பிக்பாஸ் – 4 : நாள் - 77 (20.12.20)


“Human Solidarity day” வாம். இதெல்லாம் இப்பதான் கேள்விப்படுறோம். போற காலத்துல சண்டே, மண்டேலாம் இருக்காது போல....மதர்ஸ் டே, டாய்லட் டே, டாப்ர்மேன் டேன்னு தினம் ஒரு டேன்னு பேரு வச்சுருவானுங்களாட்டம் இருக்கு. “பகிர்ந்துன்னுதல் ரொம்ப முக்கியம். இத்தினியா இருந்தாலும் குடுத்து திங்கனும்னு ஒரு குறளே இருக்கு....அதோட அடுத்த வெர்ஷன தனியொரு மனிதனுக்கு உணவுன்னு பாரதியும், அதோட இன்னொரு வெர்ஷன எல்லாரும்  எல்லாமும் பெற வேண்டும்னு கண்ணதாசனும்....அதோட நியூ வெர்ஷன்னா நானும் நிக்கிறேன்”னு சொன்னார். போதும் ஆண்டவரே !

காலர் ஆஃப் த வீக் : “ஆண்டவர்கிட்ட ஏன் பிக்பாஸுக்கு வந்தீங்க?”ன்னு கேட்டாப்ல. “அதத்தான் நானும் இந்த சீசன்ல யோசிக்கிறேன்”னு மனசுல நெனச்சுட்டு...அவரு மொத சீசன்ல மொத எபிசோட்ல சொன்னத மறுபடியும் சொன்னார். இப்ப அடுத்த கேள்வி சோமனுக்கு “என்னதான் பண்ற?”ன்னு கேக்க....”நான் வேற என்னதான் பண்றது?”ன்னு பதில் சொன்னான்.

“பராவாயில்ல இப்பல்லாம் கால மிதிச்ச மாதிரி அடிக்கடி சவுண்டு குடுக்குற....நல்ல விஷயம்”னு ஆஜீத்த பாராட்டுனார். அப்பறம் ஷிவானியப் பாத்து “கன்ஃபெஷன் ரூம்ல கதறி அழுதுட்டு இருந்தியே ஆர் யூ ஓகே பேபி?”ன்னு கேட்டார். அதுவும் “இப்ப சரியாதான் இருக்கேன்”னு சொல்லுச்சு. பேர சொல்லமாட்டேங்குறேன்னு வருத்தப்பட்டதுக்காக 11 தடவ அது பேர சொன்னாரு. எவிக்சன்ல பேர சொல்லலன்னு வருத்தப்பட்டதுக்காக “சரி இப்ப சொல்றேன் நீ சேவ்டு”ன்னார். பிள்ளைக்கு பல்லெல்லாம் முகம்.

கோழியா இருக்கும்போது முட்டைய காப்பாத்துன மெத்தடுக்கு அர்ச்சனாவ பாராட்டிட்டு “ஆனா சோமன திட்டியே சாவடிச்சது எதுக்கு?”ன்னார். “ஏங்க அவன் என் ஃபோட்டோ ஒட்டுன முட்டைய கீழ போட்டு உடச்சுப்புட்டாங்க”ன்னு சொல்ல. “ஊரே உன் ஃபோட்டோவ எரிச்சு நாமினேட் பண்ணானுங்க அப்பல்லாம் வலிக்கலையே?”ன்னு கேக்க....”மத்தவங்க சரிங்க....இந்த ஸ்லேவ் சோமனுக்கு அப்பிடி என்ன தைரியம்ன்றேன் ? அவ்வளவு தெனவாகிப்போச்சா?”ன்னு பொங்குனாங்க. “ஏண்டா அவங்க முன்னாடி போட்டு உடச்ச ? பின்னடி போட்டு உடச்சிருக்கலாம்ல?”ன்னு ஆண்டவர் வேற கடிச்சு வச்சுட்டார்.

ரம்யா கேப்டன்ஸியப் பத்தி கேட்டார். எல்லாம் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போட்டுதான் சொன்னானுங்க. இதுல ஆரி மட்டும் “அந்தம்மா ஒரு வார்த்தைய சொல்லி காயப்படுத்திருச்சு. ஆனா அதுக்கு மன்னிப்பு கேட்டு நானும் மன்னிச்சுட்டேன்”னு சொன்னார். “ஏண்டா அதான் மன்னிப்பு கேட்டு அத நீயும் மன்னிச்சிருக்க. அப்பறம் என்ன அத திரும்பி சொல்லிக்காட்டுறது ? மன்னிக்க தெரிஞ்ச உனக்கு ஒரு விஷயத்த மறக்கத் தெரியலையே?”ன்னு சொன்னார்.

“அன்னைக்கு மொத்த ஆளுகளும் கோழி டாஸ்க்குல குழம்பிப் போயிருந்தப்ப நீயாச்சும் ஒரு கேப்டனா தலைமை தாங்கியிருக்கனும்ல?”ன்னு கேட்டதுக்கு....”எது இவனுங்களையா ? நீங்க வேற....பூராம் ரத்தம் குடிக்குற மூட்ல இருந்தானுங்க. சிக்கியிருந்தா 65 போட்டிருப்பானுங்க”ன்னு சொல்லிச்சு. “ரைட்டு முட்டை டாஸ்க்கு மெத்தட்லயே எவிக்ஷன் யாருன்னு பாப்போம்”னு சொல்லிட்டு சுத்தியல வச்சு ரியோவையும், ஆரியயியும் முட்டைய உடைக்க சொன்னார். இதுல அன்ன்ப்போஸ்டு சேவாச்சு. பில்டர கூப்ட்டு அவன் மெத்ட்ல உடைக்க சொல்ல “முட்டை மடி மெத்தையடி”ன்னு முட்டைல உக்கார அது உடஞ்சு பொறிஞ்சது சோமன் பேரு......!

பிரேக்ல அர்ச்சனா ஏறக்குறைய முடிவு பண்ணிட்டாங்க. “அன்புக்கு கட்டம் சரியில்லன்னு கணக்கம்பட்டி ஜோசியர் கணக்கு பண்ணி சொன்னாரு. சோ போறது நாந்தான்”னு சொன்னாங்க. அப்பவே லவ் பெட்டு கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பிச்சது.

இந்தப்பக்கம் ஷிவானி, அனிதா, ரம்யா 3 பேரும்

ஷிவானி : அர்ச்சனாக்கா போயிடுவாங்களோ ?

ரம்யா : எது அர்ச்சனா போயிடுவாங்களா ?

அன்னப்போஸ்டு : அவங்கதான் போவாங்க....ஆனா ஆஜீத் போயிட்டான்னா அவங்க போக மாட்டாங்க

ரம்யா : அப்போ அவங்க போக மாட்டாங்களா ?

அன்னப்போஸ்டு : அவங்க போவாங்கன்னு நான் எங்க சொன்னேன்.....ஆஜீத் போகமாட்டான்னுதான் சொன்னேன்

ரம்யா : அப்ப அவங்கதான போவாங்க

அன்னப்போஸ்டு : இப்ப நீதான் சொல்ற அர்ச்சனாதான் போவாங்கன்னு.....கேமரா பாத்துக்கோங்க

ரம்யா : எதெ.....//

சுந்தர ராமசாமி எழுதுன ஜே.ஜே சில குறிப்புகள் அப்பறம் ஜெயமோகனோட சுந்தர ராமசாமி நினைவுகள் குறித்த நினைவின் நதிகள பரிந்துரை செஞ்சார்.

அர்ச்சனா அவுட். நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்னா லவ் பெட்டுக்கு எப்பிடி இருந்திருக்கும் ? சோமன்லாம் சொம்பு சொம்பா அழுக ஆரம்பிச்சுட்டான். ஆனா அர்ச்சனா கவலை வெளிய தெரிய கூடாதுன்னு கொஞ்சம் அதிகமாவே கேசுவலா காணப்பட்டாங்க.

அன்னப்போஸ்டு மட்டும் இடையில இடையில “ப்ரேவ் லேடி, சூப்பர் லேடி, அயர்ன் லேடி, ஹல்க் லேடி, ஸ்பைடர் லேடி” அப்டின்னு கத்திட்டே இருந்துச்சு. ஆனா அத அர்ச்சனா கண்டுக்கவே இல்ல. காயின்கள கேபிகிட்ட குடுத்துடுப் போனாங்க.

வெளிய வந்து திரும்பவும் ஆண்டவர்கிட்ட “அன்பே சிவம், அன்பு, அன்புக்கு நான் அடிமை, அன்புச்சின்னம், அன்பே அன்பே, அன்பானவன் அடங்காதவன் அசராதவன்”னு அன்பப் பத்தி பேசிட்டு....புது கேப்டனா பில்டர நியமிச்சுட்டு.....எல்லாரையும் பாத்து பை சொல்லிட்டு, குறுபடம் பாத்துட்டு கிளம்பிட்டாங்க. ஆண்டவரும் கிளம்பிட்டாரு.

ஆரி, அன்னப்போஸ்டு, ரம்யா உக்காந்து. “ஒழுங்கா அந்தம்மாவுக்காக விளையாண்டிருந்தா ஃபைனல் வரைக்கும் போயிருக்கும்.....இப்பப் பாருங்க பஸ்ஸேரி வீட்டுக்கு போகுது”ன்னு அன்னப்போஸ்டு சொல்ல, “அன்பு இங்க செல்லல....மத்தபடி அன்புக்கு மார்கெட் அப்டியேதான் இருக்கு”ன்னு சொன்னாப்ல.

“அதெல்லாம் விடுங்கடா இனி சோத்துக்கு என்ன பண்ண?”ன்னு பில்டர் கேட்டது மில்லியன் டாலர் கேள்வி.

பில்டர் டீம் மீட்டிங்க பெட்ரூமுலயே போட்டான். “சமையலுக்கு முன்னுரிமை குடுங்க....மத்த வேலைகள ரெண்டு நாளைக்கு ஒருதரம் கூட பாத்துக்கலாம்”னு சொன்னான். சோமன வைஸ் கேப்டனா போட்டான்.

இங்குட்டு தாயில்லா பிள்ளைகள் தெனறிட்டு இருந்தானுங்க. “ஏண்டா இனி இந்த வீட்ல எப்பிடி காலந்தள்ளுறது? நீதி, நேர்மைன்னு சொல்லி சொல்லி அன்ப அனுப்பிவிட்டிங்களேடா பாவிகளா”ன்னு ரியோ சொல்ல....கேபி ஒரு பக்கம் பொலம்பன்னு ஒரே ஒப்பாரிதான். இவனுங்க எதுக்கு வந்தோம்னே மறந்துட்டு இப்ப திருவிழாவுல தொலஞ்ச குழைந்தைங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கானுங்க. இவனுங்க தேறுறது கஷ்டந்தான்.

லைட் அணைஞ்சுச்சு. அந்த இருட்டுல சன்னமா.......”அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா? அன்ப ஜெயிக்க வைப்போமா? அன்புதான் ஜெயிக்கும். அன்ப ஜெயிக்க வைக்கலாம் வா”ன்னு பானைக்குள்ள இருந்து கேக்குறாப்ல கேட்டுட்டு இருந்துச்சு


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)