பிக்பாஸ் – 4 : நாள் - 78 (21.12.20)
78வது நாள்
“வெத்தலைய போட்டேண்டி”
பாட்டு அலாரம். ஆரி பொரணி பேசாத அதிசயமா, பில்டரு இன்னைக்கு அன்னப்போஸ்டு, ஆஜீத் கூட
சேர்ந்து கும்மாள ஆட்டம் போட்டுட்டு இருந்தான். லவ் பெட்டு ஆளுகளோ “அன்ப அடிச்சு தூக்குன
இந்த வீட்ல ஆட்டத்துக்குதான் கேடு”ன்னு ஸ்லோ மோஷன்ல நடந்துட்டு இருந்தானுங்க.
இங்க கிச்சன்ல
அன்னப்போஸ்டு
: யப்பா சாம்பாருக்கு பருப்ப மொத்தமா போட்டு வேக வைக்கவா இல்ல தனியாவா ?
கேபி : அப்போ
உனக்கு சாம்பார் வைக்க தெரியாதா?
அன்னப்போஸ்டு
: ஹலோ....நான் சந்தனத்துலையே சாம்பார் வைப்பேன் தெரியும்ல
ரியோ : MV
: சந்தனத்துலையா? அப்ப இவளுக்கு சாம்பார் வைக்க தெரியாதுதான் போல
அன்னப்போஸ்டு
: அர்ச்சனா சாம்பார தின்னு வளந்தவனுங்க நீங்க....அப்பறம் நான் என் ஸ்டைலுக்கு வச்சா
வாந்தி வருதுன்னு பொரணி பேசுவீங்க....அதான் கேக்குறேன்
கேபி : மொத்தமாவே
போட்டு வேக வை....நல்லாதான் இருக்கும்
அன்னப்போஸ்டு
: இதுக்குதான் கேட்டேன்....! இல்லேன்னா இது ஒரு இமாலய தப்புன்னு இம்சைய கூட்டிருவீங்க.....
கேபி : ஏய்
ஏய்.....அது பொறி கடலை டப்பா....
அன்னப்போஸ்டு
: இருக்கட்டும்.....நல்லாதான இருக்கும் ! சாம்பார்ல சரித்திரம் படைக்கலாம்னா விட மாட்டேங்குறானுங்க
//
ரியோ கேபிய
கூப்ட்டு “சென்னை அமிர்தால கேட்டரிங் சேர்ந்து படிக்கும்போதே பத்தாயிரம் ரூவா சம்பளம்
வாங்குன மாதிரி அளந்து விடுவா....ஆனா அவளே சாம்பார் வைக்க உங்கிட்ட சந்தேகம் கேக்குறான்னா
என்ன அர்த்தம் ? அர்ச்சனாவே உனக்குள்ள இறங்கி இருக்குன்னு அர்த்தம்”னு கசிய. “அம்மா
எங்கயும் போகலடா.....கேபியா வந்து பொறந்திருக்காங்க”ன்னு சோமு நெகிழ்ந்தான்.
3 பேரும் கேமராவப்
பாத்து “அர்ச்சனா பாத்தியா உன் புள்ளைய”ன்னு பெருமை பட்டுக்கிட்டே.....”காபி குடிக்கிறோம்,
அடுத்து கக்கூஸ் போறோம்”னு கேமராவப் பாத்து அர்ச்சனாகிட்ட சொல்லிட்டு இருந்தானுங்க.
முழு பையித்தியமா மாறியிருக்குற இந்த 3 பேரையும் பாக்க பாவமா இருக்கு.
சாக்லேட்ட எடுத்துட்டானுங்கன்னு
ஆஜீத்தையும், பில்டரையும் பாத்து ஷிவானி கழுதை குரல்ல கத்த கிச்சன்ல இருந்த அன்னப்போஸ்டு
“எவண்டா அது வீடான வீட்ல கத்திட்டு இருக்குறது....?எனக்கு யாரச்சும் கத்துனா தலை சுத்தும்,
கிட்னி பெயிலியர் ஆகும்னு தெரியாதா?”ன்னு சொல்ல....”எவ செத்தா எனக்கென்ன?”ன்னு போயிருச்சு
ஷிவானி.
இத அடுத்த சீன்ல
பில்டர கூப்ட்டு “என்ன அக்கா ஒரு விஷயம் சொன்னா சரிங்கன்னு சொல்லி சலாம் போடாம எதிர்
பேச்சு வருதே ? சொல்லி வை உன் ஆளுகிட்ட”ன்னு அன்னப்போஸ்டு சொல்ல, அவனும் ஷிவானி கிட்ட
“கத்துனா அதுக்கு குஷ்டம் வருமாம்....நீ சாரி கூட கேட்டுரு”ன்னு சொல்ல....”சாரி கேக்குறதுல
எனக்கு பிரச்சனை இல்ல....ஆனா இவ கத்தும் போது கலக்கப் போவது யாரு செட்டு வரைக்கும்
கலகலத்து போகுதே அத யாரு கேக்குறது ?” ந்னு கருத்தா கேக்க, “பேசும்போது கத்துறது கணக்குல
வராது....ஆனா கத்தும்போது கத்துறது கணையத்துக்கு நல்லதில்லன்னு நாடி ஜோசியத்துலயே இருக்கு”ன்னு
புது தியரிய அன்னப்போஸ்டு சொல்லிட்டு இருந்துச்சு. “அப்ப இதப்போயி எல்லார்கிட்டையும்
சொல்லு”ன்னு சொல்லிட்டு போயிருச்சு சாத்தூர்.
இடிச்ச இடில
இப்பதான் சாத்தூருக்கு உணர்வுகள் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு. வாழ்த்துகள்.
நாமிநேஷன்.
சார்ந்து விளையாடுறாங்க, ப்ளேம் கேம் ஆடுறாரு, என்ன பண்றாங்கன்னே தெரியல, நியாயமில்லாம
கோவப்படுறாங்க, கான்ஃபிடன்ஸ உடைக்கிறாரு இதெல்லாம் சொல்லி நாமிநேஷன் வாங்குனது ஆரி,
அன்னப்போஸ்டு, ஷிவானி, ஆஜீத், கேபி.
சோமுவும், ரியோவும்
கேபிய “நீ வெளிய போயிருவே”ன்னு சொல்லி ஓட்டிட்டு இருந்தானுங்க.
ஷிவானியின்
அதிரடி திங்கள்ல பில்டர் மாட்டுனான். பால் உபயோக விதிகளை பத்தி ஷிவானிக்கு பில்டர்
க்ளாஸ் எடுக்க....”டேய் பால் குடிக்கிறவன விட்டுட்டு, பால் குடுக்குற மாட்டுக்கு பாலின்
உபயோகங்கள்னு பாடம் எடுத்துட்டு இருக்க....? நான் கப்புல பால் ஊத்தி குடுக்க வந்த ஆளுடா
எங்கிட்ட வந்து இம்சை பண்ணாத”ன்னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு போயிருச்சு.
பில்டரும் அத
சமாதானப்படுத்த முயற்சி பண்ண “கொலை வெறில இருக்கேன் உம்மேல.....கொடூரமா கடிச்சு வைக்குறதுக்குள்ள
ஓடி ஓளிஞ்சிரு”ன்னு சொல்லிட்டு பெட்ல போயி படுக்க பில்டரு “நீ நான்றதால இப்பிடி பேசுறியா?”ன்னு
கேக்க.....”எவனா இருந்தாலும் வெட்டுவேன் ! எல்லருக்கும் இனிமே இதாண்டா என் பதில்”னு
சொல்ல....”ஹப்பாடி என்னய மட்டுந்தானோன்னு நெனச்சேன்”னு சொல்லிட்டு போயிட்டான்.
கிச்சன்ல கேபி....”இவ
சமைக்குறேன்ற பேருல கிச்சன்ல எதையும் நகட்டி கூட வைக்க மாட்டேங்குறா.....போட்டத போட்டபடி
போறா”ன்னு ரியோ கிட்ட அன்னப்போஸ்ட பத்தி பொலம்ப....”அம்மா இல்லாத நாம அடங்கித்தான்
போகனும் பாப்பா”ன்னு ஆறுதல் சொன்னான் ரியோ.
அப்பறம் பில்டரு
ஒரு கூட்டம் போட்டு “பொருள் அளவுகளையும் கிச்சன் டீம் பாக்குறது நல்லது”ன்னு சொல்ல,
அன்னப்போஸ்டு “எனக்கு 12 பேருக்கு தனியாளா நின்னு சமைக்கதான் தெரியும்....பாலுக்கு
தண்ணி ஊத்துற அளவெல்லாம் தெரியாது”ன்னு சொல்லிட்டு போக....உள்ள வந்த பில்டர் ஆஜீத்கிட்ட
“பேசாம கிச்சன் டீம் கேப்டன மாத்திருவோமா? பேச்சுவழக்கு சரியில்லாம இருக்கே”ன்னு சொல்லிட்டு
இருந்தான்.
மட்டுனியான்னு
ஒரு டாஸ்க். கைய தொட்டு அவுட்டாகுற ஆளு ஜெயிச்ச ஆளு சீட்டுல இருக்குற கேள்விய கேக்குறதுக்கு
பதில் சொல்லனும்.
ஓரளவு நாம கணிச்ச
மாதிரியான பதிலகள சொல்லி போயிட்டிருந்த கேம். ஒரு கட்டத்துல ஆரி & அன்னப்போஸ்டோட
கிக் பாக்ஸிங்க் க்ரவுண்டா மாறுச்சு.
பில்டர் கேட்ட
ஒரு கேள்விக்கு “ஆரி என் மேல ஒரு நாலஞ்சு நாளாவே
ரிவெஞ்சுல இருக்காப்ல”ன்னு அன்னப்போஸ்டு சொல்ல,
“நான் என்ன கரிமேட்டுக் கருவாயனா உன்னய கரம் வச்சு அடிக்க?”ன்னு இவரு பதில் சொல்ல.....”நீ
பேசுறது பூராமே கேமராவுக்காகத்தான்”னு அன்னப்போஸ்டு சொல்ல, “நீதான் டி ஆர் பி டிராகுலான்”னு
இவரு சொல்ல.....”உன் வாயால நியூஸ் வாசிக்கனும், அத கேட்டு நான் பரவசமாகனும்”ன்னு ரெண்டு
பேரும் அன்பா பேசி கழித்த அந்த நாள் நமக்கு நியாபகம் வந்துச்சு.
ஷிவானி “இங்க
யாரு டீமோட்டிவேட்டா இருக்கா?”ன்னு கேட்டதுக்கு
ஆரி : அன்னப்போஸ்டுதான்......அவங்க
குடும்பத்த விட்டு உள்ள வந்தப்ப
அன்னப்போஸ்டு
: என் குடும்பத்தப் பத்தி பேசாதீங்க ஆரி....
ஆரி : அவங்க
அம்மா, அப்பா இவங்க உள்ள வந்தப்ப
அன்னப்போஸ்டு
: எங்க அம்மா, அப்பாவ பத்தி பேசாதீங்க ஆரி
ஆரி : இவங்க
வீட்டுக்காரர்
அன்னப்போஸ்டு
: என் புருஷன பத்தி பேசாதீங்க ஆரி.....அவன் என் புருஷன்
ஆரி : அவன்
உன் புருஷந்தான்...நான் என்ன சொல்ல வறேன்னா
அன்னப்போஸ்டு
: அவன மரியாதையில்லாம பேசாதீங்க.....அவன யாரும் அவன் இவன்னு சொன்னா சும்மா விட மாட்டேன்.
ஆரி : நான்
அவன் இவன்னு சொல்லவே இல்ல சொல்றத முழுசா கேட்டுட்டு பேசு
அன்னப்போஸ்டு
: இந்தா இப்ப சொன்னேல்ல.....அவன பத்தி நீ என்ன முழுசா பேசுவ ? முழுசா பேசுறதுக்கு அவன்
என்ன பெரிய ஆளா....அவன மரியாதையில்லம பேசாத//
கடைசியில சட்டசபையில
கேப்டன் நாக்க மடிச்சு கத்துன மாதிரி கத்த ஆரம்பிச்சுடுச்சு. இந்த நேரத்துல ஷிவானி
வந்து “கத்தாதீங்க எனக்கு தலை சுத்தும்”னு சொல்லியிருக்கனும்.....செம்மயா இருந்திருக்கும்.
ஆரியும் விடாம
அங்கயே நின்னு விளக்கம் குடுக்க முயற்சி பண்ணி இருக்க வேணாம். அப்பறம் எல்லாரும் சொன்னதும்
அவரும் வந்து உக்காந்தாரு.
இப்ப ஷிவானிய
பத்தி ஆரி பேச ஆரம்பிக்க....அது அந்தாள நல்லா நறுக்குன்னு கேட்டுட்டு இருந்தப்ப பில்டர்
வந்து அத முடிக்கப் பாக்க “விடுடா அந்த பொண்ணு எவ்வளவு அழகா என்னய கழுவி ஊத்துது அத
ஏன் நிப்பாட்டுற”ன்னு கேட்டாரு.
“எது இதுவரைக்கும்
நீ பாத்ததுல நல்ல கிச்சன் டீமு?”ன்னு கேக்க பில்டரு சர்காஸமா முதல் வார அனிதா – சுரேஷ்
டீம கேடு கெட்ட டீமுன்னு சொல்ல வர அது புரியாத அன்னப்போஸ்டு வாய விட.....”சர்காஸம்
புரியாத இந்த சாம்பாருக்கு நேரடியாவே சொல்றேன்...அது கொடூர டீம். நல்ல டீமுன்றது அது
அர்ச்சனா இருந்த டீம்தான்”னு சொன்னான்.
பின்ன ஆரி ப்ரோ
வழக்கம்போல சோமனையும், ரியோவையும் கூப்ட்டு யாரப் பத்தி பொரணி பேசுறோம்னு யாருக்குமே
புரியாத மாதிரி பேசிட்டு இருந்தார். ரியோவும், சோமனும் அம்மா இன்னேரம் சாப்ட்டுருப்பாங்களா?
மாத்திரை போட்டுருப்பாங்களா?”ன்னு புல்லு திங்குற மாடு மாதிரி அம்மா நியாபகத்த அசை
போட்டுட்டு இருந்தானுங்க.
“என் புருஷன
பத்தி நான் அர்ச்சனாகிட்ட பேசுனத குறுக்குசால்ல ஒட்டு கேட்டுட்டு ஊருக்கு முன்னாடி
சொல்லிட்டு இருக்கான்”னு அன்னப்போஸ்டு ரம்யாகிட்ட பொலம்ப.....”அவன விடு இப்ப கூட ஏதாச்சும்
கேமரா முன்னாடி நின்னு மன்னிப்பு கேட்டுட்டு இருப்பான்”னு சொல்லி வாய மூடல....
ஆரி ப்ரோ கேமரா
முன்னாடி நின்னுட்டு இருந்தாப்ல......
Comments
Post a Comment