பிக்பாஸ் – 4 : நாள் - 12 (16.10.20)
12வது நாள்
ஆப்பத்துக்கு
ஆர்டர் பண்ணிட்டு அக்கடான்னு உக்காந்திருந்தாப்ல அனிதா லான் டேபிள்ல கன்னத்துல கைய
வச்சுக்கிட்டு உக்காந்திருக்க மடார்னு “மாசு மரணம்” பாட்டு அலாரமா ஒலிக்க. அத கண்டுக்கதான்
யாருமில்ல. அடிச்ச போதை இறங்காத மாதிரியே ஒவ்வொருத்தனா கண்ணக் கசக்குனானுங்க. ஆனா அனிதா
மட்டும் ஐப்பசி மாச பொறப்புக்கு “அஞ்சாம் படியெடுத்து அஞ்சான் படம் ஒரம் ஒரமா” பாட்டுக்கு
அருள் வந்து ஆடுன மாதிரி ஆடிட்டு இருந்துச்சு. சனமும் ஸ்டெப்புக்கு பாட்டா இல்ல பாட்டுக்கு
ஸ்டெப்பா?ன்ற மாதிரி தக் ஸ்டெப்புல கான்சன்டரேட் பண்ணிட்டு இருந்தாங்க.
சைலண்ட் வாரியர்
சம்மு இன்னைக்கு சட்டுன்னு கேமராவப் பாத்து கண்ணீர் சிந்த....ஷிவானி வந்து “என்னா சம்மு
க்ரையிங்கா?”ன்னு கேட்டுச்சு. அப்பறம் அந்தப்பக்கமா அர்ச்சனா வந்து “என்ன சம்மு அழுகாச்சியா?”ன்னு
கேட்டதுக்கு இல்ல “கண்ணு வேர்க்குது”ன்னு சமாளிக்க அப்பறம் புத்திர சோகம்னு சொல்லி
சீன முடிச்சாங்க.
“லொங்கு லொங்குன்னு
குதிச்சு தங்கு புங்குன்னு ஆடுனதுக்கு லக்ஸுரி பட்ஜெட் 3200 முழுசா கெடச்சிருக்கு ஆனா
காலையில பாட்டுக்கு கரெக்ட் டைமுக்கு வராதது, கூடிப் பேச கூப்ட்ட நேரத்துல கக்கூஸ்
போனது, சோம்பேறித்தனத்துல சோமுவ மிஞ்சுனதுன்னு ஒழுக்கமின்மையில ஒண்ணாம் நம்பரா சில
பேரு இருக்குறதால 200 பாயிண்டு அவுட்டு”ன்னுட்டாரு பிக்பாஸ்காரு.
“சரி போர்ட
எடுத்துவச்சு பொருட்கள எழுதுங்கன்னு சொன்னதும் அன்னப்போஸ்ட வாசிக்கச் சொல்லிட்டு ரியோ,
ஆரி, சனம் போர்டுல எழுத ஆரம்பிக்க, அனிதா ஆறாம் வாய்ப்பாடு சொல்ற மாதிரி வரிசையா சொல்ல,
குழப்பத்துல ரியோ டென்ஷனாகி பேனாவக் கொண்டி எறிஞ்சுட்டு போயிட்டான். இவ்வளவு களேபரத்தையும்
வருத்தப்படாத வாலிபிகள் சங்க உறுப்பினர்கள் ஷிவானி, சம்மு, ரம்யா 3ம் உக்காந்து “ஏய்
அங்கப் பாரு சனம் பாவடையில பூ இருக்கு, ஏய் இங்கப்பாரு அனிதா அரைப்படி உழக்காட்டம்
இருக்கு”ன்னு சொல்லி சிரிச்சிட்டு இருந்துச்சுங்க. “எங்கிட்ட சொன்னா நானும் லாஃப் பண்ணுவேன்”னு
சோமுவும் சைடா சாஞ்சது சிறப்பு.
எத நம்பி சனத்த
எழுத வுட்டானுனங்கன்னு தெரியல...ஒரே இடத்துல 1 மணி நேரம் இருந்தா அதுக்கு அது பேரே
மறந்து போயி “எக்ஸ்யூஸ்மீ யாராச்சும் சனத்த பாத்தீங்களா?”ன்னு அனத்த ஆரம்பிச்சுடும்....அதப்
போயி போர்டு எழுத விட்டா.....ராகி மாவ நாலு தடவை எழுதி வச்சுடுச்சுப் போல....கூட்டம்
மொத்தமும் அது பக்கமா திரும்ப, “ராகி ரசம் ராத்தூக்கத்துக்கு நல்லது”ன்னு சமாளிச்சு சாரப்பாம்பா
ஒதுங்கிடுச்சு.
“சரி, ஆட்டம்
கொண்டாட்டம் டாஸ்க்குல சுவாரஸ்யமா ஆடுன ரெண்டு பேரு யாரு?”ன்னு கேட்டதுக்கு ஒய்யாரமா
ஓட்டிங்க் சிஸ்டம்லாம் பண்ணி யார செலெக்ட் பண்ணானுங்கன்னு பாத்தா வேல்ஸும், கேபியுமாம்.
அடப் பதருகளா......கரகாட்டக்காரன் கனகாவுக்கு அப்பறம் தமிழ்நாட்டுலயே தலை சிறந்த ஆட்டக்காரி
சாத்தூர் ஷிவானிதான்னு சாலமன் பாப்பையா பட்டி மன்றமே நடத்தாமயே தீர்ப்பு சொல்லுவாரேடா....
சனத்த சுத்தி உருளை மாதிரி உருண்டுட்டு கிடந்த வேல்ஸுக்குப் போயி வின்னர் பட்டம் குடுக்குறீங்களேடா
? செய்ங்கடி.......செய்ங்க...! இந்த தடவ ஷிவானிக்கு விழுகுற பப்ளிக் ஓட்டுகள மட்டும்
பாருங்க.....அன்புமணி சாரே அலறுர அளவுக்கு இருக்கும்.
“சரி.....யாரு
இந்த வாரம் முழுக்க பாகுபாடு இல்லாம முழு ஈடுபாட்டோட எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு
செஞ்சது?”ன்னு கேட்டதுக்கு அதே மாதிரி ஓட்டுப் போட்டு ரியோவ செலெக்ட் பண்ணானுங்க. இந்த
3 பேரும் அடுத்த கேப்ட்டனுக்கான கேண்டிடேட்டுகளாம்.
“அப்ப ஈடுபாடு
இல்லாம இங்குட்டும் அங்குட்டுமா திரிஞ்சது யாரு?”ன்னு கேட்டதுக்கு, காது கேக்காத மாதிரியே
எல்லாரும் உக்காந்திருக்க, அர்ச்சனா, “சரி உங்களுக்கே தெரியும் யாரு உருப்படியில்லாம
சுத்திட்டு இருக்குறதுன்னு அவங்களவே கையத் தூக்குங்க”ன்னு சொன்னதுக்கு பில்டரும், ஷிவானியும்
கையத்தூக்க. ஆத்தாடி முடிவாகிடுச்சுன்னு மூச்சு விட்டப்ப நிறுத்துங்கன்னு ஒரு குரல்........
அது ரேகா மேம்.
“என்னங்கடா என்ன பேச வைக்குறீங்களா? அன்னைக்கு அட்டாகாசமா இருக்குன்னு அள்ளி அள்ளித்
தின்ணீங்களே லெமன் சாதம் அதுக்கு லெமன் பிழிஞ்சுக் குடுத்தது யாரு ? குளிர்காலம்ன்றதால
கக்கூஸ் கதவு இறுகியிருந்தப்ப அத இழுத்துவிட்டு சரி செஞ்சது யாரு ? முந்தானேத்து சனம்
பாலுன்னு நெனச்சு தோசை மாவுல டீ போட்டு குடுத்தப்ப நம்மள குடிக்க விடாம காப்பாத்துனது
யாரு ? ஆரி, 50 நாளில் மானம் மரியாதையை சம்பாதிப்பது எப்படின்னு அதிகாலை நாலு மணிக்கு
ஆஜீத்துக்கு க்ளாஸ் எடுத்துட்டு இருந்தப்போ அவன காப்பாத்துனது யாரு? எல்லாம் நம்ம பில்டரு.
சும்மா இருக்குறதையே சீரியஸான வேலையா செய்யுற சோமுவ விட்டுட்டீங்க...பில்டர படுத்துறீங்களே?”ன்னு
படையப்பா சிவாஜி மாதிரி பேசுனதக் கேட்டுட்டு கண்கலங்கி எல்லாரும் ஒத்துக்க....
“ஆகா எல்லாம்
குழப்பத்துல இருக்கானுங்க, இது நம்ம ஏரியா”ன்னு எகிறிக்குதிச்சு முன்னாடி வந்த ஆரி
தொண்டைய செருமிக்கிட்டு சொற்பொழிவ ஆரம்பிச்சாப்ல. “நண்பர்கள் வேற, நம்பர்கள் வேற.....பாசம்
வேற....பாய்சன் வேற”ன்னு ஆத்து ஆத்தி......மறுபடியும் ஓட்டெடுக்க வைக்க இந்த தடவ ஜித்து
பாய் மாட்டுனாப்ல......ஜித்து & ஷிவானி கண்ணாடி ஓய்வறைக்கு போகனுமாம். அங்க போயி....?
ஒண்ணுமில்ல..... இங்க சும்மா இருக்குறதுக்கு பதிலா அங்க போயி சும்மா இருங்கன்னு சொன்னாப்ல.....அவ்வளவுதான்
!
இந்த கலவரத்துல
“சோமு அவன் நடன நாட்டியத்துக்கு ஓட்டுப்போடலன்னு கோச்சுக்கிட்டான்”னு அனிதா நிஷாகிட்ட
சொல்லிட்டு இருக்க....சிறுசா ஆரம்பிச்சு அன்னப்போஸ்டு வழக்கம் போல பசப்ப ஆரம்பிச்சுச்சு.....யப்பா
டேய் அது நியூஸ் ரீடரா இல்ல DTS தியேட்டரா ? இந்தக் கத்து கத்துது......அது செஞ்ச அவமரியாதைக்கு
சோமு விஷத்துல சோத்தப் போட்டு சாப்ட்டு செத்துறலாம்......அப்பறமா வெளிய வந்தானுங்க
2 பேரும்....
சோமு : உக்காருடி.....
அனிதா : நான்
2 வயசுலயே உக்காந்துட்டேன்.....மிடில் கிளாஸ் ஃபேமில்ன்றதால உக்காத்தி வைக்கக் கூட
யாருமே இல்ல....அப்பறம் நானா குப்புற விழுந்து கொஞ்சம் கொஞ்சமா உக்காரப் பழகுனேன்.....அதனாலதான்
எனக்கு நிஷாக்காவ ரொம்பப் பிடிக்கும்....
சோமு : இல்லடி....நீ
நான் ஆடுனதுக்கு கையத் தூக்கலேன்னுதான் ஃபீல் பண்ணேன்....
அனிதா : உண்மைய
சொன்னா நீ ஆடுனதுக்கு நான் காலதான் தூக்கியிருக்கனும்....இன்னைக்கு என்னால முடியல...புரியுதா
? முடிஞ்சா நான் இந்த கர்லாவ கூட தூக்கி இருப்பேன்.....
சோமு : நீ அதப்பத்தி
அங்க இருந்து கத்துனதாலதான் நானும் அப்பிடி பேச வேண்டியதாப் போச்சு....
அனிதா : சின்ன
வயசுல நான் பேசுனது யாரு காதுக்கும் விழல...என் குரல் யாருக்கும் கேக்கல.....என்ன யாரும்
திரும்பிப்பாக்கல...அதுக்கப்பறந்தான் நான் கத்த ஆரம்பிச்சேன்....எல்லாரும் என்னய திரும்பிப்
பாத்தாங்க....
சோமு : சரி
தப்பு என் பேருலதான் .......சாரி....மன்னிச்சிரு.....மாஃப் கரோ.....ஷ்ரமிக்கனும்.....அபொரா
டொபாரா....
அனிதா : இன்னும்
337 மொழிகள் பாக்கி இருக்கே.....//
இந்த வின்டேஜ்
விஷபாட்டிலுக்கு சோமு இத “மாத்தி மாத்தி பேசாத”ன்னு சொன்னதுதான் பிரச்சனை. அன்னைக்கு
சகுனியும் இப்பிடி சொன்னதால “என்னயப் பத்தி அப்பிடி ரெஜிஸ்டர் ஆகிடும்”னு கதறுது....ஆக்சுவலா
எப்பயும் போல அத இதுவே சொல்லி சொல்லி ரெஜிஸ்டர் பண்ணிட்டு இருக்கு அன்னப்போஸ்டு. விஷபாட்டில்
இஸ் இஞ்சூரியஸ் டூ ஹவுஸ் !
இந்தப் பக்கம்
“கேப்டன் கேண்டிடேட்ஸுக்கு ஆதரவு யாரு எந்திரிங்க”ன்னு சொன்னதுக்கு கேபிக்கு ஆதரவா
ஒத்தையாளா நின்னாப்ல சகுனி.....! ரியோவுக்கும், வேல்ஸுக்கும் சமமா பிரிஞ்சு ஆதரவு குடுத்தானுங்க.
“ஆதரவாளர்கள்ல ஒருத்தர் கேண்டிடேட்ட தூக்கிகிட்டு நிக்கனும். யாரு அதிக நேரம் நிக்குறாங்களோ
அவங்கதான் உங்க இந்த வார கேப்டன்”னு சொன்னாப்ல பிக்கி.
கேபி அப்பவே
“இந்த விளையாட்டு நல்லா இல்ல நான் வரல”ன்னு சொன்னத கேக்கல சுரேஷ். சயிண்டிஸ்ட் சனம்
வந்து “நான் ஒண்ணு கண்டுபிடிச்சிருக்கேன் நீங்க நின்னு அந்த பொண்ண தூக்குனாதான் காலு
வலிக்கும், அதனால உக்காந்து தூக்குங்க காலு வலிக்காது”ன்னு சொன்னதுக்கு அங்கயே ஒரு
அப்பு விழுந்திருக்கனும்....ஆனா போட்டி போக்குல விட்டுட்டானுங்க.
ஆரி வேல்ஸ தூக்க,
பில்டரு ரியோவ தூக்க......எதிர்பார்த்தமாதிரியே கேபி பாதியிலையே இறங்கிட்டு தாத்தாவ
கட்டிப்பிடிச்சுக்கிட்டு பாச பாஸந்தி குடுத்துச்சு. இங்குட்டு ரேகா மேம் பன்ண ஏதோ ரப்ச்சர்ல
வேல்ஸு அவுட்டு. ரியோ கேப்டன். எல்லாரும் ரியோவ அள்ளித் தூக்கி அமர்க்களம் பண்ண....பக்கத்து
வீட்ல ஏதோ விஷேஷம் போல்ன்ற மாதிரி கண்ணாடி ரூம்ல இருந்து ஜித்து பாயும், ஷிவானியும்
பாத்துட்டு இருந்தாங்க. ஆனாலும் இந்த டாஸ்க்குல இதயங்களை வென்றது சகுனி சுரேஷ்தான்.
இங்க அந்தாளு மட்டுந்தான் கேம் தெரிஞ்சு கேம் விளையாட வந்திருக்காப்ல. கேபி ஃபீல் பண்ணதுக்கு.....”நான்
விளையாடுறது கேம்....நாளைக்கே உன்னய குத்தனும்னா குத்திட்டு போயிட்டே இருப்பேன்”னு
சொன்னது பஞ்ச்.
பெட் ரூம் உள்ளயும்
அதேதான்.....கேபி “உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகான்”னு தாத்தாவோட தியாகத்த
நெனச்சு நெனச்சு அழ....ரூமு முழுக்க கண்ணீர் அல....! இது போக தனக்கு ஆதரவா பில்டரும்,
ஆஜீத்தும் நிக்கலன்னு கேபிக்கு கோபம். அவ்வளவு நேரம் கேபி, பில்டரு, ஆஜீத் கிட்ட நல்லா
பேசிட்டு இருந்த சகுனி அர்ச்சனா ஆயின்மெண்ட்ட தேச்சு விட்டதும் அழுக ஆரம்பிக்க.....”ஏண்டா
இவ்வளவு நேரம் எங்ககிட்ட எந்த்தூசியாசமா பேசிட்டு இருந்துட்டு இப்பிடி அமுக்குனியா
அழுகுறியேடா”ன்ற மாதிரி பாத்தான் பில்டர்.
வெளிய எல்லா
பேரும் வேல்ஸ பாடச் சொல்லி கச்சேரி கேட்டுட்டு இருக்க, உள்ள கிச்சன்ல கேபி, பில்டரு,
ஆஜீத்......
எனக்கெல்லாம்
கேப்ட்டனாக ஆசையிருக்காதா ? அதுக்கு நீங்க ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு
நான் நம்புனது தப்பு போலன்னு கேபி சொன்னதும். ஆஜீத் “நாம கேட்டிருக்கனுமோ ? ஆனா நாம
ஏன் கேக்கலண்ணே ? ஒரு வேளை, ஒரு மாதிரி, நாம ஒண்ணுமே தெரியாம”ன்னு எதயோ ஆஜீத் உளற.....
“நீ கேப்ட்டனாக
ஆசப்படுவேன்னு எனக்கு தெரியாதுடி.....நான் உனக்கு சப்போர்ட் பணுணுவேன்னு நீ நெனச்சது
எனக்கு தெரியாதுடி”ன்னு பில்டர் சொன்னதும்......சட்டுன்னு கேபி திரும்பி “ தெரிஞ்சிருந்தா
மட்டும் அப்பிடியே அறுத்துத் தள்ளியிருப்ப.......ஏன் பில்டரு நான் நெனச்சது சோமுக்கு
தெரியுது......சம்முக்கு தெரியுது.....ஆனா உனக்கு தெரியலேல்ல.......உனக்கு உண்மையிலேயே
ஒண்ணுமே தெரியலேல்ல”ன்னு கேட்டதும் பில்டர் ஆஜீத்த பாத்து குடுத்த ஒரு எக்ஸ்பிரெஷன்
உண்மையாவே வேற லெவெல்.....அந்த ஒரு சீன் ஒட்டு மொத்தமா எபிஸோடையே மாத்துச்சு......!
இது நாம நெனைக்குற மாதிரிதான் போகுமான்னு இனிமேதான் பாக்கனும்.....பாப்போம் !
அப்பறம் “தவற
என்ணிப்பாக்க உள்ள அனுப்புனா....அங்க விட இங்க கம்ஃபர்டபிளா இருக்கு”ன்னு தலைவாணியப்
போட்டு தூங்குன ஜித்துவையும், ஷிவானியையும் “நீங்க வெளியவே வந்து சும்மா இருங்க”ன்னு
சொல்லி தொறந்து விட்டுட்டாரு. செக்கிழுத்த செங்கல்வராயன் வெளிய வர மாதிரி வாசல்ல நின்னு
வரவேத்தானுங்க ரெண்டு பேரையும்......
இந்த எபிஸோட்
உண்மையாவே ஒரு நல்ல எதிர்பார்ப்பை குடுத்துருக்கு.....வரட்டும் ஆண்டவர்....என்ன சொல்றாருன்னு
பாக்கலாம் !
Comments
Post a Comment