பிக்பாஸ் 3 : நாள் 102 (03.10.19)


பிக்பாஸ் 3நாள் 102 (03.10.19)


“ஆலுமா டோலுமா” பாட்டோட ஒரு 10 பேரு உள்ள வந்தானுங்க. இருக்குற எல்லாத்தையும் உசுப்பி விட்டு லான்ல ஆடிட்டு இருந்தாங்க. தலைவி சல்பேட்டாவ குரூப் டான்ஸர் மாதிரி கூட்டத்துல ஒருத்தியா ஆட விட்டுட்டானுங்க. டேய் இதெல்லாம் அடுக்குமாடா? வனிதாவ யாரும் சீண்டல. மேடம் பீரோ மேல துணிய போட்டு பொத்துனா மாதிரி போர்வைய போத்தி தூங்கிட்டு இருந்தாங்க.
அப்பறம் கக்கூஸ்ல ஷெரின், சேரன் சார், சல்பேட்டா....
ஷெரின் : சார் பைனலிஸ்டுக்கு எவ்வளவு சர்ப்ரைஸ் & ஷாக் கிடைக்குது பாத்தீங்களா?
சேரன் : எனக்கு பைனலுக்கு போன ஆளுங்களே சர்ப்ரைஸ் & ஷாக்காதான் இருக்கு...
ஷெரின் : என்னாது?
சேரன் : நான் சல்பேட்டாகிட்ட பேசிட்டிருக்கேன் மா....
சல்பேட்டா : சார் பொய் சொல்றார் எங்கிட்ட பேசவே இல்ல
சேரன் : யம்மா சும்மா விளையாண்டேன்...
சல்பேட்டா : சார் பொய் சொல்றார் எங்கிட்ட விளையாடவே இல்ல...
சேரன் : இல்லம்மா பைனல் போன ஆளுங்களே எனக்கு ஷாக்குன்னு சொன்னேன்....
சல்பேட்டா : சார் உண்மைய சொல்றார்....நீயெல்லாம் ஃபைனல் போனது அவருக்கு ஷாக்காம்
ஷெரின் : யூ சேரன் சார் அப்டியா சொல்றீங்க?
சேரன் : (அட சோகை பிடிச்ச சல்பேட்டாவே ! எப்பிடி சைஸா திருப்பி விட்டா பாத்தியா? என் மருமகன் மட்டும் இப்ப இங்க இருந்திருக்கனும்....) அப்பிடி சொல்லலம்மா....
சல்பேட்டா : ஆமா அவரு அப்பிடி சொல்லல.... “பைனல் போன ஆளுங்களே எனக்கு ஷாக்கு”ன்னு சொன்னார். நீயும் ஃபைனல்தான போற ? அப்ப உன்னயதான் சொல்றாரு...
ஷெரின் : சார் என்னய நீங்க நாமினேட் பண்ணீங்களா?
சேரன் : யம்மா நீ வேணும்னா சல்பேட்டாவ கேளு அவ டிவில பாத்திருப்பா நான் நாமினேட் பண்ணவே இல்ல
சல்பேட்டா : சார் பொய் சொல்றார் அவரு நாமினேட் பண்ணாரு
ஷெரின் : சார் என்ன சார் இது?
சேரன் : என்ன சல்பேட்டா விளையாடுறியா? நான் உன்னயத்தான் நாமினேட் பண்ணேன்...
சல்பேட்டா : பாத்தியா பேபி உன்னயத்தான் நாமினேட் பண்ணாராம்...
சேரன் : அடியே என் சப்பாத்தி....நான் சொன்னது உன்னய
சல்பேட்டா : நானும் ஷெரின் கிட்ட உன்னயன்னுதான் சொன்னேன்...
சேரன் : அடியே கொரியர்ல வந்த கொரங்கு மந்திரக்கல்லே ஆள விடு....! இந்தா ஷெரினு என் பொண்ணு மேல சத்தியமா உன்னய நான் நாமினேட் பண்ணதே இல்ல....
சல்பேட்டா : சார் பொய் சொல்றார் லாஸ் அவரு பொண்ணே கிடையாது...
சேரன் : அந்த கரப்பான் பூச்சி ஹிட்ட எடு இவ மூஞ்சில அடிச்சு கொன்னுடலாம்...! ஷெரினு உன்னய நான் நாமிணேட் பண்ணவே இல்ல. இந்த சல்பேட்டாவதான் நாமினேட் பண்ணேன் இது என் மேல சத்தியம்...
ஷெரின் : தேங்க் யூ சார்...யு ஆர் சோ லவ்லி...
சல்பேட்டா : சார் பொய் சொல்றார் அவரு மேல சத்தியமே இல்ல....கொஞ்சோண்டு முடிதான் இருக்கு.....
(டங்குன்னு ஒரு சொம்பு யாரு மேலயோ விழுகுற சத்தம்......)
அப்பறம் கூட்டமா கூடி வாழுகிற இடத்துக்கு (லிவிங் ஏரியா) வந்து உக்காந்தாங்க. “எங்கேயோ கேட்ட குரல்” டாஸ்க். வீட்ல நடந்த ஏதோ சில சம்பவங்கள ஆடியோவா போடுவாங்க. அதக் கேட்டுட்டு அந்த சம்பவம், அதுல இருந்தா ஆளுங்க, அது நடந்த இடம் இத கரெக்டா எழுதனும். இதுல ஷெரின் வின்னு.
“சரி இப்பிடியே இவனுங்கள எவ்வளவு நேரந்தான் பாத்துக்கிட்டே இருக்குறது? வேலை வெட்டிய பாக்க வேணாமா?”ன்னு வார் டாங்கி வனிதா கேக்க “வனிதா சொல்றத கேளுங்கடா வாலில்லா குரங்குகளா”ன்னு பிக்பாஸ் வனிக்கா சொன்னத வழிமொழிஞ்சார். இதுக்கு பிக்பாஸ் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
அப்பறம் திரும்ப கூப்ட்டு “ஒரு பஸ்ஸர் அடிக்கும் அப்போ எல்லாரும் யாரு வந்தாலும், போனாலும் கண்டுக்காம லூசு மாதிரி திரியனும்”னு சொன்னாப்ல அப்பவே தெரியும் கண்டிப்பா இது சொதப்பும்னு. உள்ள மிச்ச மீதி இருக்குற விஜய் டீவி ஆர்டிஸ்ட்ஸ் மாகபா, ரக்ஷன், பிரியங்கா, தாடி பாலாஜி, ரியோ அனேகமா அடுத்த சீசன் கண்டெஸ்டண்ட் இவனுங்கதான் போல அதுனால வீடு பாக்க வந்திருப்பானுங்க.
வந்தப்ப ஆரம்பிச்ச கூச்சல்தான் அப்பறம் ஒரு எழவும் கேக்கல. அபி சொன்ன மாதிரி “பிஷ் மார்கெட்டாட்டம்” இருந்துச்சு. அப்பறம் அவனுங்களா ஓஞ்சு ஒரு இடத்துல உக்காந்தானுங்க. சோஃபா மேல லாரி ஏத்துனா தாங்குமா? பிரியங்கா உக்காந்ததும் ஒரு சோஃபா கால் காலி. அப்பறம் உள்ள போயி அடுத்து வரப்போற புது ஷோ “தி வால்” அதப்பத்தி சொல்லி ப்ரொமோஷன் பண்ணானுங்க. 2.5 கோடி பரிசுத்தொகையாம். சேரன் சார் ரொம்ப ஆர்வமா விதிமுறைகளப் பத்தி கேட்டுக்கிட்டார். 85 நாள் உள்ள இருந்து, 2 தடவ பெஸ்ட் பெர்பார்மர், 12 வாரம் நாமினேட்டர், ஒரு இடுப்பு கிள்ளி பொய் கேஸ் இந்த தகுதிக்கெல்லாம் இந்த ஷோலயாச்சும் நேரடி ஃபைனல் போற வாய்ப்பு இருக்கான்னு விசாரிச்சிருப்பார் போல. ஒரு தகுதியான ஃபைனலிஸ்ட விட்டியேடா பிக்பாஸா....! மனுஷனாடா நீங்கெள்லாம் ?
“பிக்பாஸில் நல்லா கண்டெஸ்டண்டாக இருப்பது எப்பிடி?”ன்னு இந்த 4 பேரும் சொல்லனுமாம். ஷெரின் சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டி குதூகலமானானுங்க விஜய் டீவியர்ஸ். “ஓ இப்பிடித்தான் மக்கள் என்னய பேசவிடாம என் ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டி ரசிச்சாங்களா?”ன்னு வனிதா கேட்டது வயித்துப்போக்க வரவழச்சது.
சரின்னு எல்லாரையும் வெளிய அனுப்பிட்டானுங்க. போற போக்குல “செலவில்லாம சோஃபவ டிஸ்மேண்டில் பண்ணதுக்கு நன்றி மச்சி....ஃபர்னிச்சர உடைக்குறதுல நீ முகினுக்கு தங்கச்சி”ன்னு பாராட்டி அனுப்புனாரு பிக்பாஸ்.
அப்பறம் வழக்கம்போல பைனலிஸ்டுகளுக்கு கிஃப்ட்டுகள். கூடவே மெமரிஸ் ஃபோட்டாக்கள்.
அப்பறம் ஒரு பிரண்ட்ஷிப் வீடியோ. பசங்க நட்பு, பொண்ணுங்க நட்பு, பசங்க பொண்ணுங்க நட்பு இப்பிடி எல்லாம் ஜோடி ஜோடியா இருக்குறத காமிச்சாங்க. மோஸ்ட்லி பாயஸ் டீம் தான். அபியும், சல்பேட்டாவும் சைட் டிஷ் மாதிரி வீடியோல சேத்துக்கிட்டானுங்க. வார் டாங்கியும், சேரன் சாரும் அதுல ஒரு ஷாட்ல கூட இல்ல. உண்மையாவே செம்ம வீடியோ.
அடுத்து எப்பயும் போல பிரெண்ட்ஷிப் ஃபோட்டோக்கள சொவத்துல மாட்டி எல்லாரையும் பேசச்சொன்னானுங்க. யாரு யாரப் பத்தி பேசுவாங்கன்னு நமக்குதான் தெரியுமே! ஆனா முந்தாநேத்து “அவ சொன்ன ரகசியத்தையெல்லாம் நான் எடுத்து விடவா?”ன்னு விரல சொடுக்குன ஷெரின் இப்ப வனிதாவ பெஸ்ட் பிரண்டுன்னு சொன்னது லுச்சாத்தனமா இருக்கு. தேவதைகளும் ஒவர் ஆக்டிங் பண்ணும் போல....! ரைட்டு அவ்வளவுதான்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)