பிக்பாஸ் – 4 : நாள் - 80 (23.12.20)
78வது நாள் தொடர்ச்சி......
அந்த பாழாப்போன
பால் கேமுதான் தொடர்ந்துச்சு. பஸ்ஸர் அடிச்சு பால் வருதுன்னு சொல்லவும் பில்டர் டீம்
தேங்கா பொறுக்குற தேவாங்குகள் மாதிரி அவசர அவசரமா ஓடி வந்ததுல பந்த தட்டி தட்டி தவற
விட்டுட்டானுங்க. கூட்டத்துல எவனோ பந்த தள்ளி விட்டானுங்கன்ற கோவத்துல பில்டரு “எவன
திட்டுனாலும் எகத்தாளம் பேசுவானுங்க....பேசாம நம்ம ஃபர்னிச்சரையே உடைப்போம்”னு ஷிவானிய
திட்ட அது “அது எப்பிடிடா விளையாடவே விளையாடாத என்னய பாத்து பந்த தட்டி விட்டேன்னு
சொன்ன?”ன்னு ஒரே ரகளை. பில்டரு இத எதிர்பாக்கல. வர வர ஷிவானியும் அன்னப்போஸ்டு மாதிரி
மாறிட்டு வருது. அது பேர சொன்னாலே அதுக்கு ஆகாம போகுது. கோவத்துல அதோட மூக்கு.... வாயா
மாறி பேசுறது ரண கொடூரமா இருக்கு. கடைசியா
மன்னிப்பு வேற கேட்டுக்கிட்டான்.
80வது நாள்
“ஓடி ஓடி விளையாட
வாடா”ன்னு பாட்டுப் போட்டு கூப்ட்டார் பிக்கி. டைனிங் டேபிள்ல பில்டரும், ஆரியும் உக்காந்து
சாப்ட்டுட்டு இருக்கும்போது ஆரி நைசா “யப்பா கேப்டனு....அங்க 3 நாளா எதுக்குன்னே தெரியாம
ஒரு கப்பு பருப்ப ஊற வச்சு வச்சுருக்கானுங்க....என்னன்னு கேளு....என்னன்னு கேளு?”ன்னு
ஹஸ்கி வாய்ஸ்ல சொல்ல....”பாலாவின் ஆட்சியில் பருப்பில் ஊழலா ? இருங்க கேப்போம்”னு சொல்லிட்டு
கைய கழுவ போன இடத்துல ஆரி சாப்பிடாம வச்சத பாத்துட்டு “சாரே....நீயும் சோத்த வீணாக்குற.....இதுல
பருப்புல பஞ்சாயத்துன்னு பிராதோட வர.... பாத்துக்க”ன்னான்.
அப்பறம் உள்ள
போயி ரம்யாகிட்ட
பில்டர் : ஆமா
பருப்ப யாரு ஊற வச்சது....அத யாரு கொட்டுனது?
ரம்யா : அன்னப்போஸ்டுதான்....!
அவதான் புளிக்குழம்புக்கு வேணும்னு பருப்ப ஊற வச்சா
பில்டர் : புளிக்குழம்புக்கு
பருப்பா ?
ரம்யா : அட
அவ அப்பிடிதாம்பா சொன்னா....கேட்டா பூர்வகுடிகள் புளிக்குழம்புல பருப்பு சேப்பாங்கன்னா
பில்டர் : அப்பறம்
அத எதுக்கு 3 நாள் வரைக்கும் வச்சிருந்துட்டு கொட்டுனாங்க ?
அன்னப்போஸ்டு
: அவரு சொல்றது முழுக்க பொய்.....3 நாள் இல்ல.....2 நாள் கழிச்சே கொட்டிட்டேன்
பில்டர் : அப்ப
கொட்டுனது உண்மை
அன்னப்போஸ்டு
: டேய் ரெண்டுமே மஞ்சா கலர்ல இருக்கு, தவிர என் கண்ணு சின்னது எனக்கு எல்லாமே சின்னதாத்தான்
தெரியும், எங்க அம்மா வேற கருப்பு, என் வீட்டுக்காரன் வேற என்னய கண்ணுகுட்டின்னுதான்
கூப்டுவான், எனக்கா..... 12 பேருக்கு ஒரு ஆளா சமைப்பேன் ஆனா பால்ல தண்ணி ஊத்தத் தெரியாது,
இவ்வளவு துயரத்துல இருக்குற எனக்கு கவனம் சிதறருறது சகஜம்தான ? இதுக்குதான் பேசாம பொறிகடலையில
குழம்பு வைக்கிறேன்னு சொன்னேன்....எவனும் கேக்கல
ரம்யா : சரி
ஆரி எதுக்கு கீரை சாதத்த கொட்டுனாரு? அது வேஸ்ட் இல்லையா ?
பில்டர் : அவருக்கு
அதிகமா வச்சுட்டாங்களாம் அதான் கொட்டுனாராம்.....அதிகமா வச்சது அவரு தப்பில்லன்னு சொன்னார்.
ரம்யா : இத
கேட்டது என் தப்பு //
அன்னப்போஸ்டுக்கு
தான் பண்ணது தப்புன்னு தெரிஞ்சிருச்சு. இத அதிகமா பேசி எவனும் ஒர்ஸ்ட் பெர்பார்மன்ஸுக்கு
பேர் சொல்லிடுவானுங்களோன்னு ஒரு பயம். அதனால இத நிப்பாட்ட “டேய் என்னடா ஒரு பருப்பு
விஷயத்த காலையில இருந்து பரபரப்பா பேசிட்டு இருக்கீங்க ? ஆக்சுவலா அது 10 பருப்புதான்
அத தண்ணியில ஊறப்போட்டதால அது ஊறி உங்களுக்கு பெருசா தெரியுது.....பில்டரு வேற வேட்டையாடு
விளையாடு ராகவன் ரேஞ்சுக்கு இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்கான்”னு சொன்னதும் பில்டரு
“ஏங்க ஒரு பிராது வந்திருக்குன்னா அத நாலு பத்து விதத்துல விசாரிச்சுதான் ஆகனும். நீங்க
என்னமோ காலக்கடிக்குது செருப்புதான்....கைதவறி கொட்டிருச்சு பருப்புதான்னு தனித்தவில்
வாசிக்கிறீங்க.....இனி இத பெரிய கேஸா மாத்தாம விட மாட்டேன்”னு சொல்லி 75 கேஸ 302 வா
மாத்திட்டு இருந்தான்.
உள்ள வந்து
பில்டரு : பருப்ப
கொட்டிருங்கன்னு யார்கிட்ட சொன்னீங்க?
அன்னப்போஸ்டு
: எல்லார்கிட்டையும்....ஆனா அவனுங்க கவனிச்சானுங்களான்னு தெரியல
பில்டரு : எல்லார்கிட்டையும்னா
? எங்கிட்ட சொல்லலயே ?
அன்னப்போஸ்டு
: உன் பேரு எல்லாருமா ?
பில்டரு : ஏங்கா
எல்லாரும்னா யாருன்னு கேட்டேன்?
அன்னப்போஸ்டு
: எல்லாரும்னா எல்லாருந்தான்.....நான் கூடதான்
பில்டரு : அப்ப
நீங்க உங்ககிட்ட மட்டும் சொல்லிக்கிட்டீங்க ?
அன்னப்போஸ்டு
: எல்லார்கிட்டையும் சொன்னேன்....அந்த எல்லாத்துலையும் நானும் இருக்கேன் அதனால நான்
எல்லார்கிட்டையும் சொல்றதும்.....என் கிட்ட சொல்றதும் ஒண்ணுதான்....இதுக்குதான் கிச்சன்
டீம்ல இருக்குறது இல்ல....
பில்டர் : அப்ப
வெளிய போ
அன்னப்போஸ்டு
: பிரச்சனை இருக்குந்தான் ஆனா வெளிய போற அளவுக்கு இல்ல...உங்களுக்கெல்லாம் நாளைக்கு
பாவக்காய் பச்சரிசி அல்வா செஞ்சு தரலாம்னு இருக்கேன்
பில்டரு : யாரு
? நீ ? பச்சக்கலர்ல அரிசி எங்கன்னு தேடுற ஆளு நீ ! நீ சரியான குரூப்ல டூப்பு...சும்மா
செஃப் தொப்பிய மாட்டிகிட்டு எங்கள ஏமாத்துற.....தொலை //
வெளிய அன்னப்போஸ்டு....
அன்னப்போஸ்டு
: பருப்ப கொட்டுனதுக்கு சாரி கேக்குறதப்பத்தி எனக்கு பிரச்சனையில்ல ஆனா சாரி கேட்டு
அது எனக்கு தப்ப பெருசாக்குற மாதிரி ஆகிடும் அதனாலதான் சாரி கேக்க மாட்டேன்...அதுவும்
பாலகிட்ட சாரின்னு கேக்கவே மாட்டேன். ஒரு தடவ கூட சாரி சொல்ல மாட்டேன். சாரி சொல்றதுக்கு
நான் லூசா ? சாரி சொல்ல மாட்டேன்னா சாரி சொல்ல மாட்டேந்தான்.....ஒரு தடவை கூட என் வாயில
இருந்து சாரின்னு வராது....புரியுதா ரம்யா ?
ரம்யா : (MV
: மொத்தம் 9 சாரி.....) புரியுது....நீ 1 தடவதான் சாரி சொல்ல மாட்ட....! //
சொல்லி முடிச்ச
கையோட இதே பாராவ உள்ள வந்து சொல்லுச்சு. ஆனா பில்டரு “உங்கள ஹர்ட் பண்னியிருந்தா சாரி”ன்னு
சரட்டுன்னு முடிச்சுட்டான்.
அப்பறம் இதப்பத்தி
ஆஜீத்கிட்ட சொல்லிட்டு இருந்தான் பில்டரு. டேய் இது விளம்பரத்துல சமிக்குற மாதிரி நடிக்கிற
ஆளு போல.....கரண்டியும் , கையுமா இருந்ததப் பாத்து இத இனாம்குளத்தூர் பிரியாணி ஸ்பெசலிஸ்டா
நெனச்சு நம்மள நாமளே ஏமாத்திட்டு இருக்கோம்னு பொலம்பிட்டு இருந்தான்.
அன்னப்போஸ்டும்
ரம்யாகிட்ட
அன்னப்போஸ்டு
: பருப்ப கொட்டுனதெல்லாம் கேசா ? நேத்து 1 லிட்டர் ஆயில தண்ணின்னு நெனச்சு ஊத்தி ஜவ்வரிசிய
வேக வச்சேன். அதான் பெரிய கேஸு...இவன் என்னமோ பருப்புக்கு குதிக்கிறான்
ரம்யா : அப்ப
நீ ஜவ்வரிசி எண்ணை ரெண்டையும் வேஸ்ட் பண்ணியிருக்க ? ஆமா எதுக்கு ஜவ்வரிசிய ஊற வச்ச
?
அன்னப்போஸ்டு
: இட்லிக்கு ஆட்ட இட்லி அரிசி இல்ல....அதான் என்ன அரிசி இருக்குன்னு பாத்தேன் ஜவ்வரிசி
இருந்துச்சு....அதுவும் அரிசிதானன்னு ஊற வச்சேன்
ரம்யா : நீ
வாய்க்கரிசி போடாமா விடமாட்ட
அன்னப்போஸ்டு
: அத விடு....கேபி தூங்குனா கேஸ் போடுறான்....ஷிவானி தூங்குனா போர்வை பொத்தி விடுறான்...அத
நான் கேட்டேனா ?
ரம்யா : அந்த
போர்வை உனக்கெதுக்கு ? ஹா....ஹா...ஹா
அன்னப்போஸ்டு
: இவ ஒருத்தி....சிரிச்சா நல்லாயிருக்குன்னு சொன்னதுக்காக சில்லு மூக்கு உடஞ்சா கூட
சிரிக்கிறா.....//
அதுவரைக்கும்
எடுத்த பாயிண்டுகள டீமுக்குள்ள சமமா பிரிச்சுக்கிட்டானுங்க.
அப்பறம் பேரு
சொல்ல சொல்ல பதறி ஓடி வந்து பந்துகளா பிடிக்கிற டாஸ்க்குல சோமன் தவறுதலா அடுத்தவங்களுக்கான
பந்த பிடிக்க....பின்னாடி வந்த ரம்யாவுக்கு பந்து கிடைக்கல.
“சரி இப்ப இந்த
விளையாட்ட நீங்க விளையாண்ட அழக வச்சு நீங்களா வரிசைப்படுத்திக்கோங்க”ன்னு சொன்னதும்.....பில்டரு
எடுத்ததும் 3வது இடத்துக்கு போட்டி போட்டது நைச் மூவ்.
எல்லாரும் ஒரு
மாதிரி செட்டாக. இப்ப ஆரி ப்ரோவும் – ரியோவும் முதல் இடத்துக்கு பேச ஆரம்பிச்சாங்க
ரியோ : முதல்
இடத்துக்கான காரணங்கள சொல்லுங்க ஆரி
ஆரி : நீங்க
தூங்குனீங்கள்ல....நான் தூங்கல
ரியோ : ஏங்க
நீங்க என்ன பண்னீங்கன்னு சொல்லுங்க....அத விட்டுட்டு நான் தூங்குனேன்னு சொல்றீங்க?
ஆரி : அதத்தான்
நானும் சொல்றேன்.....நான் தூங்கல நீங்க தூங்குனீங்க
ரியோ : சோமன்
கூடதான் தூங்குனான்
ஆரி : ஆனா நீங்களுந்தான
தூங்குனீங்க
ரியோ : அப்ப
அவனையும் சொல்லுங்க
ஆரி : அவந்தான்
முதல் ப்ளேஸுக்கு போட்டிக்கு வரலையே...சோ நீங்க தூங்குனீங்க
ரியோ : ஏங்க
எல்லாருமே தூங்குனாங்கங்க
ஆரி : எல்லாருலையும்
நீங்க ஒரு ஆள்தான....நீங்க தூங்குனீங்க.....! சோ முதல் இடம் எனக்குதான்
ரியோ : MV
: தாயிருக்கும்போதே வதைப்பான்.....இப்ப தாயில்லா பிள்ளையா வேற போயிட்டேன்.....செய்யுங்கடா
//
வோட்டிங் எடுத்தானுங்க....ஆரி
ப்ரோவ 5வது இடத்துக்கு தள்ளுனானுங்க. “தெரியுண்டா பிடிச்சவங்கள தான சொல்லுவீங்க”ன்னு
ஆரி சொல்ல “ஆகா”ன்னு எல்லாரும் அவர பாக்க....”யப்பா பந்தப் பிடிச்சவங்களன்னு சொன்னேன்.....சாந்தி
சாந்தி”ன்னு ஆறப்படுத்துனார்.
அப்பறம் வோட்டிங்க்
எடுத்து செயல்படுத்துனதுல.....1 – 9 வரிசைப்படி
ரியோ, ரம்யா,
சோமு, பில்டரு, ஆரி, அனிதா, ஆஜீத், ஷிவானி, கேபி. முதல் 3 இடத்த பிடிச்சவங்களுக்கு
சிறப்பு பரிசு இருக்காம்.
Comments
Post a Comment