பிக்பாஸ் – 4 : நாள் - 58 (01.12.20)

 58வது நாள்

இந்த சீசன் அவ்வளவுதான். இதுக்கு மேல இந்த ஷோல சுவாரஸ்யமெல்லாம் எதிர்பாக்கவே முடியாது. செம்ம மொக்கையான கிரியேட்டிவ் டீம் இந்த தடவை. நல்ல கண்டெஸ்டண்டுகள சும்மா கிளாடியேட்டர் பட அடிமை வீரர்கள் மாதிரி சண்டை போட விட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க. டாஸ்க்காச்சும் சுவாரஸ்யமா இருக்குமான்னு பாத்தா...அதுக்கும் வழியில்ல. இதுக்கு மேல ஒருத்தன உள்ள இறக்குனா எக்ஸ்ட்ரா ஒரு கை அரிசி செலவாகுறதத் தவிர வேற ஒண்ணும் நடக்கப் போறாதில்ல.....! இந்த வாரமும் அதே கால் செண்டர் டாஸ்க்க தூக்கிட்டு வந்துட்டானுங்க. இந்த வாரம் வரைக்கும் பாப்போம் அப்பறமும் சரியா இல்லேன்னா.....செல்ஃப் நாமினேட் பண்ணிக்கிட்டு.....செல்ஃப் எலிமினேட் ஆகிக்க வேண்டியதுதான்.....!

“ஒத்தையடி பாதையில” பாட்டு அலாரம். அதிரடி பாட்டுக்கே “ஆ”ன்னு வாயப்பொளந்துட்டு தூங்குற நம்ம ஆளுகளுக்கு இந்தப் பாட்ட போட்டா....அவனுங்க “ஆகா”ன்னு வாயப் பொளந்துட்டு இருந்தானுங்க. “கரெக்டா தினமும் எழுப்பி ரெண்டு கையாலையும் குட் மார்னிங் சொன்னா கிச்சன்ல திருடி கிஸ்மிஸ் பழம் தருவேன்”னு சொன்ன மாதிரி ரொம்பப் பொறுப்பா பில்டர எழுப்பி ரெண்டு கையாலையும் குட் மார்னிங் சொல்லுச்சு ஷிவானி ! ஆனா பாருங்க இதுக்கு ஏன் பில்டர் பேர சொல்லி இத நாமினேட் பண்றானுங்கன்னு தெரியலையாம்.....!

கால் செண்டர் டாஸ்க்....! போன வாரம் காலரா இருந்தவனுங்க இந்த வாரம் கால் செண்டர் ஆளுகளா மாறுனானுங்க. நிஷாவுக்கும், அன்னைக்கும் பேண்ட், ஷர்ட் குடுக்காம விட்டது குலோத்துங்க சோழன் செஞ்ச புண்ணியம்.

ஆஜீத் டூ அர்ச்சனா

ப்ரோமோல கேட்ட எந்த நல்ல கேள்வியையும் இவனுங்க காட்டல. “லவ் பெட்டுல இதுவரை யார நாமினேட் பண்ணியிருக்கீங்க ? வெளிய அனுப்புறதுக்கு எல்லாருக்கும் ஒரு காரணம் சொல்லுங்க”ன்னு கேட்டதுதான் தாமசம்......செம்பரம்பாக்கம் ஏரிய தொறந்து விட்ட மாதிரி .....சும்மா கொட்டித் தீத்துட்டாங்க. அப்பறம் அவங்களே ஃபோன கட் பண்ணிக்கிட்டாங்க.

இதுனால எதும் பிரச்சனைய எதிர்பாத்தாங்க போல.....ஆன அதுக்கு யாரும் தயாராயில்ல....!

ஆடுத்து கேபி டூ சோமு.....! இவனுங்களுக்குள்ள பேசிக்கிட்டாலே இரிட்டேட்டிங்கா இருக்கு.....

“இந்த வார நாமினேட் ஆனவங்களப் பத்தி நல்லதா நாலு சொல்லு”ன்னு சொன்னதும் கடகடன்னு சொன்னான். இந்த வீட்ல நெறைய தடவ கோவப்பட்டேன்னு சொன்னான். எப்படான்னு யோசிச்சுப் பாத்தப்ப கேபி சாக்லேட் குடுக்கலன்னு ஒரு தடவ, நிஷா இவன கூப்டாம சாப்பிட போயிருச்சு அதனால, ரியோ இவனுக்கு முன்ன காலையில எந்திரிச்சதுக்கு, அன்னை இவனுக்கு மொதல சுத்திப்போடலன்னு இந்த மாதிரி முக்கியமான பெரும்பிரச்சனையில எல்லாம் இவன் கொடுங்கோபம் கொண்டிருக்கான்.....! என்னா மனுஷன்யா.....! “பின்ன நீ எதுக்கு இங்க வந்த?”ன்னு கேட்டதுக்கு, “இடையில ஒரு 10 வருஷம் ஒண்ணுமே பண்ணாம இருந்துட்டேன்....சோ இங்க வந்து என்னய மறுபடி ப்ரூவ் பண்ண வந்தேன்”னான். ஆனா அவன் இங்கயும் சும்மாதான் இருக்கான்னு யாருதான் சொல்றது ?

வெளிய வந்து கேபி “சொன்னதுக்கு ஏதும் கோச்சுக்கிட்டியா ? மூஞ்சி ஏன் மோஷன் போற மாதிரி இருக்கு?”ன்னு கேட்டதுக்கு.....சோமு சோக கீதம் வாசிச்சான். “ரம்யான்னு சொன்னப்ப மட்டும் ரயில் நீளத்துக்கு பதில் வந்துச்சே”ன்னு காலாய்ச்சுட்டு இருந்தானுங்க.....

பில்டர் டூ ஆரி....

ஆளவந்தார் அங்கவஸ்திரம் மாதிரி 5 முழ நீளத்துக்கு ஒரு லிஸ்டோட போனான். ஆனா அங்க அவன் கேள்வியெல்லாம் கேக்கல....இதுவரைக்கும் ரெண்டு பேருக்குள்ள இருந்த பிரச்சனைக்கு அவன் புரிஞ்சுக்கிட்ட காரணம் என்னன்னு மட்டும் விளக்கிட்டு.....ஆரி ப்ரோ விளக்கம் குடுக்க கடைசியா டைம் குடுக்குறேன்னு சொல்லி ஏமாத்திட்டு ஃபோன வச்சுட்டு 5 ஸ்டாரும் குடுத்துட்டு போயிட்டான். உண்மையாவே இது ஒரு ஸ்மார்ட் மூவ்.....இத நம்ம சொன்னா திட்டுவானுங்க.....ஆரி ப்ரோவுமே இதத்தான் சொன்னாப்ல.

ஆரிய பேச விடாததுதான் குறை. ஃபோன வச்சதும்

ரியோ : என்ன ஃபோன வச்சுட்டீங்க ?

ஆரி : அவன் வச்சுட்டான்....

ரியோ : நீங்க பேசவே இல்லையே ?

ஆரி : அவன் பேசவே விடலையே

சைனா : நீங்க ஏன் ஃபோன வச்சீங்க ?

ஆரி : அட அவந்தாம்மா வச்சான்

சைனா : ஹலோ நான் பாத்தேன்....நீங்கதான் வச்சீங்க

ஆரி : ஆமா லூசு ! அவன் வச்சதும் நான் வச்சேன்...

சைனா : பாத்தீங்களா.....மொத அவன் வச்சான்னு சொன்னீங்க....இப்ப நீங்களும் வச்சேன்னு சொல்றீங்க.....!

ஆரி : சைனா....அவன் ஃபோன வச்சதுக்கப்பறம் என் ஃபோன கைல புடிச்சுட்டே இருக்கமுடியாதுல.....அதனாலதான் வச்சேன்....

சைனா : ஆனா நீங்க வைக்கக் கூடாது ப்ரோ....அதான் ரூல் ! இத நான் சொன்னா முந்திரிக்கொட்டைன்னு சொல்லுவீங்க.....சோ சேட்

ஆரி : எனக்கு அழிவு என்னோட அவெஞ்சர்ஸ் டீமாலயேதான் //

பில்டரோட இந்த ஸ்டேர்டஜி எல்லாருக்கும் தெளிவா தெரிஞ்சாலும் இத தப்புன்னு யாரலையும் சொல்லவும் முடியல....ஏன்னா இது தப்பே இல்ல ! இந்த டாஸ்க்க அவனுக்கு ஏத்த மாதிரி விளையாடி ஸ்கோர் பண்ணியிருக்கான். ஆரியே ரசிச்ச விஷயமா போயிடுச்சு இது. இந்த விஷயத்துலதான் ஆரியும், பில்டரும் ஒத்துப்போறானுங்க. ரெண்டு ஆட்டக்காரனுங்களோட மனநிலை இது....ஒவ்வொருத்தனோட நகர்வையும் கவனிச்சு அது நல்லா இருந்தா பாராட்டிக்கிறது. ஆனா இதப் புரியாத லவ் பெட்டு ஆளுக, ஆப்பாயில் கேபி, சைனா இவங்கெல்லாம் ஆரிய இத வச்சு ஏத்தி விடத்தான் பாக்குதுங்க.....ஆரி தெளிவா இருப்பாருன்னு நம்புவோம்.

இதுல “தயாரிப்பாளார் பையன்றதால ஜித்து மேல உங்களுக்கு பயமா?”ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டான் பில்டரு. அத அவன் தனியா இருக்கும்போது ஜித்து போயி “டேய்....நானே அந்த அடையாளத்த தொடைக்கதான் வந்தேன். ஏண்டா அதப்போயி சொல்ற”ன்னு வருத்தப்பட்டாப்ல. அதுக்கு பில்டரு மன்னிப்பும் கேட்டான்.

ஆரிய விட கேபிக்கு தான் பில்டரு மேல கடுங்கோவம் போல.....சுத்தி சுத்தி எல்லார்கிட்டையும் அவனப் பத்தி குத்தம் சொல்லிட்டு இருக்கு. பில்டர் – ஆரிப் கால் பத்தி சோமுவுக்கு கேபி ஏன் விளக்கம் குடுக்கனும்?னு தெரியல....அதே மாதிரி சும்மா சப்பாத்தி உருட்டிட்டு இருந்த ஆரிகிட்ட “ஆர் யூ ஓகே ஆரி”ன்னு கேட்டு “பில்டர் உங்கள காலி பண்ண பாக்குறான்”னு சொன்னது அவசியமில்லாதது. கேபி குரல் கேக்குறது நல்ல விஷயந்தான் ஆனா அது நெகட்டிவா போயிடக்கூடாது.

ஆஜீத், ரம்யா & அன்னப்போஸ்டு 3 பேரும் ஷிவானிய கலாய்ச்சு வம்ம்பிழுத்துக்கிட்டு இருந்துச்சுங்க....

கடைசியா ஒரு முட்டை டாஸ்க்.....! ரெண்டு டீமா பிரிஞ்சு டீமுக்கு ஒண்ணா ரெண்டு ஆள் வந்து.....ஸ்பீக்கர்ல சொல்ற மாதிரி உடல் பாகங்களாத் தொட்டு எப்ப முட்டைன்னு சொல்றாங்களோ அப்ப நடுவுல இருக்குற முட்டைய எடுக்கனும்....எடுத்தவங்க எதிர் ஆளு தலையில முட்டைய உடைக்கனும்.

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு....சைனா இருக்கும்போது அப்பிடியே நல்ல படியா முடிஞ்சிடுமா என்ன ?

கடைசியா ஷிவானியும் அதுவும் களத்துல நிக்க முட்டைன்னு சொன்னதும் ரெண்டு பேரு கையும் முட்டைல இருக்க.....”யாரு தொட்ட முட்டை?”ன்னு ஒரு கலவரம் வெடிக்க....ஷிவானியோடதுன்னு தீர்ப்பாயிடுச்சு. “ஷிவானிதான் எடுத்தான்னு ஒத்துக்குறேன் ஆனா அத நாந்தான் எடுத்தேன்”னு இப்டியே 5 தடவை சொல்லிட்டு இருந்துச்சு சைனா.

மறுபடியும் பில்டரும், ரம்யாவும் உக்காந்திருக்க சைனா அவன் ஆரிகிட்ட பேசுனதப் பத்தி பேசிட்டு இருந்துச்சு.....

சைனா : நீ ஏன் ஃபோன வச்ச பாலா ?

பில்டரு : பேசி முடிச்சுட்டேன் அதான் வச்சிட்டேன்....

சைனா : ஃபோன வச்சா நாமினேஷனுக்கு வந்துருவியே ?

பில்டரு : ஆமா அதான ஸ்டேர்டஜி...

சைனா : ஆரியும்தான் வச்சாரு ஆனா நாமினேஷன் வரலையே....

பில்டரு : நான் வச்சா எப்பிடி அவரு நாமிநேஷன்ல வருவாரு ?

சைனா : அவரும் ஃபோன வச்சதத்தான் எல்லாருமே பாத்தோமே....ஆனா நாமினேஷன்ல வரல. இப்ப நான் நாளைக்கு எனக்கு கால் பண்ணா ஃபோன வைக்கனுமா ? வேணாமா ?

ரம்யா : நீ ஃபோன எடுக்காத.....நாமிநேஷன் பிரச்சனையே வராது...

சைனா : குட் ஐடியா.....நிலா அது வானத்து மேலே....//

இனிதான் ஆரம்பம் இதுக்கு மேலதான் பூகம்பம்னு சொல்லியிருக்கானுங்க....பாக்கலாம் !


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)