பிக்பாஸ் – 4 : நாள் - 64 (07.12.20)
63வது நாள் தொடர்ச்சி...
சனத்தோட பொட்டி
படுக்கைகள ஸ்டோர் ரூமுல வைக்க சொல்லியிருப்பானுங்க போல.....! கிழக்கே போகும் ரயில்
படத்துல ரயிலுக்கு பின்னாடி எழுதி அனுப்புற மாதிரி, யாரோட லிப்லைனரையோ எடுத்து, அது
பொட்டில இருந்தே ஒரு பேப்பர கிழிச்சி....”சாரி சனம், லவ் யூ சனம், மிஸ் யூ சனம், ஒ
ஓ சனம்....எ ஏ சனம்....ஐ சனம்”னு எழுதி பொட்டில பத்திரமா வச்சு அனுப்புச்சு. சைனா கண்டிப்பா
அன்னப்போஸ்டு தன்ன நாமினேட் பண்ணத டீவில பாத்திருக்கும். பேட்டில கீட்டில எதுவும் சொல்லிருமோன்ற
பயம் கூட இருக்கலாம்.
வெளிய ஷிவானி
அழுதுட்டு இருக்க.....
பில்டர் : (ஷிவானி
கைய தடவிய படி....) இப்ப என்னாகிப் போச்சுன்னு அழுதுட்டு இருக்க ?
ஷிவானி : (கண்ணத்
தொடச்சுக்கிட்டே.....) அது வண்ட்டு.....
பில்டர் : (ஷிவானி
கைய தடவிய படி....) சனம் வெளிய போறதுக்காக அழுகுறதெல்லாம் ட்ராமா மாதிரி இருக்கு....பீ
ரியல்
ஷிவானி : அது
வண்ட்டு.....அப்பிடியில்ல
பில்டர் : (ஷிவானி
கைய தடவிய படி....) என்னய பாரு....நாளைக்கே நீ வெளிய போனாலும் ஃபீல் பண்ண மாட்டேன்....
ஷிவானி : அது
தெரியும்....ஆனா வண்ட்டு....
பில்டர் : (ஷிவானி
கைய தடவிய படி....) என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்
ஷிவானி : டேய்...நீ
மொத தடவுறத நிப்பாட்டு.....! தடவி தடவி கை எலும்பே வெளிய தெரியுது ! சனம் போன கவலையில
அழுகுறேன்னு மனம் போன போக்குல சொல்லாத....! நானே என் லிப் லைனரக் காணோம்னு அழுதுட்டு
இருக்கேன்....இவன் வேற......//
64வது நாள்
“அல்லு சில்லு
செதறு”ன்னு செம்ம பாட்டு அலாரம். ரம்முவும், ஷிவானியும் அகெயின் ஆட வந்தது சிறப்பு.
மத்தவனுங்க எல்லாம் மந்திரிச்சு விட்ட மாதிரி மதமதன்னு திரிஞ்சானுங்க.
ஆரி, ஷிவானி,
பில்டரு, அன்னப்போஸ்டு மீட்டிங்க்.
ஆரி :அவனுங்க
குரூப்பத் தவிர எல்லாத்தையும் வெளிய அனுப்பிட்டு குடும்ப விளையாட்டா விளையாட ப்ளான்
பண்ணிட்டானுங்க
அன்னப்போஸ்டு
: அவன் வேலையவே அவனால பாத்துக்க முடியாதவன எல்லாம் கேப்டனாக்கி அழகு பாக்குறானுங்க....கொடுமை
பில்டரு : இதத்தான்
3வது வாரமே சொன்னேன்....இப்டியெல்லாம் நடக்கும்னு....என்ன ஷிவானி சரிதான ?
ஷிவானி : என்
லிப் லைனர அந்த குரூப்பு எடுத்திருக்க வாய்ப்பிருக்கா ?
அன்னப்போஸ்டு
: (MV : அய்யோ....இவளோடதா அது......?) ஷிவானி முக்கியமான மேட்டர் ஓடிட்டு இருக்குல்ல....அத
கவனி
ஆரி : இன்னும்
2 பேரு வெளிய போயிட்டா ஃபைனலிஸ்ட் யாருன்னே முடிவு பண்ணிடலாம்....அதுக்குதான் அவனுங்களும்
பிளான் பண்றானுங்க
பில்டரு : இதத்தான்
5வது வாரமே சொன்னேன்....இப்டியெல்லாம் நடக்கும்னு....என்ன ஷிவானி சரிதான ?
ஷிவானி : நல்ல
மெரூன் கலர் லிப்லைனர்.....எவ எடுத்தாளோ ?
அன்னப்போஸ்டு
: அது என்ன எவ ? எவன்னு கூட சொல்லலாம்ல....? அத விடு இத கவனி....
ஆரி : இன்னும்
அன்னை அந்த லான்ல இருக்குற பொம்மைய மட்டுந்தான் முறை சொல்லி கூப்டல...மத்த எல்லாத்தையும்
அப்பிடி கூப்ட்டு குடும்பமாக்கி விட்டுருச்சு....அத பத்தி விட்டாதான் மத்தா ஆளுங்க
விளையாடுவானுங்க
பில்டரு : இதத்தான்
7வது வாரமே சொன்னேன்....இப்டியெல்லாம் நடக்கும்னு....என்ன ஷிவானி சரிதான ?
ஷிவானி : பேசாம
காச வெட்டி போட்டுறவா ? லிப்லைனர எடுத்த ஆளு மாட்டிக்கட்டும்
அன்னப்போஸ்டு
: (ஆத்தீ....) ஷிவானி....லிப் லைனருக்காகவெல்லாம் ரிவெஞ்ச் வரைக்கும் போகக் கூடாது....வெளிய
போனதும் அக்கா உனக்கு 5 கலர்ல வாங்கித் தரேன்...சரியா //
இங்க ரம்யாவும்,
ஆஜீத்தும் பில்டர மிஸ்டர். இண்டியான்னு ஓட்டிட்டு இருந்தானுங்க. வங்குல மாட்டுன எலி
மாதிரி ஷிவானி தானா வந்து மாட்ட...அதையும் சேர்த்து ஓட்டிட்டு இருந்துச்சு ரம்யா....!
கேப்டன்ஸி டாஸ்க்குல
எல்லா வானரமும் கலந்துக்கலாம். ஆனா இது நியாபகம் வச்சு சொல்ற டாஸ்க். அப்பிடி இப்பிடின்னு
கடைசியா அன்னப்போஸ்டு ஜெயிப்பு. மார்கழி மாச ராத்திரில கல்லக் கொண்டி மடார்னு மண்டைல
எறிஞ்சா கத்துற நாய் மாதிரி ஒரு சத்தம்.....அது அன்னப்போஸ்டோட ஆனந்தக் கதறல். இண்டியன்
டீமுக்கே கேப்டனான மாதிரி இங்குட்டும் அங்குட்டும் தாவித் தாவி தன் சந்தோஷத்த சரளமா
காமிச்சாங்க. ஃபைனல்ல கூட இருந்தது நிஷா. அது ஜெயிச்சிருந்தா மறுபடியும் கிச்சன் லவ்
பெட்டு கைல போயிருக்கும்.
பில்டரு “அன்னப்போஸ்டு,
தன்னிச்சையா முடிவெடு”ன்னு சொன்னதுக்கு....”என்னைக்காச்சும் ஒருநாள்தான் இப்பிடி அறிவுசார்
வார்த்தையெல்லாம் பேசுவான் பையன்”னு நெனச்சு “சரியான பதிலடா பில்டரு”ன்னு பாராட்டுனார்.
டீம் பிரிச்சப்ப
அன்னையும், நிஷாவும் வெஸெல் வாஷிங் கேட்டு வாங்க. ரம்யா, அன்னப்போஸ்டு, ஆரி, கேபி கிச்சன்னு
சொல்ல, “கக்கூஸ் கழுவுறதுக்கு சோமு இதுவரை போகல அவன் போகச்சொல்லு”ன்னு ஆரி சொன்னதுக்கு
சோமு பொங்கிட்டான். “அன்னப்போஸ்டு சொல்றதுக்கு முன்ன நீ எதுக்கு சொல்ற? அதான் டீம்
பிரிச்சு முடிச்சாச்சே பின்ன நீ எதுக்கு மறுபடியும் ஆரம்பிக்கிற”ன்னு சோமன் இந்த வீட்ல
கோவப்பட்ட அரிதான நிகழ்வு நடந்துச்சு.
கக்கூஸ் கழுவுறதுக்கு
தனியாளா இருக்கனும். ஆனா மத்த டீம்ல கலகலன்னு ஜெண்ட்ஸ், லேடீஸ்னு ஆளுக இருப்பாங்க....!
அத விட்டுட்டு தனியா போயி தேய்க்கவா உள்ள வந்தோம்ன்ற அக்மார்க் காஜி வருத்தம் சோமனுக்கு.
ஆனா ஆரி ப்ரோ லவ் பெட்டுல இருந்து ஒரு ஆள் ஆப்ட்டதும் அக்கினி சட்டி எடுத்துட்டார்.
சோமன வகை தொகையில்லாம வாருனதும். சோமனே பயந்து “சாரிப்பா கொஞ்சம் எமோஷனாலிகிட்டேன்”னு
சொல்ல....”எங்கிட்ட இனிமே அப்பிடி பேசாத....அப்பறம் பேசவே முடியாது”ன்னு முடிவா சொல்லிட்டுப்
போயிட்டார் ஆரி ப்ரோ.
இப்ப வரிசைப்படுத்துதல்ல
முதல் 3 இடம் பிடிச்சவங்களா உள்ள தனித் தனியா கூப்ட்டாரு பிக்கி. சனம் போனதால அர்ச்சனாவுக்கு
2வது இடத்த குடுத்திருந்தார். இந்த 3 பேரும் எவிக்ஷன்ல இல்ல....! இவங்களுக்கு பதிலா
எவிக்ஷன்ல இல்லாத 3 பேர கோர்த்துவிட்டுக்கலாம்.
ஆரி – ஜித்து
பில்டர் – கேபி
அர்ச்சனா –
சோமு
அர்ச்சனாவுக்கு
ஆப்ஷன் எல்லாமே அவங்க குடும்பத்து ஆளுக. அதுல லீஸ்டா இருக்குறது சோமந்தான். சோ அவன
பலி குடுத்தாங்க.
வெளிய வந்து
யாரும் இதப்பத்தி சொல்லல. அப்பறம் பிக்கியே வந்து நாமிநேசஷன் லிஸ்ட்ட வாசிச்சாப்ல.
கேப்டன்றதால அன்னப்போஸ்டும் எவிக்ஷன்ல இல்ல....!
3 பேருக்கும்
அதிர்ச்சிதான். யாரு யார பண்ணியிருப்பாங்கன்னு பொரணி பேசிட்டு இருந்தானுங்க. அன்னை
நிஷாவ தனியா நகட்டிட்டுப் போயி “லவ் பெட்டு மேல உள்ள பழிய தொடைக்க சோமன பலி குடுத்துட்டேன்.....தாயின்றவ
தியாகத்துக்கு அடையாளம்....ஆனா காஜி சோமன் நம்ம பெட்டுக்கே அவமானம் சோ அவன் வெளிய போகணும்னு
அன்னை நான் முடிவெடுத்துட்டேன்”னு கண்ண உருட்ட.....”அன்னையின் முடிவே கட்டளை.....கட்டளையே
சாசனம்”னு நிஷ மண்டியிட்டாங்க.
இன்டிரெவல்ல
சேர்ந்த இணைந்த கைகள் ராம்கி – அருண் பாண்டியனாட்டம் ரொம்ப நட்பொழுக பேசிட்டு இருந்தானுங்க
ஆரியும் பில்டரும்.
பில்டரு : இங்க
பேசுறதுக்குக் கூட ஆளில்லாம கேம் விளையாண்டுகிட்டு இருக்கோம். ஆனா அவனுங்களப் பாருங்க.....பெரியவனுக்கு
தை மாசம் காது குத்தி கடா வெட்டிருவோம்....அப்பிடியே அடுத்த வாரம் நாமிநேட் பண்ணி ஆரிய
வெளிய அனுப்பிருவோம்னு அன்பு சுரக்க பேசிட்டு இருக்கானுங்க....
ஆரி : உனக்காச்சும்
பேசுறதுக்கு ஷிவானின்னு ஒண்ணு இருக்கு....என் நிலமைய பாத்தியா ? என் செட்டு சனமும்,
அன்னப்போஸ்டும்.....யோசிச்சுப் பாரு
பில்டரு :
(தூரத்துல ஷிவானி உக்காந்து கடலை சாப்புடறதப் பாத்து.......) இவள அடுத்த வாரம் பேக்
பண்ணிடுவானுங்க....
ஆரி : இங்க
பாரு நல்லா விளையாண்டு யாரு கப்படிச்சாலும் பிரச்சனையில்ல...ஆனா அன்பு ஆட்டுக்குட்டின்னு
வந்தா விட முடியாது....! சோ நல்லா விளையாடு....! ஆமா என்ன ஷிவானி தனியா இருக்கு? என்னன்னு
கேக்கலையா ?
பில்டரு : அவ
லிப் லைனர காணோம்னு சோகமாம்....பக்கத்துல போனாலே அந்த பாட்டுதான் பாடுறா.....//
அஸ்வினி ஆயில்
டாஸ்க் ஒண்ணு....கட்டித் தொங்கவிட்ட பெரிய சைஸ் சவுரி முடியில....டீமுக்கு ஒரு ஆளா
வந்து தொங்கனும். அதிக நேரம் தொங்குன டீம் வின்னு. ஆரி டீம் வின்னு.
Comments
Post a Comment