அது அவள் !!

இரவு நெடு நேரம்
தூக்கமில்லை !
எனக்குள்ளே சத்தமான
மௌனம்!
சுற்றிலும் பளிச்சென்ற
இருட்டு!
காற்றில் பறப்பது போல்
உணர்வு!
எண்ணங்களோ ஆமை
வேகத்தில்!
ஏன் இந்த நிலை?
அப்பாவை எழுப்பி
கேட்டேன்
புகை பிடிப்பதின்
பயன்  என்றார் !
தம்பியை எழுப்பி
கேட்டேன் !
காதல் வந்துவிட்டது
என்றான்!
கடைசியில்
அம்மாவை எழுப்பி
கேட்டேன்
வேகமாய் எழுந்து போய்
சாப்பிட சாதம்
எடுத்து வந்தாள்! 

Comments

Popular posts from this blog

பூ !

கபாலி "GONE" !!!

பிக்பாஸ் 3 : நாள் 102 (03.10.19)