பிக்பாஸ் – 4 : நாள் - 11 (15.10.20)
11வது நாள்
“வாத்தி ரெய்டு”
அலாரம். குறீயீட்டுப் பாட்டுன்னு அப்றமாத்தான் தெரிஞ்சுது. ஹிப் ஹாப் ஸ்டெப்ப போட வேண்டிய
பாட்டுக்கு பலபேரு “கிருப கிருப” ஸ்டெப்பப் போட்டு தோத்திரம் சொல்லிட்டு இருந்தானுங்க.
சனம் மட்டும் “தக் ஹாப்” ஸ்டெப் போட்டு பேலன்ஸ் பண்ணாங்க.
பல்லு வெளக்குன
கையோட பொட்டி வந்துச்சு.....! ஜித்தனும், ரேகா மேமும். லொங்கடி லொங்கடின்னு ஓடி ட்ரெஸ்ஸ
மாத்துனானுங்க. ரம்யா, சம்மு & சாத்தூர் ஷிவானி. மூணும் கேமராவப் பாத்து “இனிமே
விடியக்காலை வெள்ளன எந்திரிச்சு மேக்கப் போட்டுறனும், படுபாவி எப்ப பாட்டு போடுவான்னே
தெரியமாட்டேங்குது”ன்னு சொல்லிட்டு அதுகளா சிரிச்சுகிடுச்சுங்க.
இந்த 3ம் நல்லா
செட்டு சேந்துக்கிச்சுங்க. 3ம் கைய கோர்த்துக்கிட்டு கோரசா பாட்டு பாடுறதும், ஆளுகொருத்தரா
இடுப்பப் பிடிச்சுக்கிட்டு லானச் சுத்தி சுத்தி ரயில் ஓட்டுறதும், ஆளாளுக்கு குறுக்குல
குத்தி விளையாடுறதும்னு ஒரே ஓமாகாசீயாதான். இத அப்டியே ஒரு கேண்டிட் ஷூட் பண்ணா பாக்யலட்சுமி
பட்டு மகாலுக்கு ஒரு விளம்பரப் படம் ரெடி பண்ணி வித்துறலாம். ஐடியா இல்லாத பிக்பாஸு.
அப்பறம் ஆ முதல்
அக்குதானடா பாட்டு. ரமேஷோட பழச கிளறுறதுக்குண்ணே பாட்டு போட்டானுங்க போல. ஜித்தனுக்கு
ரேகா மேம் ஜோடியாம்.....இத விட ஜித்தன் ரமேஷுக்கு வாழ்க்கை என்ன கத்துக்குடுத்துரப்
போகுது....?! பர்பார்மென்ஸ் சரி இல்லாதவனுக்கு பனிஷ்மென்ட் டூட்டி போட்டாப்ல ஜித்தன்
விதியேன்னு ஆடிட்டு இருந்தாப்ல. ரேகா மேமும் நேக்கா ஆடத்தான் முயற்சி பண்ணாங்க. முடிஞ்ச்....!
ஜித்து பாய்கிட்ட
கேபியும், ரியோவும் ரேகா மேம ஓட்டிட்டு இருந்தாங்க.
அடுத்து சோமுவும்,
சம்முவும் வென்ணிலவே வெண்ணிலவே பாட்டுக்கு. நல்ல வேளை கேபி கீழ இருந்து ஸ்டெப்பு சொல்லிக்குடுத்துச்சு.
இல்லேன்னா சோமுலாம் “சோளம் வெதைக்கையிலே”ன்னுதான் கையத் தூக்கி நின்னுட்டு இருந்துருப்பாப்ல.
சம்மு கொஞ்சம் கொஞ்சம் சைடுல ஆடிட்டு இருந்தாங்க.
சகுனி சுரேஷ்
என்னமோ “சாமிநாதனே ஏ ஏ.... ஒக்கா மக்கா ஏ ஏ” பாட்டுக்கு ஆடுன ஷகிரா மாதிரி சோமு ஆடுனத
“சோப்பு போட்டு குளிக்கிற மாதிரி இருந்துச்சு”ன்னு ஓட்டிட்டு இருந்தாப்ல. சோமுவோ “நானே
உங்க மாங்கா பறிக்கிற ஸ்டெப்ப மக்-அப் பண்ணித்தான் சமாளிச்சேன்”னு சாம்பார் மாதிரி
சொல்லிட்டு இருந்தாப்ல.
நெக்ஸ்டு மாமா
மாமா பாட்டு. ஆரியும், ரம்யாவும். சும்மா சொல்லக்கூடாது செம்மயா இருந்துச்சு. ரம்யாவா
அது....ரம்ம்ம்ம்ம்ம்யா ! ஆட்டம் அவ்வளவு ரம்மியமா இருந்துச்சு. காஸ்ட்யூமும் சூப்பர்.
“செல்லம்மா
செல்லம்மா” பாட்டுக்கு சாத்தூர் ஷிவானியும், பில்டரும் ! பில்டரெல்லாம் பீர் குடிச்சுட்டு
பீமபுஷ்டி அல்வாக்கு மாடலிங்க் பண்ற மாதிரி விட்டு விட்டு வீடு கட்டிட்டு இருந்தான்.
ஷிவானியோ வரிக்கு வரி செம்ம ஸ்டெப்புகள். நல்லா பாட்ட ரசிச்சு ஆடுச்சு. பில்டரு எப்பவுமே
அந்த காஸ்ட்யூம்ல இருந்ததால அவன் போட்டிருந்தது ஸ்பெஷல் துணி மாதிரியே இல்ல. ஷிவானியும்
அது கூட அவன கூட்டு சேக்க பாத்து “டூயட் பாட வாயேம்மா”னெல்லாம் கூப்டுச்சு. பில்டருக்கு
இந்த சிக்னல்லாம் புரிஞ்சு , தெரிஞ்சு....ம்ம்க்கும் அதுக்குள்ள ஷோவே முடிஞ்சிரும்
போல.....
முடிஞ்சதும்
விறு விறுன்னு வேகமா ஓடியாந்து கேமராகிட்ட நின்னு ஷிவானி “இந்த மாதிரியெல்லாம் தினமும்
ஒரு டாஸ்க்க குடுத்தா டபுள் ப்ரொமோஷனே வாங்குவேன். எதாச்சும் பாத்து செய்ங்க”ன்னு,
பாட்டு போட்டதுக்கு நன்றி சொல்லிட்டு ஓடிடுச்சு.
திடீர்னு “தீமைதான்
வெல்லும்”னு பாட்டப் போட்டு கதவத் தொறந்தா......ஆங்கர் அர்ச்சனா !
வழக்கமா புது
ஆள் உள்ள வந்தா நடக்குற அதே அலப்பறைகள். ஒருத்தர் விடாமா எல்லாரையும் அறிமுகம் பண்ணிக்கிட்டு
வேல்முருகனோட “வண்ண நிலவே வா” இன்ட்ரோவோட உள்ள வந்தாங்க. அர்ச்சனாவோட கவுண்டர்
& ஒன்லைனர் எல்லாம் பட்டாசு. அவங்க எக்ஸ்பிரெஷனும் அப்டித்தான். சகுனிக்கும், அன்னப்போஸ்டுக்கும்
தான் மூஞ்சி செத்துப்போச்சு. எல்லாரும் “வெளிய நிலவரம் எப்டி?”ன்னு கேக்க, “அதுக்குத்தான
வந்திருக்கேன்....பொறுங்க காப்பி தன்ணிய குடிச்சிட்டு சொல்றேன்”னு சொன்னதையும் மீறி,
அனிதா அர்ச்சனாவையே குறுகுறுன்னு பாக்குறதப் பாத்துட்டு “இந்தா இங்க வா, என்னதான் வேணும்
உனக்கு?”ன்னு கேக்க. “இல்ல வெளிய பேரு எதும் டேமேஜ் ஆகியிருக்கா?”ன்னு இழுக்க “நிப்பாட்டாம
நியூஸ் வாசிச்சு நீயே மாட்டிக்காத”ன்னு சொன்னதும் சொத்து வரி கட்ட முடியாதுன்னு கோர்ட்டுக்கு
போயி கொட்டு வாங்கிட்டு வந்த ஆளு மாதிரி மூஞ்சிய வச்சுக்கிச்சு.
அப்பறம் சகுனியோட
பப்பரப்பா போஸ பத்தி சொல்லி ஓட்டுனாங்க. ரேகா மேம் ஷால்தான் இப்ப ட்ரெண்டுன்னு பொய்
சொன்னாங்க. அப்றம் இந்த எடத்துல அர்ச்சனாவ மராத்தின்னு மொட்டையன் சொன்னதுக்கு பேருதான்
ப்ளடி பாலிடிக்ஸ்.
லிவிங் ரூம்ல
எல்லாத்தையும் உக்காத்தி வச்சுக்கிட்டு பிக்பாஸ் அர்ச்சனாவ வரவேத்துட்டு “உங்க டாஸ்க்க
ஆரம்பிங்க”ன்னு சொன்னாப்ல. மேல ஏறுன அர்ச்சனா “இங்க சிலருக்கு போர்டு மாட்டி விடப்போறேன்.
அத மக்கள் கருத்தா எடுத்துக்கிட்டாலும் சரி....என்னோடதா எடுத்துக்கிட்டாலும் சரி”னு
சொல்லிட்டு வரிசையா கூப்பிட்டாங்க.
பில்டரு –
No comments. Simply waste
அங்க, இங்க,
உங்க, திங்கன்னு இருக்கியே தவிர உருப்படியா கேம்னு ஒண்ணு விளையாடவே இல்ல. ஆழியாறுல
ஆயுர்வேத பிழிச்சல் சிகிச்சை எடுத்துக்க வந்தவன் மாதிரியே வலம் வந்துட்டு இருக்க. சப்பையா
சனத்த டுபாக்கூர்னு சொல்லி சண்டையிழுத்துக்கிட்டு இருக்க. வேற உருப்படியா எதும் இல்ல.
அதனால உனக்கு இந்த போர்டுன்னு மாட்டுனாங்க
ரேகா மேம்
- No comments. Simply waste
ஆனா இத மாட்டுனதக்
காட்டல. காரணமும் தெரியல. ஆனாலும் குடுத்ததுல பிழையில்ல.
ரம்யா – சவாலான
போட்டியாளர்
மொத அஞ்சாறு
நாளு சாவி குடுத்த பாபி பொம்மை மாதிரிதான் சுத்திட்டு இருந்த. ஆனா ஃப்ரீ பாஸ் மேட்டர்ல
ஆல்பாஸ் வாங்கிட்ட. மொட்டையனோட மெகா ஸ்டார்டஜிய மென்னு துப்புனதால இப்ப நீ சவாலான போட்டியாளராகிட்டன்னு
மாட்டுனாங்க.
ரியோ - சவாலான
போட்டியாளர்
சைலண்டா இருந்த
இடத்துல சவுண்டக்குடுத்தத நம்பி இனியும் இவன் இப்பிடித்தான் சவுண்ட் பார்ட்டியா இருப்பான்னு
நெனச்சு குடுக்குறதா சொல்லி குடுத்தாங்க. இனி ரியோ சொறிஞ்சாக் கூட சவுண்ட் எஃபெக்ட்
குடுத்துதான் சொறிவாப்ல.
சோமு – Showcase
பொம்மை
சோமுக்கு பொறுத்தமான
போர்டுதான். சொங்கி மாதிரி திரியுற, சொனங்கி சொனங்கிப் படுத்துக்குற, பக்கத்துலையே
இருந்தாலும் உன்னயப்பாத்து பலநாள் ஆன மாதிரியே இருக்கு. இப்டியே இருந்தேன்னா காவல்
நிலையத்துல கம்ப்ளெயிண்ட் குடுத்துதான் உன்னயத் தேடனும். பாக்ஸருன்ற, ஒரு பல் பேத்தல்
கேஸு, கை எலும்புடைத்தல் கேஸுன்னு வாங்குனாதான கலகலப்பா போகும்னு சொல்லி மாட்டுனாங்க.
சம்மு - Showcase
பொம்மை
இந்த வீட்ல
ஒட்டு மொத்தமா ஃபர்னிச்சர எண்ணுனா உன்னையும் சேத்து எண்ணிடுவானுங்க. அந்தமாதிரி ஒரு
செட் ப்ராப்பர்ட்டியாத்தான் இருக்க. மாடல்னா எப்பிடி இருக்கனும்னு நம்ம மீராவப் பாத்து
கத்துக்கக் கூடாதா ? இன்னேரம் வேல்ஸ் மேல ஒரு ஈவ் டீஸிங்க் கேஸப் போட்டு இம்சைய கூட்டியிருக்க
வேணாமா?ன்னு ஏத்தி விட்டு போர்ட மாட்டுனாங்க.
வேல்ஸ் –
Atmosphere Artist
ஆடிப்பாடுவன்னு
உள்ள அனுப்புனா....2வது நாள்ல இருந்து நீ அப்ஸ்காண்ட் ஆகிட்ட. குரூப் போட்டால இருக்கியே
தவிர தனியா செல்ஃபியே இல்லையே? வீம்புக்கு வேட்டி சண்டைய இழுத்து வெறா வெறான்னு கத்திட்டு
இருக்க. ஆனா கடந்த 3 நாளா பரவாயில்ல...... கஜகஜா கேஸ் வாங்குறதுக்கான வாய்ப்பு வாய்ச்சிருக்கு
உனக்கு. ஏற்கனவே பாதி பேஸ்டு ட்யூப் மாதிரி இருக்குற சனத்த நேத்து ஜெயிச்ச சந்தோஷத்துல
அந்த பிதுக்கு பிதுக்குற....! எப்டியோ Atmosphere Artist ல இருந்து அக்க்யூஸ்டா மாற
வாழ்த்துகள்னு சொல்லி அனுப்புனாங்க.
சாத்தூர் ஷிவானி
- Atmosphere Artist
உன் கழுத்தளவு
போட்டோவ கட் பண்ணி எங்க வேணும்னாலும் ஒட்டி வச்சுக்கலாம்ன்ற மாதிரியே இருக்கு. தினமும்
சாயங்காலம் 4 மணிக்கு மேலதான் நான் ஆக்டிவா இருப்பேன்னா என்ன பண்றது ? என்னமோ இப்பத்தான்
2 நாளா 3 பேருகிட்ட பேசுறேன்னு சொல்ற....பாப்போம்னு சொல்லிட்டு இருக்கும்போதே அந்த
பொண்ணுக்கு மூக்கு வெடைக்க ஆரம்பிச்சுடுச்சு. இன்னும் 5 வார்த்தை சேத்து சொல்லியிருந்தா
அழுது தீத்துருக்கும் போல. சமத்தா போர்ட மாட்டிக்கிட்டு உக்காந்துச்சு
சனம் – நமத்துப்
போன பட்டாசு
உங்கிட்ட ஓப்பனிங்க்
நல்லா இருக்கு ஆனா ஃபினிஷிங் சரி இல்லையே ? கிச்சன், கக்கூஸ், லான்னு எல்லா ஏரியாலையும்
வலையப் போட்டு ஆளுகள வம்பிழுத்து மார்ஷியல் ஆர்ட்ஸ் போஸ்லாம் குடுக்குற ஆனா அது மான்
கராத்தேவா முடிஞ்சு போறதுதான் பெருஞ்சோகம். இருந்தாலும் உள்ளுக்குள்ள ரெண்டு பாடி பில்டருங்க
இருக்கானுங்க. டவ்லத்தா பேசி டம்பில்ஸ்ல அடி வாங்கிறாத...உயிர் முக்கியம்னு போயிட்டாங்க.
ஆரி - நமத்துப்
போன பட்டாசு
ஆம்லேட் போடுறது
எப்டின்னு கேட்டா, ஒரு முட்டைய எடுத்து கைல குடுத்தா முடிஞ்சு போயிரும்...ஆனா அதுக்குப்
போயி 5 பக்கத்துக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் குடுக்குறது முறையா ? எவனும் சிக்கலேன்னு
அன்னைக்கு இந்த சொவத்துல மாட்டி வச்சுருக்குற மாட்டு தலைகிட்ட போயி 15 நிமிஷம் பேசியிருக்க.....நீ
அங்குட்டு போனதும் அது சாணியே போட்டுருச்சு தெரியுமா ? கருத்தாப் பேசுறேன்னு காது இருக்குற
எல்லாரையும் கலவரப்படுத்திட்டு இருக்க....உன் கேம மட்டும் நீ ஆடுன்னு ஆரிக்கே அட்வைஸ்
குடுத்தாங்க அர்ச்சனா.
ஆஜீத் &
கேபி – காணவில்லை
ரெண்டுக்கும்
ஒரே காரணந்தான். இவன் பாட, நீ ஆடன்னு உள்ள கலை நிகழ்ச்சி நடத்தி நல்லா வெளிய தெரிவீங்கன்னு
பாத்தா. பக்கத்து செட்டு ஆளுக மாதிரி அப்பப்ப ஸ்க்ரீன்ல வறீங்க....இனிமேலாச்சும் கண்ணுக்கு
தெரியுற மாதிரி காரியம் பண்ணுங்கன்னு சொன்னாங்க.
நிஷா &
ரமேஷ் – ஆமாஞ்சாமி
நிஷா சொல்றதுக்கு
ரமேஷும், ரமேஷ் சொல்றதுக்கு நிஷாவும், ரியோ சொல்றதுக்கு ரமேஷும், நிஷாவும்னு மாறி மாறி
ஆமாஞ்சாமிதான் போட்டுட்டு இருக்கீங்க. சீக்கிரமே
ரெண்டு பேரும் அய்யோ ஆள விடு சாமின்னு சொல்ற அளவு வரணும்னு வாழ்த்துனாங்க.
சகுனி சுரேஷ்
& அன்னப்போஸ்டு அனிதா – Top Trending
இதுக்கு காரணம்
எல்லாருக்கும் தெரியும். எது நடக்கனும்னு ரெண்டும் ஆசப்பட்டுச்சோ அது நடந்துடுச்சு.
ஆனா இதுல எந்த விதத்துல ட்ரெண்டிங்னு தெரியாம அன்னப்போஸ்டுக்கு அல்லு இல்லேன்றது உண்மை.
ஆனாலும் பாசிட்டிவா எடுத்துக்குறேன்னு சொல்லுச்சு.
சிம்ப்ளி வேஸ்டுன்னு
சொன்ன சிம்ப்டமோ என்னமோ பில்டரு சும்மா இல்லாம ஆஜீத்தோட ஃப்ரீ பாஸ எடுத்து வச்சுக்கிட்டு.
“ஆஜீத்தினுடைய அசால்ட்டுத்தனத்தை அவனுக்கு உணர்த்தவே யாம் இந்த திருவிளையாடளைச் செய்கிறோம்”னு சொல்லி சிரிச்சான்.
அப்பறம் ஆஜீத் அதத் தேட அப்பிடி இப்பிடின்னு கடைசியா பில்டரு குடுத்துட்டான்.
அப்பறம் லிவிங்
ரூம்ல எல்லாரும் உக்காந்திருந்தானுங்க. சோமுவ சேக்காம இந்த வீட்ல மொத்தம் 7 ஆம்பளைப்
பசங்க இருக்காங்க. ஆனா நம்ம சோமு ஒரு நாளும் அவனுங்களோட உக்காந்ததில்ல.....இப்பவும்
அப்டித்தான் 8 பெண்களுக்கு நடுவுல உக்காந்துக்கிட்டு “மலேஷியாவுல நடந்த மார்ஷியல் ஃபைட்ல
மரியபித்தாஸ மன்ணக்கவ்வ விட்டேன்”னு அளந்துட்டு இருந்தான்.
இந்தப்பக்கம்
ஆஜீத் விஷயத்த பில்டரு ஆரி, ரமேஷ் கிட்ட சொல்ல, ஆரி “அத குடுடா பாத்துட்டு தரேன்”னு
சொன்னதுக்கு ஆஜீத் தரல....ரமேஷ் அவங்கிட்ட இருந்து தெரியாம எடுத்து ஆரிட்ட குடுத்துட்டு
“இனி எப்பிடி எங்ககிட்ட வாங்குறன்னு பாப்போம்”னு சொல்லிட்டு இருக்கும்போதே, நிஷா “குடுங்க
பாத்துட்டு தரேன்”னு சொல்லி ஆரிகிட்ட இருந்து வாங்கி ஆஜீத் கிட்ட குடுத்துட்டாங்க.
ஆரியும் ரமேஷும்
நிஷா மேல டென்ஷனாகிட்டானுங்க. இதுக்கு ஆரி குடுத்த விளக்கம் இருக்கே அப்பப்பா.....முடியலடா
சாமி ! ஆஜீத் குடுக்க மாட்டேன்னு சொன்னதுதான் ஆரிக்கு காண்டு ஆனா அதை மறைக்க ஆஜீத்துக்கு
இத வச்சு வாழ்க்கையின் விட்டம், நீளம், அகலம்லாம் சொல்லிக் குடுக்கப் பாத்தேன்”னு சொன்னதெல்லாம்
சில்றத்தனம்.
இதுல நிஷாவ
வேற அழுக வச்சுட்டானுங்க. அப்பறம் அங்கிட்டு, இங்குட்டுன்னு சுத்தி மறுபடிக்கும் ரிவர்ஸ்ல
அந்த ஃப்ரீபாஸ சுத்தல்ல விட்டு ஆஜீத் கிட்ட குடுத்தானுங்க. 11ம் நாள் காரியத்த நல்ல
படியா செஞ்சானுங்க.
Comments
Post a Comment