காதல் சிதறல்கள்.....


    1   
இந்த நிமிடம் நீ என்ன செய்துகொண்டிருப்பாய்
என சிந்திப்பதிலேயே கழிந்து விடுகிறது
என்னுடைய எல்லா நிமிடங்களும் ..........

      2
கொடுமைக்காரி.......
கண்களால் காயத்தை ஏற்படுத்திவிட்டு
காதலை மருந்தாக தருகிறாய்.........

       3
தரையில் உன் கிறுக்கல்கள் கோலம்
காகிதத்தில் என் கவிதைகள் கிறுக்கல்கள் ......

       4
நீ கிறுக்கு
எனக்கு பிடிக்கும்......

        5
தினமும் ஒரு முறை கண்ணாடி முன் நில்
கண்ணாடிக்கு தன்  முகத்தை பார்க்க வேண்டுமாம் ............

        6
வானத்தின் மீது வழக்கு போட வேண்டும்
இரவில் நீ தூங்கும் அழகை
வெண்ணிலா வெளிச்சம் பாய்ச்சி
படம் எடுத்திருக்கிறான்........

          7
அழகாய் இருப்பவை எல்லாமே உன்னை ஞாபகப்படுத்துகிறது
உன் ஞாபகம்  வரும்பொழுது எல்லாமே அழகாய் தெரிகிறது ...........

           8
உனக்கும் எனக்கும் இடையே ஆயிரம் இருக்கலாம்
ஆனால்
அந்த ஆயிரத்துக்குள் நீயும் நானும் மட்டுமே இருப்போம் ..........

          9
கோவில் குளத்துக்குள் காலை நனைத்து
குளத்து நீரை தீர்த்தமாக்கு
மீன்கள் குடித்து மோட்சம் பெறட்டும் ...............

         10
உலகத்தில் அனைவருக்கும் காதல் பிடிப்பது வழக்கம்
மாறாக
 காதலுக்கு உன்னையும் என்னையும் பிடித்திருக்கிறது ............
                                              
           11 
நீயும் நானும்  கட்டியணைக்கும் ஒவ்வொரு முறையும்
இடையில் சிக்கி மூர்ச்சையாகிறது காதல்...........

          12
உன் நினைவுகளை உரமாக்கி காதல் வளர்த்தேன்
பூத்து சிரிக்கிறாய்  பூவாக நீ .....................

          13
இதயத்தில் மின்னலை பாய்ச்சுகிறாய் 
கண்களில் நெருப்பை ஊற்றுகிறாய் 
ரத்தத்தில் அமிலத்தை கலந்துவிட்டாய் 
ஏன் செய்கிறாய் இப்படி ? என்று கேட்டால் 
என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி கள்ளமில்லாமல் சிரிக்கிறாய் ......

       14
எல்லாவற்றிலும் தோற்றதால் நான் அடைந்த பரிசு நீ 
உன்னை அடைந்ததால் எல்லாவற்றிலும் வென்றவனாகிறேன் நான் ....

       15
உன்னை பார்க்கும் நொடியில் என் ஒவ்வொரு உறுப்பும் 
உயிர் கொள்கின்றன 
எனக்கு மட்டும்தான் நீ என்று உனக்காக சண்டையிட்டு கொள்கின்றன ......

         16
கடலுக்கும் உனக்கும் அதிக வித்யாசமில்லை 
உள்ளிழுத்துக் கொள்வதில்மிஞ்ச முடியாது  உங்களை 
கோபமாக கடலுக்கு சுனாமி, உனக்கு சுனாமியாய் கோபம் 
ஆனாலும் 
காதலென்று வந்துவிட்டால் விசாலமே இருவருக்கும் பொருந்தும் ......

          17
நீ விடும் மூச்சுக்காற்றை  எப்படியும்  சுவாசித்துவிடும் 
சாத்தியம் இருப்பதாலேயே நான் சுவாசிக்க விரும்புகிறேன் .........

          18
இவ்வுலகத்தில் மிகவும் மோசமான  உதாரணம் :

                ஒன்று  : நீ இல்லாத என் காதல் 
இரண்டு :காதல் இல்லாத 
      நான்.......

             19
கடவுளை நினைத்து தியானம் செய்யாமல் 
உன்னை நினைத்து நான் காதல் செய்து கொண்டிருக்க 
கோவப்படாமல் கடவுள் என்னை காதலித்து கொண்டிருக்கிறார் .......

              20
காமத்தின் வேளையில் 
என் ஆடையை சுட்டெரிக்கும் உன் மூச்சின் வெப்பம் 
தணலாக காயும் உன் முத்தம் 
மூளைக்குள் சுற்றும் உன் முனகல் சத்தம் 
காமத்துப்பாலில் வள்ளுவன் எழுத தவறிய 
கடைசி குறள் நீதானோ ?!................

            21
திருவிழாதான் நீ, உன்னில் தொலைந்தேன் நான் 
திருடிதான் நீ, என்னை உன்னிடம் இழந்தேன் நான் 
காவலாளிதான் நீ, உன்னிடம் கைதியாய் மாட்டினேன் நான் 
உலகத்தின் இன்பங்கள் எல்லாம் நீ, உன்னால் என் துன்பங்கள் அனைத்தையும்  அறுத்தேன் நான் ..........

          22
எல்லாம் தெரியும் உனக்கு 
உன்னைத்தான் தெரியும் எனக்கு .................

       23
உன்னை காதலிப்பதற்கான காரணம் கேட்கிறாய் 
காரணம் தேவையா பூக்களின் வாசத்திற்கு ?
காரணம் தேவையா வீசும் காற்றுக்கு ?
காரணம் தேவையா கடவுளின் கருணைக்கு ?
காரணம் தேவையா அண்டத்தின் மவுனத்திற்கு ?
இன்னும் உனக்கு 
காரணம் தேவையா நான் உன்னை காதலிப்பதற்கு ?
    

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)