பிக்பாஸ் 3 : நாள் 30 (23.07.19)
பிக்பாஸ் 3நாள் 30 (23.07.19)
“முண்டாசு சூரியனே”ன்னு ஒலிக்க, பூரா பயலும் எந்திருச்சு வெளிய வந்து பாத்தா கிராமத்து செட்டு....! கிராமிய இசையா இருந்தாலே, திருவிழாவுல தண்ணியப்போட்டு தாவிக்குதிக்கும் பெருசாட்டாம், சேரன் சேர்ந்தாப்ல 10 ஸ்டெப்பு போடுறாப்ல. சரி செட்டு கிட்டெல்லாம் போட்ருக்குறதப் பாத்தா இன்னைக்கு கலர் கலரா கலவரம் கன்ஃபார்ம்னு கண்ணப் பெருசாக்கிக்கிட்டு உக்கார ஆரம்பிச்சோம்.
சல்பேட்டா சாக்ஷிக்கு நாமினேஷன்ல பேரு வந்துட்டாலே வாந்தி பேதியெல்லாம் தன்னால போகும். கவின்கிட்ட கண்ணக் காமிச்சு ஓரமா கூட்டிட்டு போயி “இருக்கப்போறது 5 நாளோ 6 நாளோ! வந்தப்ப இருந்த மாதிரி சந்தோஷமா இருக்கலாமேன்னு சிரிக்க, கவினோ “எனக்கு இன்பமா? அதிர்ச்சியா இருக்கே! இதையெல்லாம் அனுபவிக்கலாமா வேணாமா?”ன்ற மாதிரி திரு திருன்னு முழிச்சிட்டு இருந்தான்.
அப்பறம் டாஸ்க் விளக்கம் : 2 கிராமமா தனியா பிரிஞ்சு விளையாடனும்.
பாம்புப்பட்டி – நாட்டாமை சேரன்; ஏரியா – கொல்லை, வெசல் வாஷிங் ஏரியா
கீரிப்பட்டி – தலைவி மதுமிதா; ஏரியா – சமையக்கட்டு, ஹால்
கொல்லைக்குப் போகனும்னா இவிங்க அவிங்ககிட்ட கேக்கனும்; சாப்பாடு வேணும்னா அவிங்க இவிங்ககிட்ட கேக்கனும்.
எல்லாருக்கும் ஒவ்வொரு கிராமத்து கதாபாத்திரம்.
மீரா – கருஞ்சிவப்பு பட்டு சேலை, ப்ளூ கலர் ப்ளவுஸ்
ரேஷ்மா – சிவப்பு சேலை, சிவப்பு ப்ளவுஸ்
அபி – ஸ்கை ப்ளூ சேலை, சிவப்பு ப்ளவுஸ்
ஷெரின் – ஸ்கை ப்ளூ ப்ளாக் பூ போட்ட சேலை, நேவி ப்ளூ ப்ளவுஸ்
சாக்ஷி – டார்க் ப்ளூ பட்டு சேலை, ஆரஞ்சு ப்ளவுஸ்
மது – பித்தளை கலர் பட்டு சேலை, பித்தளை கலர் ப்ளவுஸ்
லாஸ் – பிங்க் கலர் சேலை, டார்க் ப்ளூ கலர் ப்ளவுஸ்
லாஸ இந்தக் காஸ்ட்யூம் இன்னும் 3 வாரத்துக்கு காப்பாத்தும்.
//மனைவி : என்னங்க டிபன் பாக்ஸ வெளக்கிடவா ?
நான் : இரும்மா! பிக்பாஸ் பாத்துட்டு இருக்கேன்ல! பிரேக்ல பேசுவோம்.//
பஞ்சாயத்துல பிராது குடுக்கலாம். ரேஷ்மா திருடி அதனால திருடலாம். “அம்மாகிட்ட வந்து பேசு”ன்னு சொன்ன மீராவ, தர்ஷனுக்கு அம்மாவா நடிக்க சொன்னது பிக்பாஸின் ராஜதந்திரம்.
//மனைவி : என்னங்க ?
நான் : சொல்லு....
மனைவி : டிபன் பாக்ஸ எடுத்துப் போட்டா வெளக்கிருவேன்...
நான் : இரு இரு என்னமோ நடக்கப்போகுது.//
சாண்டி மீராவ பாத்து “உன்னப்பாத்தாலே பத்திக்கிட்டு வருது”ன்னு சொல்லிட்டிருந்தாரு.
//மனைவி : அவ்ளோ நல்லாவா இருக்கு ? டக்குன்னு எடுத்து போட்ருங்களேன்
நான் : கொஞ்சம் இரேன் எடுத்துப் போடுறேன்//
சாக்ஷி ஒரு பக்கம் நடக்க, சாண்டி இன்னொரு பக்கம் நடக்க, சேரன் கிட்ட யாரோ எதுவோ பேச, சரவணன் மைனர் கெட்டப்ல இருந்தார்.
// மனைவி : என்னங்க.......
நான் : ம்ம்ம்ம்
மனைவி : என்னங்க....
நான் : ம்ம்ம்ம்ம்//
சேரனுக்கும் மீராவுக்கும் பஞ்சாயத்து. “விளையாடும் போதும் சேரன் என்னைய எக்குத்தப்பா பேசுறாரு”ன்னு கத்துச்சு.
//மனைவி : (என் பக்கத்துல வந்து உக்காந்து) தள்ளுங்க, அப்பிடி என்னதான் இன்னைக்கு நடக்குது ?
நான் : அமைதியா பாரு
மனைவி : ம்ம்ம்ம்ம்//
25 நிமிடம் கழித்து
//மனைவி : இந்த ஒண்ணுமில்லாத கருமத்த பாத்துகிட்டுதான் டிபன் பாக்ஸ கூட எடுத்துப் போடாம இருந்தீங்களா ?
நான் : அது வந்து........ கண்டென்ட் எதுவும் மிஸ்ஸாகிடக் கூடாதுன்னு....
மனைவி : எங்க இதுவரைக்கும் நீ எடுத்த கண்டெண்ட் என்னன்னு காமி....குடு அந்த நோட்ட...! ஏண்டா என்னடா சேலை கலர், ப்ளவுஸ் கலரெல்லாம் எழுதி வச்சிருக்க ?
நான் : இன்னைக்கு அதான் கண்டெண்ட்....
மனைவி : என்னது கண்டெண்டா ? டேய்....போ ஒழுங்கு மரியாதையா அந்த நோட்ட கீழ வச்சுட்டு, உன் டிபன் பாக்ஸ், பசங்க டிபன் பாக்ஸ், டின்னர் சாப்ட்ட தட்டு, சாம்பார் பாத்திரம் எல்லாத்தையும் வெளக்கி கமுத்தி வையி...போ...!//
டாஸ்க் முடிஞ்சது. ரேஷ்மாவுக்கு பொறந்த நாள். வழக்கம் போல விஜய் டீவி எழவு வீடா மாத்துனான். லைட்டு அணைஞ்சுப்போச்சு.....நாள் முடிஞ்சுப்போச்சு......மொத்தத்துல இன்னைக்கு எபிஸோட் நாசமாப்போச்சு! இவிங்களால நான் பாத்திரம் வெளக்க வேண்டியதாப் போச்சு.
தயவு செஞ்சு இதுல காமெடி இல்ல, கல்கண்டு இல்ல, பட்டக்கிராம்பு இல்ல, கசகசா இல்ல கருமாந்திரம் இல்லன்னு கமெண்ட் பாக்ஸ்ல வந்து கடிக்காதீங்க.....! ஏன்னா இதுக்கு மேல இன்னைக்கு ஒன்ணுமே இல்ல! எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!
Comments
Post a Comment