பிக்பாஸ் – 4 : நாள் - 68 (11.12.20)

 67வது நாள் தொடர்ச்சி.....

தில்லானா வாசிக்கத் தெரியாதுன்னு சொல்லு; முடியாதுன்னு சொல்லாத :

அதிகார மையத்த கேள்வி கேட்டதால அறைக்குள்ள தள்ளப்பட்ட அன்னப்போஸ்டு அம்பது லிட்டர் பாய்லர் மாதிரி கொதிச்சல்ல இருந்துச்சு. பொந்தினில் வைத்த அக்கினி குஞ்சு போல போர்வைய போத்திட்டு படுத்திருக்க, ரியோ அத மனு போட்டு பாக்க வந்தான்.

ரியோ : என்ன அன்னப்போஸ்டு தூங்குறியா ?

அன்னப்போஸ்டு : நான் என்னமோ பண்றேன் உனக்கென்ன வேணும்?

ரியோ : பேசனும்....

அன்னப்போஸ்டு : அவ்ளோதான....பேசிருவோம் ! எங்கிட்ட போயி பேசலாமான்னு கேக்குறியே....? வா வா

ரியோ : அதாகப்பட்டது நான் உன்னய ஒர்ஸ்டு

அன்னப்போஸ்டு : பேசனும்னு சொல்லிட்டு நீ பேசுனா எப்பிடி ? இரு......(தொண்டைய செருமிட்டு....) இப்பப் பாத்தேன்னா நான் செஞ்சதும் நிஷா செஞ்சதும் ஒரே தப்புதான். ஆனா நிஷா உனக்கு பூ.....நான் மட்டும்  புய்ப்பம்.  அது என்ன கேப்டன் டாஸ்க்குல ஃபைனலுக்கு வந்த நிஷா பெஸ்ட் பெர்பார்மராம்.....ஃபைனல்ல ஜெயிச்சு கேப்டனான நான் ஒர்ஸ்ட் பெர்பார்மராம். என்னங்கடா இது பித்தலாட்டம்.....

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ரியோ : (MV : மோட்டர் போட்டாங்க போலருக்கு) அப்பிடி இல்ல....அவ செஞ்சது எனக்கு பிடிக்கல....! நீ செஞ்சது சுவாரஸ்யம் குறைவு அவ்வளவுதான்

அன்னப்போஸ்டு : டேய் மாங்கா....பிடிக்கலன்னு சொன்னா ஜெயிலுக்கு அனுப்ப மாட்டானுங்க.....சுவாரஸ்யம் குறைவுன்னாதான் ஜெயில் பாக்கனும்...இந்தா உக்காந்திருக்கேன் பாரு....

ரியோ : அதாவது அவ பிடிக்காத மாதிரி சுவாரஸ்யமா பண்ணா....ஆனா நீ பிடிச்சமாதிரி சுவாரஸ்யமா பண்ணல....புரியுதா...ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அன்னப்போஸ்டு : (MV : பக்கத்து செட்டுல இருந்து சவுண்டு வருது போல.....) ஆனாலும் உங்க லவ் பேட்டு அநியாயமாத்தாண்டா நியாயம் பேசுறீங்க....! அதெப்பிடி சலிக்காம குரூப்பிஸம் பண்றீங்க?

ரியோ : நோ ஐயாம் நாட்....! வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங் அபோட் மீ அண்ட் மை குரூப் ? மீ நோ குரூப்பிஸம்..... ஒன்லி கம்யூ”நிஷா”ம். வீ ப்ளே சிங்கிள். நாட் குரூப் அண்ட் ப்ளே. ஒன்லி மசாஜ் அண்ட் ஃபுட் குரூப் வீ. நோ டாக்கிங் குரூப் குரூப். வீ ஆர் இன் நேஷனல் ஜியாக்ரபிக் சேனல். அண்டர்ஸ்டேண்ட்?

அன்னப்போஸ்டு : சரி சரி.... தம் கட்டாத....காபி கொட்டிரப் போகுது ! எங்க உன்னய தனியா விட்டு இவ்ளோ நேரமாச்சுன்னு உங்க தாய்க்கெழவி வரணுமே....?....இந்தா வந்தாச்சுல்ல

சோமன் துணையோட அர்ச்சனா வர....

அன்னப்போஸ்டு : இந்தம்மா அழுது மொத்த கேமையும் நாசமத்து போக வச்சுச்சு....அதப் போயி பெஸ்டு பர்பார்மர்னு சொல்ற....! அதுக்கு காரணமான நிஷாவையும் பெஸ்டுன்னு சொல்றீங்க ?

அர்ச்சனா : யம்மா நான் அழுதப்பறமும் கேம் இருந்துச்சு....

அன்னப்போஸ்டு : நீ அழுததே கேமாத்தான் இருந்துச்சு.....

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ரம்யா : டேய்....சுண்டல் குழம்ப எவனும் டம்ளர்ல ஊத்திக் குடிச்சீங்களா ? என்னடா அப்பதப் பிடிச்சு சவுண்டு ?

பில்டரு : அதெல்லாம் இல்ல....! இங்க ஒரு ஜந்து தூங்கிட்டு இருக்கு....! 10 நிமிஷம் லேட்டா பொறந்திருந்தா இந்தாளு பனிக்கரடியா பொறந்திருப்பான்....இந்தத் தூக்கம் தூங்குறானப்பா....! அதுவும் அன்னப்போஸ்டும், ரியோவும் பேசிக்கிறப்ப....! இவன் இன்னும் சாப்புடுறப்ப மட்டுந்தான் தூங்காம இருக்கான்......//

அர்ச்சனா டீமுக்கு பலத்த சேதாரம். நிஷால்லாம் வெளியவே வரல. வெளிய போன ரியோ போன மாதிரி திரும்பி வரல. சோமனுக்கு அவசரத்துக்குக் கூட எதுவும் வரல. ஆனாலும் இந்த சோமன் இருக்கானே.....பொறை போட்டு வளத்தா கூட இப்பிடி இருக்க முடியாது.....சோமனுக்கு வால் மட்டுந்தான் இல்ல....ஆட்ட !

அன்னப்போஸ்டையும் ஜித்துவையும் ரிலீஸ் பண்ணானுங்க. “இப்ப எதுக்கு எழுப்பி விட்டானுங்க?”ன்ற மாதிரியே ஜித்து பாய் வெளிய வந்தார்.

அமாவாசையா, பவுர்ணமியான்னு தெரியல சாத்தூர் சரளமா ரைமிங் வேர்டுகள் சொல்லி விளையாண்டுகிட்டு இருந்துச்சு. நிஷாவும் கூட சேர்ந்துக்க கொஞ்ச நேரம் ஓடுச்சு. “இதயெல்லாம் பாத்துட்டு தகுதியான ஆளுக்கு ஓட்டுப் போடுங்க”ன்னு நிஷா குறிச்சு கேமரால மக்களப் பாத்து ரியோ சொன்னது காமெடியா உண்மைய சொன்ன மாதிரிதான் இருந்துச்சு.

லைட்ஸ் ஆஃப்.....

68வது நாள்....

தர்பார் தீம் மீசிக். இவனுங்க எந்திரிச்சு வரதுக்குள்ள பாட்டே முடிஞ்சு போச்சு....!

பில்டரு : நேரமாச்சு குளிக்கப் போகனும்...

அன்னப்போஸ்ட் : எப்பிடி நேரமாச்சுன்னு யோசிச்சியா ? எல்லாம் அவனுங்க குரூப்பிஸம் காரணமாத்தான்

பில்டரு : இது கூடவா ? நீ உள்ள போனதுக்கு வேணும்னா அப்பிடி சொல்லலாம்....

அன்னப்போஸ்டு : இங்க வா....! அவனுங்க போடுற மொத காஃபிய யாருக்கு குடுக்குறானுங்க ? சோமனுக்கு....! ரெண்டாவது நிஷாவுக்கு....இப்பிடியே அவங்க ஆளுகளுக்கே வரிசையா குடுத்துட்டு உனக்கு வரப்ப அரை மணி நேரமாகிடுது.....அரை மணிநேரத்துக்கு முன்னமே குடுத்திருந்தா நீ சீக்கிரமே குளிச்சிருப்பேல்ல....அப்ப நீ லேட்டா குளிக்கப் போறதுக்கு குரூபிஸம் காரணமா இல்லையா ?

பில்டரு : அட...ஆமா ! இது தெரியாம நாந்தான் சோம்பேறின்னு தப்பா நெனச்சுட்டேனேப்பா.....//

இங்குட்டு லவ் பெட்டு அவனுங்களோட இன்னைக்கு  பெர்பார்மென்ஸ ஸ்டார்ட் பண்னானுங்க.....!

நிஷா : என்னய பெஸ்ட் பெர்பார்மர்னு சொல்லி....அதனால அன்னப்போஸ்டு உன்னய காயப்படுத்தி....நீ காயப்பட்டு.....! சாரிடா

ரியோ : நானும் இதுவரை உன்னய கேப்டன் டாஸ்க்குல நாமினேட் பண்னதில்ல.....சாரி

அர்ச்சனா : உங்க பாசத்த நான் குறைவா எடை போட்டுட்டேன்....சாரிடா

சோமன் : (MV : அய்யய்யோ.....இப்ப நான் எதுக்காச்சும் சாரி கேட்டாகனுமே) நானும் சாரி....

3 பேரும் : ஏன் ?

சோமன் : (MV : என்ன சொல்லி சமாளிக்குறது ?....) தப்பு பண்ணா மட்டுந்தான் சாரி கேக்கனும்னு சொல்லியா வளர்த்தீங்க என்னய ? பாசத்துக்கு முன்னாடி சாரி என்ன.....பிளவுஸ் என்ன ? வேணும்னா சாரி கேட்டதுக்கு சாரி வச்சுக்கோங்க.....//

4 பேரும் கண்ணீர் கசிய கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க......”அன்பாலே உருவாகும் வீடு”ன்னு ஆஜீத் தள்ளி நின்னு பாடிட்டு இருந்தான்.......

ஹாட்ஸ்டார் ரிலீஸ் ட்ரிப்பிள்ஸ் படத்துக்கு ப்ரமோஷன் பண்ணி...ட்ரெய்லர் போட்டானுங்க.

அப்பறம் 3 பேரா ஒரு டீம் பிரிஞ்சு, இவ்வளவு நாள் உள்ள நடந்தத வச்சு ஒரு கதை சொல்லனும்.

எப்பவும் போல மொக்கை டாஸ்க். இதுல நடந்த நன்மைகள்னு பாத்தா....லவ் பெட்டு வேல் பிரதர்ஸ்னு ஒரு குரூப் ஆரம்பிச்சத ரியோவே ஒத்துக்கிட்டதுதான். கூடவே ஆரி, பில்டர், அன்னப்போஸ்டு 3 பேரும் சேர்ந்து அர்ச்சனா உள்ள வந்தப்ப குடுத்த பட்டத்த குத்தி பேசுனதும் சிறப்பு.

“நைட்டுக்கு சமைக்க வேணாம். இருக்குற சாப்பாடுல தண்ணிய ஊத்திட்டு நான் அனுப்புற சாப்பாட சாப்புடுங்க”ன்னு சொன்னாப்ல பிக்கி.

வெளிய அர்ச்சனா , ரம்யா, நிஷா 3 பேரும் பாட்டுப்பாடி ஆரிய ஓட்டிட்டு இருந்தாங்க....

இருந்திருந்தாப்ல ஷிவானி அழுக....அர்ச்சனா “அடடா பெட்டுக்கு ஒரு புது அட்மிஷன் கிடைக்கும்போல”ன்னு அத நைஸா தள்ளிட்டுப் போனத ஊரே பாக்க....! “பில்டர் என்ன கருமம்னு தெரியலையே?”ன்னு முழிக்க....ரம்யாவோ “ஆகா அர்ச்சனா அட்மிஷனுக்கு வழி பாக்குது....தடுப்போம்”னு சொல்லி அதுவும் அவனுங்க கூட வலுக்கட்டாயமா சேர்ந்துக்கிச்சு. பில்டரு பதறி “என்ன புது கேஸா எம்மேல?”ன்னு கேக்க....”இல்ல”ன்னு சொல்லிருச்சு ஷிவானி.

கேப்டன் டாஸ்க். இவனுங்க போட்டோ ஒட்டுன கலைச்சுப்போட்ட க்யூபுகள ஒண்ணு சேக்கனும்னு சொல்ல “மறுபடியும் க்யூபா?”ன்னு பில்டரு கேட்டது பாவமா இருந்துச்சு.

பில்டர் பட படன்னு சேத்து முடிக்க, 2 க்யூபிழையில ரம்யா தோக்க, நிஷாக்கு அது மூஞ்சியே மறந்துருச்சு போல....எல்லா க்யூபையும் பின்னாடி முன்னாடியா சேத்துட்டு இருந்துச்சு.

பில்டர் வின்னுன்னு அறிவிச்சானுங்க.

ஆனா உள்ள வந்த பில்டரு....”உங்கக்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும். அத சொல்லாம விட்டா என் மனசாட்சி என்னய கொன்னுரும்” அப்டின்னு பில்டப்பா சொல்ல “ஷிவானி அழுததுக்கு வேற காரணம் இருக்கு போல”ன்னு எல்லாரும் நினைக்க, “ஒரு க்யூப மாத்தி வச்சுருக்கேன். அத கடைசியாதான் கவனிச்சேன். சோ ரம்யாதான் தகுதியான ஆளு”ன்னு சொல்லி. நேர்மையின் புதிய அடையாளாம மாறுன தருணம் சிறப்பு. இனி எல்லா ஹமாம் சோப்பும் அவனோடது.

மொத்த வீடுமே அவனுக்கு சல்யூட் அடிச்சானுங்க. “இப்பிடியெல்லாம் உன்னால ஸ்கோர் பண்ணவே முடியாதா ? எவ்வளவு முக்குனாலும் 3 எபிசோட் கூட ஸ்கோர் பண்ண முடியலயே?”ன்னு அர்ச்சனா ரியோவ பாத்தாங்க. பிக்கியே கூட அவனுக்கு சல்யூட் அடிச்சது அல்டிமேட்.

ஆனா பில்டருக்கோ “ இவனுங்க வேற....! சல்யூட்டு, சர்க்யூட்டுன்னு ! அடுத்த குறும்படத்துக்கு ப்ளான் பண்ணித்தான் இந்த வலைய விரிச்சிருப்பானுங்க. கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டேன் அவ்வளவுதான்”னு மைண்ட்ல ஓடியிருக்கலாம்.

டீம் பிரிச்சாங்க ரம்யா. பில்டரு வாண்டடா கிச்சன் டீமுக்கு போக...கடைசில குரூப்புல டூப்பு மாதிரி பில்டரு மட்டும் வெளியாளா இருந்தான் அந்த டீம்ல. கேபி அடம்பிடிச்சு கிச்சன் டீமுக்கு போனது அப்பவே ஆரிக்கு வருத்தம்.

வெளிய வந்ததும் ஆரி ப்ரோ, பில்டரு, அன்னப்போஸ்டு

ஆரி : கக்கூஸ் கழுவுறதுல வெளிய தெரியமாட்டோம்ன்றதால, வெஸெல் வாஷிங்க்ல டான்ஸாட முடியாதுன்றதால, ஹவுஸ் கீப்பிங்க்ல குனிஞ்சு நிமிரனும்ன்றதால, கேபிய கிச்சன்ல போட்டு ஸ்கோர் பண்ண வைக்குறாங்கப்பா

அனிதா : அப்ப இது குரூப்பிஸம் தான ?

பில்டரு : டேய்...உங்களுக்கு இந்த வீட்டு நியாபகம், வேலை நியாபகம் இதெல்லாம் வரதா ?  எப்பப் பாத்தாலும் இதே நெனப்புலயாடா இருப்பீங்க ? //

உள்ள அர்ச்சனா, ரியோ, சோமன் 3 பேரும் நிஷா தோல்வியப் பத்தி பெனாத்திட்டு இருந்தானுங்க. “இந்த லூசுக்கு அவ மூஞ்சியவே ஒழுங்கா அடுக்கத் தெரியல.....இவள வச்சு இனி ஒண்ணும் பண்ண முடியாது....எப்பிடியும் இந்த வாரம் நமக்கு ஒரு விக்கெட்டு போயிரும்”ன்னு பொலம்பிட்டு இருந்தானுங்க.

பில்டருக்கு திடீர்னு ஞானோதயம் வந்து அன்னப்போஸ்டுகிட்ட “கிச்சன் டீம்ல இருந்து வெளிய வரணும். மொத்தமா சேர்ந்து கேபிக்காக என்னய ஒர்ஸ்டு பெர்பார்மனு அடுத்த வாரத்துக்கு இப்பவே ப்ளான் பண்ணியிருப்பானுங்க”ன்னு அறிவா பேசுனான்.

அப்பறம் சாப்பாடு வந்துச்சு. ஆலாப் பறந்து அள்ளி அமுக்குனானுங்க.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)