பிக்பாஸ் – 4 : நாள் - 71 (14.12.20)

“கண்ணுல திமிரு” தர்பார் பாட்டு அலாரம். ரெண்டு நாளா அன்னப்போஸ்டு லட்சணத்ததான் பாட்ட போட்டு காட்டுறானுங்கன்னு தோணுது. மொத்த வீடும் அது கைக்குள்ள வந்த மாதிரி செம்ம ஆட்டிட்யூட்ல திரியுது.

வெளிய பில்டரு, அன்னப்போஸ்டு, ரம்யா & ஆரி ப்ரோ.....

பில்டரு : காலையில கடுக்காய் பொடிய வெறும் வயித்துல சாப்ட்டா சாத்வீக குணம் சர சரன்னு வளருமாமே ?

அன்னப்போஸ்டு : அத விடு....! அன்னைக்கு பேரு வச்சது ரியோவுக்கு பிரச்சனையில்ல....அவங்க அக்காக்கு பாஸின்னு பேரு வச்சதுதான் பிரச்சனை....இதான் ஃபேவரிஸம்

ஆரி ப்ரோ : இத நான் கண்டுபிடிக்கதான் அன்னைக்கு ரியோவ லைட்டா கரண்டிய வச்சு அடிச்சுப் பாத்தேன்....அர்ச்சனா அந்தப் பக்கம் அவங்களுக்கு ஆயிண்மென்ட் தடவிட்டு இருந்தாங்க...அப்போ இங்க அடிச்சா அங்க வலிக்குது....தெரியுதா ? பாசம் கண்ண மறைக்குது !

பில்டரு : அதுக்காக அடிக்கனுமா ? பேசிப் பாத்திருக்கலாமே...! ஒருத்தர அடிக்கிறது நல்ல விஷயமா படல.....

ரம்யா : மவுன ராகம் நல்லா இருக்கும்னும்.....ராஜா ராணி நல்லா இல்லேன்னும் சொல்ற மாதிரி....ஒரே மாதிரியான கேஸுக்கு ரெண்டு காரணம் சொல்றான் ரியோ.....

ஆரி ப்ரோ : இப்பல்லாம் கேபிய அடிச்சாக் கூட ரியோவுக்கு வலிக்குது....

அன்னப்போஸ்டு : ஏங்க....அடிக்கிறதுன்னா நேருக்கு நேரா அடிக்கனும் என்னய மாதிரி....இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க //

இந்த சீசனோட முதல் ஓப்பன் நாமிநேஷனாம். ம்ம்க்கும் இதுவரை அவனுங்க உள்ள சொன்னத வெளிய சொல்லிட்டு இருந்தாப்ல பிக்கி. இன்னைக்கு அவனுங்களே வெளிய சொல்றானுங்க....அவ்வளவுதான் வித்யாசம்.

எல்லாம் எதிர்பார்த்த நாமிநேஷன் தான். இவனுங்க அவனுங்களையும், அவனுங்க இவனுங்களையும் மாத்தி மாத்தி குத்திக்கிட்டானுங்க. இதுல நம்ம ரியோ அன்னப்போஸ்டுக்கான காரணங்கள்னு மறுபடியும் அந்த நிஷா & ரோபோட் டாஸ்க்க எடுத்து பேசி “ஆனா அதுக்காக நான் அன்னப்போஸ்ட நாமிநேஷன் பண்ணல”ன்னு சொன்னான். “பொழப்பத்த பார்பர் பூனைக்கு பாப் கட் பாண்ணானாம்”ன்ற கதையா,  பண்ணாத நாமிநேஷனுக்கு எதுக்குடா எட்டு பக்க காரணம்?னு நமக்கே தோணூம் போது....எப்படா எரா கிடைக்கும்னு காத்துட்டு இருக்குற சுறா மீனா சுத்துற அன்னப்போஸ்டுக்கு தோணாதா என்ன ? நாமிநேஷன் முடிஞ்ச அடுத்த நிமிஷம்

அன்னப்போஸ்டு : யப்பா ரியோ இங்க வா....! அக்காக்கிட்ட எதுனா பேசனும்னா நேர்ல பேசு....இப்பிடி முன்னாடி போயி நின்னு நீ மட்டும் பேசிக்கிட்டா எப்பிடி ?

ரியோ : உங்கிட்ட பேசனும்னு வந்தா நீ மட்டுந்தான் பேசுவ. அதான் நான் மட்டும் பேசிட்டு வந்தேன் உங்கிட்ட....

அன்னப்போஸ்டு : என்ன பேசிட்டே போற....பயமா ? தைரியம் இல்லயா ?

சொல்லிட்டே அன்னப்போஸ்டு சைடுல ஆரிய பாக்க.....ஆரியோ “நீ கலக்கு அன்னப்போஸ்டு”ன்னாரு.....!

ரியோ : வாட் டூ யூ மீன் ? ஐ ஆஸ்க் யூ....யூ டெல் மீ ! தைரியம் இல்லையா....ஆகா.....ஏ....பாத்துக்குருவோமா ? எவ்ளோ நேரம் பேசனும் ? ஒரு வட்டத்தப் போட்டு நின்னுக்குருவோமா ? பலே வெள்ளையத்தேவா......பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்தா....? புலிய இடறிப் பாக்குறியா.....வா வா பேசிக்கலாம்

அன்னப்போஸ்டு : ஏன் கத்துற ?

ரியோ : எது கத்துறேனா ?

அன்னப்போஸ்டு : ஏன் பாயிண்ட் இல்லையா ?

ரியோ : எதே.....ஆமா ஆமா பாயிண்ட் இல்லதான்....போவியா பேசாம....

அன்னப்போஸ்டு : இவன் வேற பாயிண்ட் இல்லேன்னு .....(அப்டியே நகர....)

ரியோ : இப்ப நீ எங்க போற....தைரியமில்லையா ?

அன்னப்போஸ்டு : போச்சு மனச புண்படுத்திட்டான்.....மனச புண்படுத்திட்டான்....எல்லா கேமராவும் பாருங்க.....என் மனச புண்படுத்திட்டான்......//

ஆனாலும் அன்னப்போஸ்டு பண்றது அர்னால்டுக்கே அடுக்காது. இன்னும் அதுக்கு யாரு யாரு கூடையெல்லாம் பேக்கேஜ் இருக்குன்னு தெரியல. இப்பிடி பச்சையா ப்ரொவோக் பன்றதெல்லாம் தேவை இல்லாத வேலை. இதே மாதிரி ரியோ பேசியிருந்தா இன்னைக்கு அன்னப்போஸ்டோட ஆக்டிவிட்டீஸே வேற மாதிரி இருந்திருக்கும். பாப்போம் ஆண்டவர் இத கேப்பாரான்னு.

ஆனா இவ்வளவு களேபரத்துலையும் அர்ச்சனா ரொம்ப கேசுவலா நடந்துக்கிட்டது இயல்பா இல்ல. ஏன்னா உள்ள போயிருந்தா அர்ச்சனா கிழிபட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். சோமனும் கேபி மேல கையப்போட்டுக்கிட்டு கீரி, பாம்பு சண்டைய கூட்டத்துல நின்னு பாக்குற ஸ்டைல்ல இருந்தான்.

ஆஜீத், ரியோ, ஷிவானி, அன்னப்போஸ்டு, ஆரி ப்ரோ, அர்ச்சனா, சோமன் நாமிநேஷன். கேபி தப்பிச்சது ஆச்சர்யம்.

வெளிய திரும்பவும் அன்னப்போஸ்டு , ஆரி ப்ரோ, பில்டரு, சோம்

அன்னப்போஸ்டு : யப்பா சோமா நீ என்ன பண்ற அக்கா என்னமோ பெஸ்ட் பெர்மார்மர் குடுக்கலன்னு சண்டை போடுறதா நெனைச்சுக்காத....ஒர்ஸ்ட் பெர்மார்மர்னு சொன்னதுதான் வருத்தம்னு ரியோ கிட்ட சொல்லு

சோமு : அக்கான்னா அர்ச்சனாவா ?

அன்னப்போஸ்டு : அக்கான்னா அக்காடா.....நான்..... அனிதா.....அனிதா அக்கா....! என்ன உனக்கும் ரெண்டு காட்டு காட்டனுமா ?

ஆரி ப்ரோ : அதாவது சோமு.....பாசம்ன்றது கல்ல மறைக்கலாம்.....கண்ண மறைக்கக் கூடாது.....அதான் நா

அன்னப்போஸ்டு : ஹலோ நான் இன்னும் முடிக்கல.....! சோமா அக்கா மிகப்பெரிய ரவுடிதான்....ஆனா அப்பிடி நடந்துக்க மாட்டேன்.....அவங்கிட்ட நான் வரேன்னு சொல்லு.....ஒண்ணும் பயப்பட வேணாம்....சும்மா பேசுறதுக்குதான்....போ போயி சொல்லு //

இத உள்ள வந்து சோமு சொன்னதும் “வாடா மாமா.....! இந்த மாமா வேலைய எப்ப இருந்து பாக்குற?”ன்னு கேட்டாங்க அர்ச்சனா. இதக் கேட்டதும் சோமனோட ஷோல்டர்லாம் ஏறி அவனோட மிக்ஸ்டு மார்ஷியல் ஃபைட் ஸ்டெப்பெல்லாம் அவன் நியாபகத்துக்கு வர....கப்புன்னு ஒரு கிக்க விட்டிருப்பான்னு எல்லாரும் நெனச்சிருப்போம். ஆனா சோமனோ “ஹலோ மாமான்னு சொல்லாத......தாய் மாமாவா இல்ல முறை மாமாவான்னு சொல்லு?”ன்னு கேட்டு வாங்கிக்கிட்டான். அர்ச்சனாவோட இந்த அன்பு பொதிந்த வார்த்தைகளுக்கு ஒரு தனி அகராதியே போடலாம்.

“எது எங்கூட பேசனுமா ? இந்தா வரேன். இன்னைக்கு வாங்குற வாங்குல”ன்னு வர்தா புயல் வேகத்துல வந்த ரியோ நிவர் புயல் மாதிரி அமைதியாகி....

ரியோ : என்னமோ பேசனும்னு சொன்னீங்களாம் என்ன ?

அன்னப்போஸ்டு : என்ன மூஞ்சி இது....முட்டு சந்துல மாட்டுன மாதிரி ? மூஞ்சியத் தொட....சிரி...! இப்ப எப்பிடி இருக்கு மொகற ! சரி....நம்ம ரெண்டு பேருமே ஒழுங்கா விளையாடாம ஒரு மாதிரி ராங்கா போயிட்டு இருக்கு...இனிமேலாச்சும் ஒழுங்கா விளையாடலாமா ?

ரியோ : இதுக்கு மேல நான் எங்குட்டு ஒழுங்கா விளையாடுறது ? என்னமோ எங்கூட சண்டை போட்டவனெல்லாம் வெளிய போறான்ற ?

அன்னப்போஸ்டு : ஆமா...உனக்கு இருக்குற ஃபேன்ஸு உனக்காக மத்தவனுங்களுக்கு ஓட்டுப் போடாம அனுப்பிடுறாங்கன்னு சொன்னேன்

ரியோ : அப்பிடிப் பாத்தா உன் மூஞ்சில எவன் முழிக்கிறானோ அவன் கூடதான் வெளிய போறான்.....

இப்பிடி சொன்னதும் பில்டரு, ரம்யா, எல்லாரும் “அப்போ நாங்க செவரு இல்லையா ? எங்களாலதான் எல்லாரும் வெளிய போறாங்கன்னு நெனச்சோம்”னு சொல்லி சிரிச்சானுங்க.....அப்பறம் பேருக்கு அன்னப்போஸ்டும், ரியோவும் சமாதானமாகிட்டு கிளம்புனானுங்க. உண்மைய சொல்லனும்னா அன்னப்போஸ்டுக்கு ரியோ ஃபேன்ஸ் மேல பயந்தான். இந்த வாரம் நாமிநேஷன்ல வேற இருக்கு. ஒரு வேளை நாமிநேசன்ல இல்லாம இருந்திருந்தா ரியோவ இந்த வாரம் முழுக்க ரவுண்டு கட்டியிருக்கும்.

குரூப்பு குரூப்புன்னு சொல்லிட்டு இருந்த பில்டர், அன்னப்போஸ்டு, ஆரி ப்ரோதான் இப்பெல்லாம் பொழுதுக்கும் குரூப்பா உக்காந்து லவ் பெட்ட பத்தி பொரணி பேசிட்டு இருக்கானுங்க. லவ் பெட்டு ஒண்ணா இருந்தா கூட அவனுங்களுக்குள்ளதான் பேசிக்குவானுங்க. இவனுங்க முழு நேரமும் லவ் பெட்ட பத்திதான் பொலம்புறானுங்க.

ஆரி ப்ரோ : நாமிநேஷன்ல அண்ணன் என்ன பண்ணேன்னு பாத்தியா ? நைஸா ரியோவ சொன்னதும்.....அம்பு என்னய நோக்கி வருது....! சோம யாரு சொன்னாலும், கேபிய யாரு சொல்லன்னாலும், அர்ச்சனாவ சொல்லியும் சொல்லாமையும் ரியோவக் கூட சொல்ற மாதிரியும் !@#$%^&*())(0(**&&^%%$$#@!@#$%^^&&**())))(*&^%%$#@@!@#$%^&

அன்னப்போஸ்டு : அதனாலதான் சொல்றேன்....ரியோ ஆடுறது ஃபேவரிஸம் கேம்னு

பில்டரு : (MV : இந்த பயித்தங்கக்கிட்ட வந்து தெரியாம சிக்கிட்டோமோ....? இவனுங்கள நம்பி பேபி ஷிவானிய வேற பிரேக் அப் மோடுல வச்சிருக்கேன்.....! ரைட்டு கூடிய சீக்கிரம் அகிம்சை மோடுல இருந்து அயர்ன் மேன் மோடுக்கு மாறுனாதான் சேஃப்டி போல........) //

இங்குட்டு அர்ச்சனா, சோமன், ரியோ....

அர்ச்சனா : கேபி ஒரு சூப்பர் கணக்கு சொன்னா....! இப்போ அன்னப்போஸ்டு யார நாமிநேட் பண்ணுச்சு ?

ரியோ : சோம் & ஆஜீத்

அர்ச்சனா : பாலா ?

சோம் : உன்னயும், ரியோவையும்....

அர்ச்சனா : : ஆங்.....பாத்தியா ! ஆரி ?

ரியோ : ஆஜீத் ,நானு

அர்ச்சனா : ( MV : இதுல என் பேரே வரலையே ?) ம்ம்ம்ம் அப்போ ஆஜீத் ?

ரியோ : உன்னையும், ஷிவானியையும்....

அர்ச்சனா : அவன் நியூட்டிரல்.....ஏன்னா அவன் நம்ம பையன்...என் புள்ளன்னு சொல்லியிருக்கேன். ஷிவானி ?

சோம் : என்னையும், உன்னையும்

அர்ச்சனா : பாத்தியா....இப்போ யாரு குரூப்பு ? அவனுங்கதான் குரூப்பு...

சோமு : நாமளுந்தான் அவனுங்கள குத்துனோம் ?

அர்ச்சனா : டேய் அது கேமுடா சோமா ! உனக்கு பசிக்குதா ? சோறு ஊட்டி விடவா ?

சோமு : ஆமால்ல....அவனுங்கதான் குரூப்பு

அர்ச்சனா : ஏன் இப்பிடி விளையாடனும் ? அன்பா விளையாட முடியாதா ?

ரியோ & சோமு : ( MV : ம்ம்க்கும்.....நல்லா விளையாடலாம். இப்பிடி சொல்லி சொல்லிதான் ரெண்டு டிக்கெட் காலியாச்சு. அடுத்து நாங்கதான் போல....அன்பு ஜெயிக்குதோ இல்லையோ....நீ ஜெயிச்சிருவ ) ஆமா ஆமா அன்பா விளையாண்டா அம்பானிக்கே பிடிக்கும்......//

ஹமாம் டாஸ்க்கு. ரெண்டு டீமா பிரிஞ்சு ஒரு டீம் பந்த பெண்டுலம் மாதிரி நடந்து வர ஆளு மேல கரெக்டா படுற மாதிரி அடிக்கனும். அர்ச்சனாவும், அன்னப்போஸ்டும் நடுவர்கள். இதுல பில்டர் கூட பஞ்சாயத்துல அர்ச்சனா கொஞ்சம் சலம்ப...கடைசில பில்டர் டீம் வின்னு.

சைலண்டா சப்பாத்தி மாவு உருட்டிட்டு இருந்த ஷிவானிய பிக்கி கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்ட்டு “அப்பறம் ஷிவானி இதுவரைக்கும் எப்பிடி இருந்துச்சு?”ன்னு கேக்க “ஆகா இவன் மறுபடியும் பங்களிப்பு என்னன்னு கேப்பாம் போலயே”ன்னு பயந்து அழுக ஆரம்பிச்சுடுச்சு. தெளிவா சொன்னாதான பிரச்சனைன்னு சொல்லிட்டு, அன்னப்போஸ்டு மெத்தடான அழுகையில் பேச்சு மெத்தட ஃபாலோ பண்ணி பேச....ஒண்ணுமே புரியல. அப்பறம் கொஞ்சம் செண்டிமென்ட் கேள்வி கேட்டு இன்னும் அழ வச்சாப்ல பிக்கி. அப்பறம் வெளிய போக சொல்லிட்டாப்ல. அழுகும்போது ஷிவானி மூஞ்சி “டீனேஜ் ம்யூட்டன்ட் நிஞ்சா டர்ட்டில்” மாதிரி இருக்கு.

ஆரி 3வது ரவுண்டா ரியோ கிட்ட ஏதோ பேச ஆரம்பிக்க “ஆரி, ரியோவ கொஞ்சம் விட்டேன்னா நான் ரெண்டொரு வார்த்தை பேசிக்குவேன்”னு சொல்லி உள்ள கூப்ட்டாப்ல.

அதே கதைதான் ரியோவுக்கும். பாவம் அவனும் அழுதுட்டு இருந்தான். முடிஞ்சதும். “வரதுக்கு முன்ன என்ன செஞ்சுட்டு இருந்தியோ அத கண்டிநியூ பண்ணு”ன்னு சொல்ல.....”வரதுக்கு முன்னாடி என்னயதான் ஆரி செஞ்சுட்டு இருந்தான்”னு டைமிங் ஒண்ணு அடிச்சிட்டு கிளம்பிட்டான் ரியோ.....!

ஆனா ஆபத்துன்றது என்னன்னா இந்த லைன்ல அன்னப்போஸ்டும் இருக்கு. ம்யூட் பட்டன்களுக்கு வேலை காத்திருக்கிறது மக்களே.....!


Comments

  1. அப்பறம் பேருக்கு அன்னப்போஸ்டும், ரியோவும் சமாதானமாகிட்டு கிளம்புனானுங்க. உண்மைய சொல்லனும்னா அன்னப்போஸ்டுக்கு ரியோ ஃபேன்ஸ் மேல பயந்தான். இந்த வாரம் நாமிநேஷன்ல வேற இருக்கு. ஒரு வேளை நாமிநேசன்ல இல்லாம இருந்திருந்தா ரியோவ இந்த வாரம் முழுக்க ரவுண்டு கட்டியிருக்கும். ������ I felt the same. சாதாரணமா சமாதானம் ஆகும் ஆள் கிடையாது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)