பிக்பாஸ் 4 : நாள் - 86 (29.12.20)
86வது நாள் “என்னோட ராசி நல்ல ராசி” பாட்டு அலாரம். முக்கியமா நேத்து இந்த ரஜினி பாட்டு போட்டது தற்செயலா இல்ல குறியீடான்னு கும்பகர்ணனுக்குதான் வெளிச்சம். “என்ன எதுக்குன்னே தெரியாம எதுக்காவது என்னத்தையாவது செய்வோம்”ன்ற மாதிரியே ஆடிட்டு இருந்தானுங்க. லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க். “இதுவரைக்கும் குடுத்த டாஸ்க்குலையெல்லாம் ஆர்வமா அறுத்து தள்ளி, ஆடி கிழிச்ச வரைக்கும் போதும். இந்த தடவ களத்துல நானே இறங்குறேன். இனி டாஸ்க்கு என்னோட கண்டிரோல். டாஸ்க் என்னன்னு எல்லாரும் கையேந்தி கண்ணீர் மல்க கேளுங்க”ன்னதும் “அன்னப்போஸ்டு போனதுக்கப்பறம் இவன் இம்சை அளவில்லாம போயிட்டிருக்கு”ன்னு நெனச்சபடி “சொல்றா டேய்”னு எல்லாரும் கேக்க.... ஃப்ரீஸ் டாஸ்க். “வா அருணாச்சலம் நீ இதத்தான் தூக்கிட்டு வருவன்னு எங்களுக்குத் தெரியும்”ன்ற மாதிரி பூராம் ரெடியானானுங்க. வார்ம் அப்புக்கு ரியோ, ஷிவானி, கேபின்னு சில பேர ஃப்ரீஸ், லூப், பாஸ்ட் பார்வர்டுன்னு படுத்தி எடுத்துட்டு இருந்தாப்ல பிக்கி. குளிக்க போன பிள்ளைய ஃப்ரீஸ் சொல்லி நிப்பாட்டிவிட்டு ஆராரோ ஆரிரரோ பாட்ட போட்டு விட்டானுங்க. அப்பவே நம்ம நிஞ்சா டர்டில் ஷிவானி மூக்கு பேச ...