Posts

Showing posts from October, 2020

பிக்பாஸ் – 4 : நாள் - 27 (31.10.20)

  வீடியோ ரூம்ல பாப்கார்னும் கையுமா உக்காந்திருந்தார் ஆண்டவர். “சினிமா பாக்காம போர் அடிக்குற ஆளுகளெல்லாம் இந்த ஷோவப் பாருங்க....காதல், பாசம், வீரம், மோட்டிவேஷன், தக் ஹாப் டான்ஸ், முழு நீள வசனங்கள், ஆடல், பாடல் எல்லாம் இருக்கு....! என்ன இவனுங்க இன்னும் கத்திக் குத்து, துப்பாக்கி சூடு, பாம் வெடித்தல், விஷம் வைத்தல் அளவுக்குப் போகல. ஆனாஅ போயிடுவானுங்க. ஆனாலும் அரசியல்னா என்னான்னே தெரியாம இந்த லூசுங்க அரசியலும் பண்றானுங்க. ஆனா அதப் பத்தி பேச மேடை வேணும்....வாங்க மேடையில போயி பேசுவோம்”னு போனார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா ! ஆண்டவரே...அனிதா சகவாசம் எதும் தொத்திக்கிச்சா ? மேடைக்கு வந்தார் ஆண்டவர். கல்யாண வீட்ல கன்னத்துல சந்தனத்தோட, கக்கத்துல இத்துனூண்டு ஜிப்பு பேக்க வச்சுக்க்குட்டு, சஃபாரி போட்டு ஒரு மாமா சுத்திட்டு இருப்பார். அதே சேம் சஃபாரில ஆண்டவர்....ஆனா சஃபாரி மேல எவ்ளோ பாக்கெட்டு.....! அப்பறம் எப்பவும் போல தெளிவா நமக்கு புரியவே கூடாதுன்ற முடிவுல மறைமுகமா சில அரசியல் விஷயங்கள் பேசுனார். ஆண்டவரே நீங்க நேரடியாவே பேசலாம்....கண்டிப்பா புரியாது. ஆனா இன்னைக்கு வரப்பவே ஆண்டவர் ஒரு முடிவோடதான் வந்தி

பிக்பாஸ் – 4 : நாள் - 26 (30.10.20)

  கரண்டு போஸ்டு மேல கைய வச்சா மாதிரி சம்மு அன்னப்போஸ்டு மேல கை வச்சதுக்கு “ஒரு அரை நாளைக்கு சம்மு காதுகிட்ட ஒக்காந்து ஒரு நிமிஷம் கூட கேப்பு விடாம இன்னைக்கு ஓதி தள்ளிடனும். விடிஞ்சா வீடு எனக்கு சொந்தம்டா”ன்னு நெனச்ச அன்னப்போஸ்டு அறச்சீற்றத்துல அரை லோடு மண்ணு விழுந்தது விதியா? இல்ல சதியா ? தொடர்ந்து பேசுவோம் 26வது நாள் “வேர் இஸ் த பார்ட்டி டுநைட்” பாட்டு அலாரம். எது....உங்க பார்ட்டி அழகு எங்களுக்குத் தெரியாது ? மேடையப் போட்டு வேல்ஸ பாட விடுவீங்க அதான ? இதுல அலாரப் பாட்டுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. ரம்முவும், சம்முவும் செட்டு சேந்து ஆடுறது பாக்குறவங்க கிட்னி, குடல், மாங்காய்க்கு நல்லதா திகழுது. நாள் முழுக்க குடை பிடிச்சிக்கிட்டே திரிஞ்சதால அதே பழக்கத்துல வெள்ளை உடையோடவும், கையில குடையோடவும் குலுங்காம அலுங்காம நிதானமா ஆடிட்டு இருந்துச்சு சாத்தூர் ஷிவானி. மத்தவனுங்களாம் சானிய மிதிச்ச கால அவதி அவதியா உதறுன மாதிரி என்னத்தையோ அசிங்கமா பண்ணிட்டு இருந்தானுங்க. பில்டரு வழக்கம்போல இவனுங்கள பயித்திகாரனுங்கள பாக்குற மாதிரி பாத்துட்டு பாத்ரூமுக்கு போயிட்டான். பில்டரு இங்க வரப்ப 28 கை வைக்காத

பிக்பாஸ் – 4 : நாள் - 25 (29.10.20)

ஒரு எபிசோட நான் எடுத்திருந்தா எப்பிடி இருந்திருக்குமோன்ற மாதிரி இருந்துச்சு இந்த எபிசோட். ஆனா கடைசி 15 நிமிஷந்தான். மத்தபடி கண்டெண்ட் வறட்சிதான் இன்னைக்கும். 25வது நாள் “ஒத்த சொல்லால” பாட்டு அலாரம். ஏன்டா வீட்டுக்குள்ளதான் பொழுதுக்கும் அந்த பெரிய ரேடியோ லைவாவே பாடிட்டு இருக்காப்லயே. அப்பறம் அலாரத்துக்கும் ஏண்டா வேல்ஸ் பாட்டயே போட்டு சாவடிக்குறீங்க ? நேத்து “தென்றல் வந்து தீண்டும் போது” பாட்டு கேட்டா வேல்ஸு வாய்ஸுல   கேக்குது......இவ்வளவு ஏன் இப்பல்லாம் என் அன்பு மனைவி ஒரு பாட்ட ஹம் பண்ணாக் கூட அது வேல்ஸு வாய்ஸ்லதாண்டா கேக்குது.....புரிஞ்சுக்கோங்கடா ப்ளீஸ் ! ஆடவே ஆடாத இந்த அரைவேக்காடுகளுக்கு ப்ராப்பர்ட்டி பர்பெக்க்ஷன் மட்டுந்தான் கேடு. இந்த பாட்டுல லுங்கி டான்ஸ் இருக்குன்றதால பொம்பள புள்ளைங்க பூராம் லுங்கிய கட்டிட்டு வந்து இடுப்ப ஆட்டிட்டு இருந்துச்சுங்க. சைனா செட்டு சனம் கூட சங்கூதுற ஸ்டெப்பெல்லாம் போட்டுச்சு. பண்ற சேட்டைக்கெல்லாம் கூடிய சீக்கிரம் அதுக்கு முன்னாடிதான் நாலு பேரு சங்கூதுற டான்ஸ் ஆடப்போறானுங்க. மத்தபடி இந்தத் தடித்தாண்டவராயன்கள சும்மாவே பாக்க முடியாது. இதுல அவனுங்

பிக்பாஸ் – 4 : நாள் - 23 தொடர்ச்சி & 24 (28.10.20)

  23வது நாள் தொடர்ச்சி..... அதே கூட்டிப் பெருக்குற பஞ்சாயத்து. ஆனாலும் பில்டரு அசரவே இல்ல. அவனோட எண்ணமெல்லாம் “குடிச்சிட்டு இருக்குற இந்த ஜூஸுல ஜீனி கொஞ்சம் கம்மியா இருக்கோ?”ன்னுதான். பட்டுன்னு ரியோ குரூப்பு அழிச்சாட்டியத்தப் பாத்துட்டு ஆரி ப்ரோ உள்ள வந்து அவனுங்ககிட்ட “கருத்த கருத்தால எதிர்கொள்ளுங்க”ன்னு அறுத்தாப்ல. “அட நீங்க வேற”ன்னு ரியோ அலுத்துக்கிட்டான். “கேப்டன்சி பிடிக்கல”ன்னு ஆரம்பிச்ச பாலா கொஞ்சம் கொஞ்சமா “கேப்டன பிடிக்கல”ன்னு ட்ராவெல் பண்ணி, கடைசில “அர்ச்சனாவப் பிடிக்கல”ன்னு வந்து முடிச்சான். “இந்தக் கருமத்த முன்னயே சொல்லியிருக்கலாம்ல?”ன்னு அர்ச்சனா பொங்குனாங்க. ரியோ பில்டரு சொன்ன ப்ரொவோக்ன்ற வார்த்தைய வச்சுக்கிட்டு “ப்ரொவோக்கு நோக்க ப்ரொவோக்கு பவனார்”னு கந்த சஷ்டி கவசமே பாடி முடிச்சுட்டான். 13 பேரும் இருக்காங்களான்னு எண்ணிப் பாத்துட்டு வேல்ஸு தன்ணிக்குள்ள இருந்த தவளையாட்டம் தவ்விட்டு இருந்தாப்ல. நடு ரோட்டுல நடக்குற சண்டையில தடுக்க வரேன்னு சொல்லிட்டு ஒருத்தன் வருவான். அதுவரைக்கும் சண்டை போட்டவனுங்க பேசிக்கிட்டத விட அதிகமா பேசி கடைசில ரெண்டு பேருகிட்டையும் அடி வாங்குவா

பிக்பாஸ் – 4 : நாள் - 23 (27.10.20)

23வது நாள் “ஆடத் தெரியாத இந்த கோண புஸ்கானுங்களுக்கு எந்தப் பாட்டப் போட்டாத்தான் என்ன?”ன்ற கணக்குல வாசல்ல நைட் ஷிஃப்ட் செக்யூரிட்டியோட   செல்ல வாங்கி அதுல இருந்து பொன்மகள் வந்தாள் பாட்டப் போட்டானுங்க. எதிர்பார்த்த மாதிரியே எவனும் ஆடல. சிவாஜி பாட்டுக்கே இவனுங்களுக்கு ஆட வரல.....படு திராபையா திரியுறானுங்க. “சமைக்குற டீம்ல கொஞ்சம் குளறுபடியாகிப் போச்சு”ன்னு ஆரி ரியோகிட்ட சொல்ல, “ஏன் என்னாச்சு?”ன்னு கேட்ட ரியோகிட்ட “அன்னப்போஸ்டு நைட்டு நடந்த அட்டிராசிட்டியால அப்பாத பிடிச்சு அசமந்தமா உக்காந்திருக்கு”னு சொல்ல.....”கொஞ்சம் பொறு சரி பன்ணுவோம்”னு சொன்னாப்ல ரியோ. இன்னைக்கு நடந்த முத்தான 3 விஷயங்கள் அன்னப்போஸ்டின் அதிரடி அழுகை சைனா செட்டு சனத்தின் சந்திராஷ்டமம் பாலாவின் லோலாய்த்தனம் அன்னப்போஸ்டின் அதிரடி அழுகை : சுமங்கலி மேட்டர்ல சுண்டெலி சிக்குன மாதிரி சிக்கிக்கிச்சு நம்ம அன்னப்போஸ்டு. இடுக்குல சிக்குன சுண்டெலி பக்கத்துல அத அடிக்கப் போறவனையும் சரி, அத காப்பாத்தப் போறவனையும் சரி அது கடிக்கத்தான் பாக்கும். அதே மாதிரி அன்னப்போஸ்டுக்கு ஆறுதல் சொல்லப் போனாலும் சரி.....ஆதரவு குடுக்கப்

பிக்பாஸ் – 4 : நாள் - 22 (26.10.20)

முன்குறிப்பு : இடது காது அனிதாவின் பேச்சினாலும், வலது காது வேல்முருகனின் பாடலாலும் பாதிக்கப்பட்டு இன்னும் “ங்கொய்ங்”என்ற ஒலி காதில் கேக்கக் கேக்க எழுதிய பதிவு இது...... வழக்கமா வழக்கமில்லாத வழக்கத்த ஒழுக்கமில்லாம செய்யுற நம்ம விஜய் டீவி இப்ப பிக்பாஸையும் விட்டு வைக்காம கடிச்சிட்டாய்ங்க....! விஜயதசமி கொண்டாடுறேன்னு 4 மணி நேரம் வித விதமா கொன்னெடுத்துட்டானுங்க. இவனுங்க விஜயதசமி கொண்டாடலேன்னு விஜயகாந்த் அழுத மாதிரி வீம்புக்கு கொண்டாடி வச்சிருக்கானுங்க. வெண்பொங்கல்ல கெடக்குற முந்திரி பருப்பு மாதிரி எடுத்த ஒவ்வொரு பிடிக்கும் ஒரு கண்டெண்டும் மாட்டல. இருந்தாலும் இருந்த கொஞ்ச நஞ்சத்த   பாப்போம். 22 வது நாள் “மதுரை குலுங்க குலுங்க” பாட்டு அலாரம். அல்லாடி தள்ளாடி வெளிய வந்தானுங்க. எல்லாரும் டான்ஸ் ஆடத் தெரியாத அளவுக்கு டான்ஸ் கத்திருப்பானுங்க போல. ஷிவானியும் , அதோட அம்மா மாதிரி சம்முவும் ஒண்ணு மண்ணா ஸ்டெப்புகள போட, மத்தவனுங்களும் நெல்லு குத்திட்டு இருந்தானுங்க. சோமு ஆடனும்னா மட்டும் ரம்யாகிட்ட ரேங்குறான். நாரோட சேந்த பூ மாதிரி கேபியும் வர வர ஒழுங்கா ஆட மாட்டேங்குது. பில்டரெல்லாம் 5 நாளு ஆ