பிக்பாஸ் – 4 : நாள் - 61 (04.12.20)
61வது நாள்....
“சொப்பன சுந்தரி
நாந்தானே” பாட்டு அலாரம். சாத்தூரும், கேபியும் கூட்டு சேர்ந்து குஜாலா ஆட, ஆளே இல்லாத
அன்னப்போஸ்டு பில்டரோட ஆடிட்டு இருந்துச்சு. நம்ம ஜித்து கூட இன்னைக்கு ரம்யா கூட சேர்ந்து
ஆடுனாப்லேன்னா பாருங்களேன். ஹவ் மிராக்கிள் யூ நோ !
மார்னிங் டாஸ்க்.
கேபி வீட்டு வேலை செஞ்சிக்கிட்டே டான்ஸ் ஆடுறது எப்டின்னு சொல்லிக்குடுக்குமாம்.....அத
செய்யனுமாம். பாத்திரம் விளக்குற மாதிரி, மாப் போடுற மாதிரிலாம் ஆடுறது சரி...! டீ-ஷர்ட்ட
போட்டு முடிச்சதும் குட்டிக்கரணம் அடிச்சிட்டு “இப்பிடிதான் டீ-ஷர்ட் போடனும்”னு சொல்லுச்சு.
அப்பிடி பண்ணா சட்டைய இந்த ரூமுலையும்.....பேண்ட அடுத்த ரூம்லையும் தான் போட முடியும்....தவிர
அத இந்த இத்துப்போனவனுங்க யாரும் செய்யாம இருந்தது சிறப்பு !
ஆளு கிடைக்காம
வர வர ஆரி ப்ரோ நிஷாவ நோண்ட ஆரம்பிச்சிட்டாப்ல போல. அது எந்த ரூம்ல, எப்ப காமெடி பண்ணாலும்
“இது காமெடி இல்ல, இந்தக் காமெடில சிரிப்பில்ல, உனக்கு தெரிஞ்ச வேலைய செய்யி”ன்னு அவமானப்படுத்துறாப்ல
போல. இத அன்னை, சோமன், ரியோ, ஜித்து பாய் எல்லாரும் கூடிப் பேசிட்டு இருந்தானுங்க.
இவனுங்க எல்லாரும் ஏத்தி விட்டு நிஷாவ ஆரிகிட்ட போயி சண்டை போட சொல்லியிருக்கானுங்க.
சரி....இவனுங்க
குரூப்பு ஆளுக்கு ஒரு அவமானம் நடக்குது. ஆனா அத இவனுங்க கேக்கலாம்ல ? நிமிஷம் விடாம
நிஷாக் கூட சுத்துறான் காஜி சோமு. ஆனா அந்தம்மாவுக்கு ஒரு அவமானம் போயி கேளுடான்னா
கோவப்படுற நேரத்துல மட்டும்தான் கோவப்படுவானாம். ரஜினியே கட்சி ஆரம்பிக்க தேதி சொல்லிட்டாப்ல
ஆனா இவனுக்கு கோவம் வர நேரம் எதுன்னு பாக்க பல வருஷம் ஆகும் போல.
அன்புக்கு ஒரு
பங்கம்னா அண்டார்டிகா போயி அங்க வாழும் கரடிகிட்ட கூட சண்டை போடுற அன்னை, இந்த விஷயத்துல
பின்னாடி இருந்து ஏத்தி விடுது. இங்க ஒருத்தர் இருக்காப்ல, அவரு கோவப்பட்டா பிக்பாஸ்
செட்டையே பிச்சி எறிஞ்சிட்டு, 10 தலையெடுக்காம தூங்க மாட்டாரு....அவர்தான் ரியோ. அவர
கோவம் வராம வச்சிக்குறதுதான் உலகத்துக்கு நல்லதுன்னு பில்டப் குடுத்துட்டு இருக்கானுங்க.
அவனும் கேக்கல. ஆரிய விட இவனுங்க குரூப்புதான் அதிகமா நிஷாவ மொக்கை பண்றானுங்க. ஆனா
ஆரிகிட்ட சண்டை போட சொல்லி சும்மா இருந்த நிஷாவ ஏத்தி விடுறானுங்க. ஆரி மொள்ளமாறிதான்
ஆனா இவனுங்க மாதிரி முட்டாள் கிடையாது.
பாவம் இவனுங்க
பேச்ச நம்பி ஆரிகிட்ட நிஷா இதப்பத்திப் பேச....ஆரி ரொம்ப உறுதியா “உன்னய உண்மையா அப்பிடி
சொல்லியிருந்தா என்னய மாதிரி கிறுக்கன் எவனும் இல்ல....அது நான் பண்ண காமெடி....ஆனா
இப்பிடி அது காமெடியா இல்லையான்னு கேக்குற அளவுக்கு என் நகைச்சுவை அறிவு இருக்கும்னு
நான் நெனைக்கல”ன்னு விளக்குனாரு.
60 நாளா இந்த
இம்சை பிடிச்சவனுங்களுக்கு படுக்க பெட்டு, சாப்பிட சோறு, சாயங்கால ஸ்னாக்ஸு, பிறந்தநாளுன்னா
கேக்கு, வகை வகையா லக்ஸுரி பட்ஜெட்டு எல்லாம் குடுத்ததுக்கு பிக்பாஸ் இன்னைக்குத்தான்
சரியான சோலி பாத்தாரு.....!
ஜித்து பாய
உள்ள கூப்ட்டு
பி.பா : உள்ள
வந்த 60வது நாள்ல இந்த வீட்ல உங்களோட பங்களிப்பு என்ன ?
ஜித்து : தூங்குவேன்,
எந்திரிப்பேன், சாப்டுவேன், கக்கூஸ் கழுவுவேன், உள்ள வருவேன் எவனாச்சும் சண்டை போட்டுட்டு
இருப்பானுங்க. அந்த கேப்புல மறுபடியும் ஒரு குட்டித் தூக்கம் போடுவேன், அதுவும் அன்னப்போஸ்டோட
சண்டைன்னா ஒரு 3 மணி நேரம் தூங்கலாம். எந்திரிச்சதும் தொவைக்க வேண்டிய துணிய எல்லாம்
நிஷாகிட்ட எடுத்துப் போட்டுட்டு, சனத்த கூப்ட்டு மசாஜ் பண்ண சொல்லிட்டு, லிவிங் ரூம்
சோஃபால சாஞ்சு உக்காந்துக்குவேன். அப்பப்ப டாஸ்க் வரும் அதுல கலந்துக்கிட்டு அங்கயும்,
இங்கயும் சுத்துவேன்....இந்த வாரம் அதிசயமா கேப்டன் டாஸ்க்குல பில்டரு ஒழுங்கா விளையாடததால
நான் ஜெயிச்சுட்டேன்.
பி.பா : சரி....கேப்டனானதும்
என்ன செஞ்சீங்க ?
ஜித்து : புதுசா
ஒண்ணுமில்ல....அதையேதான் செய்யுறேன்.....
பி.பா : வெளிய
போன்னு சொல்றதுக்கு முன்னாடி வெளிய போயிரு //
“இத வெளிய யாருகிட்டையும்
எதுவும் சொல்லிக்காத”ன்னு சொல்லி அனுப்புனதால வெளிய வந்து எல்லார்கிட்டையும் ஜெனெரல்
செக்கப்னு சொல்லி சமாளிச்சாப்ல.
அடுத்தது ஆஜீத்
பி.பா : உள்ள
வந்த 60வது நாள்ல இந்த வீட்ல உங்களோட பங்களிப்பு என்ன ?
ஆஜீத் : பாடுனேன்.....பாடுறேன்....பாடுவேன்
!
ஆஜீத் : உள்ள
பிறந்தநாளு, சோகம், ஜெயிலுக்குப் போறப்ப, நைட்டு தூக்கம் வரலேன்னா இப்பிடி கண்டதுக்கும்
பாடுறது நாந்தான....! அன்னைக்கு கமல் சாருக்கு கூட பாடுனேனே ? உங்களுக்கும் ஒரு பாட்டு
இருக்கு...! ஏய்....பாஸு பாஸு பாஸு...உன் பேருதான் பிக்பாஸு....
பி.பா : சின்னப்பையன்னு
பாக்குறேன் அசிங்கமா கேக்குறதுக்குள்ள ஓடிடு
ஆஜீத் : போய்
வரவா.....போய் வரவா..... //
அவனும் வெளிய
வந்து அதே செக்கப் கதையத்தான் சொன்னான்.
அடுத்து கேபி
பி.பா : உள்ள
வந்த 60வது நாள்ல இந்த வீட்ல உங்களோட பங்களிப்பு என்ன ?
கேபி : உள்ள
வந்து நான் நல்லா சமைக்கக் கத்துக்கிட்டேன்.....அப்டியே பாதிரம் விளக்கவும், சிங்க்
க்ளீன் பண்ணவும்
பி.பா : மாமியார்
வீட்டுக்கு வந்த புது மருமகளாட்டம் பேசாத....நீ வந்தது அதுக்கு இல்ல.....உன் பங்களிப்பு
என்ன ?
கேபி : இருங்க....இப்பதான்
லவ் பெட்டுல சேர்ந்து 2 வாரமாகுது ! இப்பதான் அந்த பெட்டுக்கே பங்களிப்பு பண்ண ஆரம்பிச்சிருக்கேன்....இதுல
உங்களுக்கு என்ன பங்களிப்பு வேணும் ?
பி.பா : இல்லம்மா
வேற எதாச்சும் ?
கேபி : தனியா
டான்ஸ் ஆடியிருக்கேன்.....அப்பறம் சோமன் கூட சேர்ந்து ஆடியிருக்கேன், அப்பறம் ஷிவானி
கூட சேர்ந்து ஆடியிருக்கேன்....
பி.பா : அப்பறம்
?
கேபி : வேற
யாருக்கும் சரியா ஆடத் தெரியல அதனால ஆடல....
பி.பா : அதில்லம்மா....பங்களிப்பு
என்ன ?
கேபி : யோவ்
மொத பங்களிப்புன்னா என்ன ?
பி.பா : ம்ம்ம்ம்....இங்க
வந்து என் தாலிய அறுக்குறது....போம்மா வெளிய //
இங்குட்டு ஒரு
குட்டை மேஜை மாநாடு.....வித் பில்டர், அன்னப்போஸ்டு அண்ட் ஆரி
பில்டரு : ஆரி
ப்ரோ....2 கால் பேசுன ஆளுக கூட ஒரு கால் பேசுன சனம் எப்பிடி ஈடாகும் ?
ஆரி : ஆனா அவ
கால கட் பண்ணாம பேசுனாலே !
அன்னப்போஸ்டு
: கால வச்சவெனெல்லாம் தோத்தவன் இல்ல....கால வைக்காதவனெல்லாம் ஜெயிச்சவனும் இல்ல....!
இத நான் ஏன் சொல்றேன் ? ஏன்னா நான் கால வச்சேன்.....
ஆரி : கால்
வச்சவன் தோத்தவங்களாம் அதான் லக்ஸுரி பாயிண்டு பூராம் நக்கிட்டு போச்சு...பிக் பாஸ்
சொன்னான் நீ தோத்துட்டன்னு
அன்னப்போஸ்டு
: ஹலோ...உலகமே உன்னய எதிர்த்தாலும்....நீ தோத்துட்ட தோத்துட்டன்னு சொன்னாலும் நெவெர்
எவெர் கிவ்வப்னு தலைக்கே நாந்தான் சொல்லிக்குடுத்தேன்....என்னய தோத்தேன்ற ? அதுசரி
சைனாவே அதுக்காக சண்டை போடல நீ ஏன் போட்ட ?
ஆரி : சனத்துக்காக
நான் சண்டை போடல ! நியாயத்துக்காக சண்டை போட்டேன்
பில்டரு : நியாம்னு
ஒருத்தன் விளையாடவே இல்ல....இப்பிடித்தான் நீங்க மாத்தி மாத்தி பேசுறீங்க
ஆரி : நியாம்னு
ஒருத்தன் இல்லடா....நியாயம்ன்றது ஒரு கருத்து....
அன்னப்போஸ்டு
: நீ நிறுத்து.....! அவ வேற இடத்துல நிக்குறதுக்கு சண்டை போடாம....என் இடத்துல வந்து
நிக்குறதுக்கு ஏண்டா சப்போர்ட் பண்ண ?
ஆரி : அது என்
இஷ்டம்....நீ என்ன நெனச்சா எனக்கென்ன ?
பில்டரு : அது
அப்பிடி இல்லண்ணே....! “வச்சிக்கோ” அப்பிடி சொல்லனும்ணே //
அடுத்து சோமு.....
பி.பா : உள்ள
வந்த 60வது நாள்ல இந்த வீட்ல உங்களோட பங்களிப்பு என்ன ?
சோமு : உங்களுக்கே
தெரியும்...வயசாகிட்டே போகுது. இன்னும் கல்யாணம் காட்சின்னு ஒண்ணும் தெகையல....
பி.பா : அதுக்கு
?
சோமு : அதான்.....இங்க
வந்து பாத்தா....ஹெ ஹெ ஹெ....
பி.பா : டேய்
என்னடா சொல்ல வர ?
சோமு : அதாங்க
இங்க நல்லா இருக்கு....ரம்யா இருக்கு, சாம் இருந்துச்சு.....அப்டியே நல்லாருக்குல்ல
பி.பா : டேய்
காஜி சோமா ! இங்க நீ விளையாட வந்திருக்க
சோமு : நானும்
விளையாண்டுட்டுதான இருக்கேன்.....ஹி...ஹி...ஹி
பி.பா : என்னடா
மாடுலேஷன மாத்தி மாத்தி சிரிக்குற ? உள்ள வந்து 60 நாளா என்ன தாண்டா பண்ண ?
சோமு : அட அதாங்க....நல்லா
இருக்குல்ல.....அப்டியே நானும் இருக்கேன் ! கோவப்படுற எடத்துல தாங்க கோவப்படனும்....சும்மா
சும்மா கோவப்படக் கூடாது
பி.பா : ஒரு
தடவை பொங்கல்ல முந்திரி பருப்பு இல்லேன்னு கோவப்பட்டப்ப பாத்தது....அதுக்கப்பறம் அப்பிடி
ஒரு சம்பவம் நடக்கவே இல்ல....! சரி கொஞ்சம் யோசிச்சு சொல்லு....உன் பங்களிப்பு என்ன
?
சோமு : நெறைய
இருக்கு.....! அதெல்லாம் சொல்லிக்காட்டி அசிங்கமா ! அதுபோக இன்னும் நான் இதப்பத்தி
பேச அன்னைகிட்ட அனுமதி வாங்கல....விட்டா போயி வாங்கிட்டு வந்துருவேன்
பி.பா : சரி...போ
போயி வங்கிட்டு...அங்கயே உக்காந்துக்கோ //
அடுத்து ஷிவானி....
பி.பா : உள்ள
வந்த 60வது நாள்ல இந்த வீட்ல உங்களோட பங்களிப்பு என்ன ?
ஷிவானி : அது
வன்ட்டு.....ஆடுனேனா ! இஞ்ஞாயி சொன்னேனா !
பி.பா : அதெல்லாம்
பங்களிப்புல வராது
ஷிவானி : ஓ.....!
அப்ப பில்டர எழுப்பிவிட்டு குளிப்பாட்டுறது, சாப்பாடு ஊட்டி விடுறது, அவன டென்ஷனாகாம
பாத்துக்குறது இதெல்லாம் பங்களிப்புல வருமா ?
பி.பா : வராது...
ஷிவானி : வன்ட்டு......அப்ப
அவ்வளவுதான்...! நான் வன்ட்டு இதான் பண்ணேன்.... வன்ட்டு இது பங்களிப்பு இல்லேன்னா
.....நான் வன்ட்டு பங்களிப்பு பண்ணலன்னு எடுத்துக்கோங்க.....அது வன்ட்டு உங்க இஷ்டம்.....
பி.பா : கருமம்......!
சரி டைமாச்சு....பில்டரு பசி தாங்க மாட்டான்...போயி மம் மம் ஊட்டு
ஷிவானி : இந்து
வன்ட்டு நல்லாயிருக்கு.....வரேன் //
அடுத்து ரம்யா....
பி.பா : உள்ள
வந்த 60வது நாள்ல இந்த வீட்ல உங்களோட பங்களிப்பு என்ன ?
ரம்யா : நான்
நானா இருந்திருக்கேன்
பி.பா : ஆரி
ஆரியாவும், அர்ச்சனா அர்ச்சனாவவும்தான் இருக்காங்க....இது என்ன பாம்பே ஆபரேஷன் பண்ற
எடமா ? எல்லாரும் அவங்க அவங்களாதான் இருக்காங்க....! நீ உன் பங்களிப்ப சொல்லு
ரம்யா : நான்
எது சொன்னாலும் இல்லேன்ற.....சரி நீ சொல்லு உன் பங்களிப்பு என்ன ? சொல்ல முடியாதுல்ல....அதே
மாதிரிதான், நான் நானா இருந்தேன் அதான் என் பங்களிப்பு....உனக்கு இந்த பதில் பிடிக்கலேன்னா
உனக்கு பிடிச்ச பதில நீயே உனக்கு சொல்லிக்கிட்டு என்னய வெளிய விடு.....
பி.பா : எல்லாம்
ஆண்டவர் உன்னய ஏத்திவிட்ட தெனவு.....போ....வெளிய போ //
அடுத்து நிஷா.....
பி.பா : உள்ள
வந்த 60வது நாள்ல இந்த வீட்ல உங்களோட பங்களிப்பு என்ன ?
நிஷா : இப்பிடித்தான்
பாருங்க பிக்பாஸ் என் புருஷன் ஒரு நாள் என்னய இருட்டுல பாத்துட்டான்.......
பி.பா : இது
KPY இல்ல நிஷா.....கேட்டதுக்கு பதில் சொல்லு
நிஷா : ம்ம்ம்....கல்லுன்றது
உளிய பாக்காத வரை சிலையாகுறது இல்ல....
பி.பா : இது
பொங்கல் சிறப்பு பட்டி மன்றம் இல்ல..... கேட்டதுக்கு பதில் சொல்லு
நிஷா : பங்களிப்புன்னா
அது இருக்கு....ஜித்து துணிய தொவச்சுப் போட்டு, அன்னைக்கு நிழலா இருந்து, ரியோவுக்கு
சப்போர்ட் பண்ணி.....பங்களிப்புன்னா அது பங்களிப்புன்னு சொல்ற அளவுக்கு பங்களிப்பா
இருந்திருக்கு.....பங்களிப்புன்னு சொன்னதும் பங்களிப்பு பண்ண ஒரு விஷயத்தப் பத்தி நியாபகம்
வருது.....
பி.பா : ஸ்ஸஸப்பா
! பங்களிப்பு பங்களிப்புன்னு சொல்றயே தவிர என பங்களிப்புன்னு சொல்றியா ? போதும் விட்டுரு.....வெளிய
போ.....! //
அப்பறம் உள்ள
போயிட்டு வந்த கோஷ்டி ரம்யா, ஜித்து, ஆஜீத் & கேபி உக்கந்திருக்கு....வெளிய வந்த
நிஷாவ என்னன்னு கேக்க....என்ன ஒரு அவமானம்னு சொன்னது சிறப்பு.....இதோட முடிஞ்சது !
Comments
Post a Comment