பிக்பாஸ் – 4 : நாள் - 59 (02.12.20)

 59வது நாள்

“ஜித்து ஜில்லாடி” அலாரம். அது பாட்டுக்கு பாடுச்சு....செவுடன் காதுல ஊதுன சங்காட்டம் இவனுங்க பாட்டுக்கு சுத்திட்டு இருந்தானுங்க.

காலை டாஸ்க். சோப்ளாங்கி சோமு குமாருன்ற வார்த்தைய விதவிதமா எப்பிடி சொல்றதுன்னு சொல்லித் தரனுமாம். எப்பவும் போல என்னத்தையோ பண்ணான். இதுல அர்ச்சனா வந்து “இது என்ன குமாரு?ன்னு கண்டுபிடிங்க”ன்னு ஒரு எக்ஷ்ஸ்ப்ரஷன் குடுக்க, “பாஸி குமாரு”ன்னு எப்பவோ ஒருதடவை, எவனோ “அர்ச்சனா பாஸ் மாதிரி பிகேவ் பண்றாங்க”ன்னு சொன்னத வச்சு கூமுட்டை கேபி சொல்ல.....”இனிமே இப்பிடி எவனாச்சும் சொல்லுங்க....சொரக்காய கொண்டி எறியுறேன்”னு சொல்லிட்டு உக்காந்ததுமே, கேபி ரகசியமா “சாரி”ன்னு சொல்லுச்சு. அன்னையும் “இதுல என்ன இருக்கு?”ன்ற மாதிரி கேசுவலா எடுத்துக்கிட்டதா காமிச்சாங்க.

காஜி சோமன் தான் முன்னாடி பொம்பளப் புள்ளைங்க இருந்தாலே கொஞ்சம் எக்ஸ்ட்ரா பர்பார்மென்ஸ் பண்ணுவானே.....! ரம்யாவக் கூப்ட்டு “பல்லுல க்ளிப் போட்டுட்டு பேசுற மாதிரி.....பாட்டுப் பாடு”ன்னு சொல்லி ரசிச்சான். என்ன கருமம் டேஸ்ட்டு இவனுக்கு. அப்பறம் சனத்தக் கூப்ட்டு “என்னய மசாஜ் பண்ணி விடுறதுக்கு கூப்டுற மாதிரி ஆக்ட் பண்ணு”ன்னு சொல்லி ஓட்ட.....அதுவும் பண்ணுச்சு ! டாஸ்க் முடிஞ்சதும் சோமனுக்கு சனி வேலை பாத்துச்சு.

சனம் : ஆமா அது என்ன அவ்வளவு பேர் இருக்குறப்போ என்னய எதுக்கு கூப்ட்டு மசாஜ் பண்ண சொன்ன ?

சோமு : நீதான் மசாஜ் பண்ணுவியே அதான்

சனம் : நான் கொலை கூடதான் பண்ணுவேன்....உன்னய பண்ணவா ?

சோமு : உன்னய அப்பிடி சொன்னதால கோவிச்சுக்கிட்டியா?

சனம் : நான் இதெல்லாம் பெருசா எடுத்துக்குற டைப் இல்ல.....ஆனாலும் நீ என்னய அவமானப்படுத்துனது உண்மைதான?

சோமு : நீ தப்பா எடுத்துக்கலைன்னா அப்ப அது அசிங்கப்படுத்துனதா ஆகாதுல்ல ?

சனம் : நான் அத எப்பிடி வேணும்னாலும் எடுத்துட்டு போறேன்.....ஆனா நீ என்னய அசிங்கம் தான படுத்துன ?

சோமு : காலையில இருந்து நீதான் என்னய படுத்துற....நான் சாரி கேக்கவா?

சனம் : உனக்கெதுக்கு சாரி....எங்கிட்ட இல்லாமயா இருக்கு ? நெறையா இருக்கு....இப்ப சாரி இல்லாத சனம்னு என்னய அசிங்கப்படுத்தனுமா ?

சோமு : யம்மா சாரின்னா சாரி....அதாவது மன்னிப்பு

சனம் : சாரின்னா மன்னிப்புதான் ! இதுல என்ன புதுசு....?

சோமு : இப்ப நீ கோவிச்சுக்கிட்டியா ? இல்லையா ?

சனம் : நான் இதெல்லாம் பெருசா எடுத்துக்குற டைப் இல்ல.....ஆனாலும் நீ என்னய அவமானப்படுத்துனது உண்மைதான?

சோமு : இவ மொத இருந்து ஆரம்பிக்கிறாடோய்......//

இத ரியோ புகுந்து சரி பண்ணலாம்னு வந்தான்....ஆனா அவனையும் விரட்டி விட்டுருச்சு சனம்.

அன்னை மறுபடியும் ஆனைமலை ஏறுன மாதிரி கேபி சொன்னதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருந்தாங்க. இத கேபி ஆஜீத்த நகட்டிட்டு போயி “என்னடா மன்னிப்பெல்லாம் கேட்டேன்... சரி சரின்னுட்டு மறுபடியும் மூஞ்சிய காமிக்கிறாங்க.....லவ் பெட்டு ஒரு டைப்பான ஏரியாதான் போலயே?”ன்னு பொலம்புச்சு.....”எப்பிடியாச்சும் சோமன மட்டும் கழட்டி கூட்டிட்டு வந்துட்டா லவ் பெட்ட தலைமுழுகிடலாம்”ன்ற மாதிரி யோசனையில இருந்தாப்ல இருந்துச்சு.

“வீட்ல எவனாச்சும் ஆர்ப்பாட்டமா பேசுனா உடனே நாமினேஷனுக்கு அனுப்புறானுங்க. பேசி வச்சு கால் செண்டர் டாஸ்க்க விளையாண்டு நாமினேஷன் ஆகாம பாத்துக்குறானுங்க”ன்னு அன்னப்போஸ்டும், பில்டரும் பேசிக்கிட்டானுங்க.

இங்குட்டு அன்னை, நிஷாகிட்ட “இன்னும் என்னய பாஸ் மாதிரி நடந்துக்குறேன்னு சொல்லி ரெஜிஸ்டர் பண்றானுங்க....இந்த வீட்ல இவனுங்க கிட்ட பாஸ் மாதிரி நடந்துக்க முடியுமா ? பெயில் ஆக்கிற மாட்டானுங்க ?” ன்னு அனத்த....”ஆனா உன் கண்ணுல வாட்டர் வந்தா....லேட்டரா என் கண்ணுல ஹீட்டர் போடுமே”ன்னு லான் ஏரியான்னு கூட பாக்காம அன்பு யூரியாவ அள்ளி தெளிச்சுட்டு இருந்தாங்க நிஷா...!

இங்குட்டு கேபி சோமன சேர்த்துக்கிட்டு ரியோகிட்ட “மன்னிப்பு கேட்டதுக்கப்பறமும் அதையே சொல்லிட்டு சுத்துனா அப்பறம் மன்னிப்புக்கு என்ன மரியாதை ?கேட்டு சொல்லுப்பா”ன்னு சொல்ல....ரியோ “நானும் கவனிச்சேன்...கொஞ்சம் நேரம் போகட்டும்”னு சொன்னான். கண்டிப்பா இந்த பொண்ணு சோமன கழட்டி கூட்டிட்டு வந்துரும்.

ஷிவானி கால் டூ ரம்யா.....! இது அடுத்த ஆகாவலி கால். நம்ம பொண்ணுக்கு நார்மலாவே நாலு வார்த்தை பேசுனாலே வேர்க்கும்...அதப்போயி நாள் கணக்கா கால் பேசச்சொன்னா ? சம்பிரதாயத்துக்கு ஒரு 2 கேள்விய கேட்டுட்டு கால கட் பண்ணிட்டு போயிடுச்சு. இதுல மக்கள சந்திச்சுட்டு வரனும்னு வைராக்கியம் வேற.....!

அடுத்த கால் அன்னப்போஸ்டு டூ ரியோ.....

வீட்ல....

மீ : யப்பா சீக்கிரம் வா ....செம்ம கால் !

டீவில.....

அன்னப்போஸ்டு : ஹலோ பிரதர் மார்க் இருக்காரா ?

ரியோ : சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும் ?

அன்னப்போஸ்டு : அதாவது ரியோ.....இங்க வெற்றியடைய தகுதி என்ன ?

ரியோ : அதாவது....வெற்றியடைய....

வீட்ல....

மீ : இப்பன்னு பாத்து கால் வருது.....ஹலோ....

20 நிமிஷம் கால்.....முடிஞ்சது

டீவில ......

அன்னபோஸ்டு – ரியோ கால்......

வீட்ல......

மீ :  போச்சு கரண்ட் போச்சு....இன்னும் எப்ப கரண்டு வருமோ ?

30 நிமிஷம் கழிச்சு கரண்ட் வந்தது.....

டீவில......

அன்னபோஸ்டு – ரியோ கால்......

வீட்ல .....

மீ : என்னன்னு பாத்து வை.....மாடில மழைத் தண்ணி நிக்குது.....தள்ளி விட்டு வரேன்

15 நிமிஷம் கழிச்சு......

டீவில....

அன்னபோஸ்டு – ரியோ கால்......

வீட்ல.....

மீ : யம்மா நீ சாப்பாடு போட்டுரு......//

சும்மா அன்னப்போஸ்டு பேசுச்சு பேசுச்சு பேசிக்கிட்டே இருந்துச்சு. அன்னைக்கு “5 நிமிஷம் குடுடா”ன்னு ஒழுங்கா கேட்டுச்சு....குடுத்தானா இந்த ரியோ....? இன்னைக்கு ஃபோன உடச்சுக்கிட்டு ர, ழ, வ, ரி, அ, போன்ற எழுத்துகளெல்லாம் செதறி விழுந்துச்சு. ஒரு வழியா கால் கட் ஆச்சு. (சேவல் கூவுற சத்தம் தூரத்துல இருந்து கேட்டுச்சு)

ஆனாலும் அன்னப்போஸ்டு அவன கொலவெறி ஆக்குற லெவெல்லதான் கேட்டுச்சு. அவன் அவ்வளவு அமைதியா இருந்ததே பெரிய ஆச்சர்யம், இந்த தகுதிக்கே அவனுக்கு டைட்டில் குடுக்கலாம். இத வெளிய சோமன் கிட்ட சொல்லி வருத்தப்பட்டான். சோமன் “அப்பிடியா சொன்னா அவ? சும்மாவா விட்ட அவள?”ன்னு சொம்படிச்சுட்டு இருந்தான். அன்னப்போஸ்டுக்கு தெரிஞ்சா சோமன சோடா மாதிரி உடைச்சு குடிச்சிரும்.

அடுத்து ஜித்து டூ நிஷா....

அடுத்த ஆகாவலி கால். இதுல ஜித்து கேட்டா உருப்படியான கேள்வி “நாமினேஷன்ல நானும், ரியோவும் இருந்தா யார நாமினேட் பண்ணுவ?”ன்னு கேட்டதுக்கு அது ரியோவ சொல்லல.....”விளையாட்டுக்கு கூட தம்பி நாமினேஷன் கிடையாது போல”ன்னு போற போக்குல லவ் பெட்டுக்கு லாக் வச்சுட்டு போனார்.

கால் செண்டர் டாஸ்க் முடிஞ்சது.....இப்ப அடுத்ததா முழுசா இந்த டாஸ்க்க பண்ணதா நெனைக்குறவனுங்க......ஒழுங்கா பண்ணலன்னு நெனைக்கிற ஆட்கள டிஸ்கஸ் பண்ணி 1ல இருந்து 13 வரைக்கும் வரைசைப்படி நிப்பாட்டனும்.

எடுத்ததும் ஒரு குழப்பம்....இதுக்கான அளவுகோல் என்னன்னு. முடிவா கடைசி வரை கால் பேசுன காலர், அடுத்து கடைசி வரை தாக்குப்பிடிச்ச ஊழியர்.

இதுல விவாதத்த ஆரம்பிக்கும்போது சனம் எதையோ சொல்ல வர....

சனம் : ஃபோன வச்சா நாமினேஷன்னு சொன்னீங்க....பாலா கால் பண்ணப்ப ஆரி வச்சாரே அவரு ஏண்டா நாமினேஷன் ஆகல....

ஜித்து : லூசே.....கொஞ்சம் அடுத்தவங்க பேசுறத கேளு....

சனம் : உங்களுக்கு நான் அடுத்தவதான.....நீங்க என் பேச்ச கேளுங்க....

ஜித்து : யம்மா தாயே உன் பேச்ச கேக்க முடியாது....சும்மா இரு

சனம் : ஹலோ நான் பேசுவேன்.....

ஜித்து :  சரி பேசு....

சனம் : நீங்க ஏன் சொல்றீங்க என்னய பேச சொல்லி....

ஜித்து : நீதான சொன்ன நான் பேசுவேன்னு ?

சனம் : ஹலோ நான் சொன்னது நான் பேசுவேன்னு....நீங்க பேசுவீங்கன்னு நான் சொல்லவே இல்ல....

ஜித்து : ஞே.....//

 இதொட முடிஞ்சது.....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)