பிக்பாஸ் 3 : நாள் 103 (04.10.19)
பிக்பாஸ் 3நாள் 103 (04.10.19)
பீரோ புல்லிங்
குரூப்பு கணக்கா ஒரு கும்பல் உள்ள வந்து பிகில் தீமுக்கு திம்மு திம்முன்னு நம்மாளுகள
சேத்துக்கிட்டு ஆடுனானுங்க. வனித அசஞ்ச அசைவுக்கு 5 கிலோ அரிசிய காலுக்கு கீழ போட்டிருந்த
நைட்டு இட்லிக்கு ஆகியிருக்கும்.
இன்னைக்கு என்
தலைவி சல்பேட்டாவ ஏமாத்த முடியல. என்னதான் குரூப்பா ஆடுனாலும் தலைவி தனியா முட்டிப்போட்டு......துணி
காயப்போடுற ஸ்டெப்ப போட்டு சிலிர்க்க வச்சுட்டு இருந்துச்சு.
கொஞ்ச நேரம்
கழிச்சு சொடக்கு மேல சொடக்கு போட்டுக்கிட்டே மறுபடியும் நைனா, ஃபாத்திமா மேடம், மீரா,
ரேஷ்மா வந்தாங்க. ஏண்டா இங்கனயே சுத்திட்டு இருக்கீங்களே உங்கள வீட்லயெல்லாம் தேட மாட்டாங்களா?
ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் வந்து போனாலும் வருஷம் 16 ஆன மாதிரி கொஞ்சிக் குலாவிக்கிட்டானுங்க.
ஏர்டெல் வீடியோ
கால்ல வீட்ல உள்ளவங்ககிட்ட பேசலாம்னு சொன்னாப்ல. ஷெரின் அவங்க அம்மாகிட்ட, சாண்டி லாலாகிட்ட,
முகின் எட்வின் அண்ணங்கிட்ட, லாஸ் அவங்கப்பா கிட்ட....! இன்னும் ஒரு நாள்தான் இருக்கு
அதுக்கு இந்த அக்கப்போறா?
அப்பறம் எல்லாரும்
எதிர்பார்த்தா மாதிரி கவின் & தர்ஷன் உள்ள வந்தானுங்க. கதவத் தொறக்கப்போறதுல இருந்து
கவின் திரும்ப வெளிய போற வரைக்கும் லாஸ் கவின பார்த்த பார்வை எல்லாம் பக்கா எஃபெக்ட்.
உண்மையோ பொய்யோ ரெண்டு பேருக்கும் செம்ம கெமிஸ்ட்ரி இருக்கு. அட்லீஸ்ட் புடிச்சுப்போட்டா
3 படத்துக்கு ஒர்கவுட் ஆகும். உண்மையாவே காசு குடுத்தாலும் கிடைக்காத லவ் சீன்ஸ். லாஸோட
ஒவ்வொரு லுக்கும் 100% லவ்.
“ஐ ஆம் பிரவுட்
ஆஃப் யூ பேபி”ன்னு பெருமைப்பட்டாப்ல கவின். “எமோஷனுக்கு உண்மையா இருந்தது நம்மதான்.
ஊரே கழுவி ஊத்துனாலும் ஊத்தித் தள்ளிட்டு நம்ம நம்ம வேலைய பாத்திருக்கோம்”னு சொன்னாப்ல.
இங்குட்டு தர்ஷன் ஷெரின் கிட்ட “வாம்ப்பையர் சொன்னதெல்லாம் வடிகட்டுன பொய்யி அதெல்லாம்
ஒரு பிரச்சனையும் இல்ல. தைரியமா இரு”ன்னு ஆறுதல் சொன்னாப்ல. வனிதா பயந்து போயோ என்னமோ
தர்ஷன் கிட்ட வந்து சாரின்னு சொல்லுச்சு.
பின்ன இன்னைக்கு
ரவுண்டு அழுகைப்படம். நெழ்ச்சியான தருணங்கள படமா காமிச்சானுங்க. இதப்பாத்துட்டு இப்பவும்
சிலதுங்க அழுதுச்சு. இந்த போர்ஷன் பூராம் கவின் லாஸ் கைய இறுக்கமா பிடிச்சிட்டு உக்காந்திருந்தாப்ல.
அப்பறம் என்ன வழக்கம் போல எல்லாரும் வெளிய போயாச்சு.
எல்லாரும் வந்தாச்சு.
ஆண்டவரத் தவிர. அதனால இன்னும் ரெண்டு நாளைக்கு ஆண்டவர்தான்.
Comments
Post a Comment