உறைவிடம்...

அம்மாவின் விரல் பிடித்து அதிக வருடம் சுற்றியவன் நான்
 அம்மாவின் கட்டியணைப்பில் காலம் தெரியாமல் கிடந்தவன்

கல்வி முடித்து , வேலை கிடைத்து ,அயல்நாட்டுக்கு  அழைக்க
இயந்திரத்தோடு  வாழ்க்கை , கணிணியில் மட்டும் அம்மா

எப்போதாவது கிடைக்கும் விடுமுறை
அப்போதும் அம்மாவுடன் கழிக்க முடியாது

காலம் குடுத்த பொறுப்பு கணவனாய் நான்
மனைவியுடன் வாழ்க்கை மனநிறைவோடு

ஆனாலும் அம்மாவின் ஞாபகம் சொட்டிக்கொண்டே
ஓடி ஓடி சேர்த்ததெல்லாம் நோயும் பணமும்

பஞ்சு மெத்தையும் , மனைவியின் தோளும்
அம்மாவின் மடிக்கு ஈடு கொடுக்கவே முடியவில்லை
இன்றாவது பார்த்து விட்டு வரவேண்டும் அம்மாவை

அவள் சேலையில் முகம் போர்த்தி மடியில் படுத்து
ஜென்மத்திற்கும் சேர்த்து தூங்கி வர வேண்டும்

அம்மாவின் நினைப்பு வந்தவுடன்   நிறுத்தத்தை நோக்கி
செல்லும் பேருந்து காலியாகிக்கொண்டே வருவது போல
என் சங்கடங்களும் துக்கமும் கூட காலியாகிக்கொண்டே வந்தது

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)