கொடுத்து வைத்த காதல் !
கொடுத்து வைத்த காதல் வாய்க்காது பலபேருக்கு
சிலருள் வாய்த்தது எனக்கும் வாழ்வில் !!
உன் மேல் உண்டானதால் கொடுத்து வைத்தது என் காதல்
நீ என்னை காதலித்ததால் ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆனேன் நான் !!
தேவதைகளைப் பற்றி அதிகம் தெரியாது எனக்கு உன்னை பார்க்கும் முன்
தேவதை உன்னைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது உன்னை பார்த்த பின் !!
உன் காதல் மழையை என் மேல் தூவி எனை நனைக்கும் பொழுது மழையை தோற்கடிக்கிறாய்
நனைக்கத் தெரிந்தாலும் உன்னை போல் துவட்டி விட அதற்கு தெரியாது !!!
உன் மடியில் எனை தாங்கும் நேரத்தில் நிலத்தை தோற்கடிக்கிறாய்
தாங்க தெரிந்தாலும் உன்னை போல் தட்டிகொடுத்து தூங்க வைக்க அதற்கு தெரியாது !!!
உன் ஒவ்வொரு கட்டியனைப்பிலும் நெருப்பினை தோற்கடிக்கிறாய்
வெக்கையை கொடுக்க தெரிந்தாலும் உன்னை போல் வெக்கை தணிக்கும் முத்தம் தர அதற்கு தெரியாது !!!
உன் ஒவ்வொரு ஸ்பரிசமும் தென்றலை தோற்கடிக்கிறது
உடலை வருடி செல்ல தெரிந்தாலும் உன்னை போல் செல்லமாய் கிள்ள அதற்கு தெரியாது !!!
உன் அக்கறையின் பாங்கினில் ஆகாயத்தை தோற்க்கடிக்கிறாய்
விரிந்த குணம் இருந்தாலும் உன்னை போல் அதில் ஒரு பொருளை மட்டும் வைத்து காக்க அதற்கு தெரியாது !!!
பஞ்ச பூதமும் அஞ்சும் பூதமாகிவிட்டாய் நீ !
வீரன்தான் நான் உன் பார்வை என்ற ஆயுதத்தை நெஞ்சில் ஏந்த மார்பு காட்டி காத்திருக்கிறேன்
உன்காதல் பால் குடிக்க பரண் மேல் பூனையாய் பார்த்திருக்கிறேன் !!!
உன் உதட்டு சுழிப்போரத்தை போன்ற அபாயகரமான இடத்தை பார்த்த பிறகும்
உயிர் பயம் அற்றவனாய் உன்னை பார்த்துக்கொண்டுதான் நிற்கிறேன் !!!
என்னிலே என்னை விட உலவுகிறாய் அதிகமாக
கண்ணிலே உன் காட்சிகளை ஊற்றுகிறாய் மிகுதியாக !!!
தாங்க முடியாத காதல்தான் என்னிலானது
எப்பொழுதும் , ஏனெனில்
கொடுத்து வைத்த காதல் அது !!!

Comments
Post a Comment