பிக்பாஸ் – 4 : நாள் 4 (08.10.20)

3ம் நாள் தொடர்ச்சி

விடியக்காலை வரப்புல உக்காந்திருந்தாப்ல லான்ல வரிசையா உக்காந்து கொக்கோ விளையாட்டு விளையாடிட்டு இருந்தானுங்க. சைலண்டா உக்காந்திருந்த சுரேஷு சத்தமா “கக்கூஸ் கழுவுற டீம்ல வேக்கன்சி எதும் இருக்குமா?”ன்னு அப்ரைசல் ரேட்டிங் கம்மியா வாங்குன கேண்டிடேட் மாதிரி கேக்க, “லோடிங் டீம்ல இருக்குற நீங்க ஏன் திடீர்னு அன்லோடிங் டீமுக்கு வரீங்க”ன்னு ரியோ கேட்டதுக்கு “சால்ட்டு போட்டு சாப்பாடு சாப்டுறவன் யாரும் இந்த சமைக்குற டீம்ல இருக்க முடியாது”ன்னு சாபம் விட்டுட்டு விருட்டுன்னு உள்ள போயிட்டாரு. “என்னடா இவன் இவ்வளவு அசிங்கமா சொல்லிட்டுப் போறான்?”னு ரியோக்கு ரிவர்ஸ் கியர் தட்டுச்சு.

சுரேஷ் உள்ள போறத பாத்துட்டு அப்டியே கும்பலா எல்லாரும் கேப்டன் ரம்யாவ பக்கமா பாக்க....”படுபாவிங்க ஒரு 10 நிமிஷம் விடுறானுங்களா ? இப்பத்தான் ஒருத்தன அவுட் பண்ணிட்டு உக்காந்தேன் அதுக்குள்ளயும் ஆரம்பிச்சுட்டானுங்க....இருங்கடா டேய் அவன் பாட்ட கேட்டுட்டு வறேன்”னு உள்ள போச்சு.

ரம்யா : என்ன சார் ஏதோ சாப்பாட்டுல உப்பு பத்தலன்னு சொன்னீங்களாமே ?

சுரேஷ் : அதில்லம்மா உப்பு போட்டு சாப்டுறவன் சமையல் டீம்ல இருக்க மாட்டான்னு சொன்னேன்....ஆமா நீ எந்த டீமு ?

ரம்யா : அத விடுங்க சார் இப்ப என்ன சொல்ல வறீங்க ?

சுரேஷ் : எனக்கு சின்ன வயசுல இருந்தே கக்கூஸ் கழுவுறதுல ஒரு கண்ணு....எங்க பாத்தாலும் கழுவிடுவேன்.....இப்ப பாத்தேன்னா இண்டியன் டாய்லெட்னா அத இந்த பக்கமா திருப்பி கழுவனும். இதுவே வெஸ்டர்ன் டாய்லட்னா மேல் பக்கமா விட்டு கழுவனும்....அதுவே...

ரம்யா : சார் இந்த பக்கம்...

சுரேஷ் : அந்தப்பக்கம் கழுவக்கூடாது தண்ணி வெளிய போயிடும்

ரம்யா : சார்....இந்தப்பக்கம் பாருங்கன்னு சொன்னேன்....இங்க என்ன ஹார்பிக் சேலஞ்சா நடக்குது இல்ல நீங்கதான் அப்பாஸா...? இப்ப என்ன உங்களுக்கு கக்கூஸ் கழுவனுமா ? ரைட்டு போங்க...//

இங்க நானும் இருக்கேண்டான்னு காமிக்க பிக் பாஸ் எல்லார்கிட்டயும் “இதுவரை 8 பேரு கடந்து வந்த பாதைய கதை கதையா சொல்லிட்டானுங்க அதுல நல்லதா தெரியுற 4 பேர செலெக்ட் பண்ணுங்க”ன்னு சொன்னாப்ல.

இதுவரை பேசாத 8 பேர் குழு கூடி உக்காந்து குசுகுசுன்னு பேசுனானுங்க. என்னமோ இன்னைக்கு பில்டர் தலமையில அவன் சொன்ன ஆளுகளுக்கே ஓட்டு குத்துனானுங்க. அவன் ஜெயிச்சதா செலெக்ட்  பண்ணது நிஷா, ஆரி, வேல்முருகன், ரியோ. பில்டர்கிட்ட ஈசியா சொத்தெழுதி வாங்கிடலாம் போல இவ்வளவு வெள்ளந்தியா இருக்கான்.

ஆக அடுத்த வாரம் நாமினேஷன் செய்யத் தகுதியானவங்க கேபி, ஷிவானி, ரேகா மேம், சம்மு.

திடீர்னு சனமும், ரேகா மேமும் சுரேஷ பக்கத்துல வச்சுக்கிட்டு ரம்யாகிட்ட “அதெல்லாம் எங்க புஜ்ஜிக்குட்டி சுரேஷ எங்கயும் அனுப்ப மாட்டோம்”னு மறியல் பண்ணுச்சுங்க. சுரேஷ் ரொம்ப பிடிவாதம் பிடிக்க, மறுபடியும் ரம்யா கிட்ட அந்த ரெண்டும் மனு குடுக்க ரம்யாவோ” அடியே நிறுத்துங்கடி நிப்பான் பொம்மைகளா.....நான் என்னமோ அவனுக்கு பனிஷ்மென்ட் டூட்டி போட்ட மாதிரி என் காத கடிக்க வறீங்க....கக்கூஸ் கழுவுனா கிட்னிக்கு நல்லதுன்னு நல்லதம்பி வைத்தியர் சொல்லியிருக்காராம் அதனால அவன் அதுக்குதான் போவேன்னு நிக்குறான்....நீங்க என்னமோ என்கிட்ட வந்து 8 போட்டுகிட்டு இருக்கீங்க போங்க போங்க அவங்கிட்ட போங்க”ன்னு பத்தி விட்டுச்சு. சனமோ “அவருக்கு பதிலா நான் போறேன் கழிவறை கழுவ”ன்னு சொல்ல...அத கேக்குறதுக்கு யாருமே இல்ல.

சண்டா மந்திரம் ட்யர்டாகி அனிதா அம்போன்னு லான்ல உக்காந்திருக்க சுரேஷ் சனமோட வந்து அந்த இடத்துல நின்னுகிட்டு “எனக்கு குக்கிங் டீம்ல இந்த மேடத்தோட பிரச்சனை”ன்னு அனிதாவ கைகாட்ட....”எதே பிரச்சனையா? என்ன பிரச்சனை? பிரச்சனைக்கே பிரச்சனையா? யாருகிட்ட பிரச்சனை ? எதுக்காக பிரச்சனை?”ன்னு அந்த ஒரே ஒரு வார்த்தைய வச்சுகிட்டு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சது அன்னப்போஸ்டு அனிதா. “அம்மா தாயே அம்பிகாபதி.....பிரச்சனைன்னு சொன்னேன் ! உங்கிட்டன்னு சொன்னேனா?...என்னால உனக்கு பிரச்சனை அதுனால கிடைக்குது எனக்கு அர்ச்சனை....ஆள விடு...என்ன வாழவிடு”ன்னு விழுந்து கும்பிட்டு போயிட்டாப்ல.

உள்ள கிச்சன்ல சம்ப்ல சாம்பார் சட்டிய கழுவிட்டு இருந்த சோமு என்ன நினைச்சானோ அனிதாகிட்ட ரைமிங்கா “நீ அனிதா இல்ல வனிதா”ன்னு வர்ணிக்க (இவனுக்குள்ளயும் எதோ இருந்திருக்கு பாரேன்) .....அவ்வளவுதான் அன்னப்போஸ்டு அனிதா ஆரம்பிச்சிருச்சு ! “என்னங்கடா டேய் வனிதானுல்லாம் வையுறீங்க ! மொட்டையன் என்னமோ என்னய எகத்தாளமாவே பாக்குறான். நீ என்னடான்னா என்னய வனிதான்னு சொல்ற....பிக்பாஸ் எதும் சொல்லி அனுப்புனானா ? ஏன்டா அவந்தான் ப்ரொமோல வர ப்ளான் பண்றான்னா என்னய நீ மெயின் ஷோவுலயே வராம பண்ணிடுவ போலயே ? உன் வேலை என்னடா ? சந்திரமுகி பாம்பு மாதிரி முட்டைய தின்னுட்டு நெளிஞ்சுட்டு கிடக்குறதுதான....உனக்கெல்லாம் டயலாக்கே இல்லையே அப்பறம் ஏன் இவ்வளவு லெங்க்த்தா பேசுன இன்னைக்கு....! நிஷாக்கா நீ கேளேன் என்னய  சர்வதேச சதி பண்ணி பாகிஸ்தான் தீவிரவாதியா போர்ட்ரெயிட் பண்ண பாக்குறானுங்க. இனி ஒரு பய ஓட்டு போடுவானா எனக்கு ? என்னய போயி வனிதான்னுட்டான்.....வனிதா என்னய மாதிரியா இருக்கும்...இல்ல நான் வனிதா மாதிரி இருக்கேனா?”ன்னு 1836 வது தடவை வனிதான்னு சொல்லிட்டு இருக்கும்போது ரியோ வந்து “அவனாச்சும் ஒரே ஒரு தடவ பூனை ஏப்பம் விட்ட மாதிரி சொன்னான் ஆனா நீ அமேசான் ஸ்பீக்கராட்டம் அஞ்சு மணிநேரமா சொல்லிட்டு இருக்க...அமைதியா இரு”ன்னு அட்வைஸ் பண்ணான். சோமுவோ சொனங்கிப்போன கோழிகுஞ்சு மாதிரி அனிதா பக்கத்துல நின்னுகிட்டு பாவமன்னிப்பு கேட்டுட்டு இருந்தான். அப்றம் அவன் கூட சமாதானம் ஆகுற மாதிரி “இவன் கைய சூப்பு வைப்பேன்....நேரம் பாத்து இவனுக்கு ஆப்பு வைப்பேன்”னு கேமராவப் பாத்து சொல்லிட்டு இருந்துச்சு அன்னப்போஸ்டு அனிதா.

3ம் நாள் முழுசா முடிஞ்சு லைட் ஆஃப் பண்ணானுங்க.

4ம் நாள்

“கும்முரு டப்பரு” பாட்டு அலாரம். நைட்டு அசந்துட்டானுங்க போல. இன்னைக்கு பாட்டு பாடுனதுந்தான் வெளிய வந்தானுங்க. அதே பேட்டர்ன்....அதே ஆர்டர்...அதே ஆட்டம். யாருடா அது கூட்டத்துல கண்ணாடி போட்டுகிட்டு கபசுர குடிநீர் குடிச்ச எஃபெக்ட்ல ஆடிட்டு இருக்குறதுன்னு பாத்தா அது நம்ம ரம்யா.....! ஆர்மிய கலச்சுட்டு ஆளுக்கொருபக்கமா ஓடியிருப்பானுங்க இன்னேரம்.

நிஷாவ பாத்து பில்டரு “ஆல் யுவர் பியூட்டி பாட்டுப்பாடி” களிப்படஞ்சுட்டு இருந்தான். கையில பிரஷ்ஷோட கக்கூஸ்ல இருப்பாப்லன்னு பாத்தா இன்னும் கரண்டியோட கிச்சன்ல சுத்திட்டு இருக்காப்ல சுரேஷு. அப்ப நேத்து நைட்டு கக்குஸுக்கு போறேன்னு நீ கலவரம் பண்ணத நம்புன நாங்க CSK சப்போர்ட்டர்ஸ் அப்டித்தான ? ஆனா இந்த ஆளு கிச்சன்ல யாரையும் எந்த வேலையும் பாக்கவும் விட மாட்டேங்குறான். ரேகா மேம்லாம் குக் வித் கோமாளில குக்கரையே குக் பண்ணவங்க...இங்க இந்தாளு அந்தம்மாக்கு சுடுதண்ணி செய்றதுக்கு உப்பு எவ்வளவு போடனும்னு சொல்லி குடுத்துட்டு இருக்காப்ல.

திடீர்னு ரேகா மேம கூப்ட்டு “எவ்வளவு அரிசி போடனும்னு கேட்டுட்டு வா”ன்னு உள்ள பத்திவிட....ஏன் எதுக்குன்னு கேக்காமயே உள்ள வந்த ரேகா மேம் சனத்துக்கிட்ட “எவள அரிசி போடனும்?”னு கேக்க...”எவளையும் அரிசி போட வேணாம் வேணும்னா இவள இந்தப்பக்கமா இழுத்து போடு”ன்னு சனம் சொல்ல. “அட அதில்லமா சுரேஷ் சார் எவ்வளவு அரிசி போடனும்”னு கேக்குறார்”னு கேக்க, “எதுக்காம்?”னு சனம் கேட்டதும் “ஊறப்போடன்னு ரேகா மேம் அடிச்சுவிட, “எதே பாசுமதி அரிசிய ஊற வைப்பியா அப்றம் அது பாயாசமால்ல போகும்”னு முழிக்க, ரேகா மேமோ மோமோ பொம்மை மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு “அதெல்லாம் எனக்கு தெரியாது, சுரேஷ் சார் கேட்டாரு”ன்னு கோட்ட தாண்டப் பாக்க, சனமோ “இந்தாங்க நீங்க செய்யுறதா இருந்தா எங்கிட்ட சொல்லிடுங்க நான் செய்ய மாட்டேன்”னு சொன்னதுக்கு. ரேகா மேம் “நான் செய்யலன்”னு சொல்ல, “அப்ப நான் செஞ்சுக்குறேன்”னு சனம் சொன்னதும்,  “ஆனா சுரேஷ் சார் செய்யுறாரே”ன்னு சொல்லிட்டு சிட்டா பறந்துட்டாங்க. இன்னைக்கு மேக்கப்ல ரேகா மேம் மூஞ்சி கொஞ்சம் கம்மி.

இந்தப்பக்கம் கிச்சன்ல ஆரிகிட்ட ரேகா மேம் சனம் மாதிரி இமிட்டேட் பண்ணி காமிச்சிட்டு இருந்தாங்க.

கடந்து வந்த பாதையில.....அன்னப்போஸ்டு அனிதா டர்னு....! பேசமாட்டேன்னு சொல்லியே 10 மணி நேரம் பேசும்....வந்து பேசுன்னு வேற கூப்ட்டானுங்க...நம்மள விட்டுடுமா என்ன ! கதை சொல்றதுக்கு முன்னாடி கதைக்கு ஒரு கதை சொல்லுச்சு. அப்றம் கதை சொல்லுச்சு, அப்றமும் கதை சொல்லுச்சு, அதுக்கப்பறமும் கதை சொல்லுச்சு. அப்றம் முடிச்சிட்டு போயிட்டு மறுபடியும் வந்து ஒரு கதை சொல்லுச்சு, அப்றமும் கதை சொல்லுச்சு, அதுக்கப்பறமும் கதை சொல்லுச்சு....ஷப்பா....! அது முடிக்கும்போது 300 நாளான மாதிரி இருந்துச்சு.

இடையில அன்னப்போஸ்டு அனிதா “உங்க வீட்ல சொல்றாங்கன்னு வேகமா கல்யாணம் பண்ணிக்காதீங்க...உங்களுக்கு எப்போ தோணுதோ அப்ப பன்ணிக்கோங்க”ன்னு சொல்லும்போது வெள்ளைதாடி மொளச்ச நம்ம ஃபைட்டர் சோமு எதுக்கு தலையாட்டுனான்னு புரியல....இதுக்கு மேல லேட்டா கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போறான் ? அவனுக்குதான் வெளிச்சம்....

சனத்துக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் போல ஒரே பதட்டத்துலயே இருந்தாங்க. ரேகாகிட்ட அந்த பாசுமதி பாயாசம் மேட்டர பத்தி பேசுனாங்க...ரேகா மேம் கலங்காம ஒரு காரட்ட பதம் பாதுக்கிட்டு இருந்தது பாந்தமா இருந்துச்சு.

இப்ப ஷிவானி கதை....

திருவள்ளுவருக்கே டஃப்பு குடுக்குற மாதிரி ஒன்றை அடில ஒரு கடந்து வந்த பாதை. அது அந்த பொண்ணு மேடைக்கு நடந்து போன நேரம் கூட வரல. இத நிஷா கூட “ப்ரொமோல பாத்தவனுங்க இதுக்கப்பறமும் கண்டன்ட் இருக்குன்னு நெனச்சிருப்பானுங்க....ஆனா கண்டெண்டே ப்ரொமோதான்னு இப்பதான் தெரியும்”னு சூப்பர் கமென்ட் அடிச்சாங்க. இந்த கதைல நமக்கு தெரிஞ்சது ஷிவானி சாத்துர் பொண்ணு. இனிமே அது சாத்தூர் ஷிவானி.

இப்ப சுரேஷ் கதை....! AVM ல ஆரம்பிச்சு ஆஸ்திரேலியால நிப்பாட்டுனாரு. ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சுக்க சொன்னாரு.

ரேகா மேம் தூங்குனத பாத்த மத்த பொண்ணுங்க பிக்பாஸன நாயக் கத்த விடுடான்னு கேக்க அத பிக்பாஸ் கேக்கலன்னதும் பெண்கள் பொம்மெரியன் நாய் மாதிரி குரைக்க ஆரம்பிக்க....சத்தம் கேட்டு எந்திரிச்ச ரேகா மேம் டாகி வாய்ஸ மிக்ஸ் பண்ண....எல்லாரும் கைதட்டி உற்சாகப்படுத்துனதும் “இந்த இடத்துல டாபர்மேன் குரைச்சிருந்தா எப்டி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை”ன்னு எல்லா நாய் மாதிரியும் குரைச்சு மிமிக்ரி ஷோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

ஜித்தன் கதை....ஊருக்கே தெரியும் ! ஆனாலும் ப்ளாஸ்டிக் ஸ்பூன், சில்வர் ஸ்பூன், கோல்டன் ஸ்பூன்னு கோர்வையா எதோ சொன்னாப்ல. அவருக்கும் கஷ்டங்கள் அண்ட் கவலைகள் இருக்குன்னு கலவையா சொன்னாரு.

இந்த கடந்து வந்த பாதை ஐடியாவ குடுத்த அந்த ஐடியா மணிய, இந்த ஐடியாவ தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு வச்சுட்டு பக்கத்துல உக்காந்துக்க சொல்லுங்க நாங்க வரிசையில நின்னு வெளுத்தெடுக்குறோம்.

அடுப்படியில கேஸ் தீந்து போச்சு. இந்த தடவையும் மீட்டர் போட்டுட்டானுங்க போல. இத காரணமா வச்சுக்கிட்டு இந்த அன்னப்போஸ்டு அனிதா மறுபடியும் நியூஸ் வாசிக்க ஆரம்பிச்சுச்சு....யப்பா டேய் இதுக்கு இல்லையா ஒரு எண்டு ? எப்பப்பாரு இதோட ஒரே அக்கப்போரு.....இந்த வீட்ல பேசாமயே சுத்திட்டு இருக்குற 6 பேருக்கும் சேர்த்து இதுவே பேசிடுது. அது வாயா இல்ல வார்த்தை டேங்க்கா ? தொறந்து கொட்டிக்கிட்டே இருக்கு. துயரங்கள்டா !

போன சீசன்ல கக்கூஸ்லயே குடும்பம் நடத்துன மாதிரி.....இந்த தடவ பூரா பயலுகளும் கிச்சன்லயே கெடக்கானுங்க.....!

ரேகா மேம் அடுப்புல வச்சிருந்த எதயோ எடுத்துட்டு சனம் டீய வச்சிருச்சு போல....”இத எடுத்து எங்க வச்ச?”ன்னு ரேகா மேம் கேக்க “நான் இத எடுத்துதான் அங்க வச்சேன்”னு மாத்தி மாத்தி லங்கர் விளையாண்டுகிட்டு இருந்தப்ப பில்டர் பாலா எதோ சொல்ல அதுக்கு சனம் “சும்மா இருடா சுருட்டை முடி சின்ச்சான்”னு சொல்ல “என்னய திட்டீட்டிங்க நான் இனிமே காய்கறி வெட்ட மாட்டேன் நான் மறுபடியும் கக்கூஸ் கழுவ போறேன்”னு போயிட்டான். சனம் பதறிப்போயி “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்பிடி போறான்.....இந்தம்மா வேற என்னய வெவகாரமா டீல் பண்ணுது....என்னன்னு சவுண்டா கேட்டா பட்டுகுட்டி, செல்லக்குட்டின்னு சென்டிமென்ட் சென்ட் அடிக்குது .....என்னடா நடக்குது இங்க.....கொதிக்க வச்ச டீய எங்க?”ன்னு சுரேஷ்கிட்ட பொலம்புச்சு.

அப்பறம் நம்ம சனமும், பில்டரும் வாக்குவாதத்த ஆரம்பிக்குறதோட இந்த நாள் முடிஞ்சது.......


 

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)