பிக்பாஸ் – 4 : நாள் - 15 (19.10.20)
15வது நாள்
இன்னும் உள்ளதான்
இருக்கோம்னு உல்லாசமா தூங்கிக்கிட்டு இருந்தவனுங்களுக்கு “உல்லால்லா” பாட்டு அலாரமா
அடிச்சிச்சு.....இன்னைக்கு பொழப்பு ஊ ஊ....லாலாவா இருக்கும்னு அப்ப எவனுக்கும் தெரியது.
ரம்யா, சனம்,
சம்மு, கேபின்னு தேவியர் நால்வரும் நாலடி முன்னாடி எடுத்துவச்சு லான்ல ஆட....மத்தவனுங்க
எல்லாம் மனித சங்கிலி போராளிகள் மாதிரி வரிசையா நின்னு வார்ம் அப் பண்ணிட்டு இருந்தானுங்க.
அன்னபோஸ்டு அங்கயும் குதிச்சிட்டுதான் இருந்துச்சு.
உள்ள பாத்ரூம்ல.....
சிங்க்குல துணி
தொவச்சுட்டு இருந்த சகுனிகிட்ட சனம் வந்து.....”பல்லு வெளக்குற இடத்துல இப்பிடி பனியன்,
ஜட்டிய தொவைக்குறீங்களே....பரவாயில்லையா?”ன்னு கேக்க, “கீழ குனிஞ்சு கும்ம முடியல துணிய
அதான் அங்கிள் சிங்க்குல அலசுறேன்”னு சகுனி சொல்ல, “நாந்தான் இருக்கேன்ல....சோலோவா
சோப்பு போட்டு தர மாட்டேனா?”ன்னு சனம் கேட்டதுக்கு “தொவைக்குற இடத்துல தொயறாமா? என்னய
விடு போயிடுறேம்மா”ன்னு போயிட்டாப்ல சகுனி.
உள்ள இத பில்டர்
கிட்ட ஃபில்டர் கிங்க்ஸ பத்தவைக்குற மாதிரி பதமா சகுனி பத்தவைக்க.....அவன் புஜத்தை
மடக்கி, சனத்த அடக்க கிளம்பிட்டான். போனவன் ரியோகிட்ட போயி “சிங்க்குல துணி தொவைச்சா
சிக்கல்னு இ.பி.கோல எதுவும் இருக்கா?”ன்னு
கேக்க, ரியோவோ “மகராசனா தொவைங்க....முடிஞ்சா கக்கூஸ் கோப்பையில கூட காயப்போடுங்கடா”ன்னு
பில்டரு ஷோல்டரத் தளர்த்தி அனுப்புனான்.
கேபியும், ரியோவும்
அரைக்கீரைய ஆஞ்சுட்டு இருக்கும்போது ரியோ அந்தப்பக்கமா போன சனத்தக் சத்தமா கூப்ட்டு
ரியோ : ஆமா
கக்கூஸ்ல என்ன கரச்சல் ? ட்ரைவிங்க் லைசன்ஸ் இல்லாதவன் டிராபிக் போலீஸ் மேலயே வண்டிய
இடிக்குறாப்ல எப்பப் பாத்தாலும் எவங்கிட்டயாச்சும் ஒரண்டை இழுக்குறது உனக்கு டைம்பாஸா
?
சனம் : இந்தாப்பா
அவரு துணிய நான் தொவைக்குறது தப்பா ? இல்ல எனக்கு தொவைக்கத் தெரியாதா ?
ரியோ : அவரு
உங்கிட்ட தொவைக்க சொல்லி கேட்டாரா ?
சனம் : அந்தாளு
நான் பேசுறதையும் கேக்க மாட்டேங்குறான்.....துணி தொவைக்க சொல்லியும் கேக்க மாட்டேங்குறான்.....கடங்காரன்
ரியோ : அப்பறம்
ஏன் நீ கேட்ட ?
சனம் : அவன் கேக்கல அதனால நான் கேட்டேன்...இதென்ன வம்பா
இருக்கு ?
கேபி : ஏங்க
உங்களுக்கெதுக்கு தேவையில்லாத வேலை...
சனம் : உனக்கு
புரியல கேபி.....கக்கூஸ் கழுவ மட்டும் குனிய முடியுமாம்....ஆனா குர்தாவ தொவைக்க குனிய
முடியாதாம்....இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ? எல்லாம் ஒரு கணக்கு.....புரியாது
உனக்கு....! எல்லாம் என்னய வெளிய அனுப்ப வைக்குற தந்திரம்...
ரியோ : நியாயமா
உனக்கு வைக்க வேண்டியது மலையாள மாந்த்ரீக எந்திரம்....இனிமேலாச்சும் பிரச்சனை எதும்
பண்ணாம பேயாம இரு...போ...!//
“என்ன சுரேஷ்
சார் அவ்வளவுதானா நம்ம ஃபிரண்ட்ஷிப்பு...? துப்புற இடத்துல தொவச்சா கறை பிடிக்குமேன்னு
அக்கறையில சொன்னா மூஞ்சியத் தூக்கிட்டு வந்து இக்கரையில உக்காந்துகிட்டீங்க....பிரண்டா
இல்லேன்னாலும் ஒரு பெஸ்டியா என்னய சேத்துக்கலாம்ல?”ன்னு கேட்டதுக்கு “சரி கையக்குடு”ன்னு
சுரேஷ் சொன்னதுக்கு “ஆனா நீங்க அப்பிடி உண்மையா நெனைக்குறதில்லையே ...என் நெஞ்சு பொறுக்குதில்லையே”ன்னு
அதே ரெக்கார்ட போட.....”அடியாத்தீ...ஒழுங்கு நிலையில இல்ல இது மனம்....சரியான பைத்தியம்
இந்த சனம்”னு சொல்லிட்டு ஓடிட்டாரு.
கேபி கூட இத
குணமா சனத்துக்கிட்ட சொன்னதுக்கு அது அதே ராமாயணத்த ஆரம்பிக்க.....கேபியும் கேட்வாக்
போட்டு வெளிய போயிடுச்சு. வெளிய வந்த சனம் “இங்க இவ்வளவு பிராது போயிட்டு இருக்கு...எவனுந்தான்
குடுக்க மாட்டேங்குறான்....சரி நீங்களாச்சும் உங்க துணிய கழட்டிக் குடுங்க தொவச்சு
காயப்போடுறேன்”னு பிக்பாஸ்கிட்ட கேட்டுட்டு இருந்தாங்க.
இந்த குனிஞ்சு
கும்முற விஷயத்த உள்ள கேபி சகுனிகிட்ட போட்டுக்குடுக்க, பின்னாடியே வந்த சனத்துக்கிட்ட
“இனி என் பக்கமா வந்தா வகுந்து விடுவேன் ஜாக்கிரதை”ன்னுட்டுப் போயிட்டாரு சகுனி. “சினம்
கொண்ட சனம் என்ன செய்யும் தெரியுமா?”ன்னு கேட்டுக்கிட்டே கேப்டன் ரியோகிட்ட போச்சு
சனம்.
“கேப்டன் ரியோ
இந்தாளு என்னய வகுந்து விடுவேன்னு வாய்க்கு வந்தபடி மிரட்டுறாப்ல”ன்னு சனம் புகார்
சொல்ல ரியோவோ, “இந்த கொலையெல்லம் பண்ணுவேன்னுலாம் சொல்லியிருக்கக் கூடாதா ? இவ அட்டூழியம்
தாங்க முடியல வீட்ல”ன்னு மனசுல நெனச்சுக்கிட்டு. “இங்க பாரு அவரு வேலை செய்யலேன்னா
மட்டும் வந்து எங்கிட்ட சொல்லு....பர்சனலா பேசி அந்தாளு உன் செவுல செவத்துப் பக்கமா
திருப்பிறாம பாத்துக்கோ”ன்னு சொல்லிட்டான்.
“2 நாளைக்கு
முன்ன பில்டர் பஞ்சாயத்துல கூட இவ்வளவு வயலன்ஸ் இல்லையே ? சரி மதிய சேட்டைக்கு சாஃப்ட்
சம்முவ நோண்டிப் பாக்கலாம்”ன்ற யோசனையில போனாங்க சனம்.
எவிக்ஷன் :
ரியோ, வேல்ஸ், சனம், அர்ச்சனா இவங்கள நாமினேட் பண்ணக்கூடாது. சனம் இன்னைக்கும், இந்த
வாரம் முழுக்கவும் சரசம் பண்றதுக்கு இதான்
காரணம்.
பாத்ததும் வணக்கம்
சொல்ற மாதிரி....இன்னைக்கு போனதும் எல்லாரும் ஆரி பேரையும், சுரேஷ் பேரையும்தான் சொன்னானுங்க.
அன்னப்போஸ்டு
அனிதா, ஆஜீத், பில்டர் பாலாஜி , ஆரி, சுரேஷ் இவங்கதான் நாமினேஷன்ல இருக்குற ஆளுங்க.
இதுல யாரு யாரு எந்தக் காரணத்துக்கு நாமினேஷன்னு வேற பிக்கி வெளிய சொல்ட்டாப்ல.
பில்டரு, சகுனிகிட்ட
“ஏங்க ஆரிக்கு தெரிஞ்சதே அட்வைஸ் பண்றது மட்டுந்தான். அதையும் அந்தாளு பண்ணக்கூடாதுன்னு
சொன்னா படுத்து தூங்குறது மட்டுந்தான் அந்தாளுக்கு முடியும். என்ன கொடுமைங்க இது?”ன்னு
அங்கலாய்ச்சுட்டு இருந்தான்.
அடுத்த கேள்வி
நமக்குதான்னு நாக்குத் தள்ள உக்காந்திருக்கும் நாலாம் பெஞ்சு ஸ்டூடண்டு மாதிரி வெளிய
அன்னப்போஸ்டு அனிதா ஆரிகிட்ட “போச்சு....எப்படான்னு காத்திருப்பானுங்க போல....! நறுக்குன்னு
நாமினேஷன்ல இழுத்து வுட்டானுங்க. இதுக்குத்தான் நானும் 3 நாளா நம்மள மறந்துறனும்னு
முனங்காம கூட இருந்தேன். உள்ள போனதும் கரெக்டா நியாபகம் வச்சு சொல்ட்டானுங்க நியாண்டர்தாலுங்க.
ஏங்க இதுல என் வீட்டுகாரர் பேரு எதும் டேமேஜ் ஆகிடாதே ? பாவம்....! அவரு வாய் வலிக்குமேன்னு
அவருக்கும் சேர்த்து நாந்தான் பேசுறது வீட்ல...என்ன.... அதனால கொஞ்சம் பிரச்சனை அவரு
காதுல....மத்தபடி நல்ல மனுஷன். அதான் கவலையா இருக்கு”ன்னு அன்னப்போஸ்டு பொலம்ப, “ஃப்ரைட்ரைஸ்
சாப்பிட போனாக்கூட ஃப்ரீ அட்வைஸ் பண்ணிட்டு சாப்ட்டு வர ஆளு நான்...என்னையவே எண்ணிக்கையில
கொண்டு வந்துட்டானுங்கன்னு இருக்கேன் நீ வேற. ஆனாலும் அடங்கமாட்டான் இந்த ஆரி....பொங்குனா
தாங்கமாட்டானுங்க இந்த ஏரி”ன்னு எரிமலையா குமுறிட்டு இருந்தாப்ல.
அடுத்து சொல்றியா
? செய்யுறியான்னு ஒரு விளையாட்டாம். என்ன பேருங்க இது மிட்நைட் மெசெஞ்சர் சாட் மாதிரி
? இத இங்கீஸ்ல Truth or Dare ன்னு சொல்றதுக்கு என்ன கேடு ? அது சரி நாம புடுங்குற ஆணி
எல்லாம் தேவையில்லாததுதான.....
நாமினேட் ஆகாத
11 பேரும் நாமினேட் ஆன 5 பேரு கேக்குறதுக்கு உண்மை சொல்லனும் இல்ல அவங்க சொல்றத செய்யனும்.
யாருக்கு கேள்வின்னு முடிவு பண்ண ஒரு சக்கரத்த
சுத்தி விட்டு பாப்பாங்க.
வேல்ஸுக்கு
மொத ரவுண்டு – Dare
பிடிக்காத
3 பேருக்கு ஃபோம்ல மீசை வரையனும். சனம், சோமு, ரம்யாக்கு வரைஞ்சாப்ல
அர்ச்சனா –
Truth
மாஸ்க் போட்டிருக்குறது
யாரு ? - ரியோ, வேல்ஸ், சாத்தூர் ஷிவானி
ரியோ –
Truth
ஒப்பன் நாமினேஷன்
– ரம்யா, சனம், சம்மு
நிஷா –
Truth
Simply
waste, Nomination & நமத்துப் போன பட்டாசு யாரு ? – வேல்ஸ் & ஷிவானி, சோமு
& சனம், ரம்யா
ஜித்து பாய்
– Truth
பிடிக்காத
3 பேரு – நிஷா
இத சொல்லிட்டு
இருக்கும்போதே ரியோ திடீர்னு எந்திரிச்சு ரூல்ஸ்ல ஒரு பஞ்சாயத்தக் கூட்ட, அத சகுனி
எடுத்து சொன்னப்ப நக்கலா ஒத்துக்க, எல்லாருமே ரூல்ஸ் சரிதான்னு சொன்னதும் ரியோ அமைதியானாப்ல.
“அடுத்து யாரு
கேள்வி கேக்கலாம்?”னு வரப்ப சகுனி கேள்வி கேக்க மாட்டேன்னு சொன்னதுக்கு ஆரி கோவப்பட
“சரி தொலைங்க”ன்னு அவரும் ஒரு கேள்விய கேட்டாப்ல
சனம் –
Dare
நடிக்கிற 3
பேருக்கு ஸ்ப்ரே பண்ணனும் – வேல்ஸ், அர்ச்சனா, சம்மு
கேபி –
Truth
உள்ள ஒண்ணு
வச்சுக்கிட்டு வெளிய வேற பேசுற ஆட்கள் – வேல்ஸ்
இத சொன்னதும்
வேல்ஸ் வேகமா எந்திரிச்சு வெவகாரம் பண்ண ஆரம்பிச்சாப்ல. “கிச்சன் பக்கம் போறப்பயெல்லாம்
சும்மா சும்மா ஃப்ரிட்ஜ தொறந்து பாக்குற மாதிரி, எவன எதக் கேட்டாலும் என்னய ஏண்டா சொல்றீங்க?”ன்னு
சாட்டையடி கேள்விகள கேட்டாப்ல. அப்பறம் அர்ச்சனா அடக்கி வச்சப்பறந்தான் வெக்ஸான வேல்ஸு
ரிலாக்ஸ் மோடுக்கு வந்தாப்ல.
எல்லாம் முடிஞ்சதும்
ஆரியும், அன்னப்போஸ்டும் மற்றும் ரியோவும்.....
நேரம் : 7.45
PM
ரியோ : எனக்கு
என்ன புரியலேன்னா
ஆரி : அதான்
நாங்க ரூல்ஸ் புக்க எடுத்துப் படிச்சோம்
அன்னப்போஸ்டு
: ஆமா நான் சொல்றேன்....
ரியோ : நானும்
ரூல்ஸ் புக்க படிச்சேனே....
அன்னப்போஸ்டு
: அதத்தான் நானும் சொல்றேன் கேளுங்க
ஆரி : மதியம்
அவரைக்காய் கூட்டா ? இல்ல பொரியலா ?
அன்னப்போஸ்டு
: கூட்டு பண்றது எப்டின்னா....
ரியோ : மஞ்சக்கிழங்கு
மசியல் போடுவோமா ஆரி ?
அன்னப்போஸ்டு
: நான் சொல்றதக் கேளுங்கடா
ஆரி : வேல்ஸு
என்ன சொல்றாப்ல ?
அன்னப்போஸ்டு
: டேய் நிறுத்துங்கடா...என்னடா நெனச்சுட்டு இருக்கீங்க ? என்னய பேச விடாம இந்த ஆரி
என்னடான்னா தொறந்து வுட்ட ஏரி மாதிரி உங்கிட்ட கொட்டிட்டு இருக்கான். நீ என்னடானா குனிஞ்சு
கூட என்னய பாக்க மாடேங்குற ?
ஆரி : சரிம்மா
நீ பேசு....
அன்னப்போஸ்டு
: வந்த நாள்ல இருந்து நான் எங்கடா பேசுனேன் ? பேசி இருந்தா நான் வந்துருப்பேனா நாமிநேஷனுக்கு
?
பில்டரு : என்ன
தாத்தா இவ பேசவே இல்லேன்றா ?
தாத்தா : பேசாததே
இப்டின்னா....அப்ப அவ பேச ஆரம்பிச்சா எப்டின்னு யோசி
அன்னப்போஸ்டு
: ஏண்டா பேச்சே வராதா சோமுகிட்ட பராசக்தி வசனம் பேசச் சொல்லி படுத்துறீங்க....ஆஜீத்துக்கு
அஜீத் எப்பிடி பேசுவாப்லன்னு சொல்லிக் குடுக்குறீங்க ஆனா நான் பேச வந்தா மட்டும் பேச்ச
மாத்திட்டு, கதவ சாத்திட்டுப் போறீங்க. நான் கல்யாணமான பொம்பளை யூ நோ ?
நேரம் : 8.00
PM
ஆரி : சரிம்மா
நீ பேசு...
அன்னப்போஸ்டு
: அதான் பேச விட மாட்டேங்குறீங்களே ....ஆண்கள் என்னைக்கு பெண்கள பேச விட்டீங்க. மிடில்
கிளாஸ் ஆளுகளா பாத்தா கண்ணாடி கிளாசாதான நீங்க நெனைக்குறீங்க...வாடி என் கப்பக்கெழங்கே
எங்க அக்காப் பெத்த முக்காத்துட்டே பாடாத வாயத் தொறந்தேன்னு அன்னைக்கே பாடுனீங்களே
பாட்டு.... !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&
நேரம் : 12.30
AM
அன்னப்போஸ்டு
: இவ்வளவுக்கும் எனக்கு அரசியல் வேற தெரியும். நடிகர் சங்க தேர்தல்ல விஷால் நின்னப்ப
அவர் குடுத்த வாக்குறுதிகள் எல்லாம் திராவிடத்தால் நாம் வீழ்ந்த நாட்களை மீட்டுத் தரும்
தகத்தாய சூரியனா ஜொலிச்சு மீட்பார்னு....... !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&
நேரம் : அதிகாலை
3.30 AM
ஷிவானி : பில்டரு.....கன்னத்துல
ரோஸ் இன்னும் இருக்கா ? இல்ல அழிஞ்சுருச்சா ?
பில்டரு : ஆல்ரெடி
ஒரு நாளே முடிஞ்சிருச்சு.....இவ இன்னும் முடிக்கல. கேட்டா நான் இன்னும் ஆரம்பிக்கவே
இல்லேன்னுவா....
சனம் : சுரேஷ்
சார், நான் வேணும்னா சிங்க்குல தொவச்சு காயப்போட்ட உங்க துணிய எடுத்துட்டு வரவா.....மழை
பெய்யுறாப்ல இருக்கு.....
ஆரி : அனிதாம்மா.....நீ
இன்னும் ஆரிட்ட பேசுறேன்னு சொன்னத பேசவே இல்லையே.....
அன்னப்போஸ்டு
: அதான் பேச விட மாட்டேங்குறீங்களே ....ஆண்கள் என்னைக்கு பெண்கள பேச விட்டீங்க. !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&, !@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&,
!@$#$%^&**())((*&^&^%$#@@@@#$^^&
ஒட்டு மொத்த
வீட்டாளுகளும் : எதே......மறுபடியும் மொதல்ல இருந்தா........
Comments
Post a Comment