ஞாபகமாய் சில...

இன்னும் ஞாபகம் இருக்கிறது அந்த வசந்த காலம் கொட்டும் பூக்கள் உன்மேல்
விழுந்து
உன்னை காயப்படுத்தாமல் இருக்க
உனக்கு நான் குடை பிடித்தது !!!

புதிதாக பூத்த பூவாக  எண்ணி வண்டு உன்னை சுற்ற
அதற்காகவே நான் காத்திருப்பதாக சொல்லி
அதனோடு சண்டை  போட்டு அதை விரட்டி விட்டது !!!

உன் வியர்வை துளியை துடைக்கும் உன்னுடைய  கைக்குட்டையை
உனக்கு தெரியாமல் எடுத்து அதனிலுள்ள வாசத்தை
என்னுடைய சுவாசத்தோடு கலப்படம் செய்தது !!!

ஒவ்வொரு தவறுக்கும் உன்னிடம் இருந்து கிடைக்கும்
செல்ல குத்தலுக்கும் , சுருக்கும் பார்வைக்கும் ஆயள் சந்தா வேண்டி
"தவறு செய்வது எப்படி ? " என்ற  புத்தகம் தேடி அலைந்தது !!!

கோவிலுக்கு அழைத்து சென்று உன்னை
ஒவ்வொரு தூணுக்கும் அருகில் நிற்கவைத்து
புது வகையான சிற்பமொன்று   என மற்றவர்களை மலைக்க வைத்தது !!!

உன் மௌன அஸ்த்திரங்களை தாங்கும் குறிப்பலகையாகவும்
பார்வை சாரலில் நனையும் மரமாகவும்
உன் கம்பளி போன்ற  அணைப்பில் அடங்கும் அக்கினியாகவும் நான் மாறியது !!!

இன்றென்னவோ இலையுதிர் காலத்தில்தான் இருக்கிறேன்
ஆனால் பருவ மாற்றம் என்பது காலத்தின் நியதி
அதனால்தான்  காத்திருக்கிறேன் மீண்டும்  வசந்தத்திற்கு !!!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)