பிக்பாஸ் – 4 : நாள் - 69 (12.12.20)
“தம் கட்டித் தனியா விளையாண்டு ஜெயிப்பானுங்கன்னு பாத்தா.....குடும்பமா சேர்ந்து கும்பலாதான் கும்மியடிப்போம்....அடுக்குமாடான்னு கேட்டா அன்புன்னு சொல்லி ஜல்லியடிப்போம்”னு ஒரு கூட்டம் சுத்துது உள்ள. இத எவனும் தட்டிக்கேட்டா அனுப்பி விடுறானுங்க ஜெயிலுக்குள்ள. விடலாமா இவனுங்கள? என்னான்னு கேப்போம் அகத்துக்குள்ள. அப்பிடியே உள்ள போடப்போறோம் குண்டு. ஆமா இன்னைக்கு எவிக்ஷன் ரெண்டு. அதுக்குமுன்ன வெள்ளிக்கிழமை என்ன நடந்துசுன்னு பாப்போம்”னு சொன்னார்.
69வது நாள்
பிகில் தீம்
அலாரம். இந்த 69 நாள்ல இன்னைக்குதான் இந்த திருவாத்தானுங்க உருப்படியா ஒரு அலாரத்துக்கு
பெர்பார்ம் பண்னது. பவர் பேக்டா இருந்துச்சு. வீடே கூட சேர்ந்து ஆடுன மாதிரி ஒரு ஃபீல்.
கண்ணுக்குட்டிக்கு
காளை மாடு டீ ஷர்ட் அடிச்சு குடுத்திருக்கு போலடோய்.....! அத தடவிகிட்டேதான் மேடம்
பள்ளியெழுச்சி.
நிஷாவ உக்கார
வச்சுக்கிட்டு பேருக்கு ஸ்பெல்லிங் கேட்டு விளையாண்டுகிட்டு இருந்தப்ப நிஷா ஏதோ சோமன
சொல்ல.....இந்த வீட்ல சொம்பு சோமன் 2வது முறையா கோவப்பட்டான்.
நிஷா போர்வைய
பொத்திட்டு அழுக....அப்பறமா சோமன் வந்து சமாதானப் படுத்துனதுக்கு “உங்க ஸ்டேட்டஸ் வேற
எங்க ஸ்டேட்டஸ் வேற....நீங்க லார்டு லபக்குதாஸ்.....நாங்க லங்கோடுதாஸ்”னு சம்பந்தமில்லாம
சொல்ல....கிளம்பி வெளிய போயிட்டான்.
கேசுவலா ஹேண்டில்
பண்றேன்ற பேருல கேவலமான பெர்பார்மன்ஸோட வந்த ரியோவுக்கு வேலில போன ஓணான் வந்து வேட்டில
ஏறுச்சு.....
பக்கத்து பெட்டு
அர்ச்சனா கபால்னு எந்திரிச்சு “என்னங்கடா.... சொன்ன வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத
சோமன் இன்னைக்கு சொடக்கு போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டான். அவன இதே வார்த்தைய கேபி
சொன்னா இனிக்குதாம்.....நிஷா சொன்னா புளிக்குதாம். என்னடா பூச்சி காட்டுறீங்க ? எங்கிட்ட
மட்டும் இப்பிடி சொல்லியிருக்கனும் சொம்பு நெளிஞ்சிருப்பான்”னு ரியோகிட்ட கத்த, “பண்ற
பஞ்சாயத்தையும் பண்ணிட்டு பதுக்கமா கேபி கூட ஒதுக்கமா இருக்கானே எல்லாம் அவனால வந்தது”ன்னு
வந்த வேகத்துல ஓடிட்டான்.
வெளிய உக்காந்து
நிஷாகிட்ட அர்ச்சனா “வீடே சேர்ந்து கழுவி ஊத்துனப்பயெல்லாம் ஊர்வசி அவார்டு வாங்குன மாதிரி சிலுத்துக்குட்டான். அடிமையா
இருந்தவன ஸ்லேவா மாத்தி கவுரவமா வச்சிருக்கோம் பாரு....நம்மள சொல்லனும்”னு அர்ச்சனா
சலிச்சுக்கிட்டாங்க.
கடைசி வரை அது
என்ன வார்த்தைன்னு தெரியல. என்ன கருமமோ.
“ஜெயிக்கலாம்ன்றதுக்காக
என்ன வேணும்னாலும் பண்ணலாம்ன்ற பாதையில போயிட்டு இருக்கானுங்க.....இவனுங்களுக்கு டேக்
டைவர்ஷன் போடனும்....வாங்க போகலாம்”னு உள்ள போனார்.
அவர பாத்ததும்
“ட்ரெஸ்ஸு நல்லா இருக்கு”ன்னு சொன்னதும் “சரி”ன்னு விட....”எங்கதப் பத்தியும் சொல்லுங்க”ன்னு
கேட்டு வாங்குனானுங்க.....”இருக்குற பிரச்சனையில அது ஒண்ணுதான் கேடு.....ஆடைகள் பளிச்சுன்னு
இருந்தாலும்.....உங்க ஆக்ட்டிவிட்டிகள் சல்லித்தனமாதானடா இருக்கு. உக்காந்து தொலைங்க”ன்னு
சொல்லிட்டு, “விட்டு குடுத்து வீட்ட காப்பாத்திட்டோம்னு நெனச்சீங்க ஆனா ஆப்பு வச்சானுங்க
பாத்தீங்களா?”ன்னு சொல்லிட்டு, அந்த நிகழ்வ பத்தி கேட்டாரு. “ரூல்ஸ் படி வெளிய சொல்லக்கூடாதுன்றதால
சொல்லல”ன்னு பில்டரு சொன்னதுக்கு.....”வர வர உன் நேர்மைக்கு ஒரு அளவே இல்லாம போகுது.....சுத்தலா
இருக்குன்னு வட்டம் கூட போட மாட்டேங்கிறியாமே”ன்னு பாராட்டுனார்.
“என்ன ரமேஷு
ஒர்ஸ்ட் பர்பார்மர் போலயே?”ன்னு கேட்டதுக்கு எப்பவும் போல எதோ சொன்னார். அவரு கேப்டன்ஸி
எப்பிடின்னு கேட்டதுக்கு லவ் பெட்ட தவிர எல்லாருமே “அவன் கேப்டன்றது அடுத்த கேப்டன்
செலெக்ட் ஆன வரைக்கும் அவனுக்கே தெரியாத மாதிரிதான் இருந்தான்”னு சொன்னானுங்க. “வாய்ப்ப
வீணாக்காத தம்பி”ன்னு சொன்னார்.
அடுத்து நிஷா
கேஸ். “என்ன நிஷா ஒரு பேச்சுக்கு மலேசிய நிஷா வேணும்னு கேட்டதுக்கு மாரல் இல்லாத நிஷாவா
மாறிட்டியே”ன்னு சொல்ல....நிஷாவும் என்னென்னமோ சொல்லி சமாளிச்சாங்க. “சரி இப்பவாச்சும்
உணர்ந்தியா?”ன்னு கேட்டதுக்கு.....”நிக்கும் போது உணர்ந்தேன், நடக்கும்போது உணர்ந்தேன்,
குறட்டை விடும்போது உணர்ந்தேன், மசாஜ் பண்ணிவிடும்போது உணர்ந்தேன், மல்லாக்க படுத்துக்கிட்டு
உணர்ந்தேன், உணர்ந்தேன், உணர்ந்தேன், உணர்ந்தேன், உணர்ந்தேன், உணர்ந்தேன்”......இப்பிடி
அவரு எது கேட்டாலும் உணர்ந்தேன்னு சொல்லிட்டே இருந்தாங்க.
அப்பறம் அர்ச்சனா
கால்ல விழுந்து ரியோவ கடுப்பேத்துனத பாராட்டுன மாதிரி பாராட்டி “ஆனா எதுக்காகவும் இனிமே
கால்ல விழாத”ன்னு கொட்டுனார். அப்றம் டுடே தோ எவிக்ஸன்னு சொல்லிட்டு போனார்.
பூராம் பர்கோலக்ஸ்
போட்ட பேஷண்டு மாதிரி மாறிட்டானுங்க. ரியோவோ “நாமிநேசன்ல இல்லாதவனுங்களையும் வெளிய
அனுப்புவானுங்க போல”ன்னு பிக்பாஸுக்கே டஃப் குடுத்தான். நிஷா தான் வெளிய போறாதுல
200% உறுதியா இருந்தாங்க.
இங்குட்டு அனிதாவும்
ஆரியும் பேசிட்டு இருந்தாங்க. பில்டருக்கு ஷிவானி காலியாகிடுமோன்னு ஒரு கலக்கம்.
ஆண்டவர் உள்ள
வந்து அன்னப்போஸ்டோட கேஸுக்கு வந்தாரு. ரியோ வகையா மாட்டுனான். எல்கேஜி பையன் கூட அவ்வளவு
அழகா காரணம் சொல்லுவான். அர்ச்சனா வேற பக்கத்துல இல்லையா பையன் பாயிண்ட் எடுத்து குடுக்க
ஆளில்லாம திக்கித் திணறிட்டான். அன்னப்போஸ்டும் ஆண்டவர் இருக்காருன்னு கூட பாக்காம
ரியோவ லெஃப்ட் ரைட் வாங்குச்சு. “சரி இப்ப சொல்லுங்க யாரு ஒர்ஸ்ட் பெர்பார்மர்?”னு
கேட்டதுக்கு லவ் பெட்ட தவிர எல்லாரும் நிஷாவ சொல்லிட்டானுங்க. “அப்ப நிஷாவ தூக்கி உள்ள
போடுங்க”ன்னு சொல்லிட்டார் ஆண்டவர். “எனக்காக அவங்க ஜெயிலுக்கு போறது என் மனசுக்கு
கஷ்டமாகி என்னால தாங்கமுடியாம போயி என்னால தான் எல்லாம்”னு அன்னப்போஸ்டு ஆரம்பிக்க,
ஆண்டவரோ “இது உனக்காக பண்னது இல்ல....உன் கேஸுக்கு”ன்னு சொல்லி முடிச்சார். நிஷா ஜெயில்
பாத்தாங்க.
இதுல ஆரி ப்ரோ
“இவனுங்க எப்பவும் இப்பிடித்தான் பண்றானுங்க”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே.....”ஆனா
நீயுந்தான் பெஸ்ட் பர்பார்மருக்கு நிஷாவுக்கு ஓட்டு போட்டுட்டு இங்க வந்து நீதி, நேர்மைன்னு
ஒட்டு போட்டுட்டு இருக்க”ன்னு வார....அதுக்கப்பறம் ஆரி பேசுனது எல்லாமே ஏலியன் பாஷைதான்.
இதுல ரியோ வந்து
“இந்த கிச்சன் பாயிண்ட நீ அன்னைக்கே சொல்லியிருந்தா நான் ஒர்ஸ்ட் பெர்பார்மர்னு சொல்லியிருக்க
மாட்டேன்”னு ரிவர்ஸ் கியர் போட....”டேய் மெனு கார்டா அடிச்சு குடுக்க முடியும்...அதெல்லாம்
தானா யோசிக்கனும்....அதையும் அர்ச்சனா யோசிச்சா போதும்னு இருந்தா இப்பிடித்தான் இடிபடுவ”ன்னு
சொல்லுச்சு.
“ரைட்டு ரெண்டுல
ஒண்ணு இன்னைக்கு. ஜித்து நீ கன்ஃபெஷன் ரூம் போ, சோமு நீ ஸ்டோர் ரூம் போன்னு சொல்லிட்டு
முடிவ வந்து சொல்றேன்”னு போயிட்டார்.
இங்குட்டு அர்ச்சனா
ரியோ கிட்ட “ரெண்டு பேரும் போகக் கூடாது பேசாம ஆண்டவர எவிக்ட் பண்ண சொல்லுவோமா?”ன்னு
பெர்பார்மன்ஸ போட்டுட்டு இருந்துச்சு.
அப்பிடி இப்பிடின்னு
ஜித்து அவுட்டு. அர்ச்சனா டீமுக்கு சோமு வந்தத விட, ஜித்து வெளிய போனதுலதான் வருத்தம்
மாதிரி தெரியுது.
கன்ஃபெஷன் ரூமுல
இருந்து நேரா ஆண்டவர்கிட்ட போயிட்டார் ஜித்து. “வாப்பா நல்லா ஸ்பாவுக்கு போயிட்டு வந்த
மாதிரி வந்துட்ட”ன்னு கலாய்ச்சு, உள்ள எல்லாரையும் காமிச்சார். பின்ன குறும்படம் போட்டானுங்க....பூராம்
படுத்து தூங்குற ஷாட்ஸ்தான். அப்பறம் பை பை சொல்லிட்டு போயிட்டார் ஜித்து. அப்டியே
ஆண்டவரும்.
Comments
Post a Comment