பிக்பாஸ் – 4 : நாள் - 67 (10.12.20)

 66வது நாள் தொடர்ச்சி.....

அதே கருமம் பிடிச்ச டாஸ்க். அர்ச்சனாவோட முழு தெள்ளவாறித்தனமும் தெளிவா தெரிஞ்ச எபிஸோடா போயிருச்சு இது. கொஞ்சமாச்சும் இது டாஸ்க்கு, இத ஒழுங்கா தனியா விளையாடுவோம்னு நெனச்சு விளையாண்ட ரியோவையும், நிஷாவையும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, பயமுறுத்தி மறுபடியும் தன் கைபாமா மாத்திக்கிட்டாங்க அர்ச்சனா. அப்ப சோமன? அவன் பத்மஸ்ரீ பட்டம் வாங்குற அளவுக்கு அடிமை வாழ்க்கையில தேறிட்டான்.

ஆஜீத்த அவுட் பண்ணிட்டுஅடுத்து அனிதாகிட்ட போனாங்க. முட்டைய உடச்சு ஊத்தி அதுல மத்தவங்களோட பிரஷ்ஷ வச்சு பல்லு விளக்க சொன்னாங்க. அன்னப்போஸ்டும் அசராம பண்ணுச்சு....ஆனா வாந்தி வந்துருச்சு....! அத அருவறுப்பு உணர்வுன்னு சொல்லி ஹார்ட்ட பிடிங்கிட்டானுங்க. அடுத்து சிரிக்க வச்சு ஒரு ஹார்ட்ட பிடிங்கிட்டானுங்க.

பில்டர கூப்ட்டு முட்டைய அவன் நெத்தியில அவனையே உடைக்க சொல்லி அப்பறம் முட்டைய உடச்சு அதால கொப்புளிக்க சொல்லி.....அவனும் கீழ துப்ப அவன் ஹார்ட்டையும் பிடிங்கிடாங்க.

ரியோ காலுல விழுந்து வணங்குனதால ரியோவுக்கு கோவம் வந்ததால அவனோட ஒரு ஹார்ட்டு காலி.....அடுத்து அவன் சிரிக்க வச்சதால அவனும் டிஃப்யூஸ்டு.

ஆரிய மொத ரவூண்டுலையே காலி பண்ணிட்டானுங்க. சோ அர்ச்சனா டீம் வின்னு.

பில்டரு அர்ச்சனா குரூப்புகிட்ட வந்து அவனுக்கு அருவறுப்பு வரல ஆனா தொண்டைல கிச் கிச் அதனால துப்புனேன்னு சொன்னதுக்கு அர்ச்சனா சம்பந்தமில்லாம “எனக்கு முட்டைய வச்சு தேச்சது சரியா?”ன்னு கேட்டது லாஜிக்கே இல்ல.

கூடவே சுத்திட்டு இருக்குற ஷிவானியும் பில்டர “இவன் ஒரு நான் கோஆபரேட்டிவ் ஆளு”ன்னு சொன்னது இவனுக்கு வலிச்சிருச்சு போல....! “போன வாரம் என்னய அந்தாளு அப்பிடி வச்சு செய்யுறான் எவனாச்சும் சப்போர்ட்டுக்கு வந்தியா ? இப்ப இவனுங்க இந்த வாரம் பண்ண மொத்த கிரைமும் நீ என்னய சொன்ன நான் கோஆபரேட்டிவ் ஆளுன்றதுல கேஸ் எழுதி என்னய மட்டும் திட்டு வாங்க வச்சுருவானுங்க”ன்னு சொல்லி ஃபீல் பண்ணி அழுதுட்டான்....”சரி சாரி”ன்னு பக்கத்துல வந்த ஷிவானிகிட்ட “அட இருடி.....அழுகுறத கூட சரியா செய்ய விடமாட்டேங்கிற”ன்னு மறுத்துட்டான்.

67வது நாள்

பேட்ட தீம் அலாரம். என்னவோ இன்னைக்கு எல்லாருமே நல்லா ஆடுனானுங்க.

இப்ப பெஸ்ட் பர்ஃபார்மருக்கு வந்தானுங்க....

ஆச்சர்யமா பில்டருக்கு இந்த தடவ ஓட்டு விழுந்துச்சு, அப்பறம் ரம்யா. ஓவராலா இந்த வாரம் யாரு பெஸ்ட்டுன்னு கேட்டதுக்கு நிஷாவ சொன்னதெல்லாம் அநியாயத்துக்கு அநியாயம்.

கேப்டன் டாஸ்குக்கு தகுதியான ஆட்கள் பில்டர், ரம்யா & நிஷா

சரி ஒர்ஸ்டுக்கு வாங்கடான்னா....

இங்கதான் லவ் பெட்டுக்கும், அன்னப்போஸ்டுக்கும் முட்டுச்சு. சும்மா சொல்லக்கூடாது அன்னப்போஸ்டு கிழி கிழின்னு கிழிச்சது. ரியோவால உருப்படியா எதுவுமே சொல்ல முடியல. அத விட நிஷா உருட்டுன உருட்டெல்லாம் வேற லெவெல். பட்டப்பேரு வைக்கக்கூடாதுன்னு சொன்னது உண்மை ஆனா நான் விளையாட்டுக்கு வச்சேன். ஆனா நீ வச்சதுதான் தப்புன்னு சொன்னதெல்லாம் எந்த கணக்குல சேர்த்தின்னு தெரியல.

கடைசில அன்னப்போஸ்டையும் , ஜித்துவையும் உள்ள அனுப்பிட்டானுங்க.

ஷிவானியும் பில்டரும் உக்காந்து பெட்டுல பேசிட்டு இருந்தாங்க. இத ரொமான்ஸுன்னு சொன்ன எல்லாருக்கும் இந்த வாரம் நாயித்துக்கிழமை சைவ சாப்பாடுதான் அமையும். சக்கரை இல்லாத ஊருல இலுப்பப்பூ கதை இது.

இன்னைக்கு என்னாகுதுன்னு பாப்போம்.

அவ்வளவுதான்.....! மொத்தமுமே இவ்வளாவுதான். இதுல காமெடி பண்றதுக்கு என்ன இருக்கு ? மொதல்ல இந்த எபிசோட்ல என்ன இருந்துச்சு ? மறுபடி மறுபடி இவனுங்க அந்த பழைய பேக்கேஜ்ல தான் நிக்குறானுங்க. இவனுங்க திருந்த மாட்டானுங்க.....திருந்தவே மாட்டானுங்க....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)