பிக்பாஸ் 3 : நாள் 105 (06.10.19)


பிக்பாஸ் 3நாள் 105 (06.10.19)


தி கிராண்ட் ஃபினாலே...!

சீசன் மூணோட கடைசி நாள். இந்த தடவை கேட்டவங்ககிட்டையே கேக்காம உருப்படியா மக்கள் கிட்ட கருத்து கேட்டானுங்க. சொல்லி வச்சு எதும் சொல்லச் சொல்லுவானுங்கன்னு நெனச்சேன். ஆனா இவ்வளவு சரியா இவனுங்களுக்கு சொல்லித் தரத் தெரியாது. எல்லாருமே நல்லா சொன்னானுங்க. குறிப்பா சா’ண்டிய பாத்து நானும் என் குடும்பத்த மிஸ் பண்ணத உணர்ந்துக்கிட்டேன்னு’ சொன்னாங்க பாருங்க....(அடேய் பிக்பாஸ் பாத்த நேரத்துக்கு வீட்டாளுகள பாத்திருந்தாலே உனக்கு இது புரிஞ்சிருக்குமே...) இப்பிடி நெறய சொன்னாங்க. எப்பிடியோ நல்லது நடந்திருந்தா சரி...!
வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் வெயிட்டர் மாதிரி ஆண்டவர் காஸ்ட்யூம். நேரா உள்ளாரையே போயிட்டார். அவரு ஸ்டைல்ல 4 பேருக்கும் கடிதமோ கவிதையோ எதையோ எழுதி ஃபிரேம் பண்ணி. அத வாசிச்சும் காமிச்சாரு. கண்டிப்பா இத புரிஞ்சுக்க நம்மாளுகளுக்கு ஒரு யுகமே தேவைப்படும். அப்பறம் அவங்க கூட உக்காந்து 4 பேருக்குமான இன்னும் விட்டுப்போன விஷயங்களோட குறும்படத்த காமிச்சார். முகினுக்கு அவர் நண்பர்கள். சாண்டிக்கு அவரு டான்ஸ் ஸ்கூல். லாஸுக்கு அவங்க வீடு, பாட்டி, காலேஜ்.
 ஷெரினுக்கு அவங்க நாய். நாயா அது ?கால்ல மிதிக்கிற கார்பெட் மாதிரி இருக்கு. இவ்வளவு நாள் இவ்வளவு மனுஷங்க கூட அது வாழ்ந்ததே அதிசயம். என்னைக்காச்சும் தூக்க கலக்கத்துல ஷெரின் கக்கூஸ்ல இருந்து வெளிய வந்து கார்பெட்டுன்னு நெனச்சு மிதிச்சு தேச்சு கொன்னுடும். அன்னைக்கு கஸ்தூரி சொன்ன கதை நெஜமாகிடும்.
சாண்டி தன்ன “கையோட கூட்டிட்டுப் போயிடுங்க”ன்னு அடம்பிடிச்சார் பிக்பாஸும் “டேய் கலவரம் பண்ணாம கைய எடுடா வெளிய ஷோ இருக்கு”ன்னு அனுப்பி வச்சார்.
அபியோட டான்ஸ் பெர்பார்மென்ஸ். “கும்முரு டப்பரு”ன்னு ஆரம்பிச்சாங்க. “பாத்து பாத்து தரைக்கு வலிக்கும் பாரு”ன்ற ரேஞ்சுக்கு ஆடிட்டு இருந்தாங்க. ஏண்டா ஒரு தில்லானா மோகனாம்பாளப் போயி இப்பிடி “தீப்பிடிக்க தீப்பிடிக்க” பாட்டுக்காடா ஆட விடுவீங்க? வெரி ஒர்ஸ்ட்ரா....
அப்பறம் ஆண்டவர் வந்து இந்த சீசன் எக்ஸ் வீட்டாளர்கள கூப்புட்டார். மது, சரவணனத் தவிர எல்லாரும் வந்தாங்க. “வந்ததுக்கு யாரு ஜெயிப்பான்னு சொல்லுங்க?”ன்னார் ஆண்டவர். பெரும்பாலும் முகின சொன்னாங்க.
அப்பறம் முன்னாள் சாம்பியன் ரித்விகாவ கூப்ட்டு “இந்த சீசன் ட்ராஃபிய உள்ள எல்லார்கிட்டையும் தாலிய ஆசிர்வாதம் வாங்கிட்டு வர மாதிரி வாங்கிட்டு ஒரு டிக்கெட்ட கூட்டிட்டு வந்துரு”ன்னார். ரித்விகா உள்ள போயி ஷெரின இழுத்துட்டு வந்தாங்க. யாருக்கும் கவலையோ கண்ணீரோ இல்ல. சல்பேட்டாக்கு தான் சோ சேடாப் போச்சு.
வெளிய வந்த ஷெரின் ரொம்ப ஜாலியா பேசுனாங்க. “இந்த மெண்டல் புடிச்சவனுங்களுக்கு நடுவுல என்னோட மனிதத்தன்மைய இழக்கல அதுவே பெரிய வெற்றி. இதுக்கு மேல என்ன வேணும்? இதுவே போதும்”னு சொல்லிட்டுப் போயி உக்காந்தாங்க.
யாசிகாவோட பெர்பார்மென்ஸ். ஆச்சர்யமா நெறய துணி போட்டு ஆடிட்டு இருந்தாங்க. அவங்க வாழ்க்கையில பிக்பாஸால ஏற்பட்ட மாற்றத்துல இது மிகப்பெரிய மாற்றந்தான் போல....! அதனால்தான் சொல்கிறேன் காத்தவராயனுக்கே ஓட்டு போடுங்கள்.
பின்ன ஆண்டவர் அவார்டு குடுத்தார்.
கேம் சேஞ்சர் – கவின்
சேஞ்ச் பண்றதுல கவின் பெஸ்டுதான் சந்தேகமேயில்ல. கடைசியா எடுத்த முடிவு உண்மையாவே கேம சேஞ்ச் பண்ணித்தான் இருந்துச்சு. ரொம்ப நுட்பமா கவனிச்சா கவின் உள்ள இருந்தப்பவே ஒரு 3,4 எபிசோட் அவரால கேம் சேஞ்ச் ஆனத ஃபீல் பண்ண முடியும்.
ஆண்டவரும் கவின ஸ்டார்டஜியோட விளையாண்டதுக்கு பாராட்டுனார். கவினும் “நான் இப்பிடித்தான் விளையாடனும்னு நெனச்சுதான் விளையாண்டேன்”னு ஓப்பனா சொன்னாப்ல.
மோஸ்ட் டிசிப்ளின் – சேரன்
இது எதுக்கு சேரனுக்குன்னு தெரியல. ஒரு வேளை சேர் கால், கண்ணாடி வால், வாழைப்பழ தோல்னு எல்லாத்தையும் உக்காந்து தொடச்சுட்டு இருந்ததாலயா? இல்ல வெட்டிக்கிட்டு செத்தப்பவும் வெண்டைக்காய வெட்டிட்டு இருந்ததாலயா?ன்னு தெரியல. “இந்த டிசிப்ளினுக்கு காரணம் ஆண்டவர்”னு சொன்னாப்ல. ஆண்டவரே கேட்டுச்சா?
கட்ஸ் & க்ரிட் – வனிதா
பொருத்தந்தான். பொறந்தநாள் வேறையாம். ஆண்டவர்கிட்ட கிஃப்ட் கேட்டுச்சு. நல்லா மூட்ல இருந்தாப்ல அதனால எதுவும் பண்ணல. அவரு கூட படத்துல நடிச்சே ஆகனும்னு சொல்லுச்சு. “நல்ல வேளை சினிமாவ நிப்பாட்டுனேன்”ற ஆசுவாசம் அவரு மூஞ்சில தெரிஞ்சது.
பெஸ்ட் பட்டி – ஷெரின்
ஷெரினுக்கு பொருத்தமானது. 16க்கு 12 பேரு கூட பிரண்டா இருந்தேன்னு சொன்னாங்க. இதெல்லாம் சாதனை. அதுக்கு அவங்க சொன்ன காரணமும் செம்ம. இதெல்லாம் “நோட் பண்ணுங்கப்ப நோட் பண்ணுங்கப்பா” கண்டெண்ட். அபியையும் இதுல சேர்த்துக்கிட்டாங்க.
ஆல்ரவுண்டர் – தர்ஷன்
இது அவனுக்குன்னே அளவெடுத்து தச்சது. மக்கள நெனச்சு நெகிழ்ந்தாப்ல. ஆண்டவரோ அல்டிமேட்டா ராஜ்கமல் பிலிம்ஸுல அக்ரிமெண்ட போட்டுட்டார்.  நல்லா வரட்டும்.
சேரன் சார் அங்குட்டு மைண்ட் வாய்ஸ் “அடுத்து தேவர் மகன் – 2 சான்ஸ் எனக்குதான்...ப்ரொட்யுசாரே பணத்த எடுத்து வைடா”ன்னு கூப்பாடு போட்டுட்டு இருந்துச்சு.
சல்பேட்டாவின் சங்கராபரணம். கையி மட்டும் ஆடுச்சு. தலைவி ஏதோ புதுசா கத்துக்கிட்டு வந்துருக்கு போல. அனேகமா செண்டினெண்டல் தீவோட திருவிழா நடனத்த நமக்காக பிரத்யேகமா ஆடிக்காட்டுனாங்கன்னு மை திங்...!
ஸ்ருதி வந்தாங்க. அவங்ககிட்ட கார்ட குடுத்து “ஒரு ஆள கூப்ட்டு வா”ன்னு சொன்னாப்ல. ஆண்டவரும் ஸ்ருதியும் எப்ப பேசிக்கிட்டாலும் செம்மயா இருக்கும். இப்பவும் அப்பிடித்தான் இருந்துச்சு. ஸ்ருதி உள்ள போயி லாஸ கூட்டிட்டு வந்தாங்க.
லாஸ் எல்லாருக்கும் நன்றி சொல்லிட்டு கவினுக்கு தனி கவனிப்பா ஒரு நன்றி சொன்னாங்க.
வாட்டர் டாங்கி வகை தொகையில்லாம ரோட்டுல உருண்டு வந்தா எப்பிடி இருக்கும்? வனிதாக்காவோட டான்ஸ் பெர்பார்மென்ஸ் ! முகத்துலயே 300 ஸ்டெப்ஸ் போட்டாங்க.
முகினும், சாண்டியும் மட்டும் இருக்க, பிக்பாஸ் பேனாப்ல. சிஷ்யான்னு சாண்டியையும், அய்யா முகின்னு முகினையும் அன்போட கூப்ட்டார். “இதுதான் நான் பேசுற கடைசி வார்த்தை நல்லா இருங்க”ன்னு சொன்னதும் சட்டுன்னு வயித்துக்கும் தொண்டைக்கும் ஒரு உருவமில்லா உருண்டை உருண்டுச்சு எனக்கு.
ராஜேஷ் வைத்யாவோட வீணை ! செம்ம பெர்பார்மென்ஸ். ஆண்டவரும் ஒரு அஞ்சாறு லைன் பாடுனாப்ல. அப்பறம் நைனாவ பாத்து “உங்க குடும்பத்துல இவரு பொறந்ததுக்கு பெருமை படனும்”னு சொன்னார். இத டைரக்டா சொல்லனும்னா ராஜேஷ் வைத்யா – வீணை, மோகன் வைத்யா – வினை.
“போறப்ப அந்த பெரிய ஸ்விட்ச ஆஃப் பண்ணி விளக்கணச்சுட்டு போங்க”ன்னு சொன்னார். பசங்களும் ஃபீலிங்கோட லைட்ட ஆஃப் பண்ணிட்டு வெளிய வந்தா ஆண்டவர் கைய பிடிச்சு ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு பெரிய சாரட் வண்டியில ஏத்தி ராஜா கைய வச்சா பாட்டுக்கு 3 பேரும் ஆடிட்டே போனாங்க.
இந்த சீசன்ல மட்டும் 200 கோடிக்கும் அதிகமான ஓட்டாம். ஃபைனலுக்கு மட்டும் 20 கோடி ஓட்டாம். அன்புமனி சார் கேட்டா மன வருத்தப்படுவாப்ல.
ரைட்டு ! முகின் வின்னர். சாண்டி ரன்னர். அப்பறம் என்ன ? குடும்பம், நெகிழ்ச்சி, நண்பர்கள், கொண்டாட்டம் !
“நெக்ஸ்டு மீட் பண்றேன்”னு சொல்லிட்டு ஆண்டவர் கிளம்பிட்டார். வீட்ல விளைக்கணச்சு டூலெட் போர்டு போட்டாச்சு. ஆண்டவரும் அடுத்த சீசன் பாக்கலாம்னு போயிட்டாரு. இனி நமக்கென்ன வேலை? டாட்டா பை பை....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)