அவளும் மழையும் !
விட்டு விட்டு
பொழிந்தது மழை
இரவு முழுதும்
நீடித்தது இந்தநிலை!
கண்கள் உறக்கம்
கொள்ளவில்லை! - களைப்பு
எனை கட்டிலில்
தள்ளவில்லை!
மலர்ந்த பூவின் அங்கம் நனைப்பதாய்
என் மனதையும் நனைத்தது
மழை!
மழை
மண்ணின் வாசத்தை மட்டுமல்ல
என் மனதின் நேசத்தையும்
கிளர்ச்சியுற செய்தது
உடலும்
உள்ளமும் தனிமையில்
உழன்றிருக்க
உச்சி நெற்றியில்
ஒரு புள்ளி கதகதப்பு!
ஆம்
அது என்னவளின்
நினைப்பு!
என்னருகில் மட்டும்
அவளிருந்தால் அவள் அணைப்பின்
வெம்மையில் மழையின்
தண்மையும் தோற்றிருக்கும்!
மழையின் சாரல்
அவள் பார்வையை ஒத்திருக்க
என்னில் படும் போது
சிலிர்க்க வைக்கிறது
தருணங்களை வெகுவாய்
என்னிலுணர்த்தி செல்லும் !
என்னை
தவிப்பில் மூழ்கச்செய்யும் !
ஆயினும்
அடுத்தகட்ட போருக்காய்
ஆயத்தமாகிறேன்!
வானிலை செய்திகளில்
மூழ்கிப்போகிறேன்!
விட்டு விட்டு
பொழிந்தது மழை!
அவள் நினைப்போடே
கழிந்தது என்னிரவு!
பொழிந்தது மழை
இரவு முழுதும்
நீடித்தது இந்தநிலை!
கண்கள் உறக்கம்
கொள்ளவில்லை! - களைப்பு
எனை கட்டிலில்
தள்ளவில்லை!
மலர்ந்த பூவின் அங்கம் நனைப்பதாய்
என் மனதையும் நனைத்தது
மழை!
மழை
மண்ணின் வாசத்தை மட்டுமல்ல
என் மனதின் நேசத்தையும்
கிளர்ச்சியுற செய்தது
உடலும்
உள்ளமும் தனிமையில்
உழன்றிருக்க
உச்சி நெற்றியில்
ஒரு புள்ளி கதகதப்பு!
ஆம்
அது என்னவளின்
நினைப்பு!
என்னருகில் மட்டும்
அவளிருந்தால் அவள் அணைப்பின்
வெம்மையில் மழையின்
தண்மையும் தோற்றிருக்கும்!
மழையின் சாரல்
அவள் பார்வையை ஒத்திருக்க
என்னில் படும் போது
சிலிர்க்க வைக்கிறது
மழையிடம்
பிடிக்காததே இந்த
ஒன்றுதான்!
அவளில்லாபிடிக்காததே இந்த
ஒன்றுதான்!
தருணங்களை வெகுவாய்
என்னிலுணர்த்தி செல்லும் !
என்னை
தவிப்பில் மூழ்கச்செய்யும் !
ஆயினும்
அடுத்தகட்ட போருக்காய்
ஆயத்தமாகிறேன்!
வானிலை செய்திகளில்
மூழ்கிப்போகிறேன்!
விட்டு விட்டு
பொழிந்தது மழை!
அவள் நினைப்போடே
கழிந்தது என்னிரவு!
👍
ReplyDelete