பிக்பாஸ் – 4 : நாள் - 19 (23.10.20)

 19வது நாள்

“ஆலுமா டோலுமா” அலாரம். சாத்தூர் ஷிவானி மடங்கி, மொடங்கி தான்  ஆடுற ஆட்டத்துக்கு மத்தவங்க யாரும் ஈடு குடுக்க முடியலன்னு நெனச்சதாலயோ என்னமோ திரும்பவும் சோலோக்கு ஷிஃப்ட் ஆகிடுச்சு. சனம் வெறித்தனமா தக் ஹாப்ப போட்டுட்டு இருந்தாங்க. ஆடும்போது வாய் மட்டும் ஒய்.விஜயா மாதிரி போறத கொஞ்சம் கொறச்சுக்கலாம். அனிதா எப்பவுமே பேச்சுன்னா பள்ளி பேச்சுப் போட்டி, டான்ஸுன்னா பள்ளி ஆண்டு விழான்னு இன்னும் அதே பள்ளி மானவி மோடுலதான் இருக்காங்க...ஆனா இத சொன்னோம்னா” ஸ்பின்னுன்னா கும்ப்ளே....நான் கல்யாணம் ஆன பொம்ளே”ன்னு சண்டைக்கு வரும். நமக்கெதுக்கு வம்பு. ஒரு வழியா எல்லாரும் லான காலி பண்ணானுங்க.

சகுனி, பாலா, ஆஜீத் 3 பேரும் சாப்ட்டுட்டு இருந்தப்போ சகுனி “என்னடா ஆஜீத் வெளிய யாரு போவான்னு ஜோசியம்லாம் சொல்றியாம் ? சம்மு சொல்லுச்சு. எனக்கு கொஞ்சம் சொல்லக்கூடாதா ? னு கேக்க, ஆஜீத்தும் தன்ன ஒரு சந்திரமுகி சாமியார் மாதிரி ஃபீல் பண்ணிக்கிட்டு கைப்பிடி சோத்த கைல எடுத்துக்கிட்டு “நீதான்”னு சொன்னதும் சகுனி “சந்தோஷம்டா சாப்டுற வரைக்கும் நல்ல என்டெர்டெயின்மெண்ட்டு”ன்னு எந்திரிச்சு போயிட்டாப்ல.

விசாரணை கைதிங்க மாதிரி எல்லாரும் லிவிங் ரூம்ல உக்காந்திருந்தானுங்க. ஷிவானி வீட்ல இருந்து துணி எடுத்துட்டு வரப்ப 10 வது படிச்சப்ப வாங்குன கவுன மாத்தி எடுத்துட்டு வந்துருச்சு போல. ஆனாலும் அத மாட்டிக்கிட்டு அசராம கால் மேல கால் போட்ட KFC சிக்கன் மாதிரி உக்காந்திருந்துச்சு.

“சரி இந்த நாடா ? காடா ? டாஸ்க்குல சுவாரஸ்யமாவும், நல்லாவும் பண்ண 2 பேர சொல்லுங்க”ன்னாரு  பிக்பாஸு.

இந்த டீம்ல அர்ச்சனாவ சொல்ல, அந்தப்பக்கம் யாருன்னு பக்கம் பக்கமா டிஸ்கஷன் பண்ண பாலா “டேய் சிறப்பா பண்ண இந்த சிங்கக்குட்டிய சொல்லுங்கடா”ன்னு கேட்டு வாங்கிக்கிட்டான். சோ நல்லா பண்ண 2 பேரு அர்ச்சனா & பில்டரு.

முழு மூச்சா இந்த வாரம் முழுக்க முக்கி முக்கி ஈடுபாடு காட்டுனது யாருன்னு கேட்டதுக்கு சனம், அனிதா, ஆரின்னானுங்க. அதுல இருந்து ஒருத்தர செலெக்ட் பண்ணுவோம்னு சொல்லி “கட்டைய கொண்டியெல்லாம் அடிவாங்கியிருக்கு கொஞ்சம் பாத்து பண்ணுங்கடா”ன்னு சொல்ல, ஆச்சர்யமா பில்டரு “சனத்த செலெக்ட் பண்ணுவோம் வாரம் முழுக்க நல்லா வீடு தொடச்சுச்சு, நல்லா தோசைய திருப்பி போட்டுச்சு, தக் ஹாப் காட்டுச்சு”ன்னு பாராட்டுனான் கேபி வேற பில்டரு இத சொல்றப்போ லவ் சிம்பல் காமிச்சு வெறுப்பத்திட்டு இருந்துச்சு. அப்பறம் எல்லாரும்  ஒரு மனமா “சரி...சனம் நீயே இருந்துக்கோ”ன்னு சொல்லிட்டானுங்க. பில்டரு, அர்ச்சனா, சனம் 3 பேருந்தான் அடுத்த வார கேப்டன் கேண்டிடேட்ஸ்.

“போரிங்கா & ஈடுபாடு இல்லாம டாஸ்க் பண்ணது யாரு?”ன்னு கேட்டதுக்கு சரி அதுக்கும் ஒரு தேர்தல் வைக்கலாம்னு சொன்னா..... கடைசியில ஆரியும், ஆஜீத்தும் வந்து நிக்குறானுங்க. சாத்தூர் செலக்ட் ஆகாதது ஆச்சர்யந்தான். ஷிவானி நாமினேட் பண்ண வந்தப்ப பிக்பாஸ் வேற அதுக்குக் கட்டையக் குடுத்துட்டு இருந்தாப்ல. எல்லாம் எதுக்காக உன்னய நாலஞ்சு வார்த்தை பேச வைக்கத்தான்ற மாதிரி குஜாலா இருந்தாப்ல.

ஜனநாயக நாடுன்றதால இன்னைக்கு ஒரே நாளு மட்டும் நாலஞ்சு தேர்தல் வச்சுட்டானுங்க நாசமாப்போறவனுங்க. போகப் போக கக்கூஸுக்கு யாரு மொதப் போறதுன்றதுக்கு கூட கவுண்டி தேர்தல் வப்பானுங்க போல.

லீடிங்க்ல ஆரியும், ஆஜீத்தும் இருந்தப்போ “வாங்க வந்து ஓட்டுப்போடுங்க”ன்னு சொன்னதுக்கு ஆரி “அதான் என்னையும், ஆஜீத்தயும் ஒப்பேத்திட்டீங்களே.....இதுக்கு மேல நான் வந்து ஓட்டுபோட்டு என்ன ஆகப்போகுது? ஆஜீத்து நீயும் போடாத”ன்னுட்டாப்ல. “இந்தக் கருமத்துக்குத்தான் நீ நாமினேஷனுக்கே வந்தே”ன்னு ரியோ சொல்லிட்டு போனதும் “சரி வரேன்”னு வேண்டா வெறுப்பா வந்து ஷிவானிய சொல்லிட்டாப்ல.....இதுக்கு ஷிவானி வேற கோச்சுக்கிச்சு. பாவம் அதுவும் கேபியும் சேர்ந்து என்னமோ கேம் ப்ளான்லாம் பண்ணாங்களாம். அது இந்தாளுக்குத் தெரியலேன்றதுக்காக ஆரி சும்மா சும்மா அந்த பொண்ண சொல்றதெல்லாம் டூ அர்ரகண்ட் ப்ரோ......ஜெயில்ல போடுங்க சார் அவர.

ஓய்வெடுக்குற அறைக்கு போகனும்னு அன்னப்போஸ்டுக்கு ஆசை போல...ரியோட்ட சொல்லிட்டு இருந்துச்சு. அத அனுப்பிவிட்டா கண்டிப்பா மத்தவனுங்களுக்கு ஒய்வு கிடைக்கும். உள்ள போன ஆஜீத்கிட்ட ரம்யா “பாத்ரூமுக்கு உள்ள பாடுறதுக்கு நீ பாத்ரூம் சிங்கர் இல்ல....சூப்பர் சிங்கர். எல்லாரும் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த நீ இனிமே நெறையா பாடு”ன்னு அவங்க பாடிட்டு இருந்தாங்க. உள்ள போகப்போன ஆரி கேமராவப் பாத்து “நல்லவனா உள்ள போறேனா இல்ல நல்லவனாக உள்ள போறேனா?ன்னு பாப்போம் .....சீ யூ ஆஃப்டர் த பிரேக் “னு சொல்லிட்டுப் போனாப்ல. அனேகமா அடுத்தடுத்து வர தேர்தல்கள்ல பிக்பாஸே ஆரிக்கு எதிரா ஓட்டுப்போட வாய்ப்பிருக்கு.

ஓய்வறை வாசல்ல பில்டரும் அனிதாவும் உக்காந்திருக்க

அன்னப்போஸ்டு : Deserving ஆளுங்க இவ்வளவு பேர் இருக்குறப்போ underserving ஆளுகள சில பேரு Deserving ஆளுகளுக்கு எதிரா சப்போர்ட் பண்ணா, அப்போ underserving ஆளுங்க வெளிய போகாம Deserving ஆளுகள வெளிய அனுப்புறத எந்த Deserving ஆளுகளும் ஒத்துக்க மாட்டாங்க. நான் ஒத்துக்க மாட்டேன்

ஆஜீத் : (MV : இன்னைக்கு இதுக்கு கிடைச்ச வார்த்தை Deserving, undesrving போல)

ஆரி : (MV : இவ யார Deserving, underserving ன்னு சொல்றான்னு வேற தெரியல....சரி குத்துமதிப்பா ஆரம்பிப்போம்....) அர்ச்சனா ரியோவ காப்பாத்த மத்தவங்கள மாட்டி விடுறாங்க.

பில்டரு : இத நான் சொன்னா பில்டருக்கு முட்டையளவு கூட மூளையில்லன்றானுங்க....அதென்னமோ அர்ச்சனா ரியோவ அடைகுஞ்சா காக்குது .....நம்மளுக்கு ஓட்டுப் போட்டு தாக்குது....

அன்னப்போஸ்டு : இதெல்லாம் உனக்கு தெரிஞ்சா உடனே எங்கிட்ட வந்து சொல்ல வேண்டியதுதான ?

பில்டரு : ஏன் உனக்குதான் அக்மார்க் அடிமை சோமு இருப்பானே அவன் இதெல்லாம் செய்ய மாட்டானாமா ?

ஆஜீத் : ( MV : ஓய்வறைன்னு சொன்னானுங்க....இவனுங்க ஓய்வே குடுக்க மாட்டானுங்க போல...ஆரி வேற எங்கூட இருக்காப்ல இன்னும்  24 மணி நேரத்துக்கு இடைவிடாம எங்கிட்ட பேசுவாப்ல. அது வரைக்கும் கொஞ்சம் தூங்கிக்கலாம்னா விட மாட்டேங்குறானுங்களே) //   

அடுத்ததா ஒரு விளையாட்டு

1 ல இருந்து 16 வரை அவங்களுக்குள்ள தேர்ந்தெடுக்கனும். அதாவது 1ம் நம்பர்ல இருக்குறவங்க ஜெயிக்க தகுதியானவங்களாவும். அதுக்கடுத்து வர நம்பர்ல இருக்குறவங்க வெளிய போற வரிசையாவும் இருக்கலாம். 16ம் நம்பர்ல இருக்குற ஆளு இந்த வார நாமிநேஷன்ல இருக்கறவங்களாவும் இருக்கலாம். இதான் விளக்கம். ஆனா சுத்தி சுத்தி விக்ஸுன்னு எழுதுன இந்த விளையாட்டால என்ன நன்மைன்னா ? ஒரு ஹை கோர்ட்டும் இல்ல. சும்மா கண்டென்ட் இல்லாம கடுப்பேத்துறானுங்க அவ்வளவுதான்.

உடனே தேர்தல் மோடுக்கு வந்தாங்க அர்ச்சனா. அர்ச்சனாவுக்கு எல்லாமே தேர்தல் தான். பட்டிமன்ற நடுவரா இருந்தப்ப “எதுக்கு பேச்செல்லாம் பேசிக்கிட்டு பேசாம எந்த தலைப்புக்கு அதிக ஓட்டோ அந்த தலைப்புதான் வின்னு”ன்னு கையத் தூக்க சொல்லியிருப்பாங்க போல. இப்பவும் அப்பிடித்தான் ஆரம்பிக்க. இடையில ஒரு குழப்படி வந்து.....சம்மு உள்ள பூந்து டாப் 8 – அண்டர் - 8னு என்னமோ டக் ஒர்த் லீவீஸ் முறை மாதிரி சொல்லி, “அப்பிடி பண்ணலாம்”னு சொன்னதும் இவனுங்களுக்கு அது புரிஞ்சுச்சுன்னு சொன்னதுதான் நமக்கு ஆச்சர்யம்.

இதுல பில்டர எல்லாரும் கோவக்காரன்னு சொல்லி சொல்லி கோவம் வர வச்சுட்டானுங்க. இதுல அவன் வேல்ஸ டிப்ளமேட்டிக்னு சொன்னதும் “நான் கிராமத்து ஆளு”ன்னு வேல்ஸ் சொன்னதுக்கு “டிப்ளமேட்டிக்னா என்னனு தெரியுமா?”ன்னு சட்டுன்னு கேட்டது கொஞ்சம் சலசலப்ப ஏற்படுத்துச்சு. “என்னய கோவப்படுறன்னு சொல்லிட்டு, ரியோவ கோவ முகமூடிய எடுத்து மாட்டிக்கோன்னு மாத்தி மாத்தி பேசுற”னு அர்ச்சனாவையும், “ஒரு தலை பட்ச பட்சினி நிஷா”ன்னும் ரியோ ஆதரவாளர்களை ரிவிட் அடிச்ச பில்டரு இன்னைக்கு முழுக்கவே பட்டாசா வெடிச்சாப்ல.

அப்பறம் வரிசைப்படி

ரம்யா, ஷிவானி, பாலா, கேபி, ரியோ, ஆஜீத், நிஷா, ஜித்து பாய், அன்னப்போஸ்டு, ஆரி ப்ரோ, அர்ச்சனா, சோமு, வேல்ஸ், சம்மு, சனம், சகுனி...

முதல் இடத்துல இருக்கும் ரம்யாவுக்கு வாழ்த்து சொல்லி ஸ்பெஷல் பரிசு இருக்குன்னு சொன்னாப்ல பிக்கி.

“முட்டைன்னா எக்ஸ்ட்ரா 3ம், சாம்பார்னா சட்டிலையும் குடுத்த உன்னையவே இப்பிடி சல்லி சல்லியா உடைச்சுட்டானே”ன்னு அர்ச்சனாவ ஓட்டிட்டு இருந்தான் ரியோ.....வராத சிரிப்ப ஏன் இவ்வளவு வலுக்கட்டாயமா வரவைக்குறான்னு தெரியல.

உள்ள சகுனி பில்டர “உனக்கு ஆர்ம்ஸ் இருக்குற அளவுக்கு அறிவில்ல....உன் நடவடிக்கை எதும் சரியில்ல....கிராமத்தான் வேல்ஸ நீ அர்த்தம் தெரியுமான்னு கேட்டது கேடு கெட்ட செயல்”னு சொல்ல. “ஆமாண்டா நான் செஞ்சது கேடு கெட்ட செயல்......ஆனா அம்புட்டுப் பேருக்கும் முன்னாடி சனத்த நீ சாத்துனது மட்டும் சாகித்ய அகாடமி வாங்குறதுக்கான செயலா ? போடா அங்குட்டு”ன்னு சொல்ல சகுனி வழக்கம் போல இடத்த காலி பண்ணிட்டாப்ல

வெளிய வந்தா சனம், அர்ச்சனா, வேல்ஸு, நிஷா உக்காந்திருக்க “பாலாகிட்ட சொன்னா கேக்க மாட்டேங்குறான்”னு சொல்ல, “டிப்ளமேட்டிக்னா நான் சொல்லிக்குடுத்தத ஏன் நீங்க சொல்லல?”ன்னு கேட்ட சனத்துக்கிட்ட “நான் படிக்காதவன்”னு வேல்ஸ் சொன்னதும் “படிக்காதவங்க முட்டாளுமில்லே.....படிச்சவங்க அறிவாளியுமில்லே.....அதுக்கு உதாரணம் வெளியே இல்லே...ஏன்னா படிச்ச புள்ள எனக்கு அறிவு இல்லே”ன்னு “ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்....உலகம் புரிஞ்சுக்கிட்டேன்” மோடுல சிரிச்சுக்கிட்டே வெளிய போனாங்க சனம்.

4 நாளாவே சகுனி தன்னோட ஆதரவ அப்பட்டமா ரியோ, அர்ச்சனா பக்கமா திருப்புறாப்ல. ஒரு வேளை வெளிய போகலேன்னா மறுபடியும் மாறிக்க வாய்ப்பிருக்கு.

அப்பறம் பில்டரு கேபி சகிதமா வந்து வேல்ஸுகிட்ட “சகுனி வந்து என்னயப் பத்தி என்ன சாம்பிராணி போட்டான்னு தெரியல ஆனா நான் உன்னய அசிங்கப்படுத்தல தெரியலேன்னா சொல்லி குடுக்கலாம்னுதான் நெனச்சேன்”னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டுட்டான்.

அப்பறம் ஜித்து பாய்க்கு பொறந்த டே...கேக்கு வந்துச்சு. நல்லா வேளை எப்பவும் போல அழுது ஒப்பாரி வைக்காம சந்தோஷமா இருந்தானுங்க. ஜீவா வீடியோல வந்து பேசுனாப்ல. அவங்க அம்மாவுக்கும் இன்னைக்கு பொறந்த நாளு போல சோ எல்லாரும் அவங்கம்மாவுக்கும் வாழ்த்து சொல்ல, ஆஜீத் “நீயே நீயே” பாட்ட பாடுனதோட முடிஞ்சது.

யப்பா டேய் கடுகளவு கூட கண்டெண்ட் இல்லாம காலய்க்குறதுக்கு நான் படுற பாடு எனக்குதான் தெரியும். ஆனா இவனுங்க பரவாயில்ல நாளைக்கு ஆண்டவர் வருவாரு. 3 வாரமா இவனுங்கள விட அவருதான் நம்மள படாத பாடு படுத்துறாரு. ஆண்டவரே அருள் புரிங்க..... என் தெய்வமே...... என் கடவுளே !


 

 

 

 

 

 

 

 

 

Comments

  1. Your way of narrating the program is simply awesome.. please post regularly

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)