பிக்பாஸ் – 4 : நாள் - 63 (06.12.20)
63வது நாள்
பிளாக் அண்ட்
பிளாக்ல வந்தார் ஆண்டவர். ஸ்கூல் பசங்க மாதிரி பேட்ஜெல்லாம் போட்டுக்குறார். அண்ணல்
அம்பேத்கர் பிறந்தநாள் அப்பறம் நெல் ஜெயராமனோட பிறந்தநாள். ஒருத்தர் ஜனநாயக விதைய தூவுனவர்,
இன்னொருத்தர் நாட்டு பாரம்பரிய விதைகளை தூவ குடுத்தவர். ரெண்டு பேரையும் வணங்குவோம்னு
சொன்னார்.
அகம் – அகம்
நான் முந்திக்கிறேன்
பூராம் கண்ணுக்கு குளிர்ச்சியா ட்ரெஸ்ஸுகள போட்டுருக்கீங்கன்னு பாராட்டுனார். சனம்
சட்டுன்னு எந்திரிச்சு “ நேத்து நீங்க எனக்காக பேசுனதுக்கும், அவனுக்காக சாரி கேட்டதும்
ரொம்ப நெகிழ்ந்திருச்சு. ரொம்ப நன்றின்னு சொல்லுச்சு.
சரி வரிசைப்படுத்துதல்
டாஸ்க்குல அன்னப்போஸ்ட ஏன் அம்போன்னு விட்டீங்க ? சனம் உண்மையிலேயே 2வது எடத்துக்கு
எடுப்பான ஆளா? யாரு அப்பிடி நெனைக்கிறீங்கன்னு கேட்டதுக்கு ஆரி, ரம்யா, பில்டர் 3 பேரும்
கை தூக்குனாங்க. அதுல பில்டர் சொல்லும்போது இப்ப அது 2 காலும் செஞ்சதால 2வது இடத்துக்கு
நான் ஆதரவுன்னு சொன்னான்.
சரி பில்டரு
வேர்க்கடலை சாப்ட்டு சும்மா சுத்திட்டு இருக்குறவனுங்கள்லாம் உள்ள உல்லாசப்பயணம் வந்த
மாதிரி ஜாலியா இருக்கானுங்க. மூச்சப்போட்டு விளையாடுற ஆட்களெல்லாம் மொத ஆளா வெளிய அனுப்பிடுறாங்கன்னு
சொன்னியே என்ன விஷயம்னு கேட்டதுக்கு ஒரு நாளைக்கு இவனுங்களப் பத்தி ஆயிரம் விஷயம் பேசுறேன்.
எதன்னு நியாபகம் வச்சுக்கிறது ? சொல்லியிருப்பேன் ஆனா மறந்துட்டேன். அதென்னமோ நான்
பேசுறத மட்டும் ரெக்கார்ட் பண்றதுக்குன்னு தனியா ஒரு 10 கேமரா வச்சிருப்பானுங்க போல.
நான் மறந்துட்டேன்னு சமாளிச்சான்.
அனிதாகிட்டதான்
சொன்ன அதுக்கு நியாபகம் இருக்கும். சொல்லும்மான்னு சொல்ல அது வேற யாரு சோமு, நிஷா,
கேபி, ஜித்துன்னு சொல்லுச்சு. இதுக்கு உடனே நிஷாகிட்ட இருந்து மறுப்பு வர நான் விளையாட
ஆரம்பிச்சுட்டேன்னு உலகத்துக்கு சொல்றாங்களாம்.
ஜித்து பாய்
நிஷாவ எதையாச்சும் சொன்னா பாஷா பாயா மாறிடுறாப்ல. ஆண்டவருக்கு முன்னாடியே அன்னப்போஸ்ட
அப்பீட் பண்ணிட்டு இருந்தார். அடுத்து ரியோ – அனிதா பஞ்சாயத்து. என்ன பஞ்சாயத்துன்னு
எல்லாருக்குமே மறந்துருச்சு. அதனால என்ன பஞ்சாயத்துன்னு சொன்னாலே அன்னப்போஸ்டு 5 நாளக்கு
பேசுமே. இப்பவும் அப்பிடித்தான் ரியோ இப்பிடி சுத்தும்போது இது அப்பிடி சுத்துச்சு.
அவன் அப்பிடி சுத்தும்போது இது இப்பிடி சுத்துச்சு. இப்பிடியே ஈயம் பூசிட்டு இருந்துச்சு.
என்ன பிரச்சனைன்னா ரியோவ ஆண்டவர் சம்பந்தமில்லாம பாராட்டிட்டாராம் அது இழுக்காம். ஆண்டவரும்
பாராட்டு சரிதான்னு விளக்க இந்த மேட்டர எடுத்தாராம்.
சரி ஏன் 3வது
இடத்துல இருந்து உன்னய தொறத்தி விட்டானுங்கன்னு கேட்டதுக்கு. நான் ஒரு இடத்துல நின்னா
மட்டும் 250 தடவ மறு ஓட்டு எடுத்து என்னய ஓட விடுறானுங்கன்னு புகார் வாசிச்சுச்சு.
ஆரியோ இல்லங்க 2வது தடவ ஓட்டெடுத்தப்போ பில்டருக்கு ஷிவானி எக்ஸ்ட்ரா ஓட்டு போட்டு
அவன 3வது இடத்துக்கு கொண்டு வந்திருச்சுன்னாப்ல. ஷிவானிய என்ன இதெல்லாம்னு கேட்டதுக்கு
ஓட்டே போட வேணாம்னு இருந்தேன். அப்பறம் இவன் பேர சொன்னதும் போட்டுட்டேன்னு ஒளருச்சு.
ஒருத்தி பேச்ச
நிப்பாட்டுறதே இல்ல, நீ ஒரு ஆளுக்காக மட்டும் பேசுற உங்களோட பெரிய அக்கப்போறா இருக்குன்னாப்ல.
அன்னை உன்னோட கருத்து என்னன்னு கேட்டா சம்பந்தமில்லாம ரியோதான் மொத வந்திருக்கனும்னு
2 நாள் கழிச்சு யோசிச்சு சொல்றாங்க. இவனுங்க உலகமே தனியா இருக்கு.
எப்பவும் யாரச்சும்
பஞ்சாயத்து பண்ணி வைக்கனும்னு நெனைக்காம உங்களுக்குள்ள பிரச்சனைய முடிக்கப் பாருங்கடான்னு
முடிச்சார்.
அப்பறம் ஹெல்த்
செக்கப் பத்தி கேக்க, ஒரு மாதிரி சமாளிச்சானுங்க. பின்ன நிஷா சேவ்டுன்னு சொன்னார்.
அன்னை அழுகாம இருந்திருந்தாதான் ஆச்சர்யம்.
ஒவ்வொருத்தனுக்கும்
இங்க ஒவ்வொரு வார்த்த ஒவ்வாமையா இருக்கு ரியோக்கு குரூப்பிஸம், அன்னப்போஸ்டுக்கு சண்டை,
பில்டருக்கு குழந்தைத்தனம்....இப்ப அன்னைக்கு பாஸி போலன்னு கலாய்ச்சார்.
காலர் ஆஃப்
த வீக். ஷிவானிக்கு
நாமினேஷனுக்கு
ஏன் வரனும்னு ஆசப்பட்ட ? அடப்பாவி ஏன் ஷோவுக்கு வந்தன்னு கேக்குறத விட்டுட்டு இப்பிடியாடா
கேப்பீங்க?
மக்கள் விருப்பத்த
தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்னு சொல்லுச்சு.
ஆஜீத் சேவ்டு.
எல்லாரும் தூக்கி கொண்டாடுனானுங்க.
இப்ப பில்டருக்கு
என்ன பயம்னா ஷிவானிய தூக்கிடுவானுங்களோன்னு. அர்ச்சனாகிட்ட பொலம்பிட்டு இருந்தான்.
அர்ச்சனாவோ அது இங்க இருக்குறது தெரிஞ்சாதான அனுப்புறதுக்கு. அது இருக்குற எடமே தெரியாமத்தான
இருக்கு. அதனால போகாதன்னு சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப அன்னப்போஸ்டுக்கு எவிக்ஷன் காய்ச்சல்
வந்து உண்டியல குலுக்குறதும், பெட்ட சரி பண்றதும், ஃபைனல் ஸ்பீச்சுக்கு ரெடி பண்றதும்னு
ஓவரா பண்ணிட்டு இருந்துச்சு.
இந்தவார புத்தம்
: தொடுவான்ம் தேடி
சரி யாரு உள்ள
இருக்கனும்னு விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு எல்லாரும் சனம்னு சொல்ல....இவனுங்க வாய்
முகூர்த்தம் சனம் அவுட்டு.
எல்லாருக்கும்
வாயடைச்சுப் போயிடுச்சு. அப்ப ஆரம்பிச்சுச்சு அன்னப்போஸ்டு டேப்ரிகார்டர்ல சிக்குன
T-90 கேஸட்டு மாதிரி இழுத்து இழுத்து அழுதுகிட்டே பேசிட்டு இருந்துச்சு.
பில்டர் மன்னிப்பு
கேக்கப் போனப்ப மறுத்துட்டு பின்ன கொஞ்ச நேரம் கழிச்சு ஏத்துக்கிச்சு. எல்லாரும் சேர்ந்து
சனத்துக்கு ஒரு உருப்படியான வழியனுப்பல் கொடுத்தானுங்க. சனமும் ரொம்ப ட்ராமா பண்ணாம
நல்லா கேஸுவலா போனது சிறப்பு. நாந்தான் டைட்டில் வின் பண்ணனும் இருந்தாலும் ஓகேன்னு
கமெடி பண்ணது சூப்பர், பாலாவையும் நல்லா கிண்டல் பண்ணுச்சு. மீஸ் யூ சைனா.
வெளிய வந்து
கமல் கிட்ட எப்பவும் போல பேசிட்டு. குறும்படம் பாத்துட்டு பை பை சொல்லிக்கிச்சு.
Comments
Post a Comment