பிக்பாஸ் – 4 : நாள் - 8 (12.10.20)
லிவிங் ஏரியால
உக்காந்திருந்தானுங்க எல்லாரும். ஆரியும், சகுனி சுரேஷும் முகம் பூராம் மஞ்ச பெயிண்ட்டு
அடிச்சுக்கிட்டு மஞ்ச மாக்கான் மாதிரி இருந்தானுங்க. ரியோ கார்ட எடுத்துப் படிக்க இந்த
குழப்பத்துக்கு பொறந்தவனுங்க சொன்ன பொலம்பல் கதையில இருந்த கண்ணீர்ப் பொங்கல் கலங்க
வச்சுட்டதால லக்சூரி பட்ஜெட் பாயிண்ட்டு மொத்தமா 3500 வந்திருந்துச்சு. “சரி இப்ப போர்ட
எடுத்துட்டு வந்து மள மளன்னு மளிகை சாமான சாக்கு மூட்டையில கட்டுவோம்ன்”ற திட்டத்தோட
அன்னப்போஸ்டு அனிதாவும், சனமும் வந்தாங்க அன்னப்போஸ்டு அலறிகிட்டே இருக்க, சனம் சர
சரன்னு எழுதுச்சு.....திடீர்னு ரியோ வந்து
எழுதுனாப்ல, அழிச்சு அழிச்சு விளயாடிட்டு இருந்தப்ப, போர்டுல தொறக்காத ரூமோட சாவிக்கும்,
மீதி ரெண்டு பர்னருக்கும் 3500 பாயிண்டுன்னு போட்டதப் பாத்துட்டு “இது பொறிக்கிற ஐட்டமா
இல்ல வறுக்குற ஐட்டமா?”ன்னு சனம் சந்தேகமா கேக்க....”அடியே அஞ்சு பைசா பத்தடி தள்ளி
நில்லு”ன்னு தள்ளிட்டு, “இத மொதயே சொல்ல வேண்டியதுதான சொங்கி”ன்னு பிக்பாஸன திட்டிட்டு
அத மட்டும் போர்டுல எழுதிட்டு. ஸ்டோர் ரூம் போயி மீதி 2 பர்னரையும், பெட்ரூம், கக்கூஸ்
சாவியையும் ரியோ எடுத்துட்டு வந்தான். குறை ரூம்களை தொறந்து கொரங்கு மாதிரி தாவி ஓடுனானுங்க.
கிச்சன் ஏரியா.....
சனம் : என்ன
பெருசு சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க ?
சுரேஷ் : அதெல்லாம்
ஊருல ஹோட்டல் இருக்கு அதுல வர வருமானந்தான்
சனம் : அட....எங்க
சாப்பாட்டுக்கு என்னனு கேட்டேன் ?
சுரேஷ் : அதெல்லாம்
நீங்கதாம்மா ஏதாச்சும் வேலைக்கு போயி பாத்துக்கனும்....
சனம் : சாமி.....இந்த
வீட்ல இன்னைக்கு சாப்புடறதுக்கு என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
சுரேஷ் : அதுவா....சாம்பார்தான்....அந்த
குக்கர் மூடிய எடு
சனம் : இந்தாங்க....
(சொல்லிட்டு அந்தப்பக்கம் திரும்பிக்க)
சுரேஷ் : இதுல
பிரச்சனை இருக்கு வேற எடு...
சனம் : (மறுபடியும்
இந்தப்பக்கம் திரும்பி) ஏங்க மூடிய கையிலயே வச்சிருந்தா சாம்பார் வெந்துருமா ? பிடிங்க
இத...
சுரேஷ் : இது
வேணாம்மா...
சனம் : எடுத்து
குடுக்க சொல்லிட்டு எகத்தாளமா ?
சுரேஷ் : உங்கிட்ட பேசுறதுக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் முன்னாடி
விழுந்துறலாம்....
சனம் : இப்பிடி
என்னய குறை சொல்றதயே குலத்தொழிலா வச்சிருக்குறதப் பாத்தா நீங்க என்னய ஓரங்கட்டுற மாதிரியே
இருக்கே ?
சுரேஷ் : எதே
ஓரங்கட்டுறேனா ?
சனம் : அட கார்னர்
பண்றீங்கன்னு சொன்னேன்....
சுரேஷ் : யம்மா
ராசாத்தி....நானே காலையில இருந்து சாம்பார் பண்றதுக்கு படாதபாடு பட்டுட்டு இருக்கேன்...இதுல
கார்னர் பண்றதுக்கெல்லாம் எனக்கு எனக்கு கால நேரம் கிடையாது....எனக்கென்னமோ உனக்கு
அது நல்லா வராப்ல இருக்கு.....
சனம் : ஏன்
வராது....வாண்டடா வந்து உங்களுக்கு வேலை செய்ய வந்தேன்ல என்னயதான் இந்த மூடியக்கொண்டி
அடிச்சுக்கனும்....இத முன்னமே சொல்லியிருக்கலாம்ல ?
சுரேஷ் : நாந்தான்
சொன்னேனே சோப்பு டப்பாவே
சனம் : என்ன
சம்மு இவரு எதும் சொன்னரா ?
சம்மு : அவரு
அசிங்க அசிங்கமா சொன்னாரு சொல்லவா ?
சனம் : இவ வேற....யம்மா
குக்கர் மூடியப் பத்தி எதும் கூறுனாரா ?
சம்மு : ஆமா
ஆமா....சொன்னரே
சனம் : நீ இல்லேன்னாலும்
ஆமன்னுதான சொல்லுவ....நீ பில்டரு பிரண்டாச்சே....எல்லாம் என் நேரம்....இதுக்கு சொவத்துல
முட்டிக்கலாம்...
சுரேஷ் : நான்
வேணும்னா பில்டர்கிட்ட சொல்லவா....சிறப்பு தள்ளுபடியில சில்லு மூக்க செதுக்கி விடுவான்....ஆனாலும்
நீ ஒரு மதர் தெரசா மினியேச்சர்....வெளிய போகும்போது எனக்கு போட்டு விடு சிக்னேச்சர்....
சனம் : இந்த
வாலக்கவிராயர் கணக்கா வஞ்சப்புகழ்ச்சி பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க.....கோவம்னா
அசிங்கமா திட்டிக்கங்க
சுரேஷ் : (ஆர்வமா
வாயத்தொறக்க) எனக்கு இதெல்லாம் தேவையா? நான் வெளிய போறேன் (MV : எப்படா சொல்லுவோம்னு
காத்திருக்கானுங்க....திட்டுன்னு சொன்னதும் ஏதோ பெருசா வாயத்தொறந்தான் என்னவா இருக்கும்
?)
இதப்பாத்துட்டு
இருந்த நிஷாவும் “காலையில எந்திருச்சு குழம்பு வைங்கடான்னா, இவனுங்க குழப்பம் பண்ணி
விளையாடிட்டு இருக்கானுங்க இம்சைங்க”ன்னு பொலம்புனாங்க.
சனத்துக்கு
சுழி சும்மா இருக்க விடமாட்டேங்குது போல....எவங்கிட்டயாச்சும் சலம்பிட்டே இருக்கு.
2 பேரு கூடிப் பேசிட்டு இருந்தாப் போதும் சட்டுனு உள்ள புகுந்து எதாச்சும் எகடாசிப்
பேசி எக்குத்தப்பா வாங்கி கட்டிக்கிட்டு கமல் சார் கிட்டையும், கேமராகிட்டையும் கண்ணக்
கசக்கிக்கிட்டு நிக்குது. இதுல 3 நிமிஷத்துக்கு மேல பஞ்சாயத்து எதும் இல்லேன்னா மூட்
அவுட் ஆகிடுது.
முதல் நாமினேஷன்
பிராசஸ்....
ஷிவானி, சனம்,
சம்மு, கேபி, ஆஜீத், ரேகா, ரம்யா, சுரேஷ் ! இதுல சுரேஷ் தலைவர்ன்றதால அவரு நாமினேஷன்ல
இல்ல.
அதிக நாமினேஷன்
வரிசைப்படி சனம், ஷிவானி, சம்மு, ரேகா, கேபி, ஆஜீத், ரம்யா !
வெளிய ரம்யாகிட்ட
சனம் “நான் என்ன சொன்னாலும் சரியா அத தப்பா புரிஞ்சுக்கிட்டு சரசம் பண்ண ஆரம்பிச்சுடுறானுங்க.
அன்னைக்கு ஆஜீத்கிட்ட நிஷா கருப்பா இருந்தாலும் கலையா இருக்குன்னு சொன்னத என்னது ?
கலையா இருந்தாலும் நிஷா கருப்பா இருக்கா?னு கேட்டுட்டு போயி சொல்லிக் குடுக்குறான்.
பில்டருக்கு என் மேல பகை இருக்கு சரி....மொட்டையனுக்கு என் மேல என்ன மனக்கசப்பு ? இதக்கேட்டா
எல்லாரும் இஞ்சி தின்ன மங்கி மாதிரி மூஞ்சிய வச்சிக்கிறானுங்க ஓ காட்...சோ சேட்”னு
பொலம்புச்சு.
கண்டென்ட் இல்லாத
நேரத்துல நம்ம பிக்பாஸுக்கு தேல்பத்திரிசிங்கா கைக்கு கிடைக்குறது இந்த ஃபேஷன் ஷோதான்.
அக்யூஸ்டுங்க பில்டரும், சனமும் ஜட்ஜாம். பேஷன் ஷோ, திறமைகளை வெளிப்படுத்தும் போட்டி,
கேள்வி பதில் இதெல்லாம் நடக்குமாம் கடைசில மிஸ்டர் & மிஸ் பிக்பாஸ் சீசன் 4 பட்டம்
குடுப்பாங்களாம். அந்தப் பட்டத்த வாங்கிட்டு இவனுங்க எஞ்சினியராகி இலவச ஹார்ட் ஆப்பரேஷன்லாம்
பண்ணி மக்களுக்கு சேவை செய்வாங்களாம். மேய்க்குறது எருமை....அதுல என்ன பெருமை ?
இன்னைக்கு பில்டர்
கண்ணு முழுக்க சாத்தூர் ஷிவானி மேலதான்.
பேஷன் ஷோல பெஸ்ட்
ட்ரெஸ்ஸர் ஆண் – ஜித்தன், பெண் – சம்மு
பெஸ்ட் ஆட்டிட்யூட்
ஆண் – ஆரி, பெண் – ஷிவானி
அடுத்து திறமை
வெளிப்படுத்தும் போட்டி....
சாத்தூர் ஷிவானி
தன்னோட அந்த 4 மணி ஷிவானிய வெளிய கொண்டுவந்து வெறித்தனமா குத்தாட்டம் போட்டாங்க......
கேபியெல்லாம்
சும்மா அமுக்கு குமுக்கு அமால் டுமால்னு கலக்கி எடுத்துச்சு, ஜித்தன் ரெண்டு ஜம்ப்பு
ஜம்ப்பிட்டு போனாப்ல, அடுத்து அன்னப்போஸ்டு அனிதா, பத்தாம் வகுப்பு படிக்கும்போது பேச்சுப்போட்டிக்கு
தயார் பண்ண ஸ்பீச் போல. கேப் விடாம சொன்னதப் பாத்தா இந்த ஒரே ரெக்கார்ட் பல வருஷ ரிப்பீட்
மாதிரி இருந்துச்சு.....எப்பவும் போல நீளத்துக்கு பஞ்சமில்ல.....ஆனாலும் நல்ல ஃப்ளோ
! நமக்குதான் அவங்க முடிக்கும் போது “இப்பிடி பேசுற என்னயப் பெத்த எங்க அம்மா கருப்பா
இருக்குறதப் பாத்துட்டு”ன்னு சொல்லி நிஷாவ கட்டிப்பிடிச்சு அழுதுடுவாங்களோன்னு கெதக்குன்னு
இருந்துச்சு.....நல்ல வேளை சம்பவம் நடக்கல !
சகுனி சுரேஷ்
நாமம்லாம் போட்டுட்டு ஷேவ் பண்ண செய்வினை பொம்மை மாதிரி வந்தாரு. “இப்பப் பாத்தீங்கன்னா
பரதநாட்டியம் எப்பிடி கண்டுபிடிச்சிருப்பாங்கன்ற ஒரு சின்ன கற்பனை” அப்டின்னு சொல்லி
பரதநாட்டியம் ஆடிக் காமிச்சார்.
இதுல பட்டத்த
சகுனி சுரேஷுக்கும், அன்னப்போஸ்டுக்கும் குடுக்க....அன்னப்போஸ்டு “நான் மிஸ் இல்ல மிஸ்ஸஸ்”னு
சொல்லிட்டுபோச்சு. காமெடி சொல்றோம்னு நெனச்சிருக்கும்போல...... ப்ச்.......பாவம்.....!
அடுத்து கேள்வி
பதில்
ரியோகிட்ட “நீ
தேர்ந்தெடுக்கப்பட்டா என்ன காரணத்துக்காக தேர்ந்தெடுக்கப்படனும்?”னு கேக்க அவனோ “நான்
காமிச்சுட்டு இருக்குற இந்த நல்ல முகத்துக்கு குடுங்க”ன்னு கேசுவலா சொல்லிட்டு இறங்கிட்டான்.
ஷிவானி கிட்ட
“வாழ்க்கையில யாரச்சும் உன்னய முன்னுதாரனமா எடுத்துக்கிட்டா எந்த காரணதுக்காக எடுத்துக்கனும்?னு
கேக்க (ஏண்டா அந்தப் பொண்ணுகிட்ட கேக்குற கேள்வியாடா இது ?)
“அப்டில்லாம்
எவனும் என்னய எக்சாம்ப்பிளா எடுத்துக்க மாட்டான் ஆனாலும் விவேகானந்தர் சொன்ன மாதிரி
எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்ன்ற மாதிரி வாழுவேன்”னு வழ வழன்னு எதயோ சொல்லிட்டு
குதிச்சு ஓடுச்சு. இதப் பாத்த பில்டருக்கு கூஸ்பம்ப்ஸ் வந்து கை தட்டுனான்.
ஜித்தன் கிட்ட
“வாழ்க்கையில ஏற்றத் தாழ்வ எப்பிடிப் பாக்குற?”ன்னு கேட்டதுக்கு, “இப்பதான் என்னய நம்பி
எங்கப்பா ஆபீஸ் சாவிய குடுத்திருக்கார்....கம்பெனி மாதிரியே வாழ்க்கையும் சூப்பர் குட்டா
இருக்க பாடுபடுவேன்”னு பக்குவமா சொல்லிட்டு போனார்.
அடுத்து சம்முகிட்ட,
“சிங்கிள் மதாரா எப்பிடி சிங்கிள் ஹேன்டில் பண்ற?”ன்னு பில்டரு கேக்க “டேய் நான் சிங்கிள்
இல்ல இப்பவும் மேரிட் தாண்டா மலைக்கொரங்கே.....என்னதான் ஆடல், பாடல், மாடல்னு திரிஞ்சாலும்
பிள்ளைகள பேணிக் காக்குறது கடமை”ன்னு க்யூட்டா சொல்லிட்டு இறங்குனாங்க.
சகுனி சுரேஷ
கூப்ட்டு பில்டரு “உனக்கு பிடிச்ச மாதிரி கொளுத்திப் போடுறேன் கபால்னு பிடிச்சிக்கோ”ன்னு
சொல்லி “இந்த வீட்ல யாரு முகமூடி போட்டிருக்கான்னு நெனைக்கிற”ன்னு கேக்க, “அது எல்லாருந்தான்”னு
ஸ்மூத்த ஆரம்பிச்சு “இந்தோ நம்ம ரியோ சொன்ன மாதிரி ரெண்டு முகம்”னு மொத கியர போட்டதும்
ரியோ “ஹலோ என்னய எக்சாம்பிளா சொல்லக்கூடாது”ன்னு சவுண்டக் குடுக்க “அட ராமா நான் உன்னய
எக்சாம்பிளா சொல்லல”ன்னு சகுனி சமாளிச்சாலும் ரியோ விடுற மாதிரி தெரியல...ரியோ இருந்த
ரைவலுக்கு யாரும் சமாதானப்படுத்தவும் இல்ல....இதுல சகுனி சும்மா இல்லாம “இப்பிடித்தான்
நான் அனிதா கூட சண்டையில”ன்னு ஆரம்பிக்க அனிதாவும், ரியோவும் ஒரு சேர “இந்தா உனக்கு
அனிதாவ இழுக்கலேன்னா இனிய நாளா அமையாதே”ன்னு கேட்டப் போட்டாங்க.
பஞ்சாயத்த அப்போதைக்கு
முடிச்சிட்டு ஆண்கள்ல ஜித்தன் வின்னரு, ஆரி ரன்னரு, பெண்கள்ல கேபி ரன்னரு, ஷிவானி வின்னரு....என்னடான்னா
ஆரம்பத்துல குடுத்த அவார்ட தப்பா ஷிவானிக்கு குடுத்துட்டானாம் பில்டரு. அது ரேகாவுக்காம்.
ஏண்டா பில்டரு, நீ அந்த பிள்ளைக்கிட்ட கையக் குடுத்து விளையாட இந்த கேப்மாரித்தனமாடா
பண்ணுவ ?
நிஷாவுக்கு
பொறந்த டேவாம்....! வழக்கம்போல யார்கிட்டயும் சொல்லலனு சொல்லி கேமராக்கு முன்னாடி நின்னு
உலகத்துக்கே சொல்லிட்டு இருந்துச்சு. உள்ள போனா பிக்பாஸன் கேக்க குடுத்தனுப்பி, வீடியோ
போட்டு எப்பவும் போல எழவு வீடா மாத்துனாப்ல. பிக்பாஸுக்கு நல்ல நாளுன்னும் இல்ல, கெட்ட
நாளுன்னும் இல்ல.....எந்த நாளுன்னாலும் ஒப்பாரி வைக்கவிடாம விடுறதில்ல.
ஊருல இருக்குற
எல்லா சோகத்துக்கும் குழுங்கி குழுங்கி அழுகுற ஒரே ஆளு நம்ம சாத்தூர் ஷிவானிதான்.....”நேத்து
சாப்ட்டு முடிச்சிட்டு உக்காந்திருந்தப்ப வயித்துவழியா ஏறி வாய் வழியா ஏப்பம் வந்துருச்சு”ன்னு
சோகமா மூஞ்சிய வச்சுக்கிட்டு அதுகிட்ட சொன்னா அந்தப் பொண்ணு வடிக்கிற கண்ணீருல மொட்டை
மாடி விவசாயம் பண்ணிடலாம் ! இதோட இன்னைக்கு முடிஞ்சிருக்கு !
Comments
Post a Comment