பிக்பாஸ் – 4 : நாள் - 76 (19.12.20)
சாயம் போட்டுட்டு இருந்த சட்டை துணிமணிய சடார்னு பாதில பிடுங்கிட்டு வந்த மாதிரி ஆண்டவர் ஒரு கோட்டு சூட்டோட வந்தார். “போட்டின்றது பொதுவானது, அத நேர்மையோடவும், சுயமரியாதைய இழக்காமையும் விளையாடுறது எப்பிடின்னு இவனுங்களுக்கு 1567399785 தடவையா இன்னைக்கும் சொல்லிக் குடுப்போம் வாங்க. அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை வினைகளை பாத்துட்டு வாங்க நீங்க”ன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
76வது நாள்
“செல்ஃபி புள்ள”
பாட்டு அலாரம். யப்பா டேய் இந்த அன்னப்போஸ்டுக்கு ஒரு ரெண்டு ஸ்டெப்பு சொல்லிக்குடுத்தாதான்
என்னடா ? “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?” பாட்டுக்கும் கைய சைடுக்கா மடிச்சு....சைடுவாக்குல ரெண்டு தவ்வு
தவ்வி தலைய ஒரு பக்கமா ஆடுற அதே டான்ஸத்தான் ஆடும்போல. ஆரி ப்ரோ மீசையெல்லாம் முறுக்கி
விட்டுக்குட்டு ரொம்ப ஸ்டைலா ஆடுறேன்னு என்னமோ பண்ணாரு. கேபியும், ரம்யாவும் பின்னே
ஷிவானியும் வழக்கம் போல நல்லா ஆடுனாங்க. பில்டரு இந்த டான்ஸ் நேரத்துல மட்டும் புண்ணாக்கு
தின்ன புல்டாக்கு மாதிரி அங்குட்டும் இங்குட்டும் உலாத்துறானே தவிர....ஆடுற கணக்கு
இல்ல. எந்த பாட்டு போட்டாலும் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” ஸ்டெப்பு
போடுற லவ் பெட்டு ஃபேமிலி....இப்பவும் அதேதான் பண்ணிட்டு இருந்தானுங்க.
இந்த கக்கூஸ
ஒட்டுன அந்த லான் முக்கு, அன்னப்போஸ்டு – ஆரி வகையறாவுக்கு சொந்தம்னு போர்டு வைக்குற
அளவுக்கு அந்த இடத்த அதிகமா ஆக்கிரமிச்சுக்கிறது இந்த ரெண்டு பேருந்தான்.
அன்னப்போஸ்டு
: ரியோவுக்கு ஃபேன்ஸ் இருப்பாங்கன்னு தெரியும்....ஆனா இவ்வளவு ஃபேன்ஸா ?
ஆரி : ஃபேன்ஸ்
எல்லாருக்கும் இருக்காங்க.....எனக்கு கூட அதுவும்
பல சமுதாய முன்னேற்ற ....
அன்னப்போஸ்டு
: இல்ல அவ்வளவு ஃபேன்ஸ் இருந்தும் .....ஒரு நல்ல மனிதனா அவரால நடந்துக்க முடியல
ஆரி : ஆமா ஆமா.....நல்ல
மனிதன்னு பேரு வாங்கனும்னா நல்ல செயல்கள செஞ்சு...உதாரணமா நான் பண்ண கின்னஸ்....
அன்னப்போஸ்டு
: ஆரம்பத்துல தங்கச்சி....கொட்டாங்குச்சின்னு கொஞ்சிட்டுதான் இருந்தான்...ஆனா இப்ப
என்ன பேசுனாலும் எடுத்தெறிஞ்சு பேசுறான்
ஆரி : உறவுன்றது
உள்ள வேணும்னா இருக்கலாம் ஆனா இங்க வெளியன்றது....
அன்னப்போஸ்டு
: பிராப்ள குட்டி பில்டரே பொதுவுல சாரி கேக்குறான்.....ரியோலாம் எங்கிட்ட மன்னிப்பு
கேக்கலாம்ல ?
ஆரி : மன்னிக்க
தெரிஞ்சவன் மனுஷன்.....மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்.....
அன்னப்போஸ்டு
: சரி.....அப்ப நீங்களாவது ஒரு மன்னிப்ப கேட்டு பெரிய மனுஷனாகுறது ? நான் மன்னிக்கிற
மூட்லதான் இருக்கேன்...!
ஆரி : எதே மன்னிப்பா....?
தேவைதான் எனக்கு //
அன்னப்போஸ்டும்
ஆரியும் பேசிக்கும்போது கவனிச்சிருக்கீங்களா? “நீ யாருன்னு எனக்கு தெரியும்....நான்
யாருன்னு உனக்கு தெரியும்.... நம்ம ரெண்டு பேரும்
யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும்”ன்ற ரேஞ்சுலயேதான் பேசிக்குவாங்க. அத அப்பிடியே
அவனுங்களுக்கு தேவையானப்ப யூஸ் பண்ணிக்கவும் செய்வாங்க.
ஹெர்ஸெல்ஸ்
சாக்லேட் டாஸ்க். இத டாஸ்க்குன்னு சொன்னவன மாஸ்க் போடாம கொரொனா வார்டுக்குதான் அனுப்பனும்.
அவனுங்களுக்கும் புரியாம, நமக்கும் புரியாம எதையோ பண்ணானுங்க. முடிஞ்சது.
“இவனுங்கள மாத்துன
மாத்துல்ல கொஞ்சம் கொஞ்சம் மாறியிருக்குறா மாதிரி தெரியுது. அதையும் கொஞ்சம் பாராட்டுவோம்”னு
சொல்லி அகம் – அகம் போனார் ஆண்டவர்.
எப்பவும் போல
எந்திரிச்சு நின்னு “வணக்கம் சார்”னு சொல்ல, ஒரு கேப் விட்டு “ட்ரெஸ்ஸு நல்லா இருக்கு
சார்”னு சொல்ல “ யப்பா டேய் நல்ல வேளை கேட்டீங்க. ஒரு 2 பக்கத்துக்கு ஸ்கிரிப்ட் வேற
இருக்கு”ன்னு ஆரம்பிச்சு “இது கைத்தறி கோட்டு”ன்னு கொண்டு போயி அவரு அப்பா கதைய சொல்லி.....”எல்லாருக்கும்
பட்டு வேட்டி வாங்கிக் குடுக்குற கடமைக்கு வந்திருக்கேன் இப்ப”ன்னு முடிச்சார். “எல்லாரும்
கைத்தறி யூஸ் பண்ணுங்க”ன்னு கடைசியா மாடு தென்னைமரத்தில் கட்டப்பட்டது.
“அதிசயமா பஞ்சாயத்து
இல்லாத ஒரு பெஸ்ட் பெர்பார்மர் செலெக்ஷன பண்ணி முடிச்சிட்டீங்கடா ! சந்தோஷம். என்னதான்
ஒர்ஸ்டு பெர்பார்மர் வாங்கி ஜெயிலுக்கு போனாலும்....அங்க போயி பெஸ்ட் பெர்பார்ம் பண்ண
ஷிவானிக்கும், கேபிக்கும் வாழ்த்துகள்”னு சொன்னார்.
“சரி ஓப்பன்
நாமிநேஷன் எப்பிடி இருந்தது?”ன்னு வந்தார். எல்லாரும் ரொம்ப நல்லவனுங்க மாதிரி “ஆகா
அருமையா இருந்துச்சு....அதுவும் அந்த ரெண்டு பாட்டும், க்ளைமாக்ஸ் ஃபைட்டும் அடடடா....செம்ம”ன்ற
மாதிரி பூரிச்சிட்டு இருந்தானுங்க.
இப்ப ஆண்டவர்
அர்ச்சனாகிட்ட “ஆமா அர்ச்சனா அது என்னமோ நம்பர் கேமுன்னு கொறை சொல்லிட்டு இருந்தியே
? என்ன கணக்கு?”னு கேக்க, “அது ஒண்ணும் இல்லங்க....வார்டுன்னா மெம்பரு....மேக்ஸுன்னா
நம்பருன்னு சும்மா ஒரு ரைமிங்”னு சமாளிக்கப்பாக்க, “நான் சொல்லவா?”ன்னு கேட்டதும் “அது
வந்து அவனுங்க 3 பேரும் என்னய சொன்னதால அப்ப
அதுவும் நம்பர் கேமோன்னு ஒரு சின்ன சந்தேகம் அவ்வளவுதான்”னு சமாளிச்சுச்சு. “என்ன அனிதா
என்ன சொல்ற?”ன்னு கேட்டதுக்கு “நம்பர் கேம் உண்மைதான்....என்னய ரியோவும், சோமு, அர்ச்சனா
சொன்னாங்க”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே அது தப்புன்னு சொன்னாங்க 3 பேரும்.....”எது
இல்லயா ? என்னடா இப்பிடி சொல்றீங்க ? தப்பா சொல்லிட்டேனா? போச்சா ? ஆனாலும் இது நம்பர்
கேமுன்னு சொல்ல முடியாதா? இப்ப வேணும்னா சும்மா வச்சுக்கோங்க. இதுக்கு அடுத்த வாரம்
கேஸ் தரேன்”ற மாதிரி மூஞ்சி மாறிடுச்சு அன்னப்போஸ்டுக்கு. சட்டுனு உள்ள வந்த ஆரி “பில்டரு
கூடத்தான் அவனும், ஷிவானியும் மாறி மாறி நாமினேட் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தாங்க”ன்னு
போட்டுக்குடுத்தார். பின்ன அர்ச்சனா “அப்பிடி நாங்க யாராச்சும் பேசி வச்சு ஓட்டு போட்டதா
ஒரு ஃபூட்டேஜ் இருந்தா காமிக்க சொல்லுங்க பிக்பாஸன”ன்னு கெத்தா சொல்ல....பில்டரும்
அத ஒத்துக்கிட்டான்.
“இந்த தனித்திரு,
விழித்திரு, பசித்திருல....தனித்திரு மட்டும் இல்லவே இல்ல இந்த வீட்ல”ன்னு சொல்லிட்டு
இருக்கும்போதே அன்னப்போஸ்டு கையத்தூக்கி “ஏங்க புதுசா ஒண்ணு கண்டுபிடிச்சிருக்கேன்.
பில்டரு ஷிவானியயும், ஆஜீத்தையும் முன்னிலை படுத்தி விளையாடுறான்”னு சொல்ல, பில்டர்
அங்கயே அதுக்கு விளக்கம் குடுத்து அன்னப்போஸ்ட வெளக்கெண்னை குடிக்க வச்சான். “அன்னப்போஸ்டுக்கு
ஆபத்தா இதோ நானிருக்கிறேன்”னு வந்த ஆரி ப்ரோ “ஆனா ஒர்ஸ்டு பெர்பார்மருக்கு பில்டர்
அன்னப்போஸ்டு மேல வச்ச குற்றச்சாட்டு பெர்சனலா இருந்துச்சு...இப்பிடித்தான் போன ஜென்மத்துலையும்
என் மேல அவன் பெர்சனலா”ன்னு ஆரம்பிக்க.....”ஆனா அதுனால அன்னப்போஸ்டு உள்ள போகலையே
? கேஸ தள்ளுபடி பண்றேன்”னுட்டார்.
“டேய் தனித்தனியா
விளையாடுங்கன்றததான் நான் சுத்தி சுத்தி விக்ஸுன்னு எழுதிட்டு இருக்கேன்.....புரிஞ்சுக்கோங்கடா
ப்ளீஸ்”னு சொன்னார்.
“சரி கோழி டாஸ்க்க
வச்சு ஒரு டாஸ்க். இந்த வீட்ல யாரு கோழி கேரக்டர் ? யாரு நரி கேரக்டர் ?”நு கேக்க....அர்ச்சனா
கோழின்னும், பில்டர் பாஸிட்டிவ் நரின்னும், ஆரி கொஞ்சம் நெகடிவ் நரின்னும் தீர்ப்பாச்சு.
இந்த வோட்டிங்ல அன்னப்போஸ்டு ஆரிய “அவரு பழச கிளறி...கேமராவுக்காக அளந்து விடுறாரு
அதனால அவரு நரி”ன்னு சொன்னதும்.....ஆரி அன்னப்போஸ்ட நரின்னு சொல்லிட்டு “அது மீடியால
இருந்து வந்ததால டேக்டிக்ஸா விளையாடுது. ஃபுல்லா மனப்பாடம் பண்ணிட்டு வந்து அது தப்ப
வெளிய யாரையும் சொல்ல விடாம...அடுத்தவங்க தப்ப மட்டும் பெருசாக்குது”ன்னு பொட்டுல அடிச்ச
மாதிரி சொன்னார். ஆரியோட கணிப்பு துல்லியம். ஆரி மட்டும் இன்னும் சரியா பாயிண்ட் பிடிச்சு
பேச ஆரம்பிச்சார்னா ஆட்டம் இன்னும் களை கட்டும்.
“மாற்றம் ஒன்றே
மாறாதது....ஆனா பில்டரோட மாற்றம் நானே எதிர்பாராதது. அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு.....பில்டர
எனக்கு பிடிச்சிருக்கு”ன்னு பாடுனார்.
பிரேக்ல அர்ச்சனா
“அன்னப்போஸ்ட திட்டனுமா ஆயிரம் இருக்கு. அத விட்டுட்டு இவன் ஏன் மீடியாவ உள்ள இழுக்குறான்?
நானும் மீடியாதான ? இத அடுத்த வார சண்டைக்கு வச்சுக்குவோம்”னு சொன்னாங்க. “எது மீடியாவ
இழுத்தானா? சும்மாவா விட்ட அவன?”ன்னு சோமு ஒரு டீக்காக பொங்கிட்டு இருந்தான்.
“ஏண்டா ரூல்ஸ்ல
என்னதாண்டா பிரச்சனை?”ன்னு கேட்டார். “ரூல்ஸ் போடுறதுதான் பிரச்சனை. ரூல்ஸே போடலேன்னா
பிரச்சனை இல்ல பாருங்க”ன்ற மாதிரி பதில் சொல்லிட்டு இருந்தானுங்க. அப்பறம் அவரே ரூல்
புக்க வாசிச்சார். “இதுல குழப்பமே இல்லையேடா?”ன்னு கேக்க....”அதுனாலதான் குழப்பம் பண்ணோம்”னானுங்க.
இப்ப ஆரி ப்ரோ
தனது புரிதல் அபவுட் ரூல்ஸ்னு ஒரு 100 மார்க் கட்டுரைய எழுதுனார். “சார், கோழிய பிடிக்க
நரி....நரி ஒடைக்கும் முட்டை, கோழியப் பிடி, குஞ்சைப் பிடி, வாலை இழு, முடியலேன்னா
அழு, கொக்கரக்கோ, காது குடைய கோழி ரெக்கை, வைக்கப்போரு, ரம்பா கொழி பிடிக்கும் காட்சி,
நட்டுக்கோழியின் வகைகள்”னு இப்பிடியே ஒரு 20 நிமிஷம் போச்சு. அப்பறம் பாலா, அப்பறம்
ரம்யா இப்பிடியே போயிட்டே இருக்க ஆண்டவர் “எனக்கேவா...? இருங்கடா இப்பப் பாருங்க”ன்னு
சொல்லி “நேர்மைக்கும் தனி நபருக்கும் இடையே உள்ள தூரத்தை கடக்க தோழி போல கோழியை உபயோகித்து,
முட்டையாய் உடையும் மானிட நம்பிக்கையை பெயர்த்தெடுக்கும் பேத்தனத்திற்கு துணை போகாத
தகுதியும், திறமையும் இல்லாத உலகத்தில் நேர்மைக்கு மரியாதை இல்லேன்னா நான் கேப்பேன்”னு
முடிக்க. யாருக்கும் புரியல ஆனா இத அவரு அர்ச்சனாவப் பாத்து சொன்னதால அவங்களத்தான்
இவரு ஏதோ திட்டிட்டாருன்னு ஆரி ப்ரோ வேற கைதட்டுனாரு.
இது முடிஞ்சதும்
அர்ச்சனா ஆரிகிட்ட எந்திரிச்சு வந்து “என் பேர எதுக்கு சொல்றீங்க?”ன்னு கேட்டதும் வழக்கம்போல
ஆரி ப்ரோ அவரு ஸ்டைல்ல பேச ஆரம்பிச்சுட்டாரு. “அப்ப அன்னைக்கு நீங்க பண்ணது.....முந்தா
நேத்து முருகதாஸ் பண்ணது, ராத்திரில ரம்யா பண்ணது”ன்னு பஞ்சாயத்து ஆரம்பிக்க.....ரம்யா
உள்ள வரவும் அது இன்னும் சூடாச்சு....என்ன ஆச்சுன்னு தெரியல பில்டரும் உள்ள வந்து சவுண்டக்
குடுக்க....மத்தவனுங்க எல்லாம் அமைதியாக கடைசியா பில்டரு மட்டும் கத்திட்டு இருந்தான்.
அப்பறம் ஆரியும், பில்டரும் மாறி மாறி வஞ்சப்புகழ்ச்சியில வாதாடிக்கிட்டானுங்க.
ஆண்டவர் உள்ள
வந்து “இந்த டாஸ்க்குல இருந்த ஒரே நேர்மையான ஆளு ரியோதான். அதுவும் இந்த டாஸ்க்குல
மட்டும்”னு சொல்லிட்டு “சரி ஆரி மேல என்னதான் பிராது?”ன்னு கேக்க, மொத்த பேரும் பொங்கிட்டானுங்க.
“ஏண்டா நாரோட சேர்ந்த பூவும் நாறும்ன்ற மாதிரி.....நேர்மையில அட்லீஸ்ட் நேரளவு இருந்த
ஒரே ஆளு நீதான். இப்ப அதையும் கெடுத்துட்டு வந்து நிக்குற. அவனுங்க செஞ்சதால நீ செஞ்சது
சரியாகிடுமா ? இல்ல நீ செஞ்சதால அது நேர்மையான தப்பாகிடுமா ? தப்பு தப்புதான்”னு நேரடியாவே
ஆரிய குறிப்பிட்டார்.
“என்ன சோமு
மசாஜ்லாம் கரெக்டா பண்ணி விடுறாங்களா ? இப்ப உன் காஜி லெவெல் எப்பிடி இருக்கு? இளைச்ச
மாதிரி தெரியுது? தூக்கம் பத்தலையா? அர்ச்சனா உன்னய கால்ல போட்டு தூங்க வைக்குறதில்லையா?
ஹெல்த்த பாத்துக்கப்பா. அப்பிடியே இந்த ஷோவையும் நியாபகம் வச்சுக்கோ”ன்னு சோமன குத்துனார்.
அப்பறம் ரியோவையும், ஆரியையும் சேவ்டுன்னு சொன்னார். “எவிக்ட் யாருன்னு நாளைக்கு சொல்றேன்”னு
போயிட்டார்.
மொத்த வீடும்
ஒருமாதிரி வைப்ரேஷன்ல இருந்தானுங்க. ரம்யாகிட்டையும், பில்டர்கிட்டையும் அர்ச்சனா வந்து
“கடவுள் இருக்கான்ல குமாரு?”ன்னு ஆரி ப்ரோ வாங்கிக்கட்டிக்கிட்டத பத்தி பேசி....”உண்மை
ஒரு நாள் வெல்லும்”னு பாடிட்டே போனாங்க. அவங்க கதவ நோக்கி போனது குறியீடு போல.
Comments
Post a Comment