பிக்பாஸ் 3 : நாள் 101 (02.10.19)
பிக்பாஸ் 3நாள் 101 (02.10.19)
வனிதா “சம்பவமாக்கி”
யுகே யுகே !
“மெர்சல் அரசன்”
பாட்டோட மெர்சலா தொடங்குச்சு. இன்னைக்கு இன்னும் 2 பேர சேர்த்துக்கிட்டு உள்ள வந்த
வெளியாட்கள் நம்ம கூட்டத்தோட சேர்ந்து வீட்ல உள்ள எல்லா மூலை, முடுக்குளையும் உக்காந்துக்கிட்டு,
நின்னுக்கிட்டு, படுத்துக்கிட்டுன்னு ஸ்டெப்புகளப் போட்டு செதற வுட்டுட்டு இருந்தானுங்க.
அடுத்து ஒரு
பிரஸ் மீட் ! முக்கியமான பத்திரிக்கைகள்ல இருந்து வந்த ஆட்கள் நம்மாளுககிட்ட கேள்விகள
கேட்டாங்க....
சாண்டி
என்ன கத்துக்கிட்ட?
100 நாளா இந்த
பிசாசுகளோடையே ஜாலியா இருக்க முடியுதே அதனால இனிமே குடும்பத்தோடையும் குதூகலமா இருக்கனும்னு
கத்துக்கிட்டேன்.
ரொம்ப சேஃபா
கேம் விளையாடுறியோ?
நான் இங்க சண்டையில
சிக்காமா, வனிதா வயில விழாம எப்பிடி ஜாலியா இருக்கனும்னு மட்டுந்தான் யோசிக்கிறேன்.
அதுக்கு நீ கேம் ப்ளான், ஸ்டார்டஜி, வில் பவர், முஸ்லி பவர்னு என்ன பேர் வேணும்னாலும்
வச்சுக்கோ.
லாஸ்
வெளிய போனதும்
என்ன பண்ணுவ?
(MV : ம்ம்ம்ம்....கதவ
ஒழுங்கா பூட்டியிருக்கோமான்னு பூட்ட இழுத்துப் பாத்து செக் பண்ணுவேன். இதெல்லாம் ஒரு கேள்வியாடா?) மொத
கவின் கன்ணுல படாம வீட்டுக்கு போறதே பெரிய லட்சியம். அப்பறம் அப்பா அம்மாவ பாக்கனும்.
மரிய நேசனுக்கு மரியான் படத்த காமிச்சு காதலோட வலிய புரிய வைக்கனும். பூரா பயலுகளும்
எங்கப்பன ஏத்தி விட்டு அனுப்பிவிட்டாய்ங்க. அதெயெல்லாம் போயி சரி பண்ணனும். என்ன இருந்தாலும்
அப்பா, அம்மால்ல சொன்னா புரிஞ்சுக்குவாங்க.
உனக்கும், ஷெரினுக்கும்
இப்ப எப்பிடி இருக்கு?
அபியோட பழகுனதோட
சரி அப்பறம் எங்க அத்தான் என்னய யாரோடையும் சேர விடல. ஷெரினோட பெரிய பழக்கமில்ல ஆனா
இப்ப புரிஞ்சுக்கிட்டு நல்லா இருக்கோம். இதோ நான் போட்டிருக்குற பேண்ட் கூட அவளோடதுதான்.
(இதுக்கு ஷெரினும்
சேர்ந்துக்கிட்டு) ஆமா அவ கேரக்டர அனலைஸ் பண்ண முடிஞ்சது ஆனா அக்செப்ட் பண்ண முடியாம
இருந்துச்சு. ஆனா இப்ப ஓகே !
முகின்
வருங்கால திட்டம்
என்ன ? என்ன இழப்பு இங்க வந்து?
இழப்புன்னு
பாத்தா எனக்கில்ல. என்னால பிக்பாஸுக்கு சிலபல ஃபர்னிச்சர்கள் இழப்பு. திட்டம் நடிகனாகி
உங்களுக்கு ஒரு நல்லா முதலமைச்சரா வரனும்னுதான்.
ஷெரின்
ரொம்ப ஃபீல்
பண்ண நாள் எது?
வாம்பையர் வனிதா
கூட நடந்த சண்டைதான். அப்பறம் தர்ஷன் என்னய தவிக்க விட்டு வெளிய போன நாள்.
பொதுவான கேள்வி
: வெளிய போயும் இந்த நட்பு தொடருமா?
சாண்டி : இதுகள்லாம்
ஜென்ம சனி யாரையும் விடாது. இப்போ பாய்ஸ் டீம்ல 5 பேரு இல்ல 6 பேரு ஷெரினும் வட்டத்துக்குள்ள
வந்தாச்சு. சோ வெளிய போயும் இப்பிடியே இருப்போம்.
கொஞ்ச நேரம்
கழிச்சு “மச்சி ஓப்பன் த பாட்டில்”னு பாட்டோட கதவத் தொறந்தா....
தலைவி சல்பேட்டா,
அழுமூஞ்சி அபி, வாம்பையர் வனிதா, சூப்பர் சேரன் சார், காக்கைப்பாடினியார் கஸ்தூரி என்ட்ரி.....!
வாவ் வாட்டே டே...!
சல்பேட்டா ரெண்டாவது
வாட்டி உள்ள வந்துட்டுப் போயி மேடையில ஆண்டவர்கிட்ட அசிங்கப்பட்டுச்சுல்ல அப்பறம் ஊருக்குள்ள கவின், லாஸ், தர்ஷனுக்கு இருக்குற சப்போர்ட்ட
தெரிஞ்சுகிச்சு போல. வனிதா & நைனா சகவாசம் கொலநாசம்னு புரிஞ்சு பாய்ஸ் டீம் பஸ்ல
படிக்கட்டுல கூட தொங்கிட்டு வர தயார்ன்ற மாதிரி மொத்தமா இந்தப் பக்கமா மாறிக்கிச்சு.
லாஸுக்கு கிஃப்ட்டுகள குடுக்குறதும், அத கட்டிப்பிடிச்சு உம்மா குடுத்து சாரி கேக்குறதும்....தட்
“யப்ப யப்ப யப்பா கபாலி முகத்துல மிருதங்க ஞானம் வந்துருச்சு” மொமெண்ட்தான்.
அப்பறம் எல்லாரையும்
உக்கார வச்சு சண்டை படம் போட்டாரு பிக்பாஸ். எல்லாம் இவனுங்க அடிச்சிக்கிட்டதுதான்.
ஆனா எல்லாமே திகில் க்ளிப்பிங்க்ஸ். பாத்துட்டு இருந்த எல்லார் மூஞ்சியும் எட்டணா வடை
மாதிரி சுருங்கிப் போயிருந்துச்சு. இதுல தர்ஷன் வனிக்காவ வட்டமாக்கி உருட்டி விட்டு
விளையாண்டதப் பாத்ததும் வனிக்கா கண்ணுல கிலோவாட் கணக்கா மின்சாரம் வந்து போச்சு. இது
பஞ்சாயத்தின் அறிகுறியாச்சே.
பின்ன முடிஞ்சதும்
எல்லாரும் ஆணியடிச்சாப்ல உக்கந்திருக்க வாம்பையரு “அடேய் இதெல்லாம் எஸ் டி டி. இதுனாலதான்
இந்த ஷோ ஹிட்டு. சோ கலவரமாகாம கையத்தட்டு”ன்னு உற்சாகப்படுத்துச்சு.
“இதுக்கே எரிஞ்சிருக்கனுமே
ஆனா புகை கூட வரலயே?”ன்னு நெனச்ச பிக்பாஸன் சட்டுன்னு ப்ளான் B ய செயல்படுத்துனாப்ல.
அதான் சண்டை போட்ட நிகழ்வுகள போட்டோ புடிச்சு சொவத்துல மாட்டி வைக்குறது. அத செஞ்சாப்ல.
அத பாத்துட்டு எல்லாரும் ஒவ்வொரு ஆளா முன்னாடி வந்து “சண்டை நல்லது அதனாலதா எல்லாரும்
எல்லாரையும் புரிஞ்சுக்கிட்டோம்”னு அள்ளி விட்டானுங்க. ஆனா அப்பறம் வந்த வனிதா எல்லாரையும்
அலற விட்டுச்சு. வீட்டுக்குள்ள
வனி : உங்க
எல்லாருக்கும் ஒரு உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு. அன்னைக்கு நான் ஷெரினுக்கும்,
தர்ஷனுக்கும் அஃபயர்னு சொன்னப்போ மொத்தமா எல்லாரும் என் பக்கம் திரும்பி தங்கு தங்குன்னு
குதிச்சீங்களே இப்ப தர்ஷன் வெளிய போனதுக்கு காரணம் அதே ஷெரினும், அந்த அஃபையரும் தான்னு
என் அறிவுக்கண் கண்டுபிடிச்சிடுச்சு. இத நான் டு பி ஹானஸ்டா அன்னைக்கே சொன்னப்போ அப்பாலே
போ சாத்தானேன்னு என்னய தொறத்தி விட்டுட்டீங்க இப்ப என்ன சொல்றீங்க? ஆனாலும் இத பொதுவுல
பேசக்கூடாது இது பெர்சனல் நாம தனியா பேசிக்குவோம். வா ஆக்வர்டா ஹல்க் மாதிரி உன்னய
ஹக் பண்றேன்...
ஷெரின் : இந்த
தைராய்ட் வந்த டோரா பொம்மை என்னாலதான் தர்ஷன்
போனான்னு சொல்றாளா?
சல்பேட்டா
: ம்ம்க்கும் இவ ஒரு ஆளுன்னு இவ பேச்சைக்கேட்டுதான் கவினோட ஒழுங்காப் போயிட்டிருந்த
என் காதல் வண்டிய காவாயில விட்டுக் கவுத்துனேன். இவ சக்காளத்தின்னு சொன்னத நம்பி லாஸ
நான் ஏச கடைசியில என்னய சைக்கோன்னு சொல்லி அவ்வ அவ்வா பாட வச்சானுங்க....! சோ பேபி
இவ சொல்றத தயவு செஞ்சு நம்பாத ! மனசுக்குள்ள வெம்பாத...! வெளிய அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்ல
வனி : இவ தெலுங்கு
பிக்பாஸப் பாத்துட்டு வந்து பேசுறா...! சல்பேட்டா உன் சங்கு வாய மூடு...கடிச்சு திங்கிறதுக்குள்ள
எந்திரிச்சு ஓடு...
சல்பேட்டா
: இங்கே பாருங் வனிதாக்கா....நீங்கே சொல்றதாலே உண்மே பொயாகாது பொய் உண்மே ஆகாது...
(எல்லாருமே
“இது என்ன சொல்ல வருது?”ன்னு தெரியாம முழிக்க....)
சல்பேட்டா
: (MV : போச்சு சம்பந்தமில்லாம என்னமோ சொல்லிட்டோம் போல....சிக்கிக்காம காப்பாத்துடா
சொக்கநாதா.....) சேரன் சார் நீங்களே சொல்லுங்க....
சேரன் சார்
: (ஒரு தட்டு மிக்சர நிம்மதியா சாப்புட விடுறானுங்களான்னு பாரு....) அதாவது ஷெரினுக்கும்,
தர்ஷனுக்கும் இடையில ஒரு நேரோ கேஜ் ரயில் ஓடிட்டு இருந்தது என்னமோ உண்மைதான் ஆனா அது
நம்ம பிராட்கேஜ் வனிதா சொன்னமாதிரி தப்பான ரூட்ல போகல. ஆட்டோகிராப்ல மலர்ந்த மாதிரியான
மணமான மல்லிகைப்பூ அது.....
வனி : ஏன் அரளிப்பூ
இல்லையா? இங்க வாங்க உங்களுக்கு பேசவே தெரியல...! நடந்த எதையும் வெளிய காட்டல.....
சேரன் : அதான்
வெளிய காட்டலையே? அப்பறம் என்ன பிரச்சனை?
வனி : ஆனா உள்ள
இருந்த எனக்கு தெரியுமே
சேரன் : உனக்கு
மட்டுந்தான தெரியும்?
வனி : நாந்தான்
இப்பிடி வெளிய சொல்லி ஷெரின அழ வைப்பேனே //
பாவம் ஷெரின்
சோகமா எந்திரிச்சு வெளிய போக கஸ்தூரியும், சல்பேட்டாவும் கக்கூஸ்ல போயி சமாதானப்படுத்துனாங்க....
சல்பேட்டா
: பேபி...குண்டு குதூப் மினார் சொல்றத நம்பாத அவ சொல்றது பூராம் பொய்யி...
கஸ்தூரி : இந்த
வீட்ல பெருமாள பேனாக்கி, பேன வாஷிங் மிஷினாக்கி, வாஷிங் மிஷின வால் கிளாக் ஆக்கி, வடிச்சப்பறம்
சோறாக்கி. சட்டையெல்லாம் சேறாக்கி, சேரனுக்கு முதுக லாக் ஆக்கி......ஆமா இப்ப நான்
என்ன சொல்ல வந்தேன்?
ஷெரின் : நீ
என்னய தற்கொலையே பண்ணிக்க வச்சுடுவ போலயே..
கஸ் : இரு நான்
போண்டா என்ன பேசுதுன்னு பாத்துட்டு வரேன்...
உள்ள சாண்டி,
சேரன், லாஸ் 3 பேரும் வனிய சமாதான இல்ல இல்ல வாயடைக்க முயற்சி பண்ணிட்டு இருந்தானுங்க.
அப்ப பாத்து
நம்ம கஸ்தூரியக்கா கேசுவலா வர மாதிரி வர...அதப்பாத்த வனிக்கா..
வனி : கஸ்துரி
இங்க ப்ரைவேட்டா பேசிட்டு இருக்கோம் ப்ளீஸ் வெளிய போங்க...
கஸ் : ஓ சாரி
நான் அப்பறம் வரேன் (சட்டுன்னு “ஆத்தீ நம்மள இவ அசிங்கப்படுத்துறா”ன்னு புரிஞ்சுக்கிட்டு...)
ஆமா நான் ஏன் வெளிய போகணும்?
வனி : ஏன்னா
கதவு தொறந்து இருக்கு
கஸ் : ஆமால்ல
சரி நான் போறேன் (இப்பவும் அசிங்கப்படுத்துனது லேட்டா புரிய) ஏய் என்ன கிண்டலா ? நீ
சொல்லி நான் வெளிய போக மாட்டேன் நானா போவேன்...
வனி : சரி நீயா
போ...
கஸ் : ஹாங்....இப்பிடி
மரியாதையா பேசிப்பழகு...நான் போறேன் //
இங்குட்டு முகின்
பய பக்கத்து வீட்டு சண்டைய ரோட்ல நின்னு பாக்குறவன் மாதிரி எதுக்கும் சம்பந்தமில்லாம
ஸ்டோர் ரூம் போயி கேமராகிட்ட பேசிட்டு இருந்தான். ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரத்துக்கு
வைகை எக்ஸ்பிரெஸ் வர மாதிரி கரெக்டா முகின் இருக்குற இடத்துக்கு வந்து நின்னுச்சு அபி....!
மறுபடியும்
அக்கா இவனுங்ககிட்ட பெப்சில போட்ட ப்ளீச்சிங் பவுடராட்டம் பொங்குச்சு....
வனி : தர்ஷன்
போனது வெளிய பெரிய பிரச்சனையாகிட்டு இருக்கு. 10 IAS ஆஃபிஸர்ஸ், 20 போலீஸ் உயரதிகாரிகள்,
4 ஸ்டேட் முதலமைச்சர்கள காணோம். அதுக்கு காரணம் தர்ஷன் எவிக்ஷன், தர்ஷன் எவிக்ஷனுக்கு
காரணம் ஷெரின்...
சேரன் : அப்பிடியில்ல
வனிதா நான் சொல்ல வந்தது
வனி : அண்ணா
உங்களுக்கு தெரியாதுண்ணா...
சேரன் : தர்ஷனுக்கு...
வனி : அண்ணா
உங்களுக்கு புரியாதுண்ணா...
சேரன் : ஷெரினுக்கு
கூட தெரியும்...
வனி : அண்ணா
நீங்க பேசாதீங்கண்ணா...
சேரன் : மக்கள்
முடிவு பண்ணி
வனி : அண்ணா
நீங்க வாய மூடுங்கண்ணா...
சேரன் : நான்
பேசுனது தப்பும்மா....என்னய மன்னிச்சுடு
வனி : பரவாயில்ல
விடுங்கண்ணா...இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்களே !
சூப்பர் சேரன்
சார் வெளியவே போயிட்டார்.
அப்பறம் பெட்ரூம்ல
மறுபடியும் அதே மேட்டர வேற ஆங்கிள்ல ஷெரின் கிட்ட வாம்பையர் வனிதா சொல்ல ஆரம்பிக்கிறதோட
முடிஞ்சிருக்கு....! வாம்பையர் உள்ள இருக்குறப்போ அப்பிடியே தர்ஷனையும் உள்ள அனுப்புனா
பாடிய எடுத்திடலாம். பாப்போம்.
Comments
Post a Comment