பிக்பாஸ் – 4 : நாள் - 25 (29.10.20)
ஒரு எபிசோட நான் எடுத்திருந்தா எப்பிடி இருந்திருக்குமோன்ற மாதிரி இருந்துச்சு இந்த எபிசோட். ஆனா கடைசி 15 நிமிஷந்தான். மத்தபடி கண்டெண்ட் வறட்சிதான் இன்னைக்கும்.
25வது நாள்
“ஒத்த சொல்லால”
பாட்டு அலாரம். ஏன்டா வீட்டுக்குள்ளதான் பொழுதுக்கும் அந்த பெரிய ரேடியோ லைவாவே பாடிட்டு
இருக்காப்லயே. அப்பறம் அலாரத்துக்கும் ஏண்டா வேல்ஸ் பாட்டயே போட்டு சாவடிக்குறீங்க
? நேத்து “தென்றல் வந்து தீண்டும் போது” பாட்டு கேட்டா வேல்ஸு வாய்ஸுல கேக்குது......இவ்வளவு ஏன் இப்பல்லாம் என் அன்பு
மனைவி ஒரு பாட்ட ஹம் பண்ணாக் கூட அது வேல்ஸு வாய்ஸ்லதாண்டா கேக்குது.....புரிஞ்சுக்கோங்கடா
ப்ளீஸ் !
ஆடவே ஆடாத இந்த
அரைவேக்காடுகளுக்கு ப்ராப்பர்ட்டி பர்பெக்க்ஷன் மட்டுந்தான் கேடு. இந்த பாட்டுல லுங்கி
டான்ஸ் இருக்குன்றதால பொம்பள புள்ளைங்க பூராம் லுங்கிய கட்டிட்டு வந்து இடுப்ப ஆட்டிட்டு
இருந்துச்சுங்க. சைனா செட்டு சனம் கூட சங்கூதுற ஸ்டெப்பெல்லாம் போட்டுச்சு. பண்ற சேட்டைக்கெல்லாம்
கூடிய சீக்கிரம் அதுக்கு முன்னாடிதான் நாலு பேரு சங்கூதுற டான்ஸ் ஆடப்போறானுங்க.
மத்தபடி இந்தத்
தடித்தாண்டவராயன்கள சும்மாவே பாக்க முடியாது. இதுல அவனுங்க ஆடுறத வேற யாரு பாக்குறது
? பில்டரெல்லாம் “இந்த நேரத்துக்கு சனத்துகிட்ட ஒரு சண்டைய இழுத்து ப்ரொமோல வந்திருக்கலாம்.
ஐடியா இல்லாத பசங்க”ன்ற மாதிரியே பாத்துட்டு பல்லு குத்திட்டு இருந்தான்.
முடிஞ்ச கையோட
பிக்பாஸ் “நேத்து டாஸ்க் கண்டினியூ”ன்னு கதறுனாப்ல. அர்ச்சனாவுக்கு பல்லு வெளக்கி விடுறது,
முகம் கழுவி விடுறதுன்னு நிஷா டாஸ்க்குன்ற பேருல செஞ்சுட்டு இருந்தாங்க. இதப் பாத்தா
அன்னப்போஸ்டு “இந்த டாஸ்க்கு முடிஞ்சதும் சோமுவ டெய்லி இப்டியெல்லாம் செய்ய சொல்லனும்”னு
நெனச்சிருக்கும்.
இவனுங்க இவ்வளவு
நாளா காலையில டாஸ்க்குன்னு ஒன்னு பண்ணிட்டு இருக்கானுங்க போல.....நல்ல வேளை அதெயெல்லாம்
நமக்கு காமிக்கல. ஆனா இன்னைக்கு காமிச்சானுங்க. இதுல அடிமைகள் ஒவ்வொருத்தரும் அதிகார
டீம்ல இருக்குறவங்களப் பத்தி சொல்லனும்னு சொன்னதும் ரம்யா ரியோவ புகழ்ந்து சொல்ல, அடுத்து
வந்த சாத்தூரு “பில்டரு பாக்கத்தான் பாய்லரு....ஆனா உள்ளத்தளவுல ருசியான ப்ராய்லரு”ன்னு
சொல்லிட்டு....”இந்த வூட்ல ஹானஸ்ட் மேனும் அவந்தான் ஹாண்ட்சம் மேனும் அவந்தான்”னு சொல்லிட்டு
சிறகில்லா சில்வண்டா பறந்து போச்சு.
வாய்ல எல்லாருக்கும்
நாக்குன்னா நம்ம சைனா செட்டு சனத்துக்கு மட்டும் வாய்ல இருக்குறது ஹூக்கு. விடிந்தும்
விடியாத காலைப் பொழுதுல இருந்து மாலை மங்குற நேரம் வரை “கும்த்தலக்கா கும்மாவா சனமுன்னா சும்மாவா?”ன்னு
வெட்டி சவுடால் பேசி ஹூக்கப் போட்டு ஒரண்டை இழுத்து வீம்பா வாங்கிக் கட்டிக்கிது....
சனம் அர்ச்சனாவப்
பத்தி சொல்றேன்னு சொல்லிட்டு “அவங்ககிட்ட எது கேட்டாலும் கிடைக்கும்”னு சொன்னதும்,
பில்டரு உள்ள பூந்து “அன்னைக்கு லெமன் கேட்டதுக்கு தரலைன்னு தரைல படுத்து தேச்சிட்டு
இருந்த ? இன்னைக்கு என்ன ஃபுல் ஸ்பீடுல புளுகு”றன்னு சொன்னதும், எல்லாரும் சிரிக்கவும்
அதுவும் சிரிச்சுக்கிட்டே போயிடுச்சு.
முடிச்சிட்டு
உள்ள வந்ததும் வராததுமா.....
சனம் : ஏண்டா
பில்டரு...உங்கிட்ட வந்து எலும்பிச்சம்பழம் கதைய யாரும் எடுத்துவிட சொன்னாங்களா ? வெளிய
என்ன ஏதுன்னு பூரா பேரும் எகத்தாளம் பேசிட்டிருக்கானுங்க....
பில்டரு : நீதான
நேர்மையான ஆளுன்னு சொன்ன...அதான் சொன்னேன்
சனம் : நான்
ஆயிரம் தரலேன்னு சொல்லுவேண்டா...அதுக்காக நீ சொல்லலாமா ?
பில்டரு : நீ
ஆயிரம் கேட்டும் தரலயா ? இரு அதையும் போயி சொல்லிட்டு வரேன்
சனம் : டேய்
இங்க நான் மட்டுந்தான் லூஸு....நீயெல்லாம் அதுக்கு ஆசப்படாத
பில்டரு : அன்னைக்கு
தரலன்னு அழுதுட்டு இன்னைக்கு வந்து கேட்டத குடுக்குற ஆளுன்ற ?
சனம் : அது
அன்னைக்குடா இது இன்னைக்குடா....ஆனாலும் உன்னால என் பாசிட்டிவிட்டிய உடைக்க முடியாது
பில்டரு : ஆனா
இப்பிடி நீட்டி நீட்டி பேசுனா உன் வெரல உடச்சுருவேன்.....அப்பறம் ஜாம திருடி நக்க முடியாது.....
சனம் : ஆனாலும்
நீ லெமன....
மறுபடி இப்பிடி
ஆரம்பிக்கவும் பில்டரு டென்ஷனாகி மைக்கக் கழட்டிட்டு சனத்துக்கிட்ட போன வேகத்துக்கு
சடுதியில ஒரு டெட் பாடி வீட்ல இருந்து வெளிய வந்திருக்கும். நாளைக்கு சைனா செட்டு போட்டோக்கு
மாலை போட்டு.....குறும்படம் காமிச்சிருப்பானுங்க. அது ஆவியா நின்னு அழுதுட்டு இருந்திருக்கும்.
காதலும், பாசமும் பில்டர தடுத்திருச்சுன்னு நம்புவோம். ஆனாலும் நம்ம சைனா செட்டு அடங்காது....பில்டரோட
பெருவெரல் ரேகை அது கன்னத்துல பதிஞ்சே ஆகனும்னு ஜாக்குவார் குதிரை ஜானி சின்ஸ் அடிகள்
ஓலச்சுவடியில எழுதி வச்சிருக்காம்ல.
ஷிவானிக்கு
பில்டருக்கு குடை பிடிக்கிற வேலை. இதுதான் நம்ம பிக்பாஸன் பண்ற வேலை....! அன்னை அர்ச்சனாவும்
“இந்தாடா மகனே இவள சாயங்காலம் வரைக்கும் வச்சு விளையாடு”ன்னு போனாங்க. ஏம்மா அது பொண்ணா
இல்ல பொட்டுக்கேப்பா ? அதுவும் அவங்கூடத்தான் சந்தோஷமா இருக்கு.
பின்ன பில்டரு
வந்து “ஏண்டா மம்மி கூட சமாதானத்துக்கு அப்பறம் அம்மிக் கல்லு வீட்டுக்கு வந்து அரை
நாளாச்சு. ஆனா ஒருத்தியும் உக்காந்து அரச்சு நான் பாத்ததில்ல. நிஷா மட்டும் அரைச்சுட்டு
இருக்கு”ன்னு, வேல்ஸ் பாட்டு பேக்கிரவுண்டுல (கர்த்தரே.....) அம்மில இருந்த நிஷாகிட்ட
போயி “அம்மி அரைத்தலின் பயன்களை 10 வரிக்கு மிகாமல் எழுதுக”ன்னு சொன்னதும். அந்தம்மா
“இடுப்பு வலி, தோள்பட்டை வலி, சுகப்பிரசவம், பித்தம், கபம், சுபம், சுண்ணாம்பு”ன்னு
ஒப்பிக்க, “பின்ன ஏன் இத மத்த பொன்ணுங்களும் பண்ணக்கூடாது?”ன்னு சொல்லி ஷிவானிய வச்சு
டெமோ குடுக்க அந்தப் புள்ள பிங்க் கலர் டவுசர ஏத்தி விட்டுக்கிட்டு அப்பரேஷன் அம்மிய
ஸ்டார்ட் பண்ணுச்சு. அரைச்சு முடிச்சிட்டு
ஷிவானி : யப்பா
அரைச்சு முடிச்சதும் எனக்கு தலையே வலிக்கலப்பா
பில்டரு : ஓ...அரைக்குறதுக்கு
முன்னாடி தலை வலி இருந்துச்சா?
ஷிவானி : இல்லையே
பில்டரு : நீ
வந்து குடையவே பிடி.....//
கேமராவப் பாத்து
பில்டரு “கேப்டனாகிட்டா ஆம்ப்ளே, பொம்ப்ளே, கும்ப்ளேன்னு எல்லாரையும் அம்மி அரைக்கனும்னு
ரூல் போடுவேன்”னு மறுபடியும் அதே சர்ச்சைக்குரிய சட்டத்த கைல எடுத்தான். நல்ல வேளை
அப்ப அங்க சாத்தூரத் தவிர யாரும் இல்ல. இல்லேன்னா கடைசில ரியோவும், வேல்ஸுந்தான் பாவம்.
அப்பறம் லக்ஸுரி
பட்ஜெட் ஷாப்பிங்.....எப்பவும் பண்றதுதான் ஆனா அத அப்பிடியே செய்ய சொன்னா பிக்கிக்கு
என்ன மரியாத....? அதனால ஒவ்வொருத்தனா அவனுங்க பாயிண்டுக்கு ஏத்தாப்ல போயி ஷாப்பிங்
பண்ணனும். அத அதிகார டீம் மானிட்டர் பண்ணும். வரிசையா போயி வாரிக்கொட்டிட்டு வந்தானுங்க.
எடுக்க வேண்டியத எடுக்காம எக்ஸ்டிரா சைஸ் பீட்சாவ எடுத்துட்டு வந்த கேபியப் பத்தி அர்ச்சனாகிட்ட
நிஷா பொலம்புச்சு.
ரைட்டு.....இப்ப
அடுத்த டாஸ்க்
நீங்கா நினைவுகள்.....!
இந்த ஷோக்கு வந்தப்பறம் யார மீஸ் பண்றீங்க ? யார் நினைவுகள யார் நியாபகப்படுத்துறாங்க
? இதான் டாஸ்க். ஆக்ச்சுவலா இதுக்கு “உங்களில் யார் அடுத்த பண்டரி பாய்?”னு தான் தலைப்பு
வைக்கனும். ஏன்னா இந்த டாஸ்க்கப் பத்தி படிக்கிறப்பவே அன்னை அர்ச்சனா அருவியக் கொட்ட
ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு நாளைக்கு உள்ள இருக்குறவனுங்க சிரிப்பும், கூத்துமா இருந்துட்டா
பிக்பாஸனுக்குப் பொறுக்காது. உடனே ஒரு பொத்துக்கிட்டு அழுகுற டாஸ்க்க தூக்கிட்டு வந்துடுவானுங்க.
கேபி மொத எந்திரிச்சு
போகும்போதே அன்னப்போஸ்டு சைடா ஒரு ஸ்மைல போட்டுச்சு.......
கேபி – அம்மாவ
மிஸ் பண்றேன்னு அழுகையோட ஒரு 8 வரில சொல்லிட்டு இறங்குச்சு....
முனகலா ஒரு
குரல். கூர்ந்து கவனிச்சா
அன்னப்போஸ்டு
: 8......8......8
அடுத்து ரம்யா
– எங்க அம்மாவ மிஸ் பண்றேன். அவங்கள இங்க அர்ச்சனாவா பாக்குறேன்னு அழுகையோட ஒரு 13
வரிகள்ல சொல்லிட்டு இறங்குனாங்க
அன்னப்போஸ்டு
: 8 + 13 = 21......21......21.....21
அடுத்து சனம்
: யரோ மோனேவாம் அவர பாத்ததுமே சைனா செட்டுக்குள்ள இன்னும் உலகத்துக்கு குடுக்க வேண்டிய
பாசிட்டிவ் எனெர்ஜி இருக்குன்னு கண்டுபிடிச்சுட்டாராம். அவன் என்ன ஆல்ஃபா தியான குருவா
? அதுவும் ரெண்டு சொட்டு கண்ணீரோட ஒரு 22 வரிகளுக்கு சொல்லிட்டு இறங்குச்சு.
அன்னப்போஸ்டு
: 21 + 22 = 43......43......43......43
ஜித்து – எங்கப்பாவத்தான்
மிஸ்ஸிங். என் பசங்களையும் மிஸ்ஸிங்னு பாசிட்டிவா ஒரு 10 வரிகள்ல முடிச்சாப்ல
அன்னப்போஸ்டு
: 43 + 10 = 53.......53......53
சம்மு – சம்மு
அவங்க பையன மிஸ் பண்றேன் அதுக்கும் மேல என் கணவர மிஸ் பண்றேன்ன்னு ஒரு 18 வரிகள்ல சொல்லிட்டு
இறங்குனாங்க. (சம்மு இன்னைக்கு லுக்கிங் கும்மு)
அன்னப்போஸ்டு
: 53 + 18 = 71.......71.......71....71
சகுனி : என்
பையன மிஸ் பண்றேன்...அவன பாலாஜிகிட்ட பாக்குறேன்னு சொல்லிட்டு 17 வரிகள்ல முடிச்சார்
அன்னப்போஸ்டு
: 71 + 17 = 88.......88.......88
ரியோ : அவன்
அம்மா அப்பறம் மனைவி, குழந்தைகள மிஸ் பண்றேன்னு 25 வரிகள்ல சொல்லிட்டு இறங்குனான்.
அன்னப்போஸ்டு
: 88 + 25 = 113.......113.......113
அர்ச்சனா –
ஏறக்குறைய அவங்க குடும்பத்து ஆளுங்க எல்லாரையும் மிஸ் பண்றதா 30 வரிகள்ல சொல்லிட்டு
வந்தாங்க.
அன்னப்போஸ்டு
: 113 + 30 = 143. ஓகே அப்ப 143 *
125473976453 = 1.794277836E13 வரிகள்ல சுருக்கமா பேசிட்டு வந்துடலாம்.
அனிதா மேடைக்கு
ஏறும்போதே கேபி கொட்டாவி விட்டுச்சு.
மணி – 6.10
pm
அனிதா –
1994 ல அரசு ஆஸ்பத்திரியில அதிகாலை நேரத்துல ஒரு குவா குவா சத்தம். அது அந்த ஆம்பளைக் குழந்தை சத்தம்...... அந்தக் குழந்தைக்கு
அப்பத் தெரியாது அதுக்கு சில வருஷங்களுக்குப் பிறகு அதோட ஜோடிக் குழந்தை பொறக்கும்னு
ஆஜீத் – அந்தக் குழந்தைக்கு இன்னும் தலையே நிக்கல அது நிக்குறதுக்குள்ள
நான் வேணும்னா போயி ஒரு செட்டு தூங்கிட்டு வந்துரவா?
ரம்யா - ரம்யாக்கு
சிரிப்பு தாங்கல.
மணி – 9.15
pm
அனிதா - அந்த
பையன் அஞ்சாவது படிச்சப்ப ஆறுவது சினம்னு சொல்லிக்குடுத்த டீச்சர்கிட்ட “ஆறுவது வடைன்னு
மாஸ்டர் சொன்னது தப்பா?”ன்னு கேட்டு புல்லரிக்க வச்சான். வடையும் ஆறும் சினமும் ஆறும்
காலமும் மாறும்னு அவங்கிட்ட டீச்சர் சொன்னதுதான் அந்தப் பையனுக்கு முன்னேற்றம்
ஷிவானி – ஆமா
இந்த டாஸ்க் என்னன்னு இவங்களுக்கு யாராச்சும் சொன்னீங்களா ?
பில்டரு – கையப்
பொத்தி அடக்க முடியாத சிரிப்பு
சகுனி – தலையில
கைய வச்சுக்கிட்டு உட்காருதல்
மணி – 11.24
pm
அனிதா – ஒருமுறை
அவன் காரில் சென்று கொண்டிருந்த போது. வழி கேட்ட ஒரு பொண்ணு அவங்கிட்ட பேச தயங்குனதப்
பாத்து பெண்கள் பேசுனாத்தான் இந்த உலகம் செழிக்கும்னு சொல்லி பேசத் தயங்காத ஒரு பொண்ணத்
தேடுனான். அப்ப மிடில் கிளாஸ் பொன்ணு பேச்சுபோட்டியில பர்ஸ்டு ப்ரைஸ் வாங்கிட்டு இருந்தா....
பில்டரு – (மைக்குல)
பிக்பாஸ் தயவு செஞ்சு இன்னொரு தரம் டாஸ்க்க நியாபகப்படுத்துங்க.....
இதுக்கிடையில
ரம்யா- ஆஜீத், ஷிவானி – பில்டரு கூட்டு சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. இதுல
ரொம்ப கொடுமை என்னன்னா ? அது ஏதோ ஜெனிலியா கமெடி சொல்லும்போது, இவனுங்க அது பேசுனத
ஓட்டி சிரிச்சது தெரியாம அன்னப்போஸ்டும் சேர்ந்து இவனுங்க கூட சிரிச்சதுதான்.
மணி – 2.12
am
அனிதா – அவன்
என்னய மொத மொத பாக்கும்போது எனக்குள்ள ஒடுனது ரத்தமில்ல....என்னோட நம்பிக்கை. ஒரு நாள்
ஆபீஸ்ல இருந்து ரோட்டுக்கு வர வரைக்கும்...மழை, வெள்ளம், புயல், சூறாவளி, சுண்டல்,
வர்தா, வரமாட்டா, காத்து, இடி.......
வேல்ஸ் – தலை
தொங்கல்
சனம் – பராக்கு
பார்த்தல்
சம்மு – சைடாக
படுத்தல்
ரியோ – வாயில்
நுரை தள்ளல்
சகுனி – சுகர்
மாத்திரைக்கு ஏங்குதல்
மற்றவர்கள்
நிலைமை – கவலைக்கிடம்
ஆண்டவர் – அன்னப்போஸ்டு
முடித்துவிட்டால் வெள்ளிக்கிழமை தனக்கு ஃபோன் செய்ய சொல்லி உத்தரவு
பிக்பாஸ் –
ஊரைக் காலி செய்து 2 மணி நேரம் தாண்டிவிட்டது
சம்மு- (உள்மனசுல)
14 பேரோட உயிர காப்பாத்துற ஒரு உன்னத காரியத்த நாந்தான் செய்யனும் போல.
ரட்சகன் நாகார்ஜுனா
மாதிரி கை நரம்பு கழுத்துக்கு ஏற “அன்னப்போஸ்டு, கொஞ்சம் நிறுத்து. அலாரப் பாட்டு பாட
இன்னும் அரை மணி நேரந்தான் இருக்கு. சகுனி இன்னும் கொஞ்ச நேரத்துல ஜீவ சமாதி ஆகிடுவாப்ல.
வேல்ஸ் அதுக்கும் பாட ரெடியா இருக்காப்ல. செஞ்சு வச்ச சாப்பாடு தண்ணி விட்டிருக்கும்.
தேங்காய் துவையல் கெட்டுப் போயிருக்கும். காயப் போட்ட துணி கூட காஞ்சு போயிருச்சு.
ஆனா அன்னப்போஸ்டு நீ முடிக்கிறது எக்காலம்?னு கேக்க....”இந்தா முடிச்சிடுறேன்”னு சொல்லி
அதுக்கப்பறமும் ஒரு 40 வரிகள்ல பேசிட்டு கீழ இறங்குச்சு.
அதுக்கப்பறம்
சம்முகிட்ட அனிதா ஏதோ பேச சம்மு மயக்கம் போட்டு விழுந்தாங்க....! அதாவது அன்னப்போஸ்டு
சம்முகிட்ட “இது என் டாஸ்க். இதுல எனக்கு பேச ஸ்பேஸே குடுக்கல”ன்னு சொல்லிச்சாம். இதக்
கேட்டதும் யாரெல்லாம் மயக்கம் போட்டு விழுந்தீங்கன்னு கமெண்ட்டுல சொல்லுங்க.
வெறித்தனம்.. சிரிச்சி ஒன்னுக்கே வந்துருச்சி தல 😂😂😂😂😂😂
ReplyDelete