பிக்பாஸ் – 4 : நாள் 70 (13.12.20)
ஜித்து வெளிய போனதும். ஜெயில்ல இருந்த நிஷாகிட்ட அர்ச்சனா “அடியே 5 மணி நேரமா இருந்தாலும் அலுக்காம மசாஜ் பண்ணிக்குவாரே....50 டிகிரி சாஞ்சபடியே சங்கடமில்லாம கிடப்பாரே....அந்த அன்பு ஆத்மா வெளிய போயிடுச்சுடி”ன்னு அழுக, “போயிட்டாரா ? கடைசியா இந்த முகத்த பாக்காமயே போயிட்டாரா ? அவ்வளவுதான ? போச்சா?”ன்னு அது பங்குக்கு பொலம்ப...லவ் பெட்டு ஒண்ணா சேர்ந்து ஒப்பாரி வச்சானுங்க.
இங்குட்டு ரம்யா,
அன்னப்போஸ்டு, ஆரி, ஆஜீத், பாலா உக்காந்து பேச. “இதுக்குதான் சொன்னது...சட்டை கசங்காம
சண்டை போடனும்னா முடியுமா ? விளையாடுங்கடான்னு உள்ள அனுப்புனா....... இங்க வந்து விக்ரமன்
சார் படம் காமிச்சிட்டிருந்தா சும்மா விடுவானுங்களா ? இதோ போச்சுல்ல மொத்தமா ! இன்னொரு
விக்கெட்டும் அங்கயே விழுந்துச்சுன்னா விநாயகருக்கு அபிஷேகந்தான்”னு ஹாப்பி மோடுல அனத்திட்டு
இருந்துச்சு. ரம்யாவும், “கூட்டமா திரியாதீங்க கூண்டோட கைலாசம்னு சொல்லிட்டே இருந்தாரு.....இன்னைக்கு
செஞ்சுடுவானுங்க போல”ன்னு சிக்னல் குடுத்துச்சு. “என்னடா பில்டரு நீ எதாச்சும் சொல்லு”ன்னு
சொன்னதுக்கு “மனுஷன் இன்னைக்கு இருப்பன். நாளைக்கு இருக்கமாட்டான் இதுக்கா இவ்வளவு
ஆட்டம்?”னு அறிவானந்த அடிகாளாராட்டம் பேச....”ம்ம்க்கும் இவன லைனுக்கு கொண்டுவரது பெரிய
பாடு போல”ன்னு நெனச்சுக்கிட்டானுங்க.
“நிஷா போயிடுவாளா?”ன்னு
அர்ச்சனா ரியோ கிட்ட கேக்க....”போறது நிச்சயம்....இல்லேன்னா அடுத்த வார நாமிநேஷன் லட்சியம்”னு
சொன்னான். சோமனோ “அங்க பாரு கொஞ்சம் கூட வருத்தப்படாம வட்டமா உக்காந்து வண்டிசோலை சின்ராசு
பாட்டு பாடிட்டு இருக்கானுங்க. சோ பேடு”ன்னான். ஏண்டா உங்க வீட்டு ஆளு போறதுக்கு அவனுங்க
ஏண்டா அழுகனும் ? சுச்சி போனப்ப உங்க குடும்பத்துல இருந்து ஒருத்தனும் பக்கத்துல கூட
வரலயே ? கவர்மெண்ட எதிர்த்ததால காலாபாணி சிறைச்சாலைக்கா போறாப்ல....? எவனும் ஓட்டுப்போடாம
எவிக்ஷன்லதான போறாப்ல. அதுக்கு ஊரே அழுகனுமா ?
அன்னப்போஸ்டும்
பில்டரும்....”ஏதோ நாம ரெண்டு பேரும் இவனுங்கள எதிர்த்து கேக்குறதால இவனுங்க டீம் உடஞ்சது
இல்லேன்னா அவ்வளவுதான் இவனுங்க அன்பு அட்டிராசிட்டி அநியாயத்துக்கு ஓவர் ரேட்டட் ஆகியிருக்கும்”னு
பேசிட்டு இருந்தாங்க. அன்னப்போஸ்டுக்கோ “இவன் பழைய ஃபார்ம்ல இருப்பான்ற நம்பிக்கைல
ஊருக்குள்ள உரண்டை இழுத்துட்டு இருக்கேன். ஆனா இவன் நடந்துக்குறத பாத்தா இந்த கிறிஸ்துமஸ்க்கு
சிலுவை ஏறிடுவான் போல.....ஆரிய நம்பி 5 நாள் கூட இருக்க முடியாது....இங்குட்டு என்னய
ஏத்தி விட்டுட்டு உள்ள போயி நான் பண்றது சரியில்லன்னு நாமிநேஷன் பண்ணி விட்டுருவாப்ல”ன்னு
கவலை பட்டுட்டு இருந்துச்சு.
ரியோ கேபிட்ட....”நான்
இந்த வாரம் முழுக்க நிஷாவ சப்போர்ட் பண்ணவே இல்ல....ஆனா இவனுங்க அப்பிடி பேசிப்பேசியே
கேஸ எம்மேல திருப்பிட்டானுங்க. விட்டா இவனுங்க பண்ற இம்சையில போன வார நாமிநேசன்ல கூட
நிஷா பேர சொல்லிட்டு வந்துருவேன்”னு சொல்லிட்டு இருந்தான்
நிஷாவ ரிலீஸ்
பண்ணானுங்க.
அன்னப்போஸ்டு
ஆரிகிட்ட
அன்னப்போஸ்டு
: இந்த அர்ச்சனாவெல்லாம் வந்த நாளுல இருந்து முகமூடியோட சுத்துது....அத எவனும் கேக்க
மாட்டேங்குறான்
ஆரி : அவங்க
வந்தப்ப இருந்த முகத்த விட....ரெண்டாவது நாளுல இருந்து அவங்க காட்ட ஆரம்பிச்ச முகத்த
பாத்து அவங்க பாடி லேங்குவேஜ் படி அவங்கள வாட்ச் பண்ணதுல எனக்கு தெரிஞ்சது அவங்க போட்டுருக்குறது
முகமூடி தான்
அன்னப்போஸ்டு
: இதத்தான நானும் சொன்னேன்.....வர வர லெங்த்தா பேசுறதுல எனக்கே டஃப் குடுக்குற //
கர்ணன் பட கிருஷ்ண
பரமாத்மா மாதிரி இப்பதான் ஆண்டவர் எண்ட்ரி. “தனித்தன்மையோட இருக்குறது முக்கியம். எங்க
வீட்ல ஒரே கலர்ல சட்டை துணிமணி எடுக்க மாட்டானுங்க. இவனுங்க என்னன்னா ஒரே கிளாஸ்ல
9 ஸ்ட்ரா போட்டு பால் குடிக்கிறானுங்க. வாங்க போய் என்னன்னு கேப்போம்”னு உள்ள போனார்.
“இன்னைக்கு
70வது நாள்”னு சொல்லி முடிக்கிறப்பதான் பில்டரு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மாதிரி வந்து
சேர்ந்தான். “நல்ல வேளை இப்பவாச்சும் வந்தியே உக்காரு”ன்னு சொல்லிட்டு. “கேக்குறதுக்கு
முன்னமே சொல்லிடுறேன் உங்க ட்ரெஸ்ஸெல்லாம் நல்லாயிருக்கு. அப்பறம் பேசும்போது இடைல
மறிச்சு கேப்பீங்க”ன்னு சொன்னார்.
“சரி ரோபோ டாஸ்க்
டீமா பிரிஞ்சு உக்காருங்க”ன்னு சொன்னாப்ல. “சரி டீம்ல எவனும் லைன் அடிச்சதா யார் மேலையும்
சந்தேகம் இருந்துச்சா?”ன்னு கேட்டதுக்கு பில்டரு “நம்ம ரியோ மேலையும் , நிஷா மேலையும்
சந்தேகம் இருந்துச்சு...ஏன்னா பேரு வைப்போம்னு சொன்னதுக்கு ரியோ வேணாம்னு சொன்னான்.
அதனாலதான் சந்தேகம் மத்தபடி அது கன்ஃபார்மா தெரியல”ன்னான்.
அதுக்கு ரியோ
“பேரு வச்சா ஸ்ட்ராங்காகிடுவானுங்கன்னு தோணுச்சு. அதான் வேணாம்னு சொன்னேன். மத்தபடி
இவனுங்கள எப்பிடி கூப்ட்டாதான் என்ன?”ன்னு பொலம்புனான்.
இதுல அர்ச்சனாகிட்ட
கேட்டதுக்கு “எங்க டீம் சொக்கத்தங்கம்....ஆனா எனக்கென்னமோ பில்டருதான் அவங்க டீமுக்கு
துரோகம் பண்ணிட்டானோன்னு தோணுது....எனக்கு முட்டைய வாயில ஊத்தியிருக்கலாம்”னு சம்பந்தமில்லாம
உளறுச்சு. இதுல ரியோ கையத் தூக்க “நீயா வந்து மாட்டுற பாத்தியா ? சரி கேபிக்கு ஏன்
சிக்னல் குடுத்த?”ன்னு கேட்டதும் உப்புப் போட்ட கேசரிய சாப்ட்ட மாதிரி முகம் முண்ணூறு
கோணலா போக....! “அது வந்து....அது வந்து அப்பவே சிரிச்சுட்டா நீ தப்பிச்சன்னு சொல்லி
சிரிக்க வைக்குறதும் ஒரு ஸ்டார்டஜிதான?”ன்னு குமைய....! “என்னத்த சர்தார்ஜியோ....நல்லா
உளரு”ன்னு சொன்னார்.
ஆரியும் “ஆமா
நிஷா மேலையும் ரியோ மேலையும் எனக்கு டவுட்டுதான் ஆல்ரெடி ஃபோன் டாஸ்க்குல ஆஜீத்துக்கு
சகாயம் பண்ணவந்தான. இதுலையும் அத செய்வான்னு நெனச்சேன்.....இதோ நீங்களே சொல்லிட்டீங்க
பாருங்க”ன்னு பல்லக்காட்டி பேசுனார்.
“சரி ஜித்து போனதுல என்ன உங்க ரியாக்ஷன்?”னு கேட்டதுக்கு.
“அவன் போலன்னாதான் ஆச்சர்யம்”னு சொன்னானுங்க. அன்னப்போஸ்டோ “காலையில எழுப்பி, குளிப்பாட்டி,
சாப்பாடு ஊட்டி, கை கால் பிடிச்சு, சாயங்காலம் ஸ்னாக்ஸ் குடுத்து, நைட்டுக்கு கால்
அமுக்கிவிட்டா அவனுக்கு எப்பிடி விளையாடனும்னு எண்ணம் வரும்? வர ஆளுகளப் பூராம் இப்பிடி
கெடுத்து வச்சுடுறானுங்க. ந்தா....அங்க சோமுன்னு ஒருத்தன் இருக்கான். தினமும் உக்காந்து
ஸ்ரீ அன்பே ஜெயம்னு 1000ம் தடவ எழுதிட்டு இருக்கான். இப்பிடி இருந்தா வெளியதான் போகனும்”னு
சொல்லுச்சு.
“சரி யாரிங்க
முகமூடி போட்டிருக்காங்க?”ன்னு கேட்டதுக்கு. “முகமூடியா ? அதெல்லாம் மிஷ்கின் எடுத்தப்ப
பாத்தது.....அதப்பத்தி நமக்கு ஒண்ணுமே தெரியாதுங்க”ன்னு பில்டர் சொல்ல....”ஏண்டா இது
என்ன கேம் சேஞ்சா இல்ல மைண்ட் சேஞ்சா?”ன்னு கேக்க....”மைண்ட் சேஞ்சே நல்லாயிருக்கு
அதையே வச்சுக்கோங்க”ன்னு சொல்லிட்டான். மத்த யாரும் “அப்பிடியெல்லாம் இல்ல”ன்னு சொல்ல.
இப்பவும் அன்னப்போஸ்டு “அதெப்பிடி இல்லாம அதான் ரியோவும், நிஷாவும் போட்டுட்டு சுத்துறானுங்களே”ன்னு
சொல்லுச்சு. ஆரி ப்ரோவும் “ஆமாமா நிஷாவும், அர்ச்சனாவும் போட்டிருக்காங்க”ன்னு போட்டுக்குடுத்தார்.
“சரி நான் பிரேக்
போயிட்டு வரதுக்குள்ள டாப் 2 ல இவனுங்க வரவே மாட்டானுங்கன்னு நெனைக்கிற ரெண்டு பேர
பேப்பர்ல எழுதி வைங்க”ன்னு சொல்லிட்டு போனார்.
இப்போ கேபி
ஆரி ப்ரோவ பிடிச்சிக்கிச்சு. “இப்ப அவன் சொன்னதால என்ன வந்துச்சு ? உலகம் அழிஞ்சிருச்சா
? சோமன் டவுசர் கிழிஞ்சிருச்சா ? என்ன பிரச்சனை உனக்கு?”ன்னு கேக்க, “நான் கேட்டது
ரியோகிட்ட....ஆனா நீ துள்ளிக்கிட்டு வரது எங்கிட்ட”ன்னு விரட்டி விட....! “அய்யய்யோ
இவரு மட்டும் எல்லா இடத்துலையும் போயி பேசுவாராம் நாங்க பேசக்கூடாதாம்னு....அப்பிடி
போனவன் அப்பிடி போனானாம்....இப்பிடி போனவன் இப்பிடியே போனானாம்”னு வடிவுக்கரசி மாதிரி
கைய ஆட்டி பேசிட்டு இருந்துச்சு. ரியோ செம்ம மொக்கை காரணாம்லாம் சொல்லி அவன அவனே முட்டாள்னு
சொல்லிட்டு இருந்தான். இதுக்கும் உள்ள வந்து “பொறுமையே பெருமை”ன்னு பில்டர் சமாதானம்
செஞ்சுட்டு இருந்தான்.
ஆண்டவர் வந்தாரு.
“எங்க வாசிங்க?”ன்னு சொன்னதும் ஒவ்வொருத்தனா எழுந்து சொன்னானுங்க. பெரும்பாலும் ஷிவானி,
நிஷாவ சொன்னானுங்க. அர்ச்சனா “நானும், நிஷாவும் ஏன்னா அன்பு இல்லாத இடத்துல அஞ்சு நிமிஷம்
இருந்தா லோ பீபீ ஆகிடும் எனக்கு”ன்னு கொஞ்சம்
வித்யாசமா உருட்டுனாங்க. பில்டரும் “என் பேரதான் எழுதுனேன். ஏன்னா பண்ண சாகசங்கள் அப்பிடி.
ஒரு வேளை நான் இல்லேன்னா சோமுதான்”னு சொன்னான்.
நக்கலா சிரிச்ச
சோமுவ “தம்பி நீ இன்னு எலிமிநேஷன்லதான் இருக்க. ரொம்ப இளிக்காத”ன்னுட்டார்.
“சரி அப்போ
ரம்யா, ஆஜீத், பில்டரு இவங்கதான் டாப் 2 வருவாங்கன்னு நீங்களே ஒத்துக்குறீங்க ?” ந்னு
கேட்டதும்தான் “ஆகா ரிவெஞ்சுல ஃபோகஸ் போயி ரிவெர்ஸுல போயிட்டோமே”ன்னு உணர்ந்தானுங்க
எல்லாம்.
கால்ர் ஆஃப்
த வீக் : ஆஜீத்துக்கு பாட்டெல்லாம் நல்லா பாடுற, கால் செண்டர் டாஸ்கெல்லாம் நல்லா பண்ண.
ஆனா கேம் விளையாடுற மாதிரி தெரியலயே?
ஆஜீத் : அதான்
எனக்கே தெரியலயே....இனிமே ஒழுங்கா விளையாடுறேன்//
பிரேக்ல அர்ச்சனா
“என்ன முகமூடி, டெக்ஸ் மில்லர்னு சொல்லிட்டு திரியுறா ? என்ன பல்ப பேக்கனுமா ? அடிங்க....!
சொல்லி வை அன்னப்போஸ்ட”ன்னு நிஷாகிட்ட அன்பொழுக சொல்லிட்டு இருந்தாங்க. தோளுல கையப்போட்டு
ஜோடியா அங்குட்டு சுத்திட்டு இருந்த பில்டர் ஷிவானிகிட்ட “உக்கிரமா இருக்கானுங்க...பத்திரமா
இங்குட்டு போயிருவோம்”னு சொல்லிட்டு ஓடிட்டான்.
இந்த வார புத்தகம்
: ஜி.நாகராஜன் எழுதுன நாளை மற்றுமொரு நாளே....!
“சரி மைக்கயெல்லாம்
ஒழுங்கா மாட்டுறீங்களா? அர்ச்சனால்லாம் மைக்க கழட்டிட்டு மாஃபியாத்தனம் பண்ற மாதிரி
இருக்கே?”ன்னு கேக்க...”அட நீங்க வேற சோமங்கிட்டயெல்லாம் நான் மைக்க கழட்டிட்டு என்ன
பேசிரப் போறேன் ? இல்ல அவனும் என்ன பேசிருவான் ? அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல.....இனிமே
மைக்கயே கழட்டல போதுமா”ன்னு சொன்னாங்க. ஆனா அன்னப்போஸ்டு எதையோ முனங்க “சொல்லு அன்னப்போஸ்டு”ன்னு
சொன்னதும்....”அதான சொல்லு....நீ பெரிய ஆளாச்சே சொல்லு.....இன்னைக்கு உன் காட்டுல ரெயின்.....எங்க
குரூப்புக்கு பெயின். செய் செய்”னு அர்ச்சனா சொல்ல...அன்னப்போஸ்டு “என்னத்த சொல்ல
? பாத்துக்கோங்க இவனுங்க பண்றதயெல்லாம் அவ்வளவுதான்”னு முடிச்சிச்சு.
ஒவ்வொருத்தரையா
சேவ்டுன்னு சொல்லிட்டு.....கடைசியா நிஷா அவுட். ஏறக்குறைய யாருக்கும் அதிர்ச்சி இல்ல.
ஆனா அர்ச்சனா அப்பிடி இருக்க முடியுமா ? “நிஷா ஒரு தடவ....ஒரே ஒரு தடவ.....நாம ரெண்டு
பேரும் காலார இந்த லான்ல நடப்போமா ? நடந்துக்கிட்டே அப்பாகிட்ட சாரி கேட்டுக்கிட்டே”ன்னு
பெர்பார்மன்ஸ ஸ்டார்ட் பண்ண.....எல்லாரும் விடை குடுத்தானுங்க. பில்டர் மட்டும் “உன்னய
பிடிக்காதவங்கன்னு இங்க யாருமே இல்ல....சந்தோஷமா போயிட்டு வா”ன்னு சொன்னான். கதவு தொறந்ததும்
போகாத “நிஷா.......போகாத நிஷா”ன்னு அர்ச்சனா கண்ணீரோட சொல்ல....”ம்ம்க்கும் அன்பு ஜெயிக்கும்
ஜெயிக்க வைப்போம்னு கடைசியா நீதான் உள்ள இருக்க...இதுல போகாத....சாகாதன்னு பேச்சு வேற”ன்னு
நெனச்சிருக்கும் நிஷா....
“எதுக்கு வெளிய
போகுதுன்னு தெரியாமையே போகுதுடா லூசு”ன்னு சொல்லி அழுக, “அது எதுக்கு வந்தோம்னே தெரியாமதான்
இருந்துச்சு....கத்துக்க நெனச்சாலும் நாம விடல....வேற என்ன பண்றது?”ன்னு ரியோ நெனச்சுக்கிட்டான்
வெளிய வந்த
நிஷா “நானும் கொஞ்சம் விளையாடப் பாத்திருக்கனும். விட்டுட்டேன்”னு சொல்ல.....குறும்படம்
காமிச்சானுங்க. ஆண்டவர் எப்பவும் போல பாசிட்டிவா பேசி “எல்லாத்தையும் கெட்ட கனவா நெனச்சு
மறந்திட்டு குக் வித் கோமாளில்ல போயி செட்டாகிரு”ன்னு அனுப்பி விட்டார்.
Comments
Post a Comment