பிக்பாஸ் – 4 : நாள் - 23 தொடர்ச்சி & 24 (28.10.20)

 23வது நாள் தொடர்ச்சி.....

அதே கூட்டிப் பெருக்குற பஞ்சாயத்து. ஆனாலும் பில்டரு அசரவே இல்ல. அவனோட எண்ணமெல்லாம் “குடிச்சிட்டு இருக்குற இந்த ஜூஸுல ஜீனி கொஞ்சம் கம்மியா இருக்கோ?”ன்னுதான்.

பட்டுன்னு ரியோ குரூப்பு அழிச்சாட்டியத்தப் பாத்துட்டு ஆரி ப்ரோ உள்ள வந்து அவனுங்ககிட்ட “கருத்த கருத்தால எதிர்கொள்ளுங்க”ன்னு அறுத்தாப்ல. “அட நீங்க வேற”ன்னு ரியோ அலுத்துக்கிட்டான்.

“கேப்டன்சி பிடிக்கல”ன்னு ஆரம்பிச்ச பாலா கொஞ்சம் கொஞ்சமா “கேப்டன பிடிக்கல”ன்னு ட்ராவெல் பண்ணி, கடைசில “அர்ச்சனாவப் பிடிக்கல”ன்னு வந்து முடிச்சான். “இந்தக் கருமத்த முன்னயே சொல்லியிருக்கலாம்ல?”ன்னு அர்ச்சனா பொங்குனாங்க. ரியோ பில்டரு சொன்ன ப்ரொவோக்ன்ற வார்த்தைய வச்சுக்கிட்டு “ப்ரொவோக்கு நோக்க ப்ரொவோக்கு பவனார்”னு கந்த சஷ்டி கவசமே பாடி முடிச்சுட்டான்.

13 பேரும் இருக்காங்களான்னு எண்ணிப் பாத்துட்டு வேல்ஸு தன்ணிக்குள்ள இருந்த தவளையாட்டம் தவ்விட்டு இருந்தாப்ல. நடு ரோட்டுல நடக்குற சண்டையில தடுக்க வரேன்னு சொல்லிட்டு ஒருத்தன் வருவான். அதுவரைக்கும் சண்டை போட்டவனுங்க பேசிக்கிட்டத விட அதிகமா பேசி கடைசில ரெண்டு பேருகிட்டையும் அடி வாங்குவான்....அந்த ஆளுதான் நம்ம வேலு. என்னதான் உக்கிரமா பில்டரும், அர்ச்சனாவும் கரச்சல்ல இருந்தாலும் அர்ச்சனா வேல்ஸ ஒரு தடவ “நீ மூடு”ன்னும், பில்டரு வேல்ஸப் பாத்து புஜத்த ஏத்துனதும் இத நிரூபிச்சுச்சு.

கொஞ்ச நேரத்துல பிலுபிலுன்னு எல்லாரும் பில்டர நோக்கி தோட்டாக்கள பாய விட்டானுங்க. அதுல கொஞ்சம் அசஞ்சுட்டான் பில்டரு. பின்ன சம்முகிட்ட தன்னோட தன்னிலை விளக்கத்த சைலண்டா சொல்லிட்டு இருந்தான். இதே டோன்ல அர்ச்சனாகிட்ட பேசி இருந்தா இந்த பஞ்சாயத்தே இல்ல. ஆனா அப்பிடி செஞ்சா அது பில்டரே இல்ல.

“அசதின்னு கொஞ்சம் வசதியா படுத்ததுக்கு இந்த பாடு படுத்திட்டானுங்க படுபாவிங்க”ன்னு ஃபீல் பன்ணிட்டே வெளிய வந்தவன் சட்டுன்னு கண்ணுல தண்ணிய வுட்டான். அழுதுட்டு இருக்குற இவன விட்டுட்டு உள்ள லைன்ல நின்னு பூரா பேரும் அர்ச்சனாவ கட்டி அரவணைச்சுட்டு இருந்தானுங்க. இவனுங்க லாஜிக்கே புரியல.

பின்ன நைட்டு சகுனியும், சம்முவும் “ஆனாலும் நீ இன்னைக்குப் பேசுனதுல அன்பார்லிமென்டரி வேர்ட்ஸ் அதிகமாகிப் போச்சு. எதுக்கும் ஒரு தடவை அமைதியா பேசப்பாரு. அதுவும் அம்மி அரைக்குற மேட்டர்ல ஆல் மெம்பர்ஸும் ஆடிப்போயிருக்கானுங்க”ன்னு சொன்னாங்க. சம்மு ஒரு நார்வே அமமைதிக்குழு மாதிரி முன்னின்னு ஒரு அமைதி பேச்சுவாரத்தைக்கு ஏற்பாடு பண்ணாங்க. வீட்ல நல்லதோ கெட்டதோ பில்ளையார பிடிச்சு வைக்குற மாதிரி மொத ஆளா சோமுவ உக்கார வச்சுக்குறானுங்க.

பில்டரு, அர்ச்சனா, சோமு, சம்மு. சம்மு பில்டரு பேசுறத அர்ச்சனாக்கு மொழிபெயர்க்கும் வேலைய பாத்தாங்க. அர்ச்சனா “என்னதாண்டா உனக்கு என் மேல பிரச்சனை ?” கேக்க “வேற என்ன ரியோதான்”னு மனசுல நெனச்சுக்கிட்டு “அதெல்லாம் ஒண்ணுமில்ல”ன்னு சொல்லிட்டு இன்னைக்கு அவன் பேசுனதுல அவனுக்கு தப்பா தெரிஞ்ச விஷயத்துக்கு மட்டும் சாரி கேட்டான். உடனே அர்ச்சனா “அத விடு.....எனக்கு தலப் புள்ள தலைக்கு மாதிரியே பொம்பளப் புள்ள....ஒரு ஆம்பளப்புள்ள இல்லையேன்னு அங்கலாய்ப்புல இருந்த எனக்கு உள்ள வந்ததும் நீ என் பையனாத்தான் தெரிஞ்ச. நான் தூங்குனா கூட என் கனவுல கைப்பிடிச்சுக்கிட்டு திரிஞ்ச. நீ என் குழந்தைடா....நீ எனக்கு வேணுண்டா.....அந்த புள்ளைய எனக்கு குடுத்துருடா”ன்னு அழுதுகிட்டே கேக்க....”வாழ்க்கையில் அரை கிளாஸ் அளவுக்குக் கூட அன்பப் பாத்ததில்ல...அதுனால எதுக்க வந்தாலும் அது அன்புன்னு தெரியுறதில்ல”ன்னு சொல்லிட்டு சாரி சொல்லி கட்டிப்பிடிச்சு அம்மா, பையனா ஃபார்ம் ஆகிட்டானுங்க.

அப்டியே கட் பண்ணா இந்தப்பக்கம் வேல்ஸு வாயில துண்டப் பொத்திக்கிட்டே கசிஞ்ச கண்ணீரோட உள்ள வர

ரியோ : என்னயா வேல்ஸு ? எங்க அக்காவுக்கு எதும் பிரச்சனையா ?

வேல்ஸு : ம்ம்க்கும்....இனி உனக்கும் எனக்குந்தான் பிரச்சனை.....நீ மாமாவாகிட்ட உனக்கு மாப்ள கிடச்சுட்டான்

ரியோ : என்னயா ஒளறிட்டு இருக்க என்னாச்சு ? பில்டர பொளந்துட்டு இருக்கா எங்கக்கா ?

வேல்ஸு : டேய் கரப்பான் பூச்சி....அவனுங்க ரெண்டு பேரும் தாயும் மகனுமா ஃபார்ம் ஆகிட்டானுங்கடா

ரியோ : (நெஞ்சப் பிடிச்சிக்கிட்டு) என்னையா சொல்ற ?

வேல்ஸு : புள்ள புடிக்கிறவன் மாதிரி இருக்கான். அவனப் போயி உங்கக்கா புள்ளன்றா. அடிதடியாகி அவன வெளிய அனுப்பிட்டா....அம்மா பாட்டுகள பாடிக்கிட்டு இங்கயே அண்டி இருக்கலாம்னு நெனச்சேன். இப்ப அவன நம்ம கூட்டத்துக்குள்ளையே கொண்டு வந்துட்டீங்களேடா.....

ரியோ : யோவ் நீ என்னய நெனச்சுப் பாத்தியா ? இனிமே நான் என்ன பண்ண ?

வேல்ஸு : ம்ம்ம்....நிஷாவுக்கு நகம் வெட்டி விடு...! கடந்த 1 மணி நேரமா வேற நான் அவங்கிட்ட எகிறி வச்சிருக்கேன். சும்மாவே எங்கிட்டப் பேசும்போது 8 கிலோ டம்பில்ஸப் போட்டுகிட்டே தான் பேசுவான். அநேகமா நாளைல இருந்து என்னய தூக்கிதான் எக்ஸர்சைசே பண்ணுவான்னு நெனைக்கிறேன்....எங்க அந்த வெளக்கமாறு ?

ரியோ : இப்ப எதுக்குயா தேடுற ?

வேல்ஸு : அவ்வளவுதான்.....முன்ன எதிரியா இருந்து வீடு கூட்ட மாட்டேன்னான்...இப்ப சொந்தபந்தமா வேற போயிட்டன். வெளக்கமாத்த கைல தொடுவான்னு நெனைக்குற ? அதான் நானே ரெடியாகிட்டேன். என்னய விடு.....உன்னய நெனச்சாத்தான் பாவமா இருக்கு

ரியோ : ஆமா காலையில அன்னப்போஸ்டு அழுதது எந்த கக்கூஸுல ? //

24வது நாள்

“தங்கமே உன்னத்தான்” பாட்டு அலாரம். விடிய விடிய தூங்காம பஞ்சாயத்துப் பேசிட்டு இருந்ததால பல பேரு எந்திரிக்கவே இல்ல. அப்பறமா கொஞ்ச கொஞ்சமா வெளிய வந்தானுங்க. வந்தும் ஓன்னையும் அறுத்துத் தள்ளல. ஆனா சம்முவும், ரம்யாவும் இன்னைக்கு சேர்ந்து ஆடுனது அட்டகாசமா இருந்துச்சு.

சைனா செட்டு சனம் அப்பிடியே சைஸா பில்டருகிட்ட வந்து

சனம் : என்ன பில்டரு அம்மா கிடச்சுட்டாங்க போல?

பில்டரு : ஏன் உனக்கு இன்னைக்கு யாரும் கிடைக்கலையா ? அதெல்லாம் சரி ஆகிடுச்சு

சனம் : என்னய மாதிரியே நீயும் மாறிட்ட

பில்டரு : அய்யய்யோ.....பாக்க உன்னய மாதிரியா இருக்கேன் ?

சனம் : அட மனச சொன்னேம்ப்பா

பில்டரு : பெரிய புலவி.....சரி நான் சொன்ன மாதிரி கண்டிப்பா உன்னய அம்மி அரைக்க வைப்பேன்

சனம் : அதெல்லாம் அரைப்பேனே....என்ன கரெக்டா 3 விசில்ல இறக்கிடனும் அவ்வளவுதான ?

பில்டரு : ஆமா ஆமா இல்லேன்னா குழஞ்சுடும்....இங்க வா (தோளுல கையப் போட்டுகிட்டே) எப்பிடி சைனா.... நீ கால் தடுக்கி கம்பில குப்புற விழுந்த பிறகு இவ்வளவு அறிவா இல்ல அதுக்கு முன்னமே இப்பிடித்தானா ? //

இடையில சனம் “என் மூஞ்சியப் பாத்துப் பேசு”ன்னு சொன்னப்போ பில்டரு எந்த கருமத்த பாத்து பேசுனானோ தெரியல. என்னடா பில்டரு இது ?

அப்பறம் சாத்தூர் ஷிவானி பில்டர்கிட்ட வந்து சைனப் போட்டுட்டு இருந்தாங்க. “நேத்து நீ பேசுனதுக்கு அப்பவே கைதட்டி விசிலடிச்சு இருப்பேன். கண்ணக்கட்டிருச்சு அதான் பண்ணல. உன் கருத்தெல்லாம் சரியாத்தான் இருக்கு....ஆனா சொல்ற விதந்தான் கரடுமுரடா இருக்கு. ஆமா நீ அழுததா சொல்றாய்ங்க ? அழுதியா?”ன்னு ஆர்வமா கேட்டுட்டு “டைவ் அடிக்க இங்க இல்ல ஸ்விம்மிக் பூளு....ஆனா டாவடிக்க எனக்கு நீதான் ஆளு”ன்னு போயிடுச்சு.

அப்பறம் பொறுக்குன தங்கத்த எடுத்துக்கிட்டு தனிதனியா வந்து கன்ஃபெஷன் ரூமுல அளந்து காட்டனும்னு சொன்னாங்க. பில்டருதான் நெறையா பொறுக்கியிருந்தான்.

பிக்பாஸ் டாஸ்க்குலயே ரொம்பப் புடிச்சது என்னன்னா....

இது என்ன டாஸ்க்குன்னு பிக்பாஸுக்கே புரியாது

எப்பிடி விளையாடுறதுன்னு கண்டெஸ்டண்டுகளுக்கு தெரியாது

எதுக்கு இந்த கருமம்னு நமக்கும் வெளங்காது

இவனுங்க எய்மே கூட்டமா இவனுங்கள ஒரு கால் மணி நேரம் கலந்துவிட்டா கய்ய முய்யன்னு கத்திக்கிட்டு அடிச்சுக்குவானுங்க. அத வச்சு 2 ப்ரொமோ தேத்துறதுதான். அதுக்கு நம்மளையும் சேர்த்து படுத்துவானுங்க. இப்பவும் அதே மாதிரி ஒரு டாஸ்க்.

3 டீமா பிரியனும். டீமுக்கு அதிகபட்சமா 8, குறைந்த பட்சம் 4 பேரு இருக்கனும். எந்த டீம்ல தங்கம் ஜாஸ்தியா இருக்கோ அவங்க இந்த வாரம் அதிகாரம் பண்ணுவாங்க. பில்டரு அர்ச்சனா டீம்ல ஐக்கியமானதும் வேல்ஸும், ரியோவும் ஒருத்தன ஒருத்தன் பாத்துக்கிட்டு, துண்ட எடுத்து வாயில வச்சிக்கிட்டானுங்க.

ஒரு பெரும் குழாயடி குழப்படிக்கப்பறம்

டீம் 1 : அர்ச்சனா, பில்டரு, ரியோ, சோமு, வேல்ஸு, சம்மு, ஜித்து

டீம் 2 : அன்னப்போஸ்டு, ஆஜீத், நிஷா, சகுனி

டீம் 3 : ஆரி ப்ரோ, ரம்யா, ஷிவானி, கேபி, சனம்

டீம் 1 அதிகார டீம். அவங்க எந்த வேலையும் பாக்க வேணாம். மத்த ரெண்டு டீமும் இவங்களுக்கு சேவகம் பண்ணனும்.

இதுல சனத்த கூப்ட்டு பில்டரு “இனிமே நான் சம்பந்தம் இல்லாத விஷயத்துல மூக்க நுழைக்க மாட்டேன்”னு ஒரு 10 தடவையும், “முந்திரிக்கொட்டை தனமா முந்த மாட்டேன்”னு ஒரு 10 தடவையும் சொல்ல சொன்னான். ஷிவானியக் கூப்ட்டு ஆட சொன்னதுதான் இந்த  டாஸ்க்கால கிடைச்ச ஓரே நன்மை. இந்த டாஸ்க் முழுக்கவே சாத்தூரு ஆக்டிவா இருந்தது நம்மள பாஸிட்டிவா வச்சிருந்தது. அதுவும் ஷிவானி “இஞ்சாயி”ன்னு சொன்னது பொம்மேரியன் நாயி பூபாள ராகம் பாடுனாப்ல இனிமையா இருந்துச்சு.

இப்பிடியே ஒண்ணுமில்லாததா ஓட்டி முடிச்சானுங்க. “தற்காலிகமா இந்த டாஸ்க் நிறுத்தி வைக்கப்படுது”ன்னு சொல்லி அரைமணி நேரத்துக்கு அப்பறமும் ஷிவானி பில்டருக்கு ஊட்டி விட்டுட்டு இருந்தது......நாம இந்த ஷோவ தொடர்ந்து பாக்கலாம்னு நமக்கு நம்பிக்கை ஊட்டும் விதமா இருந்துச்சு.

பகல் முழுக்க கம்பிக்கு அந்தப் பக்கம் வெள்ளந்தியா இருந்த சைனா செட்டு சனம்....ராவானதும் கம்பிக்கு இந்தப் பக்கம் வந்துருச்சு.....!

அன்னப்போஸ்டுகிட்டையும், ஆரி ப்ரோகிட்டையும் “ஏங்க பில்டரு விளையாட்டுன்னு சொல்லி என்னய உண்மைய சொல்ல வச்சுட்டாங்க”ன்னு பொலம்புனதும் அன்னப்போஸ்டுக்கே அல்லு இல்ல.....”ஆத்தீ இவ நம்மள விட பெரிய ஆளா இருக்கா....இவ சகவாசத்த வச்சிருந்திருக்கனும் போலயே”ன்னு கண்ண விரிச்சுப் பாத்துட்டு “ஏங்க அது நடந்தது மதியம் 1 மணி....இப்போ நைட்டு 1 மணி. இப்ப வந்து கேக்குறீங்க?”ன்னு சொன்னதும் “இப்பதான் நான் கம்பிக்கு இந்தப் பக்கம் வந்தேன்”னு சொல்லுச்சு. ஆரி ப்ரோவும் “ஏம்மா அவன் சொல்ல சொல்லும்போதே உனக்கு தெரியாதா?”ன்னு கேட்டதுக்கு “முழு வரிய கவனிக்கலங்க”ன்னு அது சொன்னதுக்கு ஆரி அது மண்டையில கொட்டாம இருந்தது ஆச்சர்யம்தான். இதுல அன்னப்போஸ்டு அதுகிட்ட “இது ஒரு கேம். அதெல்லாம் அப்பிடி எடுத்துக்கக் கூடாது”ன்னு சொன்னத கேட்டு “ஆம்பள மாடு “அன்னப்போஸ்டு புருஷனே சிரிச்சிருப்பான்.

இத தெரிஞ்சுக்கிட்டே வெளிய வந்த பில்டரு....தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு “என்ன சைனா செட்டு என்ன இங்க ஒரு புது செட்டு ? என்ன விஷயம் எங்கிட்ட கொட்டு”ன்னு சொன்னதும் “நீ நம்ம நட்ப மறுபடியும் ஒடச்சுட்ட.....என்ன நம்ப வச்சு நையப் புடச்சுட்ட”ன்னு விஷயத்த சொன்னதும் பில்டரு, “ரைட்டு இன்னைக்கு அமாவாசை போல”ன்னு சொல்லிட்டு உள்ள போயிட்டான்.

உள்ள போனவன் சம்மு, ஷிவானி, கேபி கிட்ட வந்து “சைனா செட்டு அலற ஆரம்பிச்சிடுச்சு”ன்னு சொன்னதும் சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் சிரிச்சுட்டானுங்க. அப்பறம் மெல்ல உள்ள வந்த சைனா செட்டு “பில்டரு இனிமே நான் உனக்கு யாரு தெரியுமா ? எதிரி” அப்டின்னு சொன்னதுக்கு பில்டரு சந்தோஷமா சிரிச்சுட்டு. “உன்னய ஹர்ட் பன்ணியிருந்தா சாரி”ன்னு சொல்லி கையெடுத்து கும்புட்டான். அது “இன்னொரு தடவ”ன்னு சொன்னதும் “சரி”ன்னு இன்னொரு தடவ கையத்தூக்கி சாரின்னு சொல்ல சைனா செட்டு “என்ன பொசுக்குன்னு சொன்னதும் பண்ணிட்டான். அப்ப அவ்வளவுதானா? தூங்கப் போகனுமா?”ன்னு சோகமா இருந்துச்சு.

ஆக மொத்தம் இந்த ரெண்டு நாளுல பளிச்சுன்னு எரியும் பிலிப்ஸ் பல்புகள வாங்குனது நம்ம அன்னப்போஸ்டும், கரப்பான் பூச்சி ரியோவும்தான். சோகங்கள்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)