பிக்பாஸ் – 4 : நாள் - 65 (08.12.20)

 அன்பு : வணக்கம், நாந்தான் “அன்பு” பேசுறேன். நல்லா இருக்கீங்களா ? போன சீசன்ல அனாதையா இருந்த நான், இந்த சீசன்ல அன்னை அர்ச்சனா ஆதரவுல அவங்களோட ஸ்டார்டஜியா, அவங்க ஆயுதமா, அவங்க குடும்பத்து ஆளுகளுக்கு செல்லமா இருக்கேன். அவங்க பெட்டுக்கு கூட என் பேரதான்  லவ் பெட்டுன்னு வச்சிருக்காங்கன்னா பாருங்களேன். 59வது நாள் மட்டும் கொஞ்சம் மெடிக்கல் லீவ்ல போயிருந்தேன். மத்தபடி அன்னை கூட நல்லாவே சந்தோஷமா இருக்கேன்.........

65வது நாள்

“பூம் பூம் ரோபோடா” பாட்டு அலாரம். அடுத்து வரப்போற டாஸ்க்குக்கான குறியீடு பாட்டாம். அன்னப்போஸ்டு ஆடும்போது கண்ண இன்னும் சின்னதாக்கி ஆடுறது எதுக்குன்னு தெரியல....”அப்பிடி ஆடும் போது நீ  க்யூட்டா இருக்க கண்ணுக்குட்டி”ன்னு காளை மாடு சொல்லியிருக்கும் போல....கண்ண மூடுன நேரத்துல வேற எதையாச்சும் பாக்கலாம்ன்ற காரணமா கூட இருக்கலாம். இது அத மனசுல வச்சுட்டு இப்பிடியெல்லாம் செய்யுது போல.....இப்ப கேப்டன் வேற ! நமக்கு ஏன் வம்பு....?!  ஆரி, அன்னப்போஸ்டு, ரம்யா 3 பேரும் ஆடுனாங்க.

அன்பு : அன்னை இப்பிடி காலையில டாஸ்க்ல, அலாரம் பாட்டுல கலந்துக்குறப்பயெல்லாம் எனக்கு செம்ம ஜாலியா இருக்கும். சோமன தலைய தடவி குடுக்குறது, ஆஜீத்துக்கு மம் மம் ஊட்டி விடுறது, ஜித்து பாய் துணிய எல்லாம் தொவைக்க எடுத்துப் போடுறது, கேபிக்கு நல்லா மேக்கப் போட்டு விடுறதுன்னு......எனக்கே கண்ணீர் வந்துரும்.....சச் எ நைஸ் அன்னை !

இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க். 2 டீமா பிரியனும். ஒரு டீம் மனிதர்கள் அதுக்கு பில்டர் தலைவர். இன்னொரு டீம் ரோபோட் அதுக்கு அர்ச்சனா தலைவி. மனிதர்கள் டீம் ஒரு பஸ்ஸர் டூ இன்னொரு பஸ்ஸர் ஏதாவது 2 ரோபோட்ட டார்கெட் பண்ணி அதுகிட்ட இருந்து சிரிப்பு, கோவம், சோகம் இதுல 2 உணர்வுகள் வெளிய கொண்டு வரனும். அந்த சமயம் மத்த ரோபோட்டுகள வேலை வாங்கனும். ஒவ்வொரு ரோபோட்டுக்கும் 2 லைஃப் லைன் ரெண்டும் போச்சுன்னா அது மனிதர்களாகிடும். இதான் டாஸ்க் சுருக்கம்.

பில்டர் ரொம்பத் தெளிவா டீம் எடுத்தான்.

பாலா – ரியோ, அன்னப்போஸ்டு, ஆரி, நிஷா, ஆஜீத்

அர்ச்சனா – ஷிவானி, கேபி, ஜித்து, சோமு, ரம்யா

ரியோவும், நிஷாவும் அன்னை டீமுக்கு எதிர் டீம்ல இருக்காங்க.

அன்பு : என்ன என் கை காலெல்லாம் வலிக்குது ? அன்னையே.....அன்னையே ரொம்ப முறுக்குறீங்க....எனக்கு மேலெல்லாம் வலி....என்னாச்சு ? ஓ....நம்ம ஆளுக ரெண்டு அங்குட்டு போயிட்டானுங்களா ? விடுங்க நாந்தான் உங்க கூட இருக்கேனே....ஆயுதமா மாறிக்கிறேன்....

ஆரம்பத்துல பில்டர் டீம் 6 பேரையும் டார்கெட் பண்ணி சொதப்பிட்டானுங்க. அப்பறம் பிக்கி கூப்ட்டு வஞ்சிருப்பாரு போல.....சோ அத கரெக்ட் பண்ணி ரெண்டு ரெண்டு பேரையா டார்கெட் பண்னானுங்க. இவனுங்க முக்கிய டார்கெட்டா அன்னையும், ஜித்து பாயும் இருக்க....மத்த ரோபோட்டெல்லாம் முக்காத டார்கெட்டா இருந்துச்சு.

முட்டைய முகத்துல பூசி அத மோந்து பாக்க வைக்கிறது...அத நிஷாவ தூக்க சொல்றதுன்னு அன்னைய வச்சு செஞ்சுட்டு இருந்தானுங்க.

அன்பு : என்ன அன்னை....நம்ம நிஷாவ கொண்டியே உன் முகத்துல முட்டையடிக்கிறானுங்க ? ஆனா இதுக்கெல்லாம் அசருற ஆளா நீ.....நான் வேற உன் ஆயுதமா இருக்கேன்......ஆமா என்ன என் கழுத்து இறுகுது....இந்தா அன்னை....என் கழுத்த ஏன் நெறிக்கிற....ஏய் இந்தாம்மா.....

நிஷா இந்த ஷோல முதன் முறையா இன்னைக்குதான் கேம் விளையாடலாம்ன்ற ஆர்வத்துல அர்ச்சனாவ டார்கெட் பண்ணி அத சோகப்பட வைக்கலாம்ன்ற யோசனையில அவங்க அப்பாவ பத்தி பேச ஆரம்பிச்சது. இடைல இடைல அர்ச்சனா எக்ஸ்பிரெஷன் குடுத்ததா பில்டர் கிட்ட சொல்லிட்டே இருக்க....அவன் லைஃப் லைன எடுத்திட்டு, “தப்புன்னா பிக்பாஸ் சொல்லுவார்”னு சொன்னான்.

இந்த சம்பவத்துக்கு இடையில நிஷா தனியா கக்குஊஸ்ல உக்காந்து நிஷாகிட்ட மானசீகமா மன்னிப்பு கேட்டு அழுதுட்டு இருந்தாங்க.

ரியோ அவரோட ராஜதந்திரமா ஜித்து பாய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி பட்டத்த வச்சு கோவப்பட வைக்க முயற்சி பண்ணிட்டு இருந்தார்....நிஷாவ வச்சு ஒரு பிளான் பண்ணி அதுவும் ஃபிளாப் ஆக....ஜித்து பாய் குடுத்த பல்பால வீட்டுக்கு இன்னும் அதிக பிரகாசம் கிடைச்சது

அன்பு : என்ன அன்னையே .....ஒரே கொதிச்சலா இருக்கே....! எரிச்சல் தாங்கல....பொதுவா நான் இருக்குற இடத்துல இப்பிடியெல்லாம் இருக்காதே....! அன்னையே.....அம்மா.....இந்தாம்மா....ம்மோவ்....! ஆத்தீ இது ரண கொடூரமா மாறிட்டு இருக்குடா.....என்னய காப்பாத்துங்கடா யாராச்சும்......

ஒரு கட்டத்துல அன்னை செயலிழந்து போன ரோபோட்டுன்னு சொன்னதும் ரியோ, பில்டரு, நிஷா 3 பேரையும் கழுவி ஊத்த ஆரம்பிச்சுட்டாங்க. ரியோவ நேர்மையா விளையாடலன்னு சொல்லி, பில்டர பிடிவாதக்காரன்னு சொல்லி ஒரே ரகளை.

நிஷா அவங்கப்பாவ பத்தி பேசுனதுக்கு மொத்தமா வெடிச்சு கிளம்புனாங்க. ஆனா அதவிட தன் லவ் பெட்டு ஆளுக அவங்களுக்கு எதிரா களமாடுன கோவமோ இல்ல வருத்தமோதான் வெளிய வந்தா மாதிரி தெரியுது......

இன்னைக்கு உண்மையிலயே நாதஸ் திருந்துனது தெரிஞ்சது.....நம்ம பில்டருதான். லைஃப் லைன திருப்பி குடுத்ததாகட்டும், ரியோ கூட ஒவ்வொரு கட்டத்துலையும் டிஸ்கஸ் பண்ணதாகட்டும், அர்ச்சனாவ கடைசியா சமாதானப் படுத்த முயற்சி பண்ணதாகட்டும்....பையன் புடிச்சுட்டான்.

இந்தக் கூட்டத்துக்கு தலைவின்னு ஒண்ணு ஜெயிச்சு வினோத ஒலி எழுப்பிட்டு திரிஞ்சிச்சு அதக் காணோம். தேடாதீங்க....அப்பிடியே போகட்டும்.

அன்னையோட ஆக்ரோஷத்த எதிரிகொண்டு பேசிட்டு இருந்தப்ப நிஷா கையால பின்னடி நின்ன ஷிவானிக்கு ஒரு குத்து பார்சல் கிடைச்சது ஆறுதல்.

அன்னையின் ஆர்ப்பாட்டத்தோட முடிஞ்சிருக்கு.....பாப்போம்.

டாக்டர் : என்ன அன்பு என்னாச்சு ?

அன்பு : டாக்கி....! அந்தம்மாதான் எனக்கு மொத்தமாவே சூப்பர் ஸ்டாக்கிஸ்டுன்னு சொன்னானுங்க. நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.....! அன்னை தெரசாவுக்கு அப்பறம் இவங்க கூடதான் எனக்கு மேட்சிங் நல்லா இருக்குன்னு சொன்னானுங்க. நான் ஜெயிப்பேன்.....நான் ஜெயிப்பேன்னு சொல்லி.....என்னய ஜெயிக்க வைக்கிறேன்னுல்லாம் அன்னைக்கு நிஷாகிட்ட சொன்னப்போ....சில்லறையெல்லாம் விட்டெறிஞ்சேன்.....!

டாக்டர் : அப்பறம் என்ன பிரச்சனை ?

அன்பு : யோவ் டாக்கி.....குத்துயிரும் கொல உயிருமா வந்து விழுந்து கிடக்கேன்....என்ன பிரச்சனைன்னா கேக்குற ? இன்னைக்கு என் கழுத்த திருவி போட்டதே அதான்யா.....! அவங்க வீட்டு ஆளுகள கூட சகிச்சுக்க முடியாம என்னய போட்டு பொரட்டிருச்சு......எப்பிடியாச்சும் என்னய காப்பாத்துங்க டாக்கி......

டாக்டர் : முயற்சி பண்றேன்....நீ வேணும்னா அன்னப்போஸ்டுகிட்ட போறியா ?

கடைசில அந்த அன்பு செத்தே போச்சு........!//


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)