பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)
பிக்பாஸ் 3நாள் 100 (01.10.19)
100 வது நாள்.
ரவுடி பேபி பாட்டோட ஸ்டார்ட் ஆச்சு. வெளிய இருந்து வந்த புள்ளிங்கோவோட எல்லாரும் டான்ஸ்
ஆடுனாங்க. மகாதியானத்துல முழுகி முழுசா எடுத்த முட்டைய உருட்டிட்டு இருந்த மீரா பக்கத்துல
உக்காந்த சாண்டி மீரா பக்கத்துல போயி அது முகத்த மோந்துட்டு இருந்தாப்ல. ஆனாலும் இவ்வளவு
க்ளோஸப்ல மீரா முகத்த பாக்குற சாண்டிக்கு தைரியம் ஜாஸ்திதான். கூடவே முகினும் சேர்ந்து
அது பண்ற மாதிரியே செஞ்சு கலாச்சுட்டு இருந்தாங்க...! முழிச்சுப் பாத்த மீரா “என் தவ
எல்லைக்குள் புகுந்து தகராறு செய்தவன் நீதானா?”ன்னு விசுவாமித்திரி மாதிரி கதறிட்டு
இருந்துச்சு. பின்ன சாண்டி “பல்லு விளக்க ஹார்பிக் யூஸ் பண்ணு கக்கூஸ பளபளன்னு ஆக்குற
இது உன் வாய வெளுக்காதா?”ன்னு வெளையாண்டுட்டு இருந்தாப்ல.
அப்பறம் இது
வரைக்கும் மறைமுகமா நேரத்த ஓட்டுன பிக்பாஸ் இப்ப நேரடியாவே நேரத்த ஓட்டறத டாஸ்க்கா
வச்சாப்ல. போலி கடிகாரத்த வச்சு 1 மணி நேரத்த கணிக்கனும். முகின் வின்னு இதுல.
எல்லாரும் ஜெயில்
வாசல்ல உக்காந்திருந்தப்ப சட்டுனு பிக்பாஸ் “முகின் கொஞ்சம் கேமரா பக்கமா நகந்து உக்காரு.
சாண்டி முகின் பக்கத்துல வந்து நில்லு. ஃபாத்திமா இப்ப வெளிய வர வழி இருக்கா? அப்ப
அப்பிடியே போயி மைக்க மாட்டிட்டு வந்து உக்காரு”ன்னு சைலண்டா அடிச்ச காமெடி செம்மையோ
செம்ம. எவனோ நம்ம பயதான் இந்த வாட்டி பிக்பாஸா உக்காந்திருக்கான் போல. இந்த சீசன் ஜாலிக்கு
சாண்டிக்கப்பறம் பிக்பாஸ்தான் காரணம்.
அப்பறம்
100வது நாள் ஸ்பெஷலா இவனுங்களோட ஃபன்னி வீடியோ தொகுப்பு போட்டாங்க. பின்ன சந்தோஷ தருண
போட்டோக்கள் அத பாத்துட்டு எல்லாரும் முன்ன வந்து பேசனும். எல்லாருமே இந்த வீட்டுக்குள்ள
கரண்டியளவாச்சும் சந்தோஷம் இருந்ததுக்கு சாண்டிதான் காரணம்னு சொன்னாங்க. உண்மைதான
! சாண்டி இதக்கேட்டுட்டு ரொம்ப நெகிழ்ந்தாப்ல.
கொஞ்ச நேரம்
கழிச்சு வெளிய நம்ம சூப்பர் சிங்கர் பேண்ட். கூடவே மன்னவன் பேரைச் சொல்லி பிரியங்கா.
வந்தவங்க முகின் பாட்ட மியூசிக்கோட பாடுனது சர்ப்ரைஸ் கூடவே முகினும் சேர்ந்து பாடுனது
ஸ்வீட் சர்ப்ரைஸ். திவாகர் பாடுன கண்ணான கண்ணே பாட்டுக்கு சாண்டி லாலா தலகாணிய வச்சு
ஆடுனது சூப்பர். கடைசியா ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட 4 பேரத் தவிர எல்லாரையும் வெளிய
வர சொல்லி கதவ சாத்திட்டார் பிக்பாஸ்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மீ : 100 வது
நாள் மெமரீஸ் தொகுப்பு போடப்போறேன்
மனைவி : அத
பிக்பாஸ்தான போடனும்?
மீ : பிக்பாஸ்
எழுதுறவங்களும் போடலாம்
(இன்செர்ட்
வெற்றிவேல் பட சசிக்குமார் டெம்ப்ளேட்) //
பிக்பாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி
"இங்க நாங்க குடிக்க தண்ணி இல்லாம கஷ்டப்படுறோம். ஆனா இந்த பிக்பாஸ் வீட்டப் பாருங்கன்னு"
இங்க சோசியல் மீடியால பேசிக்கிட்டது பிக்பாஸுக்கு தெரிஞ்சிடுச்சு போல....அதனாலதான்
நீச்சல் குளம் இருக்கு ஆனா தண்ணி இல்லன்னு பப்பரப்பான்னு கெடக்கு ! இத அப்பிடியே கண்டினியூ
பண்ணி தண்ணிக்கும், எரிவாயுக்கும் மீட்டர் போட்ட மேட்டர் சொன்னார் பிக்பாஸ்! ஆகான்னு
சொல்லி எல்லாரும் கைதட்ட (குறிப்பா சேரன் சார்) இந்த அவல நிலைய நெனச்சு கண்ணீர் வடிக்கிறத
விட்டுட்டு இப்பிடி கைதட்டி சலம்புறீங்களே சைத்தான்களேன்னு பாத்திமா பீபி சாரி பாபு
சுட்டிக்காட்ட...இப்பவாச்சும் தோணுச்சேன்னுதான் கைதட்டுனோம்னு சேரன் சார் பாசிட்டிவ்
பாரசெட்டமால் போட்டு எல்லாரயும் காப்பாத்துனாரு!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த சீசனோட முதல் கண்ணீர் மோகன் வைத்யாவோடது...கஷ்டத்த
சொல்லி அழ கூட ஆளில்ல அதனாலதான் ஒரு நல்ல குடும்பம் வேண்டி இங்க வந்ததா சொன்னார்.
(அதுக்கு இங்கயா வருவாங்யன்ற? மாதிரி சேரன் பாத்தார்) செண்டிமெண்ட்ல சேரனுக்கே ட்ஃப்
குடுத்தார் வைத்யா.
ஒரு வழியா கக்கூஸ்ல வச்சு (சாண்டியின்
சஜ்ஜஷன்) கவின் கிட்ட தன் கிரஷ்தனத்த சொன்னார் அபிராமி. ஆனா தனக்கோ “5 பொண்ணுங்களும்
நிச்சயம்...ஆனா ஷெரின் தான் லட்சியம்னு “கவின் பந்த ஸ்பின் போட்டு டர்ன் பண்ண...அபிராமி
காண்டாகி கைய தட்டிவிட்டு போயிட்டாங்க. அப்றம் வெளிய வந்து கவின் அபிகிட்ட இன்னும்
ஒரு மாசம் பாத்துட்டு அப்றம் முடிவு பண்ணுவோம்னு டைம் வாங்கி வச்சுகிட்டார். பொறுத்தார்
“லொஸ்லியா “ஆள்வார்னு கணக்கோ என்னமோ?!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
லாஸ்லியா குடுத்த முதிர்ச்சியான அறிவுறைய
கூட “யம்மா லாஸ்லியா உனக்கு ஒன்ணும் தெரியாது...பேயாம இருக்கணும்”னு சொல்லி வாயடச்சுட்டாங்க.
“இதுக்கு எங்கிட்ட ஒரு பிளான் இருக்கு”ன்னு மீரா சொல்ல. “அது என்ன?”ன்னு மது ஆர்வமா
கேக்க. “நான் இப்பிடியே இருக்குறதுதான்”னு மீரா தன் ரகசிய திட்டத்த சொன்னதும், லாஸ்லியா
முகத்துல கஷ்டப்பட்டு அடக்குன மாதிரியான ஸ்மைல். நமக்கோ கெக்கபிக்கே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்போ வனி
& சாக்ஷி மட்டும்...அடியே சக்கரக்கட்டி உம்மேல ஸ்டிக்கர ஒட்டின்னு சாக்ஷி மேல வனி
ஸ்டிக்கர ஒட்ட முயற்சிக்க, சாக்ஷியோ வனிக்கு ஓட்டம் காட்ட வனிக்கு இதுக்கு மேல ஓட தம்மில்லாம
“டேய் கேமாடா இது கேமே இல்லடா இதுல நான் ஜெயிக்குற மாதிரி டிசைனே இல்லடா, இத நிறுத்துங்கடா
நான் ஜெயிக்குற மாதிரி ரூல மாத்துங்கடா”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே.........
“அப்பிடியெல்லாம்
நடக்காது; நடக்கவும் கூடாது”ன்னு ஒரு குரல். "யாருடா அது பட்டப்பகல்ல பிக்பாஸ்
வீட்டுல வனிகிட்டயே சவுண்ட குடுக்குறது?"ன்னு ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்டும் திரும்பி
பாத்தா...... அது நம்ம தர்ஷன் (சம்பவாமி யுகே யுகே). “அதென்ன உனக்கு மட்டும் ரூல் சேஞ்ச்
பண்ணனும்?”னு கேக்க “நான் உங்கிட்ட பேசல”ன்னு வனி சொல்ல “ஆனா நான் உங்கிட்டதான் பேசுறேன்...எல்லா
விஷயத்துலயும் நீ மட்டும் சம்பந்தமில்லாம உள்ள பூந்து கடை வைக்குற, நாங்க நியாயத்த
கேட்டா மட்டும் வலிக்குதோ?”ன்னு 6 பாலையும் சிக்ஸரா அடிச்சிட்டு இருந்தாப்ல. சாக்ஷி
இது எதுக்கும் கொஞ்சம் கூட அசஞ்சு குடுக்கல....கேப்டனாவும் அறிவிக்கப்பட்டாங்க.
இத வனியால ஜீரணிக்கவே
முடியல “டேய் பிக்பாஸ் இங்க வாடா....என்னயவே தாக்குறானுங்கடா...டேய் நான் மைக்க போட
மாட்டேண்டா...நான் விளையாட மாட்டேண்டா...என் மானம் போச்சு மரியாதை போச்சுடா....டேய்
பிக்பாஸ் வாடா”ன்னு அறுப்புக்கு வந்த பண்ணி மாதிரி அங்குட்டும் இங்குட்டும் ஓடிட்டு
இருந்துச்சு....
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
லாஸ் : நீ அவளுக்கு இம்போர்டண்ஸ் குடு.....அவளோட கதை...எனக்கு
பிரச்சனையில்ல....
கவின் : மச்சாஆஆன் நான் ரெண்டு பேருகிட்டையும் .... அதனால ஹர்ட் ஆகிட்டேனா..... நாம ஒன்ணு நெனச்சு பண்றோம்.......அன்னைக்கு கூட..... ஆனா அந்த பொஸச்சிவ்னெஸ் வந்தப்பறம்..... நான் பாட்டுக்கு ஜாலியா..... இது எதுனாலனா..... ஒரு கட்டத்துல ஸ்டாப் பண்றோம்..... இங்க ஒண்ணு பேசி அங்க ஒன்ணு பேசி....நான் சொல்றது புரியுதா?
இந்த பச்செலபுடுங்கி இப்பிடிதாங்க பேசுறான். இதுல என்ன எழவு புரியுதுன்னு இதுகளும் அவங்கிட்ட ஒக்காந்து ஒக்காந்து பேசுதுகளோ....!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாரை தப்பட்டை தீம் சாங்க ஒலிக்க பெரும்பாலானோர் ஆடுனாங்க.
ரெண்டு நாளா சல்பேட்டா சாக்ஷி ஆடுனதப் பாக்குறப்பயெல்லாம் “இத எங்கயோ பாத்தா மாதிரி
இருக்கே?”ன்னு ஒரு யோசனை. இப்பதான் ஞாபகம் வந்துச்சு அது வேற ஒண்ணுமில்ல “கம்பி மேல்
நடக்கும் கழை கூத்தாடிகளோட நடன முறைதான் அது. மார்வெலஸ். இந்த கேப்புல 2 நாளா காஞ்சு
போயிருந்த வைத்தி ;லாஸையும், கம்பி வழியா சாக்ஷியையும் கட்டிப்பிடிச்சு ஆக்சிஜன ஏத்திக்கிட்டாப்ல.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதான என்னடா இன்னும் ஒண்ணும் ஆரம்பிக்கலயேன்னு பாத்தேன்”னு
நெனச்சபடி ரேஷ்மா “சொல்லுப்பா உன் செய்யுள”ன்னு சொன்னதும் “பிக்பாஸ் கேட்டது யாரு சுவாரஸ்யமா
பன்ணலேன்னு ஆனா லாஸ் என்ன பண்ணாலும் அது சுவாரஸ்யமாத்தான இருக்கு”ன்னு சொன்னதும் எல்லாரும்
அவன் மூஞ்சிய “என்னாது?”ன்னு பாக்க “அதாவது டாஸ்க்ல சொன்னேன்”னு சமாளிச்சான். “சரி
வேற யாரத்தாண்டா நீ சொல்லுவ?”ன்னு கேட்டதுக்கு கொஞ்சம் கூட யோசிக்காம “வேற யாரு? அது
நம்ம சல்பேட்டா சாக்ஷியும் ஷெரினும்தான். ஏன்னா அவங்களுக்கு லேங்குவேஜ் பிரச்சனையால
லேண்டிங்க் சரியா வரல, ஈடுபாட்டோட விளையாட முடியல”ன்னு சாக்ஷி பக்கத்துல உக்காந்துக்கிட்டே
சொன்னான்.
அப்ப சல்பேட்டா மூஞ்சிய பாக்கனுமே! பாவமான வாய்ஸ்ல “இந்த சனியனால நான் இன்னும் என்னல்லாம் பாடு படப் போறேனோ? ஏண்டா உன்ன நம்பி உன் பக்கத்துல உக்காந்தது தப்பாடா ? என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குதான் இவனுங்க சண்டை போடாம ஒரு முடிவுக்கு வந்தானுங்க. எல்லாம் நல்லா போற நேரத்துல இந்த நாய் லாஸ்கிட்ட சரசம் பண்றதுக்காக சம்பந்தமில்லாம என்னய போட்டுக்குடுக்குறான். கூடவே இருந்துகிட்டு இன்னும் என்னென்ன கொடச்சல குடுக்கப்போறானோ தெரியல....வெரட்டுனாலும் போமாட்றான்.....வந்தாலும் சும்மா இருக்க மாட்றான்னு”னு மைண்ட்ல சொல்லிட்டு ஆணியடிச்சாப்ல உக்காந்திருந்துச்சு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டைனிங் ஏரியால சாண்டி கிட்ட மீரா “டாஸ்க்கப்ப ரேஷ்மா திருடுன என்னோட
மேக் அப் கிட்ட எங்கிட்ட குடுக்கல, ஆனா லாஸ்லியாவோடத லாஸ்லியாகிட்ட குடுத்துட்டா. கேட்டதுக்கு
உன்னோடத கவின் எடுத்து ஒளிச்சு வச்சுட்டதா சொன்னா. நான் போயி கவின் கிட்ட “ஏண்டா அப்பிடி
பண்ண?”ன்னு கேட்டா சாக்ஷி தான் ஒளிச்சு வைக்க சொன்னதா சொல்றான்.....இதுல இருந்து என்ன
தெரியுது?”ன்னு மீரா சாண்டிய பாக்க....” இப்ப உங்கிட்ட உன் மேக்கப் கிட் இல்லேன்னு
தெரியுது”ன்ற மாதிரி சாண்டி பாத்தார். (இது 3ம் உலகப்போர ஆரம்பிக்க ட்ரம்பும், புடினும்
சேர்ந்து இண்டர்போல் மூலமா செஞ்ச ரகசிய ஆப்பரேஷன் 3W தான் இதுன்னு உங்கள்ல கித்னா பேருக்கு
தெரியும்? ஆனா இது மீராவுக்கு தெரியும்)
++++++++++++++++++++++++++++++++++++++++
கவின் & சாக்ஷி
சல்பேட்டா : (ரொம்ப டயர்டா தலையில கைய வச்சுகிட்டே ) “ஏண்டா.... மீரா மேக்கப் கிட்ட நான் ஒளிச்சு வைக்க சொன்னேன்னு சொன்னியாடா?
கவின் : “ஆமா, அத நான் ஏன் சொன்னேன் தெரியுமா?
சல்பேட்டா : தெரியும்.......! என் தாலியறுக்க தான!
கவின் : என்ன இப்பிடி பேசுற ? அவ உங்கிட்ட வந்து கேட்டிருந்தா உன்னய அவ எதாச்சும் திட்டி உன் மனசு காயப்பட்டு, அதனால நீ கஷ்டப்பட்டு.....
சல்பேட்டா : யப்பா டேய்.....போதுண்டா!
அவளாச்சும் இந்த மேட்டர சப்பயா டீல் பன்ணி இருப்பா....ஆனா
நீ சாதாரண ராகிங் கேஸ ரஃபேல் உழல் மாதிரி மாத்தி வச்சுருக்க....! கேட்டா கக்கூஸ்ல நின்னு
கத்துற....என்னதாண்டா வேணும் உனக்கு? லாஸ் ஜெயிலுக்கு போயிட்டு வர கேப்புல நாந்தான்
உனக்கு எண்டெர்டெயின்மேண்டா
கவின் : அப்பிடியல்லாம் இல்ல மச்சாஆஆன்...
சாக்ஷி : அது சரி....மொழி பிரச்சனைய நீயி மீராவும்தான பேசி வச்சு கெளப்புனீங்க? அது என்னடா எங்கூட உக்காந்து கால நேரம் தெரியாம கடலை போடுறப்ப மட்டும் உனக்கு மொழிப்பிரச்சனையே வரதில்ல....ஆனா பொதுவுல என்னய போட்டு விட்டுட்டுப் போற....
கவின் : (கோவமா) ஆமா நான் அப்பிடிதான் நான் கெட்டவன், திருடன், முரடன், முதல்வன், இந்தியன், அன்னியன்......ஆஆஆஆஆ உனக்கு நல்லது பண்ண நெனச்சதுக்கு என்னய செருப்பால அடிக்கனும்.....(போயிட்டான்)
சாக்ஷி : ம்ம்க்கும்....
அடுத்த காட்சி டைனிங்க் ஏரியால
சாக்ஷி : (கொஞ்சலா) கவின் பேபி, நீ சும்மா கோவப்படாத....நீ என்னய காப்பாத்துறேன்னு சொல்லி எத ஆரம்பிச்சாலும் கடைசில என்னயதான தொங்க விட்டு அடிக்கிறாய்ங்க......அதையும் நீ லாஸ் மடியில படுத்துக்கிட்டே பாத்து சிரிக்குற....! இப்ப எனக்கு என்ன பிரச்சனைன்னா உன் பக்கத்துல இருக்கும்போதே என்னய படுத்தி எடுக்குகுற, இதுல உன் கூட சண்டை போட்டு போயிட்டேன்னு வைய்யி எனக்கு தூக்கு தண்டனையே வாங்கி குடுத்துருவ.....அதனால சாரி....நீ என் கூடயே இரு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வனி : என்ன மது பைனல் கண்டெஸ்டண்ட் லிஸ்டுல இருக்க போலயே....
மது : ஆமா மேடம்.....எல்லாம் ஆண்டவன் குடுத்தது....
வனி : குடுக்கட்டும் குடுக்கட்டும் ! ஆமா....இந்த ஷெரின் நல்ல டஃப் கண்டெஸ்டண்டுன்னு நெனச்சேன் ஆனா தேறாது போலயே? பொழுதுக்கும் தர்ஷன் கூட தானானே கொட்டிட்டு இருந்தா தவுட்டுக்கு ஆகுமா? இந்தா.... டம்மி பீஸுனாலும் ஃபைனல் லிஸ்டுல நீ இருக்க பாரு.....
மது : எது....?
வனி : டு பி ஹானஸ்ட்.... ஒரு ஃப்ளோவுல சொன்னேன்....
மது : நான் வேணும்னா தர்ஷன் கிட்ட பேசவா?
வனி : உன் ஹைட்டுக்கு அவங்கிட்ட பேசுனா அவன் காதுக்கு போயி சேர செவன் டேஸ் ஆகும் பரவாயில்லயா?
மது : அதுவும் சரிதான்...
வனி : லிஸ்டுல ஒரு பொண்ணு இருக்குறது எவ்வளவு பெரிய விஷயம்? ஆனா இதுகளுக்கு தெரியலயே...
மது : ஆமா மேடம் ஒரு பெண்ணானவள் பெண்தான் அது ஆணா இருந்தாலும்....!
வனி : எனக்கு இது புரியல ஆனா இத அப்பிடியே இன்னைக்கு உன் மைண்ட்ல பிக்ஸ் பன்ணிக்கோ....சரியா? எங்க சொல்லு....!
மது : ஒரு பெண்ணானவள் பெண்தான் அது ஆணா இருந்தாலும்....!
வனி : ஆங்....! இன்னைக்கு எது நடந்தாலும் இத நீ விட்டுறாத.....//
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எழுத எதுவுமில்ல அதான்....எழுதனதையே எடுத்துப் போட்டாச்சு...!
அனைவருக்கும் 100 வது நாள் வாழ்த்துகள் ! நன்றிகள் !
கவலைப்படாத்திக வத்திக்குச்சி வனிதா உள்ள வந்து அடுத்தவங்க சந்தோஷத்தை கெடுக்குற வேலைய சீறும் சிறப்புமா செஞ்சி இருக்காக இன்னுக்கு உள்ள பெரிய சண்டை இருக்கு
ReplyDelete