பிக்பாஸ் 3 : நாள் 104 (05.10.19)
பிக்பாஸ் 3நாள் 104 (05.10.19)
ஆண்டவர் டே
! “கதவத்தொற கமல் வரட்டும்னு ஈசியா நெனைக்கிறீங்க ஆனா இது தானியங்கி டோர் இல்ல நாமியங்கி
டோர். இதத் தொறந்து மூடவே 8 பேரு வேணும் அப்ப இந்த பிக்பாஸ் வீடு விளங்கனும்னா எத்தனை
பேரு வேணும்? அப்ப இந்தியா விளங்கனும்னா எத்தனை பேரு வேணும்? முகம் தெரியாத பல பேராலதான்
நம்ம வாழ்க்கை வண்டி ஓடிட்டு இருக்கு” அப்பிடி இப்பிடின்னு தொழிலாளர்கள், விவசாயிகள்,
அரசு ஊழியர்கள்னு எல்லாரையும் ஒரே ஃபிரேமுக்குள்ளா கொண்டு வந்துட்டாப்ல. “சரி கடைசி
வெள்ளிக்கிழமை என்னாச்சுன்னு பாப்போம்”னு உள்ள காமிச்சார்.
இருக்குற எல்லாக்
கதவு வழியாவும் ஆளுங்க உள்ள வந்தானுங்க. “உல்லாலா” பாட்டோட. எம்.ஜி.ஆரோட அழகிய தமிழ்
மகள் இவள் பாட்டு பாத்திருக்கீங்களா? பிட்டு பிட்டா எல்லா இடத்துலையும் குரூப் டான்ஸர்ஸ்
நின்னு ஆடிட்டு இருப்பாங்க. அந்த மாதிரியே இங்கயும் எல்லா இடத்துலயும் ஆடிட்டு இருந்தாங்க.
அப்பறம் மொத்தமா சேந்து லானுக்கு போயி ஆளப்போறான் தமிழன் பாட்டுக்கு எல்லாரையும் தோள்ல
தூக்கி வச்சு ஆடுனாங்க.
அப்பறம் ஆளுக்கு
ஒரு வெள்ளை டி சர்ட்ட குடுத்து அதுல மத்த 3 பேரும் “என்னத்தையாச்சும் எழுதி விடுங்கடா”ன்னு
சொல்ல, ஆளாளுக்கு மாத்தி மாத்தி எழுதிக்கிட்டானுங்க. அத ஃபோட்டோவா வேற எடுத்துக்கிட்டாச்சு.
4 பேரையும்
கூட்டிட்டு போயி முடிய வெட்டி விட்டு, ஃபேசியல் பண்ணி, நகம் வெட்டி விட்டு, மூஞ்சி
கழுவி, பவுடர் போட்டு, நல்ல ட்ரெஸ்ஸு போட்டு போட்டோ ஷூட்லாம் பண்ணி அனுப்பி வச்சானுங்க.
10ம் வகுப்பு
பரீட்சையில பதில் எழுதத் தெரியாம கொஸ்டீன் பேப்பர், தெரிஞ்சவங்க பேரு, சினிமா கதை,
எழுதுனதயே திரும்ப எழுதுறதுன்னு பண்ணுவோம்ல. அப்பிடித்தான் இந்த பிக்பாஸ் பண்றாப்ல.
எல்லாரையும் தனித்தனியா கூப்ட்டு
எப்பிடி உணர்றீங்க?
என்ன கத்துக்கிட்டீங்க?
வீட்ல பிடிச்ச
இடம் எது?
என்ன செய்தி
சொல்றீங்க மக்களுக்கு?
இப்பிடி வந்தன்னைல
இருந்து கேட்ட கேள்வியவே ஆர்டர் மாத்தி கேட்டாப்ல. நம்மாளுங்களும் அதே பதிலயே ஆர்டர்
மாறாம சொல்லிட்டு இருந்தானுங்க.
“சரி புரட்டாசி
3வது சனிக்கிழமைக்கு வருவோம்”னு ஆண்டவர் தரிசனம் டு கண்டெஸ்டண்ட்ஸ். ஆண்டவரும் அதே
கேள்விகள அவரு ஸ்டைல்ல கேக்க அசராம நம்ம புள்ளிங்கோ அதே பதில அச்சு பிசகாம சொல்லிட்டு
இருந்தானுங்க.
பின்ன லாஸ நியூஸ்
வாசிக்க சொன்னார் கைய கால கழுதை மாதிரி உதைக்காம ஒரே இடத்துல உக்காந்து நியூஸ் வாசிச்சிச்சு
பொண்ணு. “நியூஸ் வாசிக்கிற வேலை பாத்தப்பயெல்லாம் இப்பிடி வாசிக்காம இப்ப வாசிக்கிற!
நல்லா வருவ நீ”ன்னு சொன்னாரு ஆண்டவர்.
ஷெரினுக்கு பழைய, புதிய போட்டோவ காட்டி பேசச் சொன்னார்.
“என்னமோ போங்க அழுகவே அழுகாத என்னய நல்லா அழுக வச்சு வேடிக்கை பாத்துட்டான் பிக்கி.
பொறுமையா இருக்கவும் கத்துக்குடுத்துட்டீங்க இல்லேன்னா வனிதாவ நாலு வாட்டி கொலை பண்ணியிருப்பேன்”னு
சொன்னாங்க.
முகின “நீதான்”
பாட்டுப் பாட சொன்னார் நேயர் விருப்பத்துக்காக. சீக்கிரம் இவன் அடுத்த பாட்டுக்கு தாவுனா
நல்லா இருக்கும்.
சாண்டி மட்டும்
வனி, நைனா, சேரன், மீரா மாதிரி அவார்டு வின்னிங்க் மொமெண்ட இமிட்டேட் பண்ணி காமிச்சார்.
நைனாவத் தவிர மத்த 3 பேரு மாதிரி பண்ணது அல்ட்டிமேட். ஆண்டவர் நல்லா ரசிச்சார்.
“சரி எப்பிடியும்
ஒரு ஆள்தான் வின்னர். அவனுக்கப்பறம் வரவன் ரன்னர். அத நாளைக்குப் பாக்குறது பெட்டர்”னு
சொல்லிட்டு கிளம்பிட்டார். நாளைக்கு ஆண்டவரோட சேர்ந்து நானும் குட்பை சொல்லனும். ஜட்ஜ்மெண்ட்
டே...!
Comments
Post a Comment