பிக்பாஸ் – 4 : நாள் - 63 (05.12.20)

 பச்சை பச்சையா கேக்கப் போறாருன்ற குறியீடான்னு தெரியல, பாசிப்பயறு கலர்ல ஒரு காஸ்ட்யூமோட வந்தார். ஆனாலும் ஆண்டவர் எப்பவுமே ஒரு ஸ்கூல் யூனிஃபார்ம் பேட்டர்ன ஃபாலோ பண்றது தெரியுதா ? மேட்சிங் மேட்சிங்காதான் ட்ரெஸ்ஸு போடுறாரு.....

“மண்ணும் மழையும் முக்கியம்....ரெண்டும் இல்லேன்னா இருக்குமா சவுக்கியம் ? மண்ணு மரமாகும், வீடாகும், சாமியாகும், சாப்பாடாகும். அந்த சாப்பாட செய்யுற விவசாயிகள மறக்கக் கூடாது. இதெல்லாம் ஏன் இன்னைக்கு சொல்றேன்னா இன்னைக்கு மண் தினம். சோ உண்ணும் போது மண்ணை நினை....மதுரைல இருக்கு வைகை அணை”ன்னு சொல்லிட்டு.....”ஆனா நாம என்னதான் சொன்னாலும் ஒரு மண்ணும் புரியாம அவனுங்க போக்குக்குதான் உள்ள இருக்கானுங்க. நடந்தது என்னன்னு பாப்போம்”னு சொன்னார்.

61வது நாள் தொடர்ச்சி....

உள்ள போயிட்டு வந்த குரூப்பு ஜித்து, சோமன், கேபி, ஆஜீத் எல்லாம் ஒண்ணா உக்காந்து உள்ள தங்களுக்கு ஏற்பட்ட கடும் அவமானத்த ஏதோ காமெடி படத்துக்கு போயிட்டு வந்த மாதிரி சொல்லி சொல்லி சிரிச்சிட்டு இருந்தானுங்க. ரம்யாவும் அதே மாதிரி காமெடி பண்ணாங்க.....!

பிக்பாஸ் கேமரா & எடிட்டிங் டீம்....

டீம் : டைரக்டர் சார்....இவனுங்க எப்பப் பேசி முடிக்க ? கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க சார்.....ரொம்ப டயர்டா இருக்கு....

டைரக்டர் : சரி....பக்கத்துல ரூம்ல பிக்பாஸ் இருப்பாரு அவர கூப்டு....

பி.பா : என்ன டைரக்டர்....என்னய ஆள் விட்டு கூப்டுறீங்க ?

டைரக்டர் : சார் பசங்க தொங்குறானுங்க. எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு ரெஸ்ட் வேணும்....ஏதாச்சும் பண்ணுங்க

பி.பா : சரி...அடுத்து அனிதாவ கூப்டுங்க....நானும் அந்த ஒரு கேள்விய மட்டும் ரெக்கார்ட் பண்ணிட்டு வந்துடுறேன்.....எல்லாத்தையும் ஆன் பண்ணி வச்சுட்டு எல்லாரும் போயிடலாம்.....ஒரு 3 மணி நேரம் பிரேக் கிடைக்கும்....! சரியா ? //

கருப்புக்கலர் நாய கழுத்துல மிதிச்சா எப்பிடி சவுண்டு வருமோ அப்பிடி ஒரு சவுண்டு. என்னடான்னு பாத்தா அன்னப்போஸ்டோட அக்மார்க் சிரிப்பு அது. வெளிய இருந்து எவனும் கேட்டான்னா.....யாருக்கோ இழுத்துட்டு இருக்குன்னு ஊத்துறதுக்கு பாலோட வந்துருவானுங்க. உள்ள வந்ததும் “என்னா பிக்பாஸ் டாக்டர் செக்கப்புக்கு டார்ச் லைட்டுதான் போடுவானுங்க. நீங்க என்ன குண்டு பல்ப போட்டுருக்கீங்க?”ன்னு ஒரு அறிவுசார் கேள்விய கேட்டுச்சு. அங்க யாரும் இருந்தாதான பதில் சொல்றதுக்கு. பி.பா ரெக்கார்ட் பண்ண கேள்வி ஆடியோல வந்துச்சு.....

அன்னப்போஸ்டு: மகிழ்வித்துமகிழ்இங்கஉள்ளவந்துமகிழ்சியாஇருக்கம்கிழ்ச்சியாஎல்லாவிஷயத்தையும்ழ்ச்சியாவேபண்ணியிருக்கேன்மகிழ்ச்சிக்கேமகிழ்ச்சிவரஅளவுக்கும்சிலமகிழ்ச்சியானவிஷயங்களபண்ணியிருக்கேன்பாக்குறமக்கள்மகிழ்ச்சியாஇருக்கபலமகிழ்ச்சியானசண்டைபோட்டுருக்கேன்மகிழ்சியாஅழுதுருக்கேன்மகிழ்ச்சியாகேப்விடாமபேசியிருக்கேன்மகிழ்ச்சியாசோமனஅடிமையாவச்சிருந்தேன்மகிழ்ச்சியாமகிழ்ச்சியாய்ருந்தேன்பிக்பாஸ்டாஸ்க்குடுத்தாமகிழ்ச்சியாசெய்வேந்ஸ்ட்வ்குஎய்க்ர்ட்லிப்வ்ல்ச்ஜ்ன்வ்ஒய்ப்ஹேஒஹ்பொசிப்ஸ்க்ல்ச்ச்ச்ஸ்க்ட்ஜ்ப்ஷ்வ்ப்ஸ்ப்வ்ல்ஜ்ப்ல்ஸ்ப்ஹிவ்ஸ்ல்வ்க்ல்ன்க்ஷ் ந்சிவ்ஹ்ஜியோக்ஜ்ஹ்ஸ்வுற்ற்யெச்பொய்வ்ஃபிஉவ்ஹுப்வ்ஜ்ஹ்க்ழ்ம்க்ஷ்னகுவ்துஎய்ஃப்குடொய்ஹௌவ்ப்ஜ்க்ஹ்ட்க்ப்ஸ்க்ட்க்ஃபுய்கிஉக்வொய்வ்ப்ல்ஜ்வ்ப்ம்ன்க்க்புடெய்ஃப்ஃஇஎய்க்வோஉப்....................................

பி.பா : ஏய் எந்திரிங்கப்பா எல்லாரும்.....4 மணி நேரமாச்சு.....உள்ள என்னாச்சுன்னு தெரியல

அன்னப்போஸ்டு : ஜய்வுட்வெவ்குவிஎய்க்க்ய்ஃப்ஹ்வ்ழ்ப்ம்ன்ப்ழ்க்டுவ்ய்ஃரெபிஉய்ற்ற்பிஸ்ய்ர்ஃப்ப்ட்க்வ்வழ்ஜ்ஸ்ப்ஹ்கிஉஎஹ்கொல்வ்க்ன்ப்ன்பொக்க்ஞ்ச்வ்ர்வ்ஃஅட்குக்வ்சிஉஹ்ஸ்ப்வ்லொட்ஜ்ச்சொஃப்பிஹ்ல்ஜ்மகிழ்ச்சின்ரதுமகிழ்ச்சியாய்ருக்கௌருவாக்கப்பட்டதுஇப்பல்லாம்நான்பேசுறதேய்ல்லகம்மிபண்ணிக்கிட்டேன்....

பி.பா : சீக்கிரமே எந்திரிச்சு வந்துட்டோம் போல.....! பஸ்ஸர் அடிங்கடா மொதல்ல.....! அனிதா நீங்க தயவு செஞ்சு வெளிய போங்க.....//

வெளிய வந்த அன்னப்போஸ்ட இவனுங்க ரவுண்டு கட்டி “என்ன சொன்னாரு?”ன்னு கேக்க....” என்னய எதுவுமே சொல்லலயே....நான் பேச வேண்டியத சுருக்கமா பேசிட்டு வந்துட்டேன்”னு சொல்லுச்சு. அங்குட்டு இருந்து ஷிவானி “பேசுனது அன்னப்போஸ்டுன்னா பிக்பாஸன் குறுக்க வருவானா என்ன”ன்னு கவுண்டர் குடுத்துட்டு போச்சு. பிள்ளைக்கும் காமெடி வருது.

“இவனுங்ககிட்ட கேக்க எனக்கும் கேள்விகள் நெறைய இருக்கு வாங்க கேப்போம்”னு போனார்.

மாதமிருமுறை நாழிதழ் மாதிரி 2 வாரத்துக்கு ஒரு தடவை ரெய்டு வாங்குவான் பில்டரு. இந்த தடவ அவன் மேல அவனே அவன் செருப்ப எடுத்து அவன அடிச்சுக்கிட்டது, கேப்டன்ஸி டாஸ்க்குல அவன் அடுத்த கலர் க்யூப அடிக்கல....ஆரிதான் மாத்தி மாத்தி பேசிட்டாருன்னு சொன்ன ரெண்டு கேஸும் தான் இன்னைக்கு முக்கியமா இருந்துச்சு. அதுபோக சோமனையும், நிஷாவையும் குத்துனது கூட சிறப்புதான்.

“பில்டரு செஞ்சது வன்முறையின் விளிம்பு....ஒரு பொண்ண அப்பிடி பண்ணக் கூடாது. அப்பிடி ஒரு சம்பவம் நடக்கும்போது வீட்ல உள்ளவனுங்க எல்லாரும் எத்தியோப்பியால எள்ளு முட்டாய் நல்லா இருக்குமாமேன்ற மாதிரி கூலா பேசிட்டு இருந்தது ஆச்சர்யம். குறிப்பா அன்னை அர்ச்சனாவோட அன்பு அன்னைக்கு மெடிக்கல் லீவுல போயிருச்சு”ன்னு கலாய்ச்சார். அன்னைக்கு என்ன கவலைன்னா அதே நேரத்துல அன்னை நிஷாகிட்ட “சைனா மாதிரி இப்பிடி சண்டை போட்டு பொஷிஷன் வாங்குறதுக்கு நானெல்லாம் தூக்குல தொங்கிருவேன்”னு சொன்னத கேட்டுருவானுங்களோன்ற கலக்கம். ஆனாலும் அவசர அவசரமா “தண்ணிக்குள்ள காத்த விட்டு.....காத்துக்குள்ள தண்ணிய விட்டு”ன்னு என்னமோ உளறுச்சு. இதுல பில்டருக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே ஏறு விழுந்துச்சு.

பின்ன “மன்னிப்பு கேட்டா ட்ராமாவாகிடும்”னு சொன்ன பில்டருக்கு பதிலா ஆண்டவரே மன்னிப்பு கேக்க, பதறி எந்திரிச்சு பில்டர் “நானே கேக்க்குறேன்”னு மன்னிப்பு கேக்க, “இல்ல ஃபீல் பண்ணி கேக்கலேன்னா இது எனக்கு வேணாம்”னு சனம் சொன்னதுக்கு, “சரி, ஃபீல் பண்ணி கேட்டா, கால்ல விழுந்தாதான நல்லாயிருக்கும்னுவ அப்பறம் மல்லாக்க விழுந்து மன்னிப்பு கேட்டா புதுமையா இருக்கும்னுவ, நீ கடைசி வரைக்கும் திருப்தியாக மாட்ட....உன் சைடுக்கெல்லாம் வர முடியாது...அவன் கேட்டான் எடுத்தா எடுத்துக்கோ இல்ல நாசமாப் போ”ன்னுட்டார். இதையே பில்டருக்கும் சொன்னார். “உனக்கு முன்னாடி கைய நீட்டி பேசுனா மட்டும் பதிலுக்கு கால நீட்டி பேசுற...ஆனா மத்தவனுங்கள மட்டும் மதிக்காம சுத்துறது நியாயமில்ல. குறிப்பா பெண்கள் மேலையெல்லாம் வன்முறைன்னு வந்தா பாத்துட்டு சும்மா இருக்க முடியாது. நல்லது சொல்றேன் கேட்டா கேளு இல்ல கேவலப்படு”ன்னுட்டார்.

அடுத்த கேஸு கேப்டன்ஸி டாஸ்க். குறும்படம் போட்டு குறுக்க உடைச்சார். “ஆரி உனக்கு எதிரா செய்வான்ற மைண்ட் பிளாக்தான் பிரச்சனை அத எடுத்துரு. நல்லா வருவ”ன்னு முடிச்சார். பில்டர் அப்பறம் பொத்தாம் பொதுவா எல்லாத்துக்கும் ஒரு மன்னிப்ப கேட்டுக்கிட்டான்.

பிரேக்ல ஆரி & ரியோ

ஆரி : நல்ல வேலை குறும்படம் போட்டு உண்மைய உடைச்சாரு

ரியோ : ஆமா ஆமா.....தப்பிச்சோம்

ஆரி : இல்லேன்னா உங்களையும் என்னையும் தப்பா நெனச்சிருப்பான்

ரியோ : இல்ல....என்னய அவன் நம்புறேன்னு அன்னைக்கே சொல்லிட்டான்...உங்களாதான் நம்பாம இருந்தான்

ஆரி : இல்ல ரியோ....உங்களையும் அவன் நம்புன மாதிரி தெரியல...

ரியோ : அவனே இல்லன்னு சொல்லிட்டாங்க

ஆரி : அப்பிடி நெனைக்காதீங்க....அவனோட மைண்ட் செட் பாத்தீங்கன்னா

ரியோ : ப்ரோ....இதுக்கு நீங்க அவெஞ்சர் டீமுக்கு வரியான்னு நேரடியாவே கேட்டிருக்கலாம். ஆனா லவ் பெட்டுல நல்ல பொஷிஷன்ல இருக்கேன்....இந்த தடவ இன்சென்டிவா இன்னும் 2 மணி நேரம் எக்ஸ்ட்ரா அன்பு தரேன்னு சொல்லியிருக்காங்க அன்னை.....சோ கம்பெனி மாறுர ஐடியா இல்ல....சாரி //

சோமன் – கேபி கால் செண்டர் கதைக்கு வந்தார். “பேசி வச்சு செஞ்சா மாதிரி இருக்கு. டேய்...சோமா தனியா விளையாடுற மாதிரி ஒரு ஐடியாவே உங்கிட்ட இல்ல. இதுல ரொம்ப மெச்சூர்டு ஆளு மாதிரி சீன் போடுற. இது நல்லதுக்கில்ல”ன்னார்.

“அப்பறம் நிஷா...! வெளிய உன் வீடியோலாம் பாத்தேன் அவ்வளவு அருமையா இருக்கு. இங்க உள்ள என்னடான்னா எதுக்கு வந்தோம்ன்றதயே மறந்துட்டு வீட்டு வேலை பாக்குற ஆயா மாதிரி திரியுற. பாத்துக்கோ”ன்னார்.

பிரேக்ல.....

ரம்யா : உங்க அந்த புத்திசாலித்தனத்த காட்ட சொல்றாரு

நிஷா : அதான் தெளிவா புரியுதே.....

அர்ச்சனா : உன்னோட அந்த காமெடிய, உன் தனித்துவத்த காட்ட சொல்றாரு

நிஷா : அதான் தெளிவா புரியுதே.....

ரியோ : உன் புத்திசாலித்தனம் கலந்த காமெடிய எதிர்பாக்குறாங்க

நிஷா : அதான் தெளிவா புரியுதே.....

ரியோ : வேற என்ன குழப்பம் ?

நிஷா : ஆனா ஏன் அப்பிடி சொன்னாருன்னுதான் தெரியல

ரியோ : அதாம்பா.....உன்னோட அந்த பட்டிமன்ற ஆளுமை இருக்குல்ல அத சொல்றாரு

நிஷா : அதான் தெளிவா புரியுதே.....

ரியோ : என்னய பாத்தா கேனயன் மாதிரி இருக்கா ?

நிஷா : அதான் தெளிவா புரியுதே.....//

பின்ன “கால் வராத சனத்துக்கு இப்ப யாரு கால் பண்றீங்க?”ன்னு கேட்டு ரமேஷ கால் பண்ண வச்சார். சம்பிரதாயத்துக்கு பேசுனானுங்க.

அடுத்த பிரேக்ல....

அன்னை அர்ச்சனா : சனம் எல்லார் சார்பாவும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்....

சனம் : அட நீங்க ஏன் கேக்கனும் ? அவனதான என் காலுல விழ வச்சிருக்கனும்

அன்னை : கேக்க சொல்லதான் முடியும்....கேக்குறது அவன் இஷ்டம்

சனம் : அப்போ எனக்காக நீங்க பேசாதது தப்புதான ?

அன்னை : அதுக்குதான் மன்னிப்பு கேட்டேன்....

சனம் : அட நீங்க ஏன் கேக்கனும் ? அவனதான என் காலுல விழ வச்சிருக்கனும்

அன்னை : இவள பில்டர் எப்பிடி இன்னும் உயிரோட வச்சிருக்கான்னு தெரியலயே......//

பின்ன “கால் செண்டர்ல போயி உக்காருங்க. யாரு சேவ்டோ அவங்க மேல ஸ்பாட் லைட் அடிக்கும்”னு சொன்னாப்ல. ஆரியும், ரம்யாவும் சேவ்ட்.

ரம்யா சேவ் ஆனதுல கேபிக்கு செம்ம காண்டு. அது சோமு மேல இருக்குற டிராக்காலயான்னு தெரியல. “ரம்யா இங்க எதுவுமே பண்ணல”ன்னு கேபி சொல்றதுதான் இந்த எபிஸோடின் பெஸ்ட் காமெடி. இதக் கேட்ட சோமன் மூஞ்சி ஜிஞ்சர் தின்ன பந்தர் மாதிரி போனதோட முடிஞ்சது.

இன்னைக்கு ஆண்டவர் ஒரு நல்ல எபிஸோட குடுத்த திருப்தி. அவரே கூட சொன்னார். எனக்கு இது பர்சனல் இல்ல. எனக்கு யாரும் ஃபேவரைட்டும் இல்ல. எந்த நேரத்துலையும் நான் என் கண்ணியத்த விட்டுக் குடுத்தது இல்ல. மத்த பிக்பாஸுல இத பண்றாங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா நான் முடிஞ்சவரை டீசண்டா நிகழ்ச்சிய நடத்தப் பாக்குறேன் அவ்வளவுதான்னு சொன்னது 100% உண்மை. சூப்பர் ஆண்டவரே.....!


Comments

  1. Aft vikatan review oly... U r review cmng...
    So i also copying vikatan

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)