Posts

Showing posts from October, 2019

பிக்பாஸ் 3 : நாள் 105 (06.10.19)

பிக்பாஸ் 3 நாள் 105 (06.10.19) தி கிராண்ட் ஃபினாலே...! சீசன் மூணோட கடைசி நாள். இந்த தடவை கேட்டவங்ககிட்டையே கேக்காம உருப்படியா மக்கள் கிட்ட கருத்து கேட்டானுங்க. சொல்லி வச்சு எதும் சொல்லச் சொல்லுவானுங்கன்னு நெனச்சேன். ஆனா இவ்வளவு சரியா இவனுங்களுக்கு சொல்லித் தரத் தெரியாது. எல்லாருமே நல்லா சொன்னானுங்க. குறிப்பா சா’ண்டிய பாத்து நானும் என் குடும்பத்த மிஸ் பண்ணத உணர்ந்துக்கிட்டேன்னு’ சொன்னாங்க பாருங்க....(அடேய் பிக்பாஸ் பாத்த நேரத்துக்கு வீட்டாளுகள பாத்திருந்தாலே உனக்கு இது புரிஞ்சிருக்குமே...) இப்பிடி நெறய சொன்னாங்க. எப்பிடியோ நல்லது நடந்திருந்தா சரி...! வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் வெயிட்டர் மாதிரி ஆண்டவர் காஸ்ட்யூம். நேரா உள்ளாரையே போயிட்டார். அவரு ஸ்டைல்ல 4 பேருக்கும் கடிதமோ கவிதையோ எதையோ எழுதி ஃபிரேம் பண்ணி. அத வாசிச்சும் காமிச்சாரு. கண்டிப்பா இத புரிஞ்சுக்க நம்மாளுகளுக்கு ஒரு யுகமே தேவைப்படும். அப்பறம் அவங்க கூட உக்காந்து 4 பேருக்குமான இன்னும் விட்டுப்போன விஷயங்களோட குறும்படத்த காமிச்சார். முகினுக்கு அவர் நண்பர்கள். சாண்டிக்கு அவரு டான்ஸ் ஸ்கூல். லாஸுக்கு அவங்க வீடு, பாட்டி, க

பிக்பாஸ் 3 : நாள் 104 (05.10.19)

பிக்பாஸ் 3 நாள் 104 (05.10.19) ஆண்டவர் டே ! “கதவத்தொற கமல் வரட்டும்னு ஈசியா நெனைக்கிறீங்க ஆனா இது தானியங்கி டோர் இல்ல நாமியங்கி டோர். இதத் தொறந்து மூடவே 8 பேரு வேணும் அப்ப இந்த பிக்பாஸ் வீடு விளங்கனும்னா எத்தனை பேரு வேணும்? அப்ப இந்தியா விளங்கனும்னா எத்தனை பேரு வேணும்? முகம் தெரியாத பல பேராலதான் நம்ம வாழ்க்கை வண்டி ஓடிட்டு இருக்கு” அப்பிடி இப்பிடின்னு தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள்னு எல்லாரையும் ஒரே ஃபிரேமுக்குள்ளா கொண்டு வந்துட்டாப்ல. “சரி கடைசி வெள்ளிக்கிழமை என்னாச்சுன்னு பாப்போம்”னு உள்ள காமிச்சார். இருக்குற எல்லாக் கதவு வழியாவும் ஆளுங்க உள்ள வந்தானுங்க. “உல்லாலா” பாட்டோட. எம்.ஜி.ஆரோட அழகிய தமிழ் மகள் இவள் பாட்டு பாத்திருக்கீங்களா? பிட்டு பிட்டா எல்லா இடத்துலையும் குரூப் டான்ஸர்ஸ் நின்னு ஆடிட்டு இருப்பாங்க. அந்த மாதிரியே இங்கயும் எல்லா இடத்துலயும் ஆடிட்டு இருந்தாங்க. அப்பறம் மொத்தமா சேந்து லானுக்கு போயி ஆளப்போறான் தமிழன் பாட்டுக்கு எல்லாரையும் தோள்ல தூக்கி வச்சு ஆடுனாங்க. அப்பறம் ஆளுக்கு ஒரு வெள்ளை டி சர்ட்ட குடுத்து அதுல மத்த 3 பேரும் “என்னத்தையாச்சும் எழுதி வி

பிக்பாஸ் 3 : நாள் 103 (04.10.19)

பிக்பாஸ் 3 நாள் 103 (04.10.19) பீரோ புல்லிங் குரூப்பு கணக்கா ஒரு கும்பல் உள்ள வந்து பிகில் தீமுக்கு திம்மு திம்முன்னு நம்மாளுகள சேத்துக்கிட்டு ஆடுனானுங்க. வனித அசஞ்ச அசைவுக்கு 5 கிலோ அரிசிய காலுக்கு கீழ போட்டிருந்த நைட்டு இட்லிக்கு ஆகியிருக்கும். இன்னைக்கு என் தலைவி சல்பேட்டாவ ஏமாத்த முடியல. என்னதான் குரூப்பா ஆடுனாலும் தலைவி தனியா முட்டிப்போட்டு......துணி காயப்போடுற ஸ்டெப்ப போட்டு சிலிர்க்க வச்சுட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு சொடக்கு மேல சொடக்கு போட்டுக்கிட்டே மறுபடியும் நைனா, ஃபாத்திமா மேடம், மீரா, ரேஷ்மா வந்தாங்க. ஏண்டா இங்கனயே சுத்திட்டு இருக்கீங்களே உங்கள வீட்லயெல்லாம் தேட மாட்டாங்களா? ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் வந்து போனாலும் வருஷம் 16 ஆன மாதிரி கொஞ்சிக் குலாவிக்கிட்டானுங்க. ஏர்டெல் வீடியோ கால்ல வீட்ல உள்ளவங்ககிட்ட பேசலாம்னு சொன்னாப்ல. ஷெரின் அவங்க அம்மாகிட்ட, சாண்டி லாலாகிட்ட, முகின் எட்வின் அண்ணங்கிட்ட, லாஸ் அவங்கப்பா கிட்ட....! இன்னும் ஒரு நாள்தான் இருக்கு அதுக்கு இந்த அக்கப்போறா? அப்பறம் எல்லாரும் எதிர்பார்த்தா மாதிரி கவின் & தர்ஷன் உள்ள வந்தானுங்க.

பிக்பாஸ் 3 : நாள் 102 (03.10.19)

பிக்பாஸ் 3 நாள் 102 (03.10.19) “ஆலுமா டோலுமா” பாட்டோட ஒரு 10 பேரு உள்ள வந்தானுங்க. இருக்குற எல்லாத்தையும் உசுப்பி விட்டு லான்ல ஆடிட்டு இருந்தாங்க. தலைவி சல்பேட்டாவ குரூப் டான்ஸர் மாதிரி கூட்டத்துல ஒருத்தியா ஆட விட்டுட்டானுங்க. டேய் இதெல்லாம் அடுக்குமாடா? வனிதாவ யாரும் சீண்டல. மேடம் பீரோ மேல துணிய போட்டு பொத்துனா மாதிரி போர்வைய போத்தி தூங்கிட்டு இருந்தாங்க. அப்பறம் கக்கூஸ்ல ஷெரின், சேரன் சார், சல்பேட்டா.... ஷெரின் : சார் பைனலிஸ்டுக்கு எவ்வளவு சர்ப்ரைஸ் & ஷாக் கிடைக்குது பாத்தீங்களா? சேரன் : எனக்கு பைனலுக்கு போன ஆளுங்களே சர்ப்ரைஸ் & ஷாக்காதான் இருக்கு... ஷெரின் : என்னாது? சேரன் : நான் சல்பேட்டாகிட்ட பேசிட்டிருக்கேன் மா.... சல்பேட்டா : சார் பொய் சொல்றார் எங்கிட்ட பேசவே இல்ல சேரன் : யம்மா சும்மா விளையாண்டேன்... சல்பேட்டா : சார் பொய் சொல்றார் எங்கிட்ட விளையாடவே இல்ல... சேரன் : இல்லம்மா பைனல் போன ஆளுங்களே எனக்கு ஷாக்குன்னு சொன்னேன்.... சல்பேட்டா : சார் உண்மைய சொல்றார்....நீயெல்லாம் ஃபைனல் போனது அவருக்கு ஷாக்காம் ஷெரின் : யூ சேரன் சார் அப்டியா சொல்றீங்க?

பிக்பாஸ் 3 : நாள் 101 (02.10.19)

பிக்பாஸ் 3 நாள் 101 (02.10.19) வனிதா “சம்பவமாக்கி” யுகே யுகே ! “மெர்சல் அரசன்” பாட்டோட மெர்சலா தொடங்குச்சு. இன்னைக்கு இன்னும் 2 பேர சேர்த்துக்கிட்டு உள்ள வந்த வெளியாட்கள் நம்ம கூட்டத்தோட சேர்ந்து வீட்ல உள்ள எல்லா மூலை, முடுக்குளையும் உக்காந்துக்கிட்டு, நின்னுக்கிட்டு, படுத்துக்கிட்டுன்னு ஸ்டெப்புகளப் போட்டு செதற வுட்டுட்டு இருந்தானுங்க. அடுத்து ஒரு பிரஸ் மீட் ! முக்கியமான பத்திரிக்கைகள்ல இருந்து வந்த ஆட்கள் நம்மாளுககிட்ட கேள்விகள கேட்டாங்க.... சாண்டி என்ன கத்துக்கிட்ட? 100 நாளா இந்த பிசாசுகளோடையே ஜாலியா இருக்க முடியுதே அதனால இனிமே குடும்பத்தோடையும் குதூகலமா இருக்கனும்னு கத்துக்கிட்டேன். ரொம்ப சேஃபா கேம் விளையாடுறியோ? நான் இங்க சண்டையில சிக்காமா, வனிதா வயில விழாம எப்பிடி ஜாலியா இருக்கனும்னு மட்டுந்தான் யோசிக்கிறேன். அதுக்கு நீ கேம் ப்ளான், ஸ்டார்டஜி, வில் பவர், முஸ்லி பவர்னு என்ன பேர் வேணும்னாலும் வச்சுக்கோ. லாஸ் வெளிய போனதும் என்ன பண்ணுவ? (MV : ம்ம்ம்ம்....கதவ ஒழுங்கா பூட்டியிருக்கோமான்னு பூட்ட இழுத்துப் பாத்து   செக் பண்ணுவேன். இதெல்லாம் ஒரு கேள்வியாடா?) ம

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)

பிக்பாஸ் 3 நாள் 100 (01.10.19) 100 வது நாள். ரவுடி பேபி பாட்டோட ஸ்டார்ட் ஆச்சு. வெளிய இருந்து வந்த புள்ளிங்கோவோட எல்லாரும் டான்ஸ் ஆடுனாங்க. மகாதியானத்துல முழுகி முழுசா எடுத்த முட்டைய உருட்டிட்டு இருந்த மீரா பக்கத்துல உக்காந்த சாண்டி மீரா பக்கத்துல போயி அது முகத்த மோந்துட்டு இருந்தாப்ல. ஆனாலும் இவ்வளவு க்ளோஸப்ல மீரா முகத்த பாக்குற சாண்டிக்கு தைரியம் ஜாஸ்திதான். கூடவே முகினும் சேர்ந்து அது பண்ற மாதிரியே செஞ்சு கலாச்சுட்டு இருந்தாங்க...! முழிச்சுப் பாத்த மீரா “என் தவ எல்லைக்குள் புகுந்து தகராறு செய்தவன் நீதானா?”ன்னு விசுவாமித்திரி மாதிரி கதறிட்டு இருந்துச்சு. பின்ன சாண்டி “பல்லு விளக்க ஹார்பிக் யூஸ் பண்ணு கக்கூஸ பளபளன்னு ஆக்குற இது உன் வாய வெளுக்காதா?”ன்னு வெளையாண்டுட்டு இருந்தாப்ல. அப்பறம் இது வரைக்கும் மறைமுகமா நேரத்த ஓட்டுன பிக்பாஸ் இப்ப நேரடியாவே நேரத்த ஓட்டறத டாஸ்க்கா வச்சாப்ல. போலி கடிகாரத்த வச்சு 1 மணி நேரத்த கணிக்கனும். முகின் வின்னு இதுல. எல்லாரும் ஜெயில் வாசல்ல உக்காந்திருந்தப்ப சட்டுனு பிக்பாஸ் “முகின் கொஞ்சம் கேமரா பக்கமா நகந்து உக்காரு. சாண்டி முகின் பக்கத்துல வந