பிக்பாஸ் – 4 : நாள் - 66 (09.12.20)

 65வது நாள் தொடர்ச்சி....

உடப்பெடுத்த அணை மாதிரி வீடு பூராம் தண்ணி அங்கங்க வெளியேறுச்சு. நிஷா அழுகை...... அர்ச்சனா அழுகை.....நிஷாவும் அர்ச்சனாவும் அழுகை......அர்ச்சனாவும் நிஷாவும் அழுகை......அழுகை.....குமுறிக் குமுறி அழுகை.....குமுறாம அழுகை.....குலுங்கிக் குலுங்கி அழுகை.....அழுகையோ அழுகை.....அ......ழு......கை......!

அழுதுகிட்டே வெளிய வந்த அர்ச்சனா கிச்சன்ல நின்னுட்டு இருந்த சோமன் கிட்ட

அர்ச்சனா : நாம என்ன விளையாட்டு விளையாடிட்டு இருக்கோம் ?

சோமு : ரோபோட் டாஸ்க்கு....

அர்ச்சனா : இல்ல நாம என்ன மாதிரியான விளையாட்டு விளையாடிட்டு இருக்கோம் ?

சோமு : அதான் ரோபோட்ட டிஃப்யூஸ் பண்ற விளையாட்டு

அர்ச்சனா : டேய் காஜி....இது எமோஷனல் கேள்வி டா....கொஞ்சம் கவனி நாம என்ன மாதிரியான விளையாட்டு விளையாடுறோம்....? அதாவது மனித உணர்வுகள மதிக்காம.....குறிப்பா என் உணர்வுகள....இப்பப் புரியுதா ?

சோமு : அட அதுவா .....! ஆமா ஆமா இதெல்லாம் ரொம்பத் தப்பு

அர்ச்சனா : முடியலடா.....என்னால முடியலடா....எங்க அப்பாவப் பத்தி.....

சோமு : அட நீங்க வேற....என் குட்டுவ பத்தி பேசி என்னயவே அழ வச்சுட்டானுங்க

அர்ச்சனா : யாரது குட்டு ? உனக்கு நெருங்குன சொந்தமா ?

சோமு : அட....குட்டு தெரியாது...? என் நாயி...

அர்ச்சனா : எது ? நீ வளக்குற அந்த பொட்ட நாயா ? டேய்....எங்கப்பன பத்தி அவ பேசிட்டாடா....இது என்னோட சோக எபிசோட்....உன் நாய்க்கு நீ வேற எபிசோட் பாரு....! என்னடா இன்னும் பாத்துட்டு இருக்க ? என்னய கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்லு....

சோமு : அத மறந்துட்டேன்......! ஓகே...ஓகே....! அழுவாத அழுவாத....! பீ ஸ்டிராங்....!//

அப்பறாம் ரியோ வந்து அர்ச்சனாகிட்ட சாரி சொல்லிட்டு....கைல முத்தம் குடுத்துட்டு கட்டிப்பிடிச்சுக்கிட்டான். அப்ப பில்டர் வந்து அவனும் கைல முத்தம் குடுத்துட்டு சாரி சொல்லி கட்டிப் பிடிச்சுக்கிட்டான்.

பின்ன பில்டர் சோமுவ தாளம் தட்ட சொல்லிட்டு கானா பாட ஆரம்பிச்சுட்டான். பில்டருக்குள்ளயும் ஒரு புளியாந்தோப்பு கானா ரவி இருக்குறது இன்னைக்கு தெரிஞ்சது. நல்ல சரளமா வார்த்தைகளப் போட்டு பாடுனான்.

அப்பறம் பஸ்ஸர் அடிச்சு விளையாட்ட ஒத்தி வச்சானுங்க.

கக்கூஸ்ல உக்காந்திருந்த நிஷாகிட்ட அர்ச்சனா வர.....அப்பறம் நடந்தது முழுக்க இன்னும் பேரு வைக்காத சீரியல் தான்.

ரெண்டும் அழுதுகிட்டே வெளிய வந்து நின்னப்ப மழை வர....

அர்ச்சனா :  இங்க பாரு....அப்பா வந்துட்டாரு....

நிஷா : அப்பா சவுக்கியமா ? மேல வசதியா இருக்கா ?

அர்ச்சனா : ஐ லவ் யூ பா

நிஷா : படையலுக்கு வச்ச பாசிப்பருப்பு உசிலி நல்லா இருந்துச்சா ?

அர்ச்சனா : நிஷா ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணாத....! அவருக்கு உசிலி பிடிக்காது. அன்னைக்கு அந்த மசியல்தான உங்களுக்கு பிடிச்சது? ஓ ரெண்டு தடவ சாப்ட்டீங்களா....

நிஷா : அப்பா உங்களப் பத்தி அர்ச்சனாகிட்ட பேசுனதுக்கு சாரிப்பா.....யப்பா சாரிப்பா ! இருக்கீங்களா....அப்பிடியே உங்கள ஒரு வாளியில பிடிச்சு வச்சுக்கிறேன் ?

அந்தப்பக்கமா சோமு வர....

சோமு : ரெண்டு பேரும் பேசிக்கிறீங்களா?

அர்ச்சனா : அப்பா வந்திருக்காருடா.....நாங்க ரெண்டு பேரும் அவருகிட்டதான் பேசுறோம்....நீயும் ஹாய் சொல்லு

சோமு : (MV : அப்பாவா ? மழையப் பாத்து அப்பான்றாளுக ? என்னய வேற ஹாய் சொல்ல சொல்றாங்க்ய....? என்னடா இது காஞ்சுரிங்க் காஞ்சனா படம் மாதிரி ? எதுக்கும் ஒரு ஹாய் சொல்லிட்டு போயிருவோம்) ஹாய் அப்பா...

அர்ச்சனா : என்னடா எங்க போற?

சோமு : இல்ல....அப்பா போக முடியாம அங்க அடச்சுட்டு இருக்கு....அதான் அத எடுத்து விட்டுட்டு வந்துடுறேன்...( MV : எஸ்கேப்புடா சோமா....) //

இங்குட்டு குண்டு ரோபோன்னு பேரு வச்சதுக்கு ஷிவானிக்கு பில்டரு மேல கோவம்....! “யம்மா டாஸ்க்குக்காக சொன்னேன்”னு சொன்னதுக்கு “சரி இப்ப நான் ஒல்லின்னு சொல்லு”ன்னு சொல்ல.....”அது எப்பிடி முடியும்?”ன்ற மாதிரி பில்டரு மூஞ்சிய வைக்க “போடா புண்ணாக்கு பில்டரு”ன்னு போயிருச்சு. அப்பறம் கேமராவப் பாத்து “யோவ்....நான் வாயத்தொறந்தாலே நாசமத்து போயிருது.....என்ன கருமமோ”ன்னு கதறிட்டு இருந்தான். அங்குட்டு வந்த ரியோ கிட்டையும் அனத்துனான்.

பின்ன அதுகிட்ட சாரி கேட்டுட்டு வந்தான். வர வர பண்டாரச் செட்டி மடத்து ஆள் மாதிரி ஆகிட்டு வரான் பில்டரு. அவன் பணிவு என்ன....கணிவு என்ன....மரியாதை என்ன.....விட்டா வேலைப் பிடித்தது என்ன என்ன...மயிலில் அமர்ந்தது என்ன என்னன்னு பட்டினத்தார் ரேஞ்சுக்கு மாறிடுவான் போல.

நைட்டு சோமன கூப்ட்டு அர்ச்சனா “எங்கப்பனுக்கு என்னய பிடிக்காதுன்னு நெனச்சா அவரு செத்தப்பறம் பர்ஸ் எடுத்துப் பாத்தா என் ஃபோட்டோ இருக்கு.....என்ன பாசம் பாத்தியா.....அங்க பாரு நிலா”ன்னு காமிக்க....! சோமன் சுதாரிச்சு “அப்பா சிரிக்கிறாருல்ல”ன்னு சொல்ல....அங்குட்டு வந்த பில்டரு “என்ன நிலா அழகா இருக்குன்னு பாக்குறீங்களா?”ன்னு கேக்க.....”நிலாவா ? அது அப்பாடா”ன்னு அர்ச்சனா சொன்னதும்....அவன் முழி முன்னூறு கோணலாச்சு.....!

66வது நாள்

ராஜாளி நீ காலி பாட்டு அலாரம்.

வெளிய உக்காந்து ஆரி பில்டருகிட்ட “ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணதால அவனுங்க செட்டு யாரும் அர்ச்சனாவ ஒர்ஸ்ட் பர்ஃபார்மர்னு சொல்ல மாட்டனுங்க....நீயும், நானுந்தாண்டி போகப்போறோம்”னு பொலம்பிட்டு இருந்தாப்ல. பில்டர் கோவப்படுவான்னு எதிர்பாத்திருப்பாப்ல ஆனா அவன் “பொறுமையே பெருமை.....புயலடிச்சாலும் நான் எருமை”ன்ற ரேஞ்சுலதான் இருந்தான்.

அப்பறம் டிஃப்யூஸ்டு ரோபோக்கு சில ஃபன் டாஸ்க்க குடுத்து சிரிச்சு விளையாடிட்டு இருந்தானுங்க.

கிச்சன்ல இருந்த அர்ச்சனாகிட்ட அன்னப்போஸ்டு வந்து ஏதோ கேக்க “அதெல்லாம் பாஸி ரோபோட் கரெக்டா பண்ணுவேன்”னு சர்காஸம் பண்ண....”ஏங்க டாஸ்க்குல வச்ச பேருக்கு ஏங்க கோவப்படுறீங்க ? சும்மா கோவப்படலேன்னு சொல்லாதீங்க....வெளிய காட்டாம கோவப்படுறீங்க”ன்னு தட்டக் கழுவிக்கிட்டே பேச, அங்க வந்த பில்டரு “இவளும் தனியா பேசுறா கேட்டா அவ புருஷன் கிட்ட பேசுறேன்னு சொல்லுவாளோ?”ன்னு பயந்துகிட்டே “யம்மா நீ தனியா பேசிட்டு இருக்க”ன்னு சொன்னான். “அதெல்லாம் கேக்க வேண்டியவங்களுக்கு கேக்கும்”னு மறுபடியும் ஆரம்பித்தது அன்னப்போஸ்டு.

“பாஸி பாஸின்னு ரொம்பப் படுத்துறானுங்க. இந்த அன்னப்போஸ்டுக்கு சோம்பேறி விஷப்பூச்சின்னு பேரு வைப்போம்”னு சொன்னது யாருன்னா நம்ம முன்னாள் அடிமை சோமன்.

கேபி கிட்ட ஆரி பேச ஆரம்பிச்சார்.....பேசுனார்.....பேசுனார்.....பேசுனார்.....

பஸ்ஸர் அடிச்சு டாஸ்க் முடிஞ்சது. ஆரி அப்போதான் நிப்பாட்டுனார். பின்ன அர்ச்சனா குரூப்பு சேந்துகிட்டு ஆரியப் பத்தி பொரணி பேசுனானுங்க.

“நாளைக்கு அந்த டீம வச்சு செய்வோம்”னு சொன்னது அர்ச்சனா. இனிமே அர்ச்சனா அன்னை அர்ச்சனா இல்ல....வெறும் அர்ச்சனாதான்.

இப்ப இவனுங்க முறை. “பில்டரையும், ஆரியையும் விட்டுட்டு மத்தவங்கள டார்கெட் பண்ணுவோம்”னு ப்ளானெல்லாம் பண்ணி ரெடியானா பில்டரு வெளிய வந்ததுமே சிரிச்சுட்டான். அடுத்த 5வது நிமிஷத்துல கோவப்பட்டான்னு சொல்லி அடுத்த ஹார்ட்டும் அவுட்டு. இந்தப்பக்கம் அர்ச்சனா எத தப்புன்னு சொல்லி.....அழுது....மன்னிச்சு முடிச்சாங்களோ அதயே வச்சு நிஷாவ அவுட்டாக்குனாங்க. அஜீத்தும் அவுட்டு.....!

இப்பிடியாக முடிஞ்சிருக்கு.....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)