நிலையின் நிலை !

இனியவளே !!
உன்னை பார்த்த நாள் முதலாய் நீ என்
 இதயத்தில் புகுந்து அதன் சுவர்களில்
காதலை கிறுக்கி கொண்டிருக்கிறாய் !!!

நல்ல வேளை உன் பாஸ்பரஸ் கண்கள் ஈரப்பதத்துடன்
இருக்கிறது ! இல்லையெனில் அதன் ஜுவாலையில்
எரிந்து சாம்பலாய் திரிந்து இருப்பேன் !!!

என் அலைப்பேசிக்கு புது அழைப்பொலி கொடுத்தவள் நீ
இதயத்துடிப்புக்கு புது ஜதி கொடுத்தவள் நீ
காதலென்ற பழைய உலகத்திற்கு புது பாதை கொடுத்தவள் நீ !!!

முளைத்த விதத்தில் காளானாக இருந்தாலும்
நிலைத்த விதத்தில் ஆலமரமாய் நின்று விட்டாய்
காதலை விழுதாக்கி !!!


கரைக்கும் தண்ணீரில் கரைவதுதான் சக்கரையின் இயல்பு
அது போல காதலோடு கரைந்து விட முடிவெடுத்துவிட்டேன்
இயல்பாகவே !!!

சாலையை சோலையாக்கி கற்களை பூக்களாக்கி
காற்றை மோதி இம்சை செய்து நீ கால் கொண்டு வலம் வருவது
இன்னும் எந்த காவியத்திலும் அடங்கவில்லை !!!

காகிதத்தில் தேர்வெழுதி என்னை  கணினி பொறியாளனாக்க
சுற்றத்தார் ஆசைப்பட , நீயோ காதல் பரீட்சையில்
தேற்றி  கவிஞனாய்  மாற்றி விட்டாய் !!!

புல்லின் நுனியில் ஒட்டியிருக்கும் பனித்துளியை
பொறுக்கும் கஷ்டமான  வேலைதான் காதல்
ஆனாலும் இஷ்டமான வேலைதான் யாருக்கும் !!!

உன்னில் கொண்ட காதலை என்னில் இருந்து கழித்துவிட்டால்
சக்கரமில்லாத நாலுகால் வாகனம் போல் ஆகிவிடுவேன்
நகரக்கூட முடியாது !!!

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொள்ளும் என்றாலும்
நெருப்பை அருகில் இழுப்பதும் அல்லது நெருப்புக்கு அருகில்
செல்வதும் எப்பொழுதும் பஞ்சினுடைய வேலையாகத்தான் இருக்கிறது !!!

சுற்றுப்புற சூழலின் விளைவால் உலகம் வெப்பமயமாவது  போல
உன் சுட்டும் விழி பார்வையினால் என் உள்ளம் வெப்பமயமாவது
எவ்வளவு  மரம் நட்டாலும் தடுக்க முடியாது !!!

எப்படியோ ! உறையும் பனிக்காலத்திலும் வேர்த்துக்கொட்டி
குளிர் நீர் குடிக்கும் கூட்டத்தோடு என்னையும் சேர்த்துவிட்டாய்
என் மீதும் காதல் முத்திரை குத்தி !!!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)