நனைந்த நேரம்...

அலுவலகம் முடிந்த ஒரு மாலை நேரம் .
சாலையெங்கும் மக்கள்,
நெருக்கி தள்ளும் வாகனங்கள்,
கூடு திரும்பும் அவசரத்தில் பறவைகளும்,
வீடு திரும்பும் அவசியத்தில் மனிதர்களும்.
பேருந்திற்காக நிறுத்தத்தில் நான்
மனைவியின் கோபத்தை போல
சட்டென்று ஆரம்பித்தது மழை !


யார் இன்று அதிசயமாய் குளித்தார்களோ ?
எந்த காதலி காதலனுக்காக செலவு செய்தாளோ?
அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் மழை !!


நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை


கடவுளைப்போல் குடுக்க மட்டுமே தெரிந்த அன்னையின் சுபாவம் !
மழை என்னை முழுதாய் நனைத்தது போல் ஒரு எண்ணம் !!
ஓடிப்போய் பேருந்தில் ஏறினேன் நடத்துனர்  கேட்டார் " எங்க போகணும்பா ?"
தானாகவே வந்தது        "அம்மாகிட்ட" .

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)