Posts

Showing posts from November, 2015

அவளும் மழையும் !

விட்டு விட்டு பொழிந்தது மழை இரவு முழுதும் நீடித்தது இந்தநிலை! கண்கள் உறக்கம் கொள்ளவில்லை! - களைப்பு எனை கட்டிலில் தள்ளவில்லை! மலர்ந்த பூவின்  அங்கம் நனைப்பதாய் என் மனதையும் நனைத்தது மழை!  மழை மண்ணின் வாசத்தை  மட்டுமல்ல என் மனதின் நேசத்தையும் கிளர்ச்சியுற செய்தது   உடலும் உள்ளமும் தனிமையில் உழன்றிருக்க உச்சி நெற்றியில் ஒரு புள்ளி கதகதப்பு! ஆம் அது என்னவளின் நினைப்பு! என்னருகில் மட்டும் அவளிருந்தால் அவள்  அணைப்பின் வெம்மையில் மழையின் தண்மையும் தோற்றிருக்கும்!   மழையின் சாரல் அவள் பார்வையை ஒத்திருக்க என்னில் படும் போது சிலிர்க்க வைக்கிறது  மழையிடம் பிடிக்காததே இந்த ஒன்றுதான்!  அவளில்லா தருணங்களை வெகுவாய் என்னிலுணர்த்தி செல்லும் ! என்னை தவிப்பில் மூழ்கச்செய்யும் ! ஆயினும்  அடுத்தகட்ட போருக்காய் ஆயத்தமாகிறேன்!  வானிலை செய்திகளில் மூழ்கிப்போகிறேன்!  விட்டு விட்டு பொழிந்தது மழை! அவள் நினைப்போடே கழிந்தது என்னிரவு! 

நனைந்த நேரம்...

அலுவலகம் முடிந்த ஒரு மாலை நேரம் . சாலையெங்கும் மக்கள், நெருக்கி தள்ளும் வாகனங்கள், கூடு திரும்பும் அவசரத்தில் பறவைகளும், வீடு திரும்பும் அவசியத்தில் மனிதர்களும். பேருந்திற்காக நிறுத்தத்தில் நான் மனைவியின் கோபத்தை போல சட்டென்று ஆரம்பித்தது மழை ! யார் இன்று அதிசயமாய் குளித்தார்களோ ? எந்த காதலி காதலனுக்காக செலவு செய்தாளோ? அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் மழை !! நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது, மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது ! இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் ! பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான் அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தாள் ! அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள். அந்த கதகதப்பு என்னை சுட்டது ! அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் ! வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ? என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை கடவுளைப்போல் குடுக்க மட்டுமே தெரிந்த அன்னையின் சுபாவம் ! மழை என்னை முழுதாய் நனைத்தது போல் ஒரு எண்ணம் !! ஓடிப்போய் பேருந்தில் ஏறி

ஞாபகமாய் சில...

இன்னும் ஞாபகம் இருக்கிறது அந்த வசந்த காலம் கொட்டும் பூக்கள் உன்மேல் விழுந்து உன்னை காயப்படுத்தாமல் இருக்க உனக்கு நான் குடை பிடித்தது !!! புதிதாக பூத்த பூவாக  எண்ணி வண்டு உன்னை சுற்ற அதற்காகவே நான் காத்திருப்பதாக சொல்லி அதனோடு சண்டை  போட்டு அதை விரட்டி விட்டது !!! உன் வியர்வை துளியை துடைக்கும் உன்னுடைய  கைக்குட்டையை உனக்கு தெரியாமல் எடுத்து அதனிலுள்ள வாசத்தை என்னுடைய சுவாசத்தோடு கலப்படம் செய்தது !!! ஒவ்வொரு தவறுக்கும் உன்னிடம் இருந்து கிடைக்கும் செல்ல குத்தலுக்கும் , சுருக்கும் பார்வைக்கும் ஆயள் சந்தா வேண்டி "தவறு செய்வது எப்படி ? " என்ற  புத்தகம் தேடி அலைந்தது !!! கோவிலுக்கு அழைத்து சென்று உன்னை ஒவ்வொரு தூணுக்கும் அருகில் நிற்கவைத்து புது வகையான சிற்பமொன்று   என மற்றவர்களை மலைக்க வைத்தது !!! உன் மௌன அஸ்த்திரங்களை தாங்கும் குறிப்பலகையாகவும் பார்வை சாரலில் நனையும் மரமாகவும் உன் கம்பளி போன்ற  அணைப்பில் அடங்கும் அக்கினியாகவும் நான் மாறியது !!! இன்றென்னவோ இலையுதிர் காலத்தில்தான் இருக்கிறேன் ஆனால் பருவ மாற்றம் என்பது காலத்தின் நியதி அதனால்தான்  காத்திருக்கிறேன் மீண்டும்  வசந்தத்தி

அது அவள் !!

இரவு நெடு நேரம் தூக்கமில்லை ! எனக்குள்ளே சத்தமான மௌனம்! சுற்றிலும் பளிச்சென்ற இருட்டு! காற்றில் பறப்பது போல் உணர்வு! எண்ணங்களோ ஆமை வேகத்தில்! ஏன் இந்த நிலை? அப்பாவை எழுப்பி கேட்டேன் புகை பிடிப்பதின் பயன்  என்றார் ! தம்பியை எழுப்பி கேட்டேன் ! காதல் வந்துவிட்டது என்றான்! கடைசியில் அம்மாவை எழுப்பி கேட்டேன் வேகமாய் எழுந்து போய் சாப்பிட சாதம் எடுத்து வந்தாள்! 

நிலையின் நிலை !

இனியவளே !! உன்னை பார்த்த நாள் முதலாய் நீ என்  இதயத்தில் புகுந்து அதன் சுவர்களில் காதலை கிறுக்கி கொண்டிருக்கிறாய் !!! நல்ல வேளை உன் பாஸ்பரஸ் கண்கள் ஈரப்பதத்துடன் இருக்கிறது ! இல்லையெனில் அதன் ஜுவாலையில் எரிந்து சாம்பலாய் திரிந்து இருப்பேன் !!! என் அலைப்பேசிக்கு புது அழைப்பொலி கொடுத்தவள் நீ இதயத்துடிப்புக்கு புது ஜதி கொடுத்தவள் நீ காதலென்ற பழைய உலகத்திற்கு புது பாதை கொடுத்தவள் நீ !!! முளைத்த விதத்தில் காளானாக இருந்தாலும் நிலைத்த விதத்தில் ஆலமரமாய் நின்று விட்டாய் காதலை விழுதாக்கி !!! கரைக்கும் தண்ணீரில் கரைவதுதான் சக்கரையின் இயல்பு அது போல காதலோடு கரைந்து விட முடிவெடுத்துவிட்டேன் இயல்பாகவே !!! சாலையை சோலையாக்கி கற்களை பூக்களாக்கி காற்றை மோதி இம்சை செய்து நீ கால் கொண்டு வலம் வருவது இன்னும் எந்த காவியத்திலும் அடங்கவில்லை !!! காகிதத்தில் தேர்வெழுதி என்னை  கணினி பொறியாளனாக்க சுற்றத்தார் ஆசைப்பட , நீயோ காதல் பரீட்சையில் தேற்றி  கவிஞனாய்  மாற்றி விட்டாய் !!! புல்லின் நுனியில் ஒட்டியிருக்கும் பனித்துளியை பொறுக்கும் கஷ்டமான  வேலைதான் காதல் ஆனாலும் இஷ்டமான வேலைதான் யாருக்கும் !!! உன்னில் கொண்ட

உறைவிடம்...

அம்மாவின் விரல் பிடித்து அதிக வருடம் சுற்றியவன் நான்  அம்மாவின் கட்டியணைப்பில் காலம் தெரியாமல் கிடந்தவன் கல்வி முடித்து , வேலை கிடைத்து ,அயல்நாட்டுக்கு  அழைக்க இயந்திரத்தோடு  வாழ்க்கை , கணிணியில் மட்டும் அம்மா எப்போதாவது கிடைக்கும் விடுமுறை அப்போதும் அம்மாவுடன் கழிக்க முடியாது காலம் குடுத்த பொறுப்பு கணவனாய் நான் மனைவியுடன் வாழ்க்கை மனநிறைவோடு ஆனாலும் அம்மாவின் ஞாபகம் சொட்டிக்கொண்டே ஓடி ஓடி சேர்த்ததெல்லாம் நோயும் பணமும் பஞ்சு மெத்தையும் , மனைவியின் தோளும் அம்மாவின் மடிக்கு ஈடு கொடுக்கவே முடியவில்லை இன்றாவது பார்த்து விட்டு வரவேண்டும் அம்மாவை அவள் சேலையில் முகம் போர்த்தி மடியில் படுத்து ஜென்மத்திற்கும் சேர்த்து தூங்கி வர வேண்டும் அம்மாவின் நினைப்பு வந்தவுடன்   நிறுத்தத்தை நோக்கி செல்லும் பேருந்து காலியாகிக்கொண்டே வருவது போல என் சங்கடங்களும் துக்கமும் கூட காலியாகிக்கொண்டே வந்தது

ஐயோ !!

கவிதை படிக்க  காரணமாகவும் இருக்கிறாய்  கவிதை எழுத  காரணமாகவும் இருக்கிறாய்  கொடுமைக்காரி , நீயே கவிதையாகவும் இருக்கிறாய் !!!

கொடுத்து வைத்த காதல் !

கொடுத்து வைத்த காதல் வாய்க்காது  பலபேருக்கு  சிலருள்   வாய்த்தது எனக்கும் வாழ்வில் !! உன் மேல் உண்டானதால் கொடுத்து வைத்தது என் காதல்  நீ என்னை காதலித்ததால் ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆனேன் நான் !! தேவதைகளைப்  பற்றி அதிகம் தெரியாது எனக்கு உன்னை பார்க்கும் முன்  தேவதை உன்னைத்  தவிர எனக்கு எதுவும் தெரியாது உன்னை பார்த்த பின் !! உன் காதல் மழையை என் மேல் தூவி எனை நனைக்கும் பொழுது  மழையை   தோற்கடிக்கிறாய்  நனைக்கத் தெரிந்தாலும் உன்னை போல் துவட்டி விட  அதற்கு தெரியாது !!! உன் மடியில் எனை தாங்கும் நேரத்தில்  நிலத்தை  தோற்கடிக்கிறாய்  தாங்க தெரிந்தாலும் உன்னை போல் தட்டிகொடுத்து தூங்க வைக்க  அதற்கு தெரியாது !!! உன் ஒவ்வொரு கட்டியனைப்பிலும்  நெருப்பினை  தோற்கடிக்கிறாய்  வெக்கையை கொடுக்க தெரிந்தாலும் உன்னை போல் வெக்கை தணிக்கும் முத்தம் தர அதற்கு தெரியாது !!! உன் ஒவ்வொரு ஸ்பரிசமும்   தென்றலை  தோற்கடிக்கிறது  உடலை வருடி செல்ல தெரிந்தாலும் உன்னை போல் செல்லமாய் கிள்ள  அதற்கு  தெரியாது !!! உன் அக்கறையின் பாங்கினில்  ஆகாயத்தை  தோற்க்கடிக்கிறாய்  விரிந்த குணம் இருந்தாலும் உன்னை போல் அதில் ஒரு பொருளை மட்டும் வ

காதல் சிதறல்கள்.....

Image
     1    இந்த நிமிடம் நீ என்ன செய்துகொண்டிருப்பாய் என சிந்திப்பதிலேயே கழிந்து விடுகிறது என்னுடைய எல்லா நிமிடங்களும் ..........        2 கொடுமைக்காரி....... கண்களால் காயத்தை ஏற்படுத்திவிட்டு காதலை மருந்தாக தருகிறாய்.........         3 தரையில் உன் கிறுக்கல்கள் கோலம் காகிதத்தில் என் கவிதைகள் கிறுக்கல்கள் ......         4 நீ கிறுக்கு எனக்கு பிடிக்கும்......          5 தினமும் ஒரு முறை கண்ணாடி முன் நில் கண்ணாடிக்கு தன்  முகத்தை பார்க்க வேண்டுமாம் ............          6 வானத்தின் மீது வழக்கு போட வேண்டும் இரவில் நீ தூங்கும் அழகை வெண்ணிலா வெளிச்சம் பாய்ச்சி படம் எடுத்திருக்கிறான்........            7 அழகாய் இருப்பவை எல்லாமே உன்னை ஞாபகப்படுத்துகிறது உன் ஞாபகம்  வரும்பொழுது எல்லாமே அழகாய் தெரிகிறது ...........             8 உனக்கும் எனக்கும் இடையே ஆயிரம் இருக்கலாம் ஆனால் அந்த ஆயிரத்துக்குள் நீயும் நானும் மட்டுமே இருப்போம் ..........            9 கோவில் குளத்துக்குள் காலை நனைத்து குளத்து நீரை தீர்த்தமாக்கு மீன்