பிக்பாஸ் – 4 : நாள் - 74 (17.12.20)

 74வது நாள்

“மன்னார்குடி கலகலக்க”ன்னு ராவான பாட்டு அலாரம். ஆனா பூராம் ராவா குடிச்சிட்டு தூங்குன மாதிரி தள்ளாடிக்கிட்டே நடந்து வந்தானுங்க. அன்னப்போஸ்டுக்கு தெரிஞ்ச அந்த 3 ஸ்டெப்போட இன்னைக்கு ஆரி ப்ரோவும் சேர்ந்து அவரோட ரெட்ரோ ரோபோ ஸ்டெப்புகளையும் இணைச்சு ஃப்யூசன் பண்ணிட்டு இருந்தாரு.

இவனுங்க காலை டாஸ்க்க என்னைக்கு காமிக்கிறானுங்களோ அன்னைக்கு கண்டென்ட் இல்லன்றது கான்ஸ்டாண்டினோபிள் ஜோஸப் பெஸ்கி காலத்து வாக்கு. தமிழ் பாட்ட ஆங்கில ஸ்லாங்குல எப்பிடி பாடுறதுன்னு ஆஜீத் சொல்லிக் குடுக்கனுமாம். அத மத்தவனுங்க பின்பற்றி பாடனுமாம். சொல்லித்தந்த ஆஜீத்த விட அத அர்ச்சனா நல்லாவே பாடுனாங்க.

ரம்யாவும், அன்னப்போஸ்டும் கேமராகிட்ட போயி நின்னு “போர் அடிக்குது பிக்பாஸ்”னு பொலம்ப “ஸ்விம்மிங் பூல்ல குதிச்சு செத்துருங்க”ன்னு சொல்லியிருக்கனும். ஆனா பிக்பாஸனும் காஜி போல.....”ரம்யா இத நான் சொல்லியே ஆகனும்....நீங்க அவ்வளவு அழகு.....இவ்வளவு அழக இங்க யாரும் பாத்திருக்க மாட்டாங்க”ன்னு மடமடன்னு மானூத்து அருவி மாதிரி ஜொள்ள விட்டாப்ல. இந்த சீசன்ல எத்தனை காஜிகளத்தான் சமாளிக்கிறது ?

“சரிடா....ரெண்டு நாளா அடிச்சுக்கிட்டு நாறி.....அவனுங்க அவனுங்க எவ்வளவுதான் காசு சேத்தீங்க?”ன்னு கேக்க.....பில்டரு 460 ரூவா வச்சிருந்தான். அவந்தான் வின்னு. இவனுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் வழங்கப்படுமாம். பில்டருக்கு பவரா ? அது தவறா முடியாம போனா சரிதான்.

“சரி இப்ப பெஸ்ட் யாருன்னு பொலம்புங்க?”ன்னு சொன்னதும்....

சொல்லி வச்ச மாதிரி பில்டரும், அர்ச்சனாவும் வந்தாங்க. வாரம் முழுக்க பெஸ்டுல ரம்யா வந்தாங்க. சோ ரம்யா, பில்டர், அர்ச்சனா இவங்கதான் கேப்டன் கேண்டிடேட்ஸ்.

ஒர்ஸ்ட் யாருன்னு வந்தப்போ சாத்தூர் அண்ட் கேபி வந்தாங்க. இதுல பில்டர் ஒர்ஸ்டுக்கு “அன்னப்போஸ்டு கக்கூஸ் கழுவுறேன்னு சொல்லி கழுவவும் இல்ல.....கத்துக்குறேன்னு சொல்லி கத்துக்கவும் இல்ல”ன்னு சொன்னதுக்கு அன்னப்போஸ்டு சாமியாட ஆரம்பிக்க....”சரி நீ பேசி முடி நான் தாயம் விழுகுதானு பாக்குறேன்”ற மாதிரி உக்காந்துட்டான். அன்னப்போஸ்டு தொலைங்கடான்னு விட்டுருச்சு. அடுத்து கேபி வந்தப்பயும் இப்பிடித்தான் இடைல அது பேச வர “பேயாம இரு”ன்னு சொல்லிருச்சு கேபி. சாத்தூர் கடைசியா வந்து “உள்ள தள்ளுங்க ஆனா என்னய குற்றவாளின்னு மட்டும் சொல்லிராதீங்க”ன்னு ஒளறிட்டுப் போச்சு.

இந்த காண்டுல வெளிய வந்து ஆரியும், அன்னப்போஸ்டும் உக்காந்து பேச ஆரி “பில்டரு ஷிவானிக்கு உதவி பண்ணவே இல்லையாம்....என்ன பித்தலாட்டம் இது?”ன்னு கேக்க,  அன்னப்போஸ்டு “யோவ் அவன் என்னயவே குத்தம் சொல்றான். அத கவனிச்சியா ? ஷிவானி போயிட்டா அவன் லவ் பெட்டுக்கு ஷிஃப்ட் ஆகிருவான். சோ கப்பு நமக்குதான் போல”ன்னு பொரணி பேசிட்டு இருந்துச்சுங்க.

இங்குட்டு ரம்யா, பில்டரு, ஆஜீத் உக்காந்து “ஊருக்குள்ள யாரு தகுதியானவங்க இல்லேன்னு கண்டுபிடிக்கிற கருவிய நம்ம ஆரி முழுங்கி இருக்காரு போல.....ஆனா அந்த மிஷின் இதுவரை யாரையுமே தகுதியான ஆளுன்னு சொன்னதே இல்ல. இந்த மாதிரி மத்தவங்கள குறை சொல்லி விளையாண்டாதான் தனி ப்ளேயர்னா...பேசாம நான் குரூப்பிஸமே பண்ணிக்கிறேன்”னு ஓப்பன் ஸ்டேட்மன்ட் குடுத்தான். இடைல குரூப்புல டூப்பா ஆஜீத் வந்து “என்னயும் அப்பிடித்தான் சொல்றாப்ல. அப்பிடி அவரு சொல்ற மாதிரி நான் இருந்தா.....மக்கள் ஏன் என்னய இன்னும் உள்ள விட்டு வச்சிருக்கப் போறாங்க?”ன்னு கேட்டான். ஆனா இவன 3வது வாரமே வெளிய போக சொன்னத வாகா மறந்துட்டான் சின்னப்பய.

சாத்தூருக்கு உள்ள போனதும் கிறுக்கு பிடிச்சு போயி “கைய முய”ன்னு கத்த “மூத்திர சந்துல மாட்டுன பூனை போல இருக்கு உன் குரல்”னு கரெக்டா சொன்னான் ரியோ. “இந்த கத்தல வெளிய இருந்தப்போ கத்தியிருந்தா கூட உள்ள போயிருக்க மாட்ட”ன்னு சொல்லிட்டு இருந்தாங்க அர்ச்சனா. “உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டன்ற மாதிரி மாத்தி மாத்தி நாமினேட் பண்ணிக்கிட்ட நீயும் நானும் ஒண்ணா உள்ள இருக்கோம்”னு சோகமா “காதல் என்பதொரு மாயவலை”ன்னு பாட ஆரம்பிச்சுச்சு. எந்த சோகம்னாலும் அது பாடுறது காதல் தோல்வி பாட்டுகள்தான்.

கிச்சன்ல அர்ச்சனாவ இம்சை பண்ணிட்டு இருந்த அன்னப்போஸ்ட அர்ச்சனா கேமரா வழியா அது புருஷங்கிட்ட “யப்பா டேய் தியாகி....உனக்கு பரம் வீர் சக்ரா, தாமிர பட்டயம், ரயில்வே பாஸ், தியாகி பென்ஷன் எல்லாமே குடுக்கனும்”னு சொன்னதுதான் தாமசம்....தவிட்டுக் கோழிக்கு விக்கல் எடுத்தாப்ல எக்கோ எபெக்ட்ல ஒரு சவுண்டு....அது அன்னப்போஸ்டு சிரிப்பு. அப்பறம் அத அலாக்க தூக்கிட்டுப் போயி கட்டில்ல மல்லாக்க போட்டு அமுக்குனாங்க அர்ச்சனா.

கேபியையும், ஷிவானியையும் வெளிய விட்டானுங்க. அப்பறம் நிப்பான் டாஸ்க் ரெண்டு டீமா பிரிஞ்சு கயித்துல ஒண்ணா கட்டிக்கிட்டு. ஒளிச்சு வச்சிருக்குற க்யூ கார்ட தேடி எடுத்து கடைசியா பானைய உடைக்கனும். ஆரி டீம் வின்னு. இதோட முடிஞ்சது.

ரைட்டு.....! இந்த கோழி டாஸ்க்குல பல விதமான பஞ்சாயத்துகள பாத்தோம். சாதாரண மேஜைய நகட்டுற டாஸ்க்குலையே இவனுங்க மணிக்கணக்கா ரூல்ஸ் பேசிப் பேசி பழைய சோறாக்குவானுங்க. இவனுங்களுக்குப் போயி இப்பிடி ஒரு டாஸ்க்க எவனாச்சும் குடுப்பானா? ஆனா குடுத்தானுங்க ! சோ இதுல எல்லாருக்குமே குழப்பம்ன்றது தெளிவான ஒரு விஷயம். இந்த குழப்பத்துக்குள்ளையும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்ச மாதிரி அவங்களுக்குள்ள ஒரு பொது கருத்துக்கு வந்தாங்க. இந்த ஆலோசனையிலையும் சரி, பொது கருத்தோட்டத்துலையும் சரி.....முழுசா கலந்துக்காத ஒரே ஆள் ஆரி மட்டுமே. இது மறுக்க முடியாத உண்மை. ஆரி டீம் ப்ளேயரா விளையாட விரும்பாம தனி ப்ளேயரா விளையாட நெனச்சதோட வினை இது. ஆனா இது அவரோட தனிப்பட்ட விருப்பம். அத யாரும் குறை சொல்ல முடியாது. இருந்தாலும் இவரோட தனிப்பட்ட முடிவுக்காக கூட்டமா ஒன்னு சேர்ந்து விளையாடுறவங்களோட விளையாட்ட கெடுக்குறதும், குறை சொல்றதும் எப்பிடி சரியாகும் ?

இது பில்டர் ஏற்கனவே பல டாஸ்க்குல செஞ்சுட்டு இருந்த அதிகப்பிரசங்கித்தனம்.....இத இப்ப ஆரி ப்ரோ கைல எடுத்திருக்காரு. முதல் நாள் அர்ச்சனா ஆலோசனை நடத்திட்டு இருந்தப்போ ஆரி கூட நின்னு அத ஏத்துக்குற மாதிரியான உடல்மொழிய காமிச்சிட்டு அத மாத்தி விளையாண்டது யாரோட தவறு ? சொல்லிட்டு வந்து முட்டைய உடைக்கிறதுதான் சரின்னு வாதாடுன ஆளு....ஆல்ரெடி ப்ளான்ல இருக்குற கூட்டத்த தவிர்த்துட்டு படக்குனு உள்ள போயி முட்டைய உடைக்கிறது எதுல சேர்த்தி ? இல்ல இவராச்சும் தனியா கோழி கிட்ட சொல்லியிருந்தாரா ? அதுவும் இல்ல.

ஆரி ப்ரோவோட நேர்மை, கருமை, எருமைய பத்தி இங்க யாருக்கும் கவலை இல்ல. ஆனா இருக்குற ஆளுங்கள எல்லாம் நீ அன்ஃபிட் அன்ஃபிட்னு சொல்ற தகுதி இவருக்கு இருக்குன்னு யாரு சொன்னா ? இல்ல சொல்றதுக்கு இவரு யாரு ? என்ன அளவுகோள் வச்சிருக்காரு? நாம் தமிழர் தம்பிகள் மத்தவங்க தமிழனா இல்லையான்ற ஸ்கேன் டெஸ்ட் குடுக்குற மாதிரி யாரு ஃபிட், யாரு அன்ஃபிட்னு ரிப்போர்ட் குடுக்குற வேலைய இவரு ஏன் செய்யுறாரு? இது புல்லியிங் கணக்குல வராதா ? அப்பிடி பாத்தா நடந்த எல்லா டாஸ்க்குலையும் இவருதான  ஜெயிச்சிருக்கனும்? அப்ப இவரு ஃபிட் இல்லைன்னு அர்த்தமா ?

கருத்துகள தைரியமா, தெளிவா முன்வைக்கிற ஒரு ஆளான்னு பாத்தா....அதுலையும் அவ்வளவு தெளிவு இல்ல....! இத நிஷா விஷயத்துல உள்ள பெஸ்டுன்னும் வெளிய வந்து அவங்கதான் “ஒர்ஸ்டு பெர்பார்மருக்கு தகுதியான ஆளு”ன்னும் சொன்ன சம்பவம் நியாபகத்துக்கு வருது. அத கமல் சார் கேட்டப்ப டிங் டிங் நெய்டா மொழியில ஒளறுனதும் நியாபகத்துக்கு வருது. இந்த ஒர்ஸ்ட் பெர்பார்மர்ல பில்டரு அன்னப்போஸ்ட “கக்கூஸ் கழுவுற டீம்ல இதுவரை இருந்தது இல்ல”ன்னு சொன்னப்ப அத அனிதா மறுத்து “எனக்கு யாரும் அந்த வாய்ப்பு குடுக்கல”ன்னு சொல்லுச்சு. ஆனா அது தப்பு. ஜித்து டீம் பிரிக்கிறப்ப “கக்கூஸ் கழுவுற டீமுக்கு போறேன்”னு அன்னப்போஸ்டு சொன்னப்ப “தனியாதான் கழுவனும்”னு சொன்னதுக்கு “அப்ப நான் வரல”ன்னு சொல்லி ஜகா வாங்குச்சு. அப்ப பக்கத்துல இருந்தது ஆரி. “வாலண்டியர் வேலை செய்யுறவங்கள பெஸ்ட் பெர்மாருக்குள்ள கொண்டு வராதீங்க”ன்னு 3வது வாரம் பாலா சொன்னத நியாபகம் வச்சு 2 நாளைக்கு முன்ன அவனுக்கு புத்தி புகட்ட முயற்சி செஞ்ச ஆரி ப்ரோவுக்கு 3 வாரத்துக்கு முன்ன நடந்த இந்த மேட்டர் நியாபகத்துக்கு வராதது தற்செயல்னே எடுத்துக்கலாமா?

இது ஸ்போர்ட்மேன்ஷிப் இல்ல. ஆதிக்க மனோபாவம். இவனுங்க எல்லாம் நமக்கு கீழதான்னு நெனைக்குற மேட்டிமைத்தனம். தன்னம்பிக்கைக்கும் தலைகணத்துக்கும் நூலளவுதான் வித்யாசம். எனக்கும் தகுதி இருக்குன்றது தன்னம்பிக்கை.....எனக்கு மட்டுந்தான் தகுதி இருக்குன்னு சொல்றது தலைக்கணம். அப்பறம் நான் யாரு ஆர்மின்ற ஆராய்ச்சியிலையும், முயற்சியுலையும், முடிவுலையும் வீணா இறங்க வேணாம். ஏன்னா என்னைக்குமே நான் சிங்கப்பெண் சல்பேட்டா ஆர்மி.

டிஸ்கி : பிக்பாஸ் 4 பதிவுகள மொத்தமா படிக்க லிங்க் முதல் கமெண்டில்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)