன் பண்ணலாம்னு நெனச்சிருப்பாரு போல பிக்பாஸ்....ஆரி அதையும் மிலிட்டிரி
பரேட் மாதிரி நடத்துனது காலத்தின் கோலம்.
இப்ப பில்டர
ஃப்ரீஸ் பண்ணி அவங்கண்ணன அனுப்புனானுங்க. குடும்பமே ஒரு சைஸாத்தான் இருக்கானுங்க. ஆனா
ஜாலியா பேசிக்கிட்டானுங்க. “அதெல்லாம் ஷிவானி கேஸெல்லாம் ஒண்னுமில்ல....வெளிய இத லவ்வுன்னு
சொன்னாதான் அடிப்பானுங்க. மத்தபடி நீ ஒழுங்காதான் விளையாடுற...அப்பிடியே கன்டினியூ
பண்ணு”னுன்னு சொல்லிட்டு அவனும் போயிட்டான்.
நைட்டு ரம்யாவோட
ஷிவானி உக்காந்து “டவுசர் போட்டு போட்டா எடுக்கவா?ன்னு கேட்டா.... பவுடர் கொஞ்சம் சேத்து
போட்டுக்கோன்னு சொல்லும் எங்கம்மா.....இங்க வந்து என்னடான்னா எட்டுக்கட்டையில என்னய
திட்டுது. வீட்ல இருந்தா நான் அதுகூடயே பேசாம நான் என் கூட பிசியா பேசிட்டு இருப்பேன்....என்னய
வந்து எல்லார் கூடவும் பேசு....ஆரி ப்ரோ மாசுன்னுட்டு போகுது....எல்லாம் என் கிரகம்.
பில்டர்க்கு ஷேடோவா இருக்கேனாம்.....அப்பிடியா நான் இருக்கேன் ? நான் என் வழியிலதான
போயிட்டு இருக்கேன்”னு சொல்லி ரம்யா தோள்ல சாஞ்சு அழுதுட்டு....”சரி பில்டரு சாப்ட்டானா
? குட் நைட் வேற சொல்லனும் இல்லேன்னா ராத்தூங்க மாட்டான்”னு அதோட முடிச்சுகிச்சு.
“என்ன நேத்து
அப்பிடி ஒரு லெட்டர் போஸ்ட் போட்டுட்டு இப்ப இங்க வந்து குத்த வைக்குறான்?”னு தோணுதா?
ரஜினி மட்டும் வரேன்னு சொல்லிட்டு வராம இருக்கலாம்.....நான் வரமாட்டேன்னு சொல்லிட்டு
வரக்கூடாதா ? என்னங்க சார் உங்க சட்டம் ? கண்டென்ட் இருக்குற அன்னைக்கு கண்டிப்பா எழுதுவேன்.
ஆனா இவனுங்க கண்டிப்பா குடுக்க மாட்டானுங்க. நன்றி நமக்கம் !
Comments
Post a Comment